search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரத்த தான முகாம்
    X

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரத்த தான முகாம்

    • திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது
    • முகாமில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளையின் வாழ்நாள் உறுப்பினரும், சமூக சேவகருமான 60 வயது மூத்த குடிமகன் சீனிவாச பிரசாத் ரத்த தானம் செய்தார்

    திருச்சி:

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளை, பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் நெடுஞ்செழியன் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை இணைந்து நடத்திய ரத்ததான முகாம் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இந்த ரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் கணேசன், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் லட்சுமி பிரபா,

    இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளைத் தலைவர் இன்ஜினியர் ராஜசேகர், யூத் ரெட் கிராஸ் திருச்சி மாவட்ட அமைப்பாளரும் மற்றும் தந்தை பெரியார் அரசு கல்லூரியின் பேராசிரியருமான குணசேகரன், திருச்சி மாவட்ட ரத்த வங்கி அலுவலர் மருத்துவர் வளர்மதி, பாலச்சந்தர், ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கடேசன், நெடுஞ்செழியன் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை நிறுவனர் குமரவேல்,

    சத்யநாராயணன் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக பணியாளர் நல சங்க தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த மாபெரும் இரத்ததான முகாமில் பொதுமக்கள் பல்வேறு கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்கள், இளைஞர்கள் மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் உறுப்பினர்கள் ரத்ததானம் செய்தனர்.

    இந்த ரத்ததான முகாமில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருச்சி மாவட்ட கிளையின் வாழ்நாள் உறுப்பினரும், சமூக சேவகருமான 60 வயது மூத்த குடிமகன் சீனிவாச பிரசாத் ரத்த தானம் செய்தார்.

    Next Story
    ×