search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன்"

    • பாதுகாப்பு கருதி விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாது
    • மணற்பரப்பில் விழுந்து செல்லும் அலை வெள்ளம் மணற்பரப்பை அடித்து செல்கிறது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படும். ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்பு வரை விழும். அதனால் பாதுகாப்பு கருதி விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பின. இதனால் மீன் பிடித்தொழில் பாதிக்கப்பட்டது.

    தற்போது காற்று சற்று தணிந்த நிலையில் மீண்டும் விசைப்படகுகள் மீன் பிடிக்க சென்றன. வழக்கம்போல் குறைந்த அளவே பைப்பர் வள்ளங்கள் மீன் பிடித்து வருகின்றன. இந்நிலையில் இன்று காலை குளச்சல் கடல் பகுதியில் கடல் திடீர் சீற்றமாக இருந்து வருகிறது. ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்பு வரை விழுந்து செல்கிறது. மணற்பரப்பில் விழுந்து செல்லும் அலை வெள்ளம் மணற்பரப்பை அடித்து செல்கிறது. இதனால் அங்கு கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.

    குளச்சல், கொட்டில்பாடு சுற்றுவட்டார பகுதிகளில் கடல் சீற்றத்தால் கடல் அரிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் மணற்பரப்பில் நிறுத்தப்பட்ட பைபர் வள்ளங்கள் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க சென்றன. அவற்றுள் குறைந்தளவு மீன்களே கிடைத்தன. கிடைத்த மீன்களை மீனவர்கள் ஏலக்கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர்.

    • மாயனுார் கதவணை அருகில் மீன்கள் விற்பனை மும்முரமாக இருந்தது
    • தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் வரு வதால், புதிய மீன்கள் வரத்து உள்ளது

    கரூர்:

    கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனூர் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப் பட்டுள்ளது. இங்கு காவிரி நீர் சேமிக்கப்படுகிறது. இந்த தண்ணீரில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. மீனவர்கள் பரிசலில் சென்று மீன்களை பிடித்து வந்து, வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் வருவதால், புதிய மீன்கள் வரத்து உள்ளது. ஜிலேப்பி மீன்கள் கிலோ ஒன்று 150 ரூபாய், கெண்டை மீன் 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கரூர், குளித்தலை, லாலாப் பேட்டை, திருக்காம்புலியூர், சேங்கல், புலியூர் இடங்களில் இருந்து வந்த மக்கள் மீன்களை வாங்கி சென்றனர், நேற்ற, 400 கிலோ மீன்கள் விற்கப்பட்டன.


    • மாயனுார் கதவணையில் மீன்கள் விற்பனை ஜோராக நடைபெற்றது
    • நேற்று மட்டும், 350 கிலோ வரை மீன்கள் விற்கப்பட்டன.

    கரூர்:

    கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனூர் காவிரியாற்றின் குறுக்கே கதவணை கட்டப் பட்டுள்ளது. இந்த கதவணையில் தண்ணீர் சேமிக்கப்பட்டு, மீன்கள் வளர்க்கப்படுகிறது. வளர்க்கப்படும் மீன்களை உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று வலைகளை விரித்து பிடித்துக் கொண்டு வந்து வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது மீன்கள் வரத்து சீராக இருப்பதால் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. ஜிலேபி மீன் கிலோ, 140 ரூபாய், கெண்டை மீன் 110 ரூபாய், விறால் மீன் 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மட்டும், 350 கிலோ வரை மீன்கள் விற்கப்பட்டன. மீன்களை வாங்க கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், மணவாசி, சேங்கல், பஞ்சப்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து வந்த மக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர்.

    • மேலூர் அருகே கம்பூரில் நடந்த மீன் பிடி திருவிழாவில் கிராம மக்கள் போட்டி போட்டு பிடித்தனர்.
    • வசாயம் செழிக்கும் என்பது இந்த பகுதி மக்களின் நம்பிக்கை.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள கம்பூரில் தேனக்குடிப்பட்டி செல்லும் சாலையில் மருதன் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் தண்ணீர் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.

