search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோட்டரி சங்கம்"

    • கீழக்கரையில் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக்கொண்டனர்.
    • முடிவில் செயலாளர் எபன் பிரவீன் குமார் நன்றி கூறி னார்.

    கீழக்கரை

    கீழக்கரை ரோட்டரி சங்கம் 2023-24 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சங்கத் தின் தலைவர் சுல்தான் சம்சுல் கபீர் தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் முதன்மை விருந்தினராக மாவட்ட ஆளுநர் தேர்வு மீரான் கான் சலீம் கலந்து கொண்டு தலைவர் செயலாளர் மற்றும் புதிய நிர்வாகிகளை பதவி பிரமாணம் செய்து வைத்தார். கவுரவ விருந்தின ராக முன்னாள் ஆளுநர் சின்னதுரை அப்துல்லா, மாவட்ட ஆளுநர் பரிந்துரை தினேஷ் பாபு கலந்து கொண்டு பேசினர்.

    துணை ஆளுநர் கீதா ரமேஷ் சங்கத்தில் புதிய உறுப்பினர்களை வரவேற்று வாழ்த்துரை வழங்கினார் கள். தேவகோட்டை மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் முனைவர் பவுலியன்ஸ் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு ரோட்டரி சங்கத் தின் சேவைகள் மற்றும் வளர்ச்சிகளை பற்றி எடுத் துரைத்து பேசினார்கள்.

    சங்கத்தின் சார்பாக கல்வி, மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கப்பட்டது. கீழக்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கல்வியில் சிறப்பாக பணியாற்றி சாதனை புரிந்த ஆசிரியர் களுக்கும், தேர்வுகளில் சாதனைகள் செய்த மாண வர்களுக்கும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    ரோட்டரி சங்கத்தின் ஆண்டு அறிக்கையை பொருளாளர் சுப்பிரமணியன் அவர்கள் சமர்ப்பித்தார்கள். விழாவில் சங்கத்தின் பட்டய தலைவர் பேராசிரியர் அலாவுதீன் அவர்கள் வரவேற்றார். பேராசிரியர் பாலசுப்பிரமணியன், நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

    இவ்விழாவில் கீழக்கரை சங்கத்தின் முன்னாள் தலை வர்கள் ராசிக்தீன், செல்வ நாராயணன், டாக்டர் சுந்த ரம், சித்திரவேல், கேசவன், கண்ணன், சபீக், மிப்தா ஹுதீன், மரியதாஸ், பெண் வழக்கறிஞர் நதியா மற்றும் பல்வேறு ரோட்டரி சங் கத்தை சேர்ந்த உறுப்பினர்கள், நகர்மன்ற தலைவர், துணை தலைவர், கவுன்சிலர் கள், ஜமாத்தார்கள், பாதிரியார்கள், அரசியல் பிரமுகர் கள், ஊர் முக்கியஸ்தர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் எபன் பிரவீன் குமார் நன்றி கூறினார்.

    • வெள்ளகோவில் ரோட்டரி சங்கம் சார்பில் சேவை திட்டம் செயல்படுத்துவது குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
    • ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் ரோட்டரி சங்கம் சார்பில் சேவை திட்டம் செயல்படுத்துவது குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அதனையடுத்து ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ஆர்.வெங்கடசுப்பு, செயலாளராக ஆர்.அருண்குமார், பொருளாளராக கே. ரத்தினசாமி என்கிற மணிவேல், துணைத்தலைவராக வீ.சி.சுவாமிநாதன், நிர்வாக செயலாளராக ராசி கே.ஆர் சின்னசாமி மற்றும் குழுவினர் பதவி ஏற்று கொண்டனர்.

