search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழைக்கால கூட்டத்தொடர்"

    • விதி எண் 176-ன் கீழ் 2.30 மணி நேரம் வரை மட்டுமே விவாதம் நடைபெறும்.
    • விதி எண் 267-ன் கீழ், நடைபெறும் விவாதத்திற்கு கால நிர்ணயம் எதுவும் கிடையாது.

    புதுடெல்லி:

    மணிப்பூர் வன்முறை தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்தன. ஆனால் விவாதத்தை நடத்துவதில் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே உள்ள முரண்பாடு காரணமாக விவாதம் நடத்துவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது. குறுகிய கால விவாதத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், மணிப்பூர் விவகாரம் குறித்து மாநிலங்களவையில் விதி எண் 267-ன் கீழ் நீண்ட நேரம் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளன. இதனை ஏற்றுக்கொள்ளாத அரசு, விதி எண் 176-ன் கீழ் மட்டுமே குறுகியகாலம் விவாதம் நடத்த முடியும் என கூறி வருகிறது.

    விதி எண் 176-ன் கீழ் 2.30 மணி நேரம் வரை மட்டுமே விவாதம் நடைபெறும். ஆனால் விதி எண் 267-ன் கீழ், நடைபெறும் விவாதத்திற்கு கால நிர்ணயம் எதுவும் கிடையாது என்பதால் மத்திய அரசு இதனை ஏற்க முன்வரவில்லை.

    இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய பாஜக எம்பியும், மாநிலங்களவை கட்சி தலைவருமான பியூஷ் கோயல், மணிப்பூர் விவகாரம் குறித்து பிற்பகல் 2 மணிக்கு விவாதம் நடத்த வலியுறுத்தினார். ஆனால் விதி எண் 267ன் கீழ் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

    பிற்பகல் 2 மணிக்கு விவாதத்தை தொடங்க அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தயாரானார். விதி எண் 267-ன் கீழ் கொடுக்கப்பட்ட நோட்டீஸ்களை ஏற்க மறுத்தார். விதி எண் 176-ன் கீழ் விவாதிப்பதற்கான மத்திய அரசின் நோட்டீசை ஏற்றார். அதன்படி குறுகிய கால விவாதத்திற்கு அழைப்பு விடுத்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. விதி எண் 267ன் கீழ் விவாதிக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் அமைதியற்ற நிலை உருவானது. எனவே, அவை 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னரும் அமளி நீடித்ததால் அவை நடவடிக்கைகள் 3.30 வரை ஒத்திவைக்கப்பட்டன.

    3.30 மணிக்கு அவை கூடியபோதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பி விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவையை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்தார்.

    • நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
    • நாங்கள் தயாராக இருக்கிறோம் என மத்திய அரசு தெரிவித்து வருகிறது

    மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால், இதுவரை விவாதத்திற்கான தேதி அறிவிக்கப்படவில்லை.

    நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்ற பின்னர்தான் மற்ற அலுவல் பணிகள் தொடர வேண்டும். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபின் மசோதாக்கள் நிறைவேற்றப்படக் கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் முடக்கப்பட்டு வரும் நிலை தொடர்ந்த வண்ணம் உள்ளது.

    இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று பாராளுமன்றம் கூடியது. மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    மாநிலங்களவையில மத்திய மந்திரி பியூஷ் கோயல் பேசுகையில் ''பாராளுமன்றத்தில் நாங்கள் இன்று மதியம் 2 மணிக்கு மணிப்பூர் விவகாரத்தை விவாவதத்திற்கு எடுக்க விரும்புகிறோம். எதிர்க்கட்சிகள் உறுப்பினர்களுக்கான சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். அரசு மணிப்பூர் குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் முக்கியமான 9 நாட்களை வீணடித்துவிட்டது'' என்றார்.

    • ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகபட்சமாக 1611 சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்
    • சீனாவில் 178 பேர் சிறைகளில் உள்ளனர்

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் வெளிநாடு சிறைகளில் வாடும் இந்தியர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவைச் சேர்ந்த 8,330 பேர் 90 நாடுகளில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 1,611 பேர் சிறைகளில் உள்ளனர். 1,222 பேர் நேபாளம், 696 பேர் கத்தார், 446 பேர் குவைத், 341 பேர் மலேசியா, 308 பேர் பாகிஸ்தான், 294 பேர் அமெரிக்கா, 277 பேர் பஹ்ரைன், 249 பேர் பிரிட்டன் ஜெயில்களில் உள்ளனர்.