    விவசாய பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று இந்த கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடந்தது. இதையொட்டி சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் இன்று காலை முதல் குவிந்தனர். கிராம முக்கி யஸ்தர்கள் அதிகாலையில் வெள்ளை துண்டு வீசியதும் சுற்றி இருந்த கிராம மக்கள் கண்மாய்க்குள் இறங்கி வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை வைத்து போட்டி போட்டு மீன்களைப் பிடித்தனர்.

    இதில் நாட்டு மீன்களான குறவை, கட்லா, ஜிலேபி மற்றும் விராமீன்களும் அதிக அளவில் கிடைத்தன. இந்த மீன்கள் சுமார் 3 கிலோ வரை இருந்தது. மீன்களை பிடித்த கிராமமக்கள் வீடுகளுக்கு கொண்டு சென்று சமைத்தும், மீதமுள்ள மீன்களை விற்காமல் உறவி னர்களுக்கு கொடுத்தனர்.

    மீன்பிடித் திருவிழாவின் மூலம் வரும் ஆண்டில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது இந்த பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

    • மீன், காய்கறி வியாபாரிகள் ரோட்டோரத்தில் கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்
    • வியாபாரிகளுக்கு 2 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் மேயர் மகேஷ் அதிரடி ஆய்வு மேற் கொண்டு வருகிறார்.

    ராமன் புதூர் பகுதியில் ரோட்டோரத்தில் மீன் வியாபாரம் நடைபெறு வதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாகவும் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேயர் மகேசுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து இன்று காலை மேயர் மகேஷ் ராமன் புதூர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியில் மீன், காய்கறி வியாபாரிகள் ரோட்டோரத்தில் கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். மீன், காய்கறி வியாபாரி களிடம் மேயர் மகேஷ் பேசினார். அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய வேண்டும். ரோட்டோரத்தில் போக்குவரத்து இடையூறாக கடை அமைத்து வியாபாரம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

    இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளை கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்யவும் கூறினார். இதைத்தொடர்ந்து ராமன்புதூர் பகுதியில் கழிவு நீர் ஓடை உடைந்து மோசமான நிலையில் காணப்பட்டது. அதை உடனே சீரமைக்க மேயர் மகேஷ் உத்தரவிட்டார்.

    இது குறித்து மேயர் மகேஷ் கூறியதாவது:-

    முன்மாதிரியான மாநகராட்சியாக...

    நாகர்கோவில் மாநகராட்சி யை முன்மாதிரியான மாநக ராட்சியாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள் ளப்பட்டு வருகிறது. சாலை மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. போக்கு வரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் பல்வேறு சாலைகளில் இருவழிப்பாதை யாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    இந்த நிலையில் ராமன் புதூர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டோரங்களில் கடைகள் இருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ரோட்டோர கடை வியாபாரியிடம் தனியார் பணம் வசூல் செய்ததை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    மீன், காய்கறி வியாபாரிகள் அதற்கான ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே மீன் வியா பாரம் செய்ய வேண்டும். ரோட்டோரத்தில் மீன், காய்கறி வியாபாரம் செய்தால் பாரபட்ச மின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வியாபாரிகளுக்கு 2 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் ரோட்டோரத்தில் கடை அமைத்தால் கடைகள் அகற்றப்படுவதுடன் பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக் கப்படும். இதற்கு வியா பாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது நகர்நல அதிகாரி ராம்குமார், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேஷ், ராஜா, கவுன்சிலர் தினகர், மண்டல தலைவர் ஜவகர், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.வராத தால் என்ன செய்வதென தெரியாமல் போலீசார் தவித்து வருகின்றனர்.

    • விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும்
    • குளச்சலில் மீன்வரத்து குறைந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000- க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்கள், கட்டு மரங்க ளும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதி யில்தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி மீன்கள், ராட்சத திரட்சி எனப்படும் திருக்கை போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும்.பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும். தற்போது விசைப்படகுகளில் கண வாய், புல்லன், கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் சீசனாகும்.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மீன் பிடித்து கரை திரும்பிய விசைப்படகுகள் மீண்டும் கடலுக்கு செல்ல வில்லை. ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் பாதியி லேயே கரை திரும்பின.அவை நங்கூரம் பாய்ச்சி மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அருகில் மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபடும் பைபர் கட்டுமரங்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க சென்று வந்த நிலையில் இன்று பலத்த காற்று காரணமாக பைபர் கட்டுமரங்களும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.ஒரு சில கட்டுமரங்களே மீன் பிடிக்க சென்றன.அவற்றுள் குறைவான மீன்களே கிடைத்தன.இதனால் இன்று குளச்சலில் மீன்வரத்து குறைந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    • நாமக்கல், மோகனூர் சாலையில், கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் மீன் வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.
    • இப்பயிற்சியில் மீன் பண்ணை அமைத்தல், மீன் குஞ்சுகளை தேர்வு செய்தல், புதிய தொழில்நுட்ப முறையில் மீன் வளர்ப்பு, நோய், நீர் மேலாண்மை பற்றியும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    நாமக்கல்:

    வேளாண் அறிவியில் நிலைய தலைவர் டாக்டர் அழகுதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    நாமக்கல், மோகனூர் சாலையில், கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் (கேவிகே) வருகிற 17-ந் தேதி காலை 10 மணிக்கு, ஒருங்கிணைந்த பண்ணை முறையில் மீன் வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.

    இப்பயிற்சியில் மீன் பண்ணை அமைத்தல், மீன் குஞ்சுகளை தேர்வு செய்தல், புதிய தொழில்நுட்ப முறையில் மீன் வளர்ப்பு, நோய், நீர் மேலாண்மை பற்றியும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், முதுநிலை கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்.

    இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விவசாயிகள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • மீன்பிடிப்பதில் விதி மீறல் செய்ததாக ஒரே மாதத்தில் 117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • படகுகளுக்கான எரிபொருளும் ரத்து செய்யப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் கூறியதாவது:-

    தமிழ்நாடு கடல் மீன் பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் இரட்டை மடி, சுருக்கு மடி வலைகள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. இவற்றைப் பயன்படுத்துவது குற்றமாகும். எனவே தடை மீறும் மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. மீன்வள சட்ட அமலாக்க துறையினர், மீன்வளத்துறை அதிகாரிகளுடன் இணைந்து ராமேசுவரம், மண்டபம், தொண்டி, புதுமடம் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

    நடப்பாண்டில் ஜனவரி மாதத்தில் மட்டும் தடையை மீறி இரட்டை மடி, சுருக்குமடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடித்தது தொடர்பாக ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதி மீனவர்கள் மீது 117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மீனவர்களின் இரட்டை மடி, சுருக்கு மடி வலைகளும் மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் ஜன.23-ந்தேதி வரை 16 லட்சத்து 70ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    பிடிபட்ட மீன்கள் ஒரு லட்சத்து 67 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. படகுகளுக்கான எரிபொருளும் ரத்து செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

    • 1 கிலோ மீன்கள் ரூ.600 வரை விற்பனையாகிறது.
    • வழக்கத்தை விட ஒரு கிலோவிற்கு ரூ.50 முதல் ரூ.200 வரை மீன்விலை அதிகரித்து இருந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் சின்ன ஏர்வாடி, கீழக்கரை, பெரியபட்டினம், மாயாகுளம், முத்துப் பேட்டை, மற்றும் திருப்பா லைக்குடி, மோர்ப்பண்ணை, முள்ளிமுனை, காரங் காடு, வட்டாணம், பாசிப்பட்டினம், எஸ்.பி.பட்டினம் உள்பட 20–க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மீன்பிடி தொழில் பெரிய அளவில் இல்லை. இதனால் மீன்மார்க்கெட்டுக்கு கடந்த சில வாரங்களாக மீன்வரத்து வெகுவாக குறைந்து. மீன்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் நகரை மீன், ஊடகம், விளைமீன், முரல் போன்ற ஒரு சில மீன் வகைகளை தவிர பல்வேறு வகையான மீன் வகைகள் விற்பனைக்கு வருவதில்லை. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் மார்க்கெட் களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப் பட்டது.