    பதவியேற்பின் போது தலைவர் ஆர்.வெங்கடசுப்பு கூறியதாவது:- கடந்த ஆண்டு ரோட்டரி சங்கத்தின் சார்பில் வெள்ளகோவில் பகுதியில் கண் சிகிச்சை முகாம், பொது நல மருத்துவ முகாம், செயற்கை கால் வழங்கும் முகாம் மற்றும் வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் வளர்சக்தி என்ற திட்டத்தின் கீழ் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று 40 கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டில் வெள்ளகோவில் நகராட்சிக்கு சொந்தமான மின்மயானத்தை ரோட்டரி சார்பில் நவீனப்படுத்தி செயல்படுத்த உள்ளதாக கூறினார்.

    நிகழ்ச்சியில் பிற ஊர்களில் இருந்து ரோட்டரி சங்க நிர்வாகிகள் பி .கோபாலகிருஷ்ணன், என் .மணிமாறன், எம்.பிரேம்குமார், டி.கே. பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு வெள்ளகோவில் ரோட்டரி சங்கத்தின் செயல்பாடு குறித்து வாழ்த்தி பேசினர்.

    இந்நிகழ்ச்சியில் வெள்ளகோவில் சங்க முன்னாள் நிர்வாகிகள், ரோட்டரி சங்கத் தலைவர் ஆடிட்டர் எஸ்.ரகுநாதன், செயலாளர் ஆர்.மோகன்குமார், பொருளாளர் ஏ.மகாதேவன் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

    • கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி துணை முதல்வர், பேராசிரியர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் மத நல்லிணக்க புனித ரமலான் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி ஹமீதியா தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடந்தது.

    கீழக்கரை ரோட்டரி சங்கத்தலைவர் சுல்தான் சம்சூல் கபீர் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட டவுன் தலைமை ஹாஜி அல்ஹாஜ் சலாகுதீன் ஆலிம், ஓய்வு பெற்ற ஆசிரியர் காசி கணேசன், மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் உமர் ஆகியோர் நோன்பின் மகிமை பற்றி பேசினர்.

    இதில் கீழக்கரை நகராட்சி தலைவர் செஹானஸ் ஆபிதா, சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, நகராட்சி மேற்பார்வையாளர் சாம்பசிவம், தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் கே.ஆர்.டி.கிருஷ்ணமூர்த்தி, கீழக்கரை நகர் மன்ற உறுப்பினர்கள் மீரான்அலி, பயாஸ், முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி துணை முதல்வர் ஷேக் தாவூது, பேராசிரியர்கள் மரியதாஸ், பாலகிருஷ்ணன், எபன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    ரோட்டரி சங்க செயலாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பொருளாளர் சிவகார்த்திக் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • ரெயின்போ ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் அலுவல் வருகைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • மாற்றுத்திறனாளியான செரீப் என்பவருக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பில் அரசு மருத்துவமனை அருகில்பெட்டி கடை அமைத்து தரப்பட்டது.

       பல்லடம் :

    பல்லடத்தில் ரெயின்போ ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் அலுவல் வருகைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். பொருளாளர் முத்துகுமார் வரவேற்றார்.இதில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் இளங்குமரன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் மாற்றுத்திறனாளியான செரீப் என்பவருக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பில் அரசு மருத்துவமனை அருகில்பெட்டி கடை அமைத்து தரப்பட்டது. மேலும் கொரோனா காலத்தில் மக்களுக்காக சேவை புரிந்த மருத்துவம், காவல்,தீயணைப்பு, பத்திரிக்கை துறையினரை பாராட்டி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட பொதுசெயலாளர் வரதராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ், மண்டல ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், உதவி ஆளுநர் ராமகிருஷ்ணன்,ரெயின்போ ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் தங்கலட்சுமி நடராஜன், கவிதா சுந்தர்ராஜன்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    • உப்பூர் அருகே மினி மாரத்தான் போட்டி நடந்தது.
    • ரோட்டரி சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், உப்பூர் அருகே ரோட்டரி கிளப்ஆப் கோல்டன் மற்றும் உப்பூர் அமிர்தாஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி இணைந்து போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியை நடத்தியது.

