காங்கயத்தில் மாயமான மூதாட்டி பிணமாக மீட்பு

காரின் பேரில் காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

வெள்ளகோவில்:

காங்கயம், பங்களாபுதூர் ரோடு பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி (வயது 73) என்ற மூதாட்டி நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காணாமல் போனதாக காங்கயம் காவல் நிலையத்தில் மூதாட்டியின் உறவினர்கள் புகார் கொடுத்துள்ளனர், புகாரின் பேரில் காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று வெள்ளகோவில் அருகே உள்ள பொன்பரப்பி என்ற இடத்தில் பி. ஏ. பி., கிளை வாய்க்காலில் மூதாட்டியின் உடல் கிடந்துள்ளது.தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com