என் மலர்
உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே கிணற்றில் விழுந்த மாணவன் மீட்பு
- சங்கர்குமார் பேர்பெரியான் குப்பம் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
- எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த செடுத்தான் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மகன் சங்கர்குமார் (வயது 17). இவர் பேர்பெரியான் குப்பம் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு அந்த பகுதியில் உள்ள விவசாய நிலப்பகுதிக்கு சென்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்து பள்ளிக்கு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தார். இதை பார்த்த சக மாணவர்கள் முத்தாண்டிக்குப்பம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றுக்குள் தவறி விழுந்த மாணவன் சங்கர்குமாரை பத்திரமாக மீட்டனர்.
Next Story