    ரோட்டரி கிளப் தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். கலங்காப்புலி விலக்கு ரோட்டில் இருந்து தொடங்கிய போட்டியை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் அமிர்தாஸ் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 5 கிலோ மீட்டர் தூரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உப்பூர் வெயில் உகந்த விநாயகர் கோவில் வரை சென்று நிறைவடைந்தது. இதில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    இதில் பள்ளியின் திட்ட சேர்மன் ஜான்பிரிட்டோ, பள்ளி தாளாளர் அன்புமலர் பாண்டியன் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தாய்பால் அவசியம் குறித்து விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது.
    • ரோட்டரி சங்கத்தின் சார்பில் பரிசு வழங்கி ஆலோசனை வழங்கினர்.

    கீழக்கரை

    கீழக்கரையில் ரோட்டரி சங்கம், செய்யது ஹமீதா கல்லூரி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கம் ஆகியவை சார்பில் தாய்ப்பால் விழிப்புணர்வு பிரசார நடைபயணம் நடந்தது.

    கீழக்கரை போலீஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய நடைபயணம் முக்கிய சாலைகள் வழியாக சென்று கடற்கரை சந்திப்பில் முடிவடைந்தது.இந்த ஊர்வலத்தில் தாய்ப்பாலின் அவசியத்தையும், நன்மையையும் மாணவிகள் கோஷமிட்டு வெளிப்படுத்தினர்.

    கீழக்கரை அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா ரோட்டரி சங்க தலைவர் கபீர் தலைமையில் தலைமை மருத்துவர் ஜவாஹிர் ஹூசைன் முன்னிலையில் நடந்தது. இதில் புதிதாக குழந்தை பெற்ற பெண்கள், கருவுற்று ஆலோசனைகள் பெற வந்த பெண்கள் 20 பேருக்கு ரோட்டரி சங்கத்தின் சார்பில் பரிசு வழங்கி ஆலோசனை வழங்கினர்.

    இந்த நிகழ்வுகளில் அரசுமருத்துவமனை மருத்துவர்கள், இந்திய செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள், செய்யது ஹமீதா கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் ரத்ததான முகாம்
    • பள்ளியின் நிர்வாக இயக்குநர் சங்கீதா சத்யன் தலைமை தாங்கினார்.

    காரைக்குடி

    செல்லப்பன் வித்யா மந்திர் இண்டர்நேஷனல் பள்ளி மற்றும் காரைக்குடி ரோட்டரி சங்கம் இணைந்து ரத்ததான முகாமை பள்ளி வளாகத்தில் நடத்தியது. பள்ளியின் நிர்வாக இயக்குநர் சங்கீதா சத்யன் தலைமை தாங்கினார். பள்ளி இயக்குநர் ராஜேஸ்வரி, முதல்வர் வாணிபோஜன் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்த்துறை தலைவர் ஜான் போஸ்கோ வரவேற்றார். ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் பெரியண்ணன் முகாமை தொடங்கி வைத்தார்.

    ரோட்டரி சங்க தலைவர் சத்குரு தேவன், அரசு மருத்துவமனை ரத்த வங்கி இயக்குநர் அருள்தாஸ், ரோட்டரி சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவிகள் பிரபாஷினி, ஸ்ரீசவுந்தரி ஆகியோர் ரத்ததானம் பற்றி பேசினர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் ரத்தம் வழங்கினர். தலைமையாசிரியர் மீரா நன்றி கூறினார்.

    • கீழக்கரை ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவி ஏற்றனர்.
    • கீழக்கரை நகர் மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, துணைத்தலைவர் ஹமீது சுல்தான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தலைவர் ஹசனுதின் தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்டம் 3212 முன்னாள் ஆளுநர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, துணை ஆளுநர் பாபு, பட்டயத்தலைவர் அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தலைவராக சுல்தான் சம்சூல் கபீர், செயலாளராக சுப்ரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். பட்டயத்தலைவர் அலாவுதீன் வரவேற்றார். பேராசிரியர் முகம்மது ஆசிப், கல்லூரி மாணவி ஆய்சத் ருக்சானா உள்ளிட்ட பலர் பேசினர்.

