search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷபூச்சிகள்"

    • அப்பகுதியில் பாம்பு போன்ற விஷபூச்சிகள் சுற்றி வருகின்றன.
    • பேரூராட்சி சார்பில் மோட்டார் மூலம் நீர் வெளியேற்றப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை பேரூராட்சியில் 9-வது வார்டு கல்கேணிதெருவில் கல்கேணி குளம் அமைந்துள்ளது.

    இந்த குளம் அப்பகுதி மக்களுக்கு பெரிதும் பயன்பெற்று வந்தது.

    இந்நிலையில், தற்போது பெய்துவரும் தொடர்மழை காரணமாக கல்கேணி குளம் நிரம்பி குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.

    இதனால், அப்பகுதியில் பாம்பு போன்ற விஷபூச்சிகள் சுற்றி வருகின்றன.

    இதனால், அப்பகுதி மக்கள் வெளியில் செல்ல முடியாமல் அச்சமடைந்துள்ளனர்.

    இதனையடுத்து பேரூராட்சி சார்பில் மோட்டார் மூலம் நீர் வெளியேற்றப்பட்டது.

    தகவலறிந்த, பேரூராட்சி செயல் அலுவலர் காலசாமி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நீர் நிரம்பிய குளத்தையும், நீர் சூழ்ந்துள்ள குடியிருப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர், நீரை வெளியேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் தற்சமயம் மக்கள் நடந்து செல்லும் வகையில் மணல் மூட்டைகள் அமைத்து தரப்படும் என்றார்.

    ஆய்வின்போது, பேரூராட்சி மன்ற தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், கவுன்சிலர்கள் சரிபா பேகம், மெட்ரோ மாலிக், சிவஅய்யப்பன், பாலு மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×