search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீட்பு"

    • டி.சி. கொடுத்து விடுவேன் என தலைமை ஆசிரியர் மிரட்டியதால் வேதனை
    • பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டனர்

    கோவை,

    கோவை மதுக்கரை அருகே உள்ள குரும்பபாளையம் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் சக்திபாபு. இவரது மகன் யோகேஷ் (வயது 13).

    திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் லோகேஷ் (13). கல்யாண சுந்தரனார் வீதியை சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மகன் அஸ்வந்த் (13), வீரமாத்தி அம்மன் கோவில் விதியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு. இவரது மகன் ரோகித் (13). இவர்கள் 4 பேரும் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து பள்ளியில் தலைமை ஆசிரியர் மாணவர்கள் 4 பேரையும் அழைத்து டி.சி. கொடுத்து விடுவேன் என மிரட்டி உள்ளார்.

    இதனால் பெற்றோருக்கு பயந்த மாணவர்கள் 4 பேரும் வீட்டிற்கு செல்லாமல் இருந்தனர். மேலும் அவர்கள் ஊட்டிக்கு செல்லலாம் என முடிவு செய்தனர். அதன்படி கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு புறப்பட்டு சென்றனர். மாணவர்கள் பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த அவர்களின் பெற்றோர் மதுக்கரை போலீசில் மாயமான தங்களது மகன்களை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர்களை தேடி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மாணவர்கள் ஊட்டி செல்வதற்காக மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் நிற்பது தெரிய வந்தது. பின்னர் மதுக்கரை போலீசார் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று மாணவர்கள் 4 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்களை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    • மாங்கோட்டை கீழப்பட்டி கிராமத்தில் உள்ள வறண்ட கிணற்றில் ஆடு தவறி விழுந்தது
    • ஆலங்குடி தீயணைப்புத்துறை வீரர்கள் கயிறு கட்டி, உள்ளே இறங்கி ஆட்டை உயிருடன் மீட்டனர்

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை கீழப்பட்டி கிராமத்தில் ராசு என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில், அதே பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவருக்கு சொந்தமான ஆடு ஒன்று இரை தேடி சென்ற போது தவறி விழுந்துள்ளது.

    இது குறித்து அப்பகுதியினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆலங்குடி தீயணைப்புத்துறை வீரர்கள் கயிறு கட்டி, உள்ளே இறங்கி ஆட்டை உயிருடன் மீட்டனர். 

    • தீயணைக்கும் படை வீரர்கள் அதிரடி நடவடிக்கை
    • அந்த நாய் தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள தெற்கு குண்டல் பகுதியை சேர்ந்தவர் மிதுன் தாஸ். கூலி தொழிலாளி. இவரது வீட்டு நாய் தெற்கு குண்டல் மெயின் ரோட்டின் அருகில் உள்ள 40 அடி ஆழ பஞ்சாயத்து கிணற்றில் தவறி விழுந்தது. அந்த நாய் தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.

    இதுகுறித்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அந்த நாயை உயிருடன் மீட்டனர். பின்னர் அந்த நாயை தீயணைக்கும் படை வீரர்கள் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

    • காரின் பேரில் காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
    • தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    காங்கயம், பங்களாபுதூர் ரோடு பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி (வயது 73) என்ற மூதாட்டி நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காணாமல் போனதாக காங்கயம் காவல் நிலையத்தில் மூதாட்டியின் உறவினர்கள் புகார் கொடுத்துள்ளனர், புகாரின் பேரில் காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் நேற்று வெள்ளகோவில் அருகே உள்ள பொன்பரப்பி என்ற இடத்தில் பி. ஏ. பி., கிளை வாய்க்காலில் மூதாட்டியின் உடல் கிடந்துள்ளது.தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • சாக்கடை கால்வாயில் அதிகாலையில் நாய் ஒன்று விழுந்துள்ளது
    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நாயை உயிருடன் மீட்டனர்

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வாலறைக்கேட் அருகே பண்ணக்காடு பகுதியில் அதிக ஆழமுள்ள சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த சாக்கடை கால்வாயில் அதிகாலையில் நாய் ஒன்று விழுந்துள்ளது. பின்னர் சாக்கடையில் இருந்து வெளியே வரமுடியாததால் தொடர்ந்து சத்தமிட்டு கொண்டே இருந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்ற கணேஷ் புவன் என்பவர் திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தீயணைப்பு அலுவலர் குணசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சதீஷ்குமார், ஹரிஹரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நாயை உயிருடன் மீட்டனர். இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறை வீரர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

    • கரூர் நொய்யல் பகுதியில் திருட்டு கும்பலுடன் வந்து மனநலம் பாதிக்கப்பட்டவர் பொதுமக்களிடம் சிக்கி கொண்டார்
    • போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம், நொய்யல் குந்தாணி பாளையம் பாதகாளியம்மன் பகுதியைச் சேர்ந்த பிரிதிவிராஜ் என்பவரது வீட்டில் 3 நபர்கள் வீட்டிற்கு உள்ளே புகுந்துள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி யடைந்த தோட்டத்தி லிருந்த பிரிதிவிராஜ் குடும்பத்தினர் சத்தம் போடவும் வந்த 3 பேரில் 2 பேர் கம்பிவேலியைத் தாண்டி க்கொண்டு தப்பியோ டிவிட்டனர். ஒருவர் மட்டும் சிக்கினார்.

