search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Blood donate camp"

    • இடையகோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் கோபி கிருஷ்ணா தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
    • சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    இடையகோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் கோபி கிருஷ்ணா தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர் அபிநயா கலந்து கொண்டார்.

    ரத்ததான முகாமில் இடையகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

    மேலும் ரத்ததானம் செய்த நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • ஒட்டன்சத்திரத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
    • முகாமில் 28 யூனிட் ரத்தம் பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பொறியியல் கல்லூரியில் ரத்ததான முகாம் கல்லூரி முதல்வர்துரைராஜ் தலைமையில் நடைபெற்றது. கொ.கீரனூர் அரசு வட்டார மருத்துவமனை மருத்துவர் காசிமுருக பிரபு முன்னிலை வகித்தார்.

    வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வன், மின்னணு மற்றும் மின்னணுவியல் உதவி பேராசிரியர் சாம் ஸ்டான்லி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஹெரால்டு ஜாக்சன், ஆறுமுகம், வட்டார மருத்துவமனை மேற்பார்வையாளர் ஜோதிபாசு ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    முகாமில் 28 யூனிட் ரத்தம் பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் முனைவர் காந்திமதி செய்திருந்தார்.

    ×