    நலத்திட்ட உதவிகளாக ரொக்கபரிசு பி.வி.எம். அறக்கட்டளைக்கும், மாணவி மர்யமின் பெற்றோருக்கும் வழங்கப்பட்டது. 10-வது மற்றும் பிளஸ்-2 தேர்வில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியர் மற்றும் பள்ளிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. சாதனை படைத்த இளம் தலைமுறை மாணவ மாணவிகள் 7 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. முன்னதாக மரக்கன்றுகள் நடப்பட்டன. கீழக்கரை நகர் மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, துணைத்தலைவர் ஹமீது சுல்தான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையத்தில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
    • முன்னாள் தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ரோட்டரி சங்கத்தின் 56-வது பதவி ஏற்பு விழா ரோட்டரி ஹாலில் நடந்தது. வைமா திருப்பதிசெல்வன் தலைவராகவும், பார்த்தசாரதி செயலாளராகவும், பதவியேற்றனர். முன்னாள் தலைவர் ராதா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    மாவட்ட ஆளுநர் முத்து சிறப்பு விருந்தினராகவும், ஷாஜகான் கவுரவ விருந்தினராகவும், ராஜுக்கள் கல்லூரி முன்னாள் ஆங்கிலத்துறைத் தலைவர் சுரேஷ் தளியத் முக்கிய விருந்தினராகவும் கலந்து கொண்டனர். துணை ஆளுநர்

    குமரேசன் வாழ்த்துரை வழங்கினார். நிர்வாக ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் தொகுத்து வழங்கினார். மாவட்ட செயலர் குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் அனைவருக்கும் துணிப்பை வழங்கி ரோட்டரி சங்கத்தின் 4 வழிச் சோதனை சன்பேக் அட்டை வழங்கப்பட்டது. நலிவடைந்த முதியோருக்கு இலவச சேலை வழங்கப்பட்டது.

    • காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்களை வழங்கிவரும் சிறந்த 100 தொண்டு நிறுவனங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
    • விநாயகா ரமேஷ் பேசுகையில், அனைத்து காசநோயாளிகளுக்கும் ரோட்டரி சங்கம் சார்பில் உதவி செய்வோம் என்று உறுதியளித்தார்.

    கோவில்பட்டி:

    தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் காசநோய் இல்லா தமிழகம்-2025 எனும் இலக்கை அடைய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்களை வழங்கிவரும் சிறந்த 100 தொண்டு நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னை நொச்சிகுப்பத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக காசநோயாளிகளுக்கு, ஊட்டச்சத்து பொருட்களை சேவையாக வழங்கி வரும் கோவில்பட்டி ரோட்டரி கிளப்பிற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    ரோட்டரி சங்கம் சார்பாக, சங்க முன்னாள் துணை ஆளுநரும், இலவச சத்துணவு திட்ட ஒருங்கிணைப்பாளருமான விநாயகா ரமேசிடம் சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட துணை இயக்குநர் (காசம்) சுந்தரலிங்கம் ரோட்டரி சங்கத்தின் சேவையை பாராட்டி பேசினார். பாராட்டு சான்றிதழ் பெற்ற விநாயகா ரமேஷ் பேசுகையில், காசநோய் இல்லாத கோவில்பட்டி உருவாகும் வரை சிகிச்சை பெறும் அனைத்து காசநோயாளிகளுக்கும் ரோட்டரி சங்கம் சார்பில் உதவி செய்வோம் என்று உறுதியளித்தார்.

    தூத்துக்குடி மாவட்டம் சார்பில் அரசு மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் மோகன் மற்றும் செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×