    நகரை, செங்கனி, பாறை மீன்கள் 1 கிலோ ரூ.500–க்கும், முரல், கலிங்க முரல், நண்டு போன்றவை ரூ.500 முதல் ரூ.600 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. கடற்கரைப் பகுதியில் வெளியூர் வியாபாரிகள் ஏராளமானோர் வந்து செல்வதால் மீன்களை போட்டி போட்டு கொண்டு அதிக விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர்.

    ராமநாதபுரம், கீழக்கரை, தேவிபட்டிணம் போன்ற மீன் மார்க்கெட்டில் வழக்கத்தை விட ஒரு கிலோவிற்கு ரூ.50 முதல் ரூ.200 வரை மீன்விலை அதிகரித்து இருந்தது. இதனால் மீன் உணவு பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    வழக்கமாக பிப்ரவரியில் கணவாய், நண்டு அதிகமாக வலையில் சிக்கும். தற்போது வாடைக்காற்று இல்லாத நிலையிலும் மீன்கள் அதிகமாக கிடைக்காததால் நாள்தோறும் ஏமாற்றத்துடன் கரை திரும்பி வருகின்றனர். இதனால் நஷ்டமடைந்துள்ள மீனவர்கள் தங்கள் குடும்ப செலவுகளை ஈடுகட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். டீசல் உட்பட படகில் வரும் சக ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

    • குளத்தில் நீர் வற்றாமல் அப்பகுதிக்கு முக்கிய நீர்நிலை ஆதாரமாக உள்ளது.
    • ஆகாயத்தாமரை செடிகள் அதிகம் இருப்பதால் மீன் கூட பிடிக்க முடியாமல் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட பச்சாந்தோப்பு அருகே கரிக்குளம் உள்ளது.

    இந்த குளத்தை அருகில் உள்ள பச்சாந்தோப்பு, ஆற்றாங்கரை தெரு, தைக்கால் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் குளிப்பதற்கும் மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வந்தனர்.

    மேலும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயிலிருந்து உபரி நீர் வருடம் முழுவதும் இந்த குளத்தில் வந்து சேர்கிறது.

    இதனால் கோடையிலும் குளத்தில் நீர் வற்றாமல் அப்பகுதிக்கு முக்கிய நீர்நிலை ஆதாரமாக உள்ளது.இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் குளம் குடிமராமத்து பணியில் தூர்வாரப்பட்டது.

    ஆனால் கடந்த 1 ஆண்டாக கரிக்குளம் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் உள்ளது.

    இதனால் குளத்தில் ஆகாயத் தாமரை செடிகள், கொடிகள் மண்டி புதர் போல் காட்சியளிக்கிறது.குளத்தின் படிக்கட்டுகள் சுகாதாரமற்று காணப்படுகிறது.

    இதனால் குளத்தினை பயன்படுத்த முடியாமல் மக்கள் உள்ளனர்.

