search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார்"

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வடகரையாத்தூர் பகுதியை சேர்ந்தவர் கடந்த 5 வருடங்களாக ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார்.
    • இரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டுவதற்காக வெளியில் இருந்த பொருட்களை எடுத்து உள்ளே வைத்துவிட்டு வெளியில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை பார்த்தபோது திடீரென காணவில்லை.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வடகரையாத்தூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (37). இவர் ஜேடர்பாளையம் சரளைமேட்டில் கடந்த 5 வருடங்களாக ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டுவதற்காக வெளியில் இருந்த பொருட்களை எடுத்து உள்ளே வைத்துவிட்டு வெளியில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை பார்த்தபோது திடீரென காணவில்லை. பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேடி பார்த்தும் மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை .இது குறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அப்பகுதியில் பாம்பு போன்ற விஷபூச்சிகள் சுற்றி வருகின்றன.
    • பேரூராட்சி சார்பில் மோட்டார் மூலம் நீர் வெளியேற்றப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை பேரூராட்சியில் 9-வது வார்டு கல்கேணிதெருவில் கல்கேணி குளம் அமைந்துள்ளது.

    இந்த குளம் அப்பகுதி மக்களுக்கு பெரிதும் பயன்பெற்று வந்தது.

    இந்நிலையில், தற்போது பெய்துவரும் தொடர்மழை காரணமாக கல்கேணி குளம் நிரம்பி குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.

    இதனால், அப்பகுதியில் பாம்பு போன்ற விஷபூச்சிகள் சுற்றி வருகின்றன.

    இதனால், அப்பகுதி மக்கள் வெளியில் செல்ல முடியாமல் அச்சமடைந்துள்ளனர்.

    இதனையடுத்து பேரூராட்சி சார்பில் மோட்டார் மூலம் நீர் வெளியேற்றப்பட்டது.

    தகவலறிந்த, பேரூராட்சி செயல் அலுவலர் காலசாமி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நீர் நிரம்பிய குளத்தையும், நீர் சூழ்ந்துள்ள குடியிருப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர், நீரை வெளியேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் தற்சமயம் மக்கள் நடந்து செல்லும் வகையில் மணல் மூட்டைகள் அமைத்து தரப்படும் என்றார்.

    ஆய்வின்போது, பேரூராட்சி மன்ற தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், கவுன்சிலர்கள் சரிபா பேகம், மெட்ரோ மாலிக், சிவஅய்யப்பன், பாலு மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • குமாரபாளையம் அடுத்த காடையாம்பட்டி பகுதியில் புதிய மோட்டார் சைக்கிள் வாங்க 3 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய்க்கு பத்து ரூபாய் நாணயங்கள்.
    • 5 ஆண்டுகளாக இவர் பத்து ரூபாய் நாணயங்களை சேமித்து வந்துள்ளார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அடுத்த காடையாம்பட்டி பகுதியை சார்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் உடற்பயிற்சி ஆசிரியருக்கான பட்டய படிப்பு முடித்து தற்போது விளையாட்டு இயக்குனருக்கான மேல்படிப்பை கோவையில் தங்கி படித்து வருகிறார் வீட்டில் இருந்து வரும் காலகட்டத்தில் பறவைகள் வளர்ப்பில் ஆர்வம் கொண்ட இவர் பந்தயப் புறாக்கள், மற்றும் லவ் பேர்ட்ஸ் பறவைகள் வளர்ப்புக்கான கூண்டுகளையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். மேலும் விடுமுறை நாட்களில் பறவைகளுக்கான கூண்டு தயாரிப்பிலேயே ஈடுபட்டு வருகிறார் அதிகமான வெளிவட்டார பழக்க வழக்கங்களை தவிர்த்து கிடைக்கும் நேரங்களில் பறவைகளோடு மகிழ்ந்து விளையாடுவது அவருக்கு வாடிக்கையாகும்

    இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக இவர் பத்து ரூபாய் நாணயங்களை சேமித்து வந்துள்ளார் இந்த நாணயங்களின் மொத்த மதிப்பு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை தொட்டதை தொடர்ந்து அந்த முழு தொகையையும் கொண்டு ஈரோட்டில் பெருந்துறை சாலையில் உள்ள ஒரு தனியார் மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனத்தில் உயர்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய மோட்டார் சைக்கிளை வாங்குவதற்காக 775 கிலோ கொண்ட 10 ரூபாய் நாணயங்களை தனது நண்பர்கள் மூலம் இரண்டு காரில் ஏற்றிக்கொண்டு கடைக்குச் சென்று புதிய மோட்டார் சைக்கிளை வாங்கியுள்ளார்

    இதுகுறித்து இளைஞர் சந்தோஷ் குமார் நிருபர்களிடம் தெரிவித்த போது, பத்து ரூபாய் நாணயங்களை சில கடைக்காரர்கள் வாங்க மறுப்பதை தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் விதமாக பத்து ரூபாய் நாணயங்களை கொண்டு 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் வாகனம் பெற்றுக் கொண்டது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தார். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தினர் சந்தோஷ் குமாருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    • கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள்- பஸ் நேருக்கு நேர் மோதி கொண்டன.
    • தூக்கி வீசப்பட்ட சக்திவேல் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள வையகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 37). இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று புறப்பட்டார்.

    வையகளத்தூர் செல்லும் பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அரசு பஸ் வந்தது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள்- பஸ் நேருக்கு நேர் மோதி கொண்டன.

    இதில் தூக்கி வீசப்பட்ட சக்திவேல்சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சித்தோட்டில் வாகன சோதனையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேர் சிக்கினர்.
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

    சித்தோடு:

    சித்தோடு மற்றும் லட்சுமி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்துவதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து சித்தோடு போலீசார் பவானி அடுத்த லட்சுமி நகர் கோண வாய்க்கால் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் 4 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் கஞ்சாவை பாலிதீன் கவரில் வைத்து விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சித்தோடு குமிளம்பரப்பு பகுதியை சேர்ந்த ராஜா (28), சித்தோடு கொங்கம்பாளையம் முரு கேசன் (34), சித்தோடு சொட்டையம்பாளையம் வெங்கடேஷ் (44) என தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்க ளிடம் இருந்து 4.100 கிராம் கஞ்சாவை ேபாலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் கஞ்சா விற்பனையில் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசா ரணை நடத்தினர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சென்னிமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.
    • இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    சென்னிமலை நாச்சி முத்து முதலியார் வீதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 65). இவர் சென்னிமலை பகுதியில் லேத் பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவர் சென்னிமலையில் இருந்து பெருந்துறைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பெருந்துறை சென்னிமலை ரோடு வேளாளர் தம்பிரான் கோவில் அருகே வந்த போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சக்திவேல் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×