    அவர் வேலாயுத ம்பாளையம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரை விசாரித்ததில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், மதுரை மாவ ட்டம் நாகாபுரம் பகுதியைச் சேர்ந்த லிங்கேஷ் என்பதும் தெரியவந்தது. இவர் மதுரையிலிருந்து பழநி சென்று பின் அங்கிருந்து கரூர் வந்ததும் தெரியவந்தது.இதனை தொடர்ந்து சாந்திவனம் நிர்வாகத்திற்கு, சப் - இன்ஸ்பெக்டர் ரெங்க ராஜிடம் தகவல் தெரிவித்தார். சாந்திவனம் மீட்புக்குழுவினரான ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், செவிலியர் சித்ரா மற்றும் ஓட்டுநர் அருள்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் மனநலம் பாதிக்க ப்பட்டவரை அழைத்து சென்று, திருச்சி தில்லைநகரிலுள்ள ஆத்மா மனநல மருத்துவமனையில் மனநல சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு, ஆத்மா மனநல மருத்துவமனையின் இயக்குநரும், சாந்திவனம் மனநலக் காப்பகத்தின் பொதுக்குழு உறுப்பினரும், மனநல மருத்துவருமான டாக்டர் ஸ்ரீதர் அந்நபரை பரிசோதித்து மனநல சிகிச்சை அளித்து வருகிறார்.

    • பூமாண்டம்பாளையம் பகுதியில் கிணற்றில் விழுந்த நாய் உயிருடன் மீட்பு
    • இவர் வளர்த்த நாய் அருகில் இருந்த 70 அடி கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

    வேலாயுதம் பாளையம், 

    கரூர் மாவட்டம் பூமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 50). இவர் வளர்த்த நாய் அருகில் இருந்த 70 அடி கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து கந்தசாமி வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று நாயை கயிற்றால் கட்டி பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

    • மனநலம் பாதித்த வாலிபரை போலீசாரும், மனித நேயத்தினரும் மீட்டு மறு வாழ்வு
    • பலரது கூட்டு முயற்சியால் மீட்கப்பட்டு சிகிச்சை

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், திருக்காடுதுறை ஊராட்சி, பூலாங்காலனி, ஆலமரத்துமேடு பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவர் சுற்றித்திரிந்தார். காலில் அடிபட்டு நடக்க இயலாமல் சாலையில் வாகனங்களுக்கு இடையூறாகவும், உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழலிலும் அவர் சுற்றியுள்ளார்.அவரை உடனடியாக மீட்க வேண்டும் என்று சாந்திவனம் மனநலக் காப்பகம் இயக்குநர் அரசப்பனுக்கு கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலிருந்து தகவல் வந்தது.இதை தொடர்ந்து சாந்திவனம் மனநல காப்பகம் ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் நந்த கோபால், ஏட்டு சுமித்ரா ஆகியோர் அங்கு சென்றனர்.இதனிடையே திருக்காடுதுறை கிராம நிர்வாக அலுவலர் ரவி அந்த நபரை மீட்டு அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார். அங்கு காலில் இருந்த புண்ணிற்கு கட்டுப்போட்டுவிட்டு கரூர் வெண்ணமலையிலுள்ள கரூர் அன்புக் கரங்கள் - சிறார் மற்றும் முதியோர் இல்லத்தில் ஒப்படைத்தார்.

    இதை அறிந்த சாந்திவனம் ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், நிர்வாக செயலாளர் டாக்டர் ராமகிருஷ்ணன், மனநல மருத்துவர் டாக்டர் அருன்குமார் மற்றும் சாந்திவனம் இயக்குநர் அரசப்பன் ஆகியோர் மூலமாக கரூர் வெண்ணமலை சென்று அந்த நபரை மீட்டனர்.மீட்புக் குழுவில் செவிலியர் சித்ரா, அருள்குமார் ஆகியோரும் இடம்பெற்றனர். அவரை திருச்சி, தில்லைநகரிலுள்ள ஆத்மா மனநல மருத்துவமனையில் மனநல சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ஆத்மா மனநல மருத்துவர் அஜய் தலைமையிலான குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர். பாதிக்கப்பட்ட நபர் கால் கீழ்பகுதி முழுவதும் புண் அதிகமாகி காலே அழுகும் சூழலில் இருந்தது. இன்னும் சிறிது நாள் சென்றிருந்தால் அந்தக் காலையே எடுக்கும் சூழல் வந்திருக்கும்.அந்தளவுக்கு கால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. அதனை ஆத்மா மனநல மருத்துவமனை செவிலியர்கள் சுத்தப்படுத்தி மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்தளித்துள்ளனர், அதே நேரம் மனநல சிகிச்சையும் தொடங்கப்பட்டு உள்ளது.பலரது கூட்டு முயற்சியால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டு உள்ளது. மனித நேயம் இன்னும் மரித்துப்போகவில்லை என்பதை உணர்த்தும் விதமான இந்த நிகழ்வு மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மீட்பு பணியில் ஈடுபட்ட வி.ஏ.ஓ., மனநல காப்பகத்தினர், போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