    மேலும் கடந்த ஆண்டு இக்குளம் மீன் பாசி குத்தகைக்கு விடப்பட்டு குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் அதிகம் இருப்பதால் மீன் கூட பிடிக்க முடியாமல் உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து கரிக்குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பிரதமருக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கடிதம்
    • மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்தவர் ஜெஸ்லின். இவரது மகன் ராஜேஷ்குமார் உள்பட 5 மீனவர்கள் சவுதி அரே பியா நாட்டின் கத்திப் என்ற பகுதியில் அரே பிய முதலாளிக்கு சொந் தமான விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    அப்போது ஈரான் கடல் கொள்ளையர்கள் சவுதி அரேபிய கடலுக் குள் வந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது சரமாரி யாக துப்பாக்கியால் சுட் டனர். இதில் ராஜாக்கமங் கலம் துறையைச் சேர்ந்த ராஜேஷ் குமார் தனது இடது கண் ணில் குண்டடிப்பட்டும், காது தொண்டை பகுதி யிலும் குண்டடிக்காயம் பட்டும் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். மேலும் படகில் இருந்த ஜிபிஎஸ், எக்கோ சவுண்டர், வயர் லெஸ் மற்றும் மீனவர் கள் பிடித்து வைத்தி ருந்த மீன்களையும், மீனவர் கள் பயன்படுத்திக் கொண்டி ருந்த செல்போன் அனைத் தையும் ஈரான் கடற்கொள் ளையர்கள் கொள்ளைய டித்து சென் றுள்ளனர். இது சம்பந்த மாக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பிரதம ருக்கும், இந்திய வெளியு றவுத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், வெளிநாடுகளில் மீன்பிடி தொழிலில் ஈடு பட்டுள்ள இந்தியர்களுக்கு குறிப்பாக குமரி மாவட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர் களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் சவுதி அரேபிய கடலில் ஈரான் கடற்கொள்ளையர் சுட் டதில் ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்த ராஜேஷ் குமார் என்ற மீனவர் குண்டடிப்பட்டு படுகாயம் அடைந் துள்ளார். அவ ருக்கு அவர் பணி புரிந்த நிறுவனம் தகுந்த இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் வெளிநாடுகளில் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுப டுகின்ற மீனவர்கள் அச்ச மின்றி மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதற்கு உத்தரவா தம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுக ளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள் மீது தாக்குதல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த சம்பவத் திற்கு முற்றுப்புள்ளி வைக் கும் விதத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • பொங்கல் பண்டிகையொட்டி பெரும்பாலான வீடுகளில் முதல் நாள் மற்றும் 2-வது நாளான நேற்றும் சைவ உணவுகளை சமைத்து அதனை சாமிக்கு படையலிட்டு கும்பிடுவது வழக்கம். 3-வது நாளான காணும் பொங்கல் அன்று அசைவ பிரியர்கள் இறைச்சி வாங்கி உண்பார்கள்.
    • காணும் பொங்கல் பண்டிகையொட்டி சேலத்தில் இறைச்சி, மீன் கடைகளில் அலைமோதிய கூட்டம் அலைமோதியது.

    சேலம்:

    பொங்கல் பண்டிகை ஓட்டி நேற்று முன்தினம் சேலம் மாநகரில் பெரும்பாலான இறைச்சி மற்றும் மீன்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    தொடர்ந்து நேற்று திருவள்ளுவர் தினத்தை ஒட்டி மீன் கடைகள் இறைச்சி கடைகளை அடைக்க மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டு இருந்தது.

    இதையொட்டி இறைச்சி, மீன் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அசைவ பிரியர்கள் கறி சாப்பிட முடியாமல் அவதி அடைந்தனர்.

    இந்த நிலையில், இன்று காலை சேலம் மாநகரில் உள்ள இறைச்சி கடைகள், மீன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. காலை முதலே இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

    இதைத்தொடர்ந்து1 மணி நேரம் வரை காத்து நின்று கடைகளில் இறைச்சியை பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதேபோல மீன் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

    1 கிலோ ஆடு இறைச்சி ரூ.800-க்கு விற்பனையானது. அதேபோல சூரமங்கலம் பகுதியில் உள்ள மாநகராட்சி மீன் சந்தை மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள மீன் சந்தைகளிலும் மீன்கள் விற்பனை அதிக அளவில் நடந்தது.

    ×