search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சலில் திடீர் கடல் சீற்றம் கட்டுமரங்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க சென்றன
    X

    குளச்சலில் திடீர் கடல் சீற்றம் கட்டுமரங்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க சென்றன

    • பாதுகாப்பு கருதி விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாது
    • மணற்பரப்பில் விழுந்து செல்லும் அலை வெள்ளம் மணற்பரப்பை அடித்து செல்கிறது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படும். ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்பு வரை விழும். அதனால் பாதுகாப்பு கருதி விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பின. இதனால் மீன் பிடித்தொழில் பாதிக்கப்பட்டது.

    தற்போது காற்று சற்று தணிந்த நிலையில் மீண்டும் விசைப்படகுகள் மீன் பிடிக்க சென்றன. வழக்கம்போல் குறைந்த அளவே பைப்பர் வள்ளங்கள் மீன் பிடித்து வருகின்றன. இந்நிலையில் இன்று காலை குளச்சல் கடல் பகுதியில் கடல் திடீர் சீற்றமாக இருந்து வருகிறது. ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்பு வரை விழுந்து செல்கிறது. மணற்பரப்பில் விழுந்து செல்லும் அலை வெள்ளம் மணற்பரப்பை அடித்து செல்கிறது. இதனால் அங்கு கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.

    குளச்சல், கொட்டில்பாடு சுற்றுவட்டார பகுதிகளில் கடல் சீற்றத்தால் கடல் அரிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் மணற்பரப்பில் நிறுத்தப்பட்ட பைபர் வள்ளங்கள் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் வழக்கம்போல் மீன் பிடிக்க சென்றன. அவற்றுள் குறைந்தளவு மீன்களே கிடைத்தன. கிடைத்த மீன்களை மீனவர்கள் ஏலக்கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர்.

    Next Story
    ×