என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு
- ராஜபாளையத்தில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
- முன்னாள் தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் ரோட்டரி சங்கத்தின் 56-வது பதவி ஏற்பு விழா ரோட்டரி ஹாலில் நடந்தது. வைமா திருப்பதிசெல்வன் தலைவராகவும், பார்த்தசாரதி செயலாளராகவும், பதவியேற்றனர். முன்னாள் தலைவர் ராதா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
மாவட்ட ஆளுநர் முத்து சிறப்பு விருந்தினராகவும், ஷாஜகான் கவுரவ விருந்தினராகவும், ராஜுக்கள் கல்லூரி முன்னாள் ஆங்கிலத்துறைத் தலைவர் சுரேஷ் தளியத் முக்கிய விருந்தினராகவும் கலந்து கொண்டனர். துணை ஆளுநர்
குமரேசன் வாழ்த்துரை வழங்கினார். நிர்வாக ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் தொகுத்து வழங்கினார். மாவட்ட செயலர் குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் அனைவருக்கும் துணிப்பை வழங்கி ரோட்டரி சங்கத்தின் 4 வழிச் சோதனை சன்பேக் அட்டை வழங்கப்பட்டது. நலிவடைந்த முதியோருக்கு இலவச சேலை வழங்கப்பட்டது.
Next Story