    • சிவஹரி (14). பாண்டியன் நகரில் உள்ள தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • வீட்டுப்பாடம் எழுதாததால், பள்ளி செல்ல பயந்து, வீட்டுக்கு தெரியாமல் உறவினர் வீட்டுக்கு சென்றதாக போலீசார் கூறினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் போயம்பாளையம், நந்தா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் சிவஹரி (14). பாண்டியன் நகரில் உள்ள தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார். சிவஹரி நேற்று அதிகாலை கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்திலும் உறவினர் வீடுகளிலும் தேடிப் பார்த்தனர் ஆனால் எங்கும் சிறுவனை காணவில்லை. பின்னர் இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்தனர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான சிறுவனை தேடி வந்தனர்.

    போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஈரோடு மாவட்டம், திண்டலிலுள்ள உறவினர் வீட்டுக்கு சிறுவன் சென்றது தெரியவந்தது. திண்டல் சென்று சிறுவனை அழைத்து வந்த போலீசார் உரிய அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்

    வீட்டுப்பாடம் எழுதாததால், பள்ளி செல்ல பயந்து, வீட்டுக்கு தெரியாமல் உறவினர் வீட்டுக்கு சென்றதாக போலீசார் கூறினர்.

    • ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி முட்புதரில் சிக்கிய மலைப்பாம்பை பத்திரமாக மீட்டார்.
    • பிடிபட்ட மலைப்பாம்பு சுமார் 8 அடி நீளம் இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து சத்தி செல்லும் சாலையில் பட்டறை அருகே மலைப்பாம்பு ஒன்று சாலையோர முட்புதரில் சிக்கி தவிப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் பாம்பு பிடி வீரர் சிரஞ்சீவிக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாம்பு பிடி வீரர் சிரஞ்சீவி ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி முட்புதரில் சிக்கிய மலைப்பாம்பை பத்திரமாக மீட்டார்.

    இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். வனத்துறையினரும் அங்கு வந்த மலைப்பாம்பினை மீட்டு பத்திரமாக அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.

    பிடிபட்ட மலைப்பாம்பு சுமார் 8 அடி நீளம் இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • நெல்லையில் இருந்து தொழில் விஷயமாக கோவைக்கு வந்தவர்
    • ஜவுளிக்கடை உரிமையாளர் மரணம் குறித்து காட்டூர் போலீசார் விசாரணை

    கோவை,

    நெல்லை அருகே உள்ள பேட்டையை சேர்ந்தவர் முகமது கனி. இவரது மகன் ஜஹாங்கீர் சலாம் (வயது 34). ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவர் கடந்த 10-ந் தேதி நெல்லையில் இருந்து தொழில் விஷயமாக கோவைக்கு வந்தார். பின்னர் ஜஹாங்கீர் சலாம் காந்திபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் 4-வது மாடியில் அறை எடுத்து தங்கி னார். ஆனால் கடந்த 2 நாட்களாக அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. அறையில் இருந்த தூர்நாற்றம் வந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் கதவை தட்டினர். ஆனால் கதவை யாரும் திறக்கவில்லை. இதனையடுத்து ஓட்டல் ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது ஜஹாங்கீர் சலாம் படுக்கையில் இறந்து கிடந்தார். அவர் இறந்து 2 நாட்களுக்கும் மேல் இருக்கும் என்பதால் அவரது உடல் அழுகிய நிலையில் காண ப்பட்டது. இது குறித்து ஓட்டல் ஊழியர்கள் காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஜஹாங்கீர் சலாமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜவுளிக்கடை உரிமையாளர் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சங்கர்குமார் பேர்பெரியான் குப்பம் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
    • எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த செடுத்தான் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மகன் சங்கர்குமார் (வயது 17). இவர் பேர்பெரியான் குப்பம் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு அந்த பகுதியில் உள்ள விவசாய நிலப்பகுதிக்கு சென்றுள்ளார்.

    பின்னர் அங்கிருந்து பள்ளிக்கு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தார். இதை பார்த்த சக மாணவர்கள் முத்தாண்டிக்குப்பம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றுக்குள் தவறி விழுந்த மாணவன் சங்கர்குமாரை பத்திரமாக மீட்டனர்.

    ×