    சீனாவில் உள்ள சிறைகளில் 178 பேரும், இத்தாலியில் 157 பேரும், ஓமனில் 139 பேர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    • நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை.
    • அமளிக்கு மத்தியில் ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது.

    புதுடெல்லி:

    மணிப்பூர் மாநிலத்தில் 2 சமூகத்தினர் இடையே நடந்த கலவரத்தில் 160 பேர் வரை பலியானார்கள். கடந்த மே மாதம் 3-ந் தேதி தொடங்கிய வன்முறை இதுவரை ஓய்ந்தபாடில்லை. பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் முன்வைத்து அமளியில் ஈடுபட்டுவருகின்றன. பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரியும், விவாதம் நடத்த கோரியும் அமளியில் ஈடுபடுவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இதன் உச்சகட்டமாக மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை. அனைத்து கட்சிகளுடன் பேசி முடிவு செய்யப்படும் என்று சபாநாயகர் அறிவித்தார். இதனால் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று எதிர்க்கட்சி எம்.பி.கள் கருப்பு உடை அணிந்து வந்தனர். மணிப்பூர் சம்பவத்தை கண்டிக்கும் விதமாக அவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

    மாநிலங்களவையைப் பொருத்தவரை எதிர்க்கட்சிகளின் அமளி மற்றும் அவர்களுக்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்களின் முழக்கம் காரணமாக கூச்சல் குழப்பம் நிலவியது. இதன் காரணமாக முதலில் 12 மணி வரையிலும், அதன்பின்னர் பிற்பகல் 2 மணி வரையிலும் அவை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்தது. இந்த அமளிக்கு மத்தியில் ஒளிப்பதிவு (திருத்தம்) மசோதாதாவை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் கொண்டு வந்தார்.

    மசோதா மீது விவாதம் நடந்துகொண்டிருந்தபோது,  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

    • மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கை
    • நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும் வரை மற்ற அலுவல் பணிக்கு எதிர்ப்பு

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற அலுவல் பணியை முடக்கி வருகின்றன. பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில், மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

    நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடத்த மக்களவை சபாநாயகர், சம்மதம் தெரிவித்த நிலையில் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து நேரம் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    ஆனால் விவாதம் நடைபெறுவதற்கு முன் எந்தவொரு அலுவல் பணியும் நடைபெறக்கூடாது என எதிர்க்கட்சிகள் அமளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மணிப்பூர் விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, எதிர்க்கட்சி தலைவர்கள் கருப்பு சட்டை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்.

    • மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற இருக்கிறது
    • தமிழக ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தை மீறும் வகையில் செயல்படுவதாக புகார்

    தமிழக ஆளுநரை திரும்பப்பெறும் விவகாரத்தில் தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார். அதில் அலுவல் பணிகள் அனைத்தையும் ஒத்திவைத்துவிட்டு தமிழக ஆளுநரை திரும்பப்பெறும் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    அந்த நோட்டீஸில் ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தை மீறும் வகையில் செயல்படுவதாக டி.ஆர். பாலு அதில் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே மணிப்பூர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதை ஏற்றுள்ள சபாநாயகர், விவாதம் நடத்துவதற்கான நேரம் தெரிவிக்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்கிடையே இது குறித்து விவாதிக்க அனுமதிப்பாரா என்பது கேள்விக்குறியே.

    தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், அரசுக்கும் இடையே பல்வேறு விசயங்கள் தொடர்பாக மோதல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் (No-Confidence Motion) கொண்டு வரலாம்.
    • வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்தால் இந்த தீர்மானம் வெற்றியாக கருதப்படும்.

    ஆளும் பா.ஜ.க.விற்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு ஏற்பதாக மக்களவை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக, எதிர்கட்சியோ அல்லது எதிர்கட்சி கூட்டணியோ நம்பிக்கை இல்லா தீர்மானம் (No-Confidence Motion) கொண்டு வரலாம்.

    ஆளும் அரசாங்கம் நாட்டு மக்களுக்கெதிராகவோ அல்லது அரசியலமைப்பு சட்டத்திற்கெதிராகவோ செயல்படுவதாக கருதும்போது இதனை கொண்டு வந்து ஆளும் அரசாங்கத்தின் வழிமுறைகளை எதிர்கட்சிகள் தீர்மானிக்க முடியும்.

    எனவே, தேவைப்படும்போது ஒரு ஆயுதமாக இதனை பயன்படுத்தும் நோக்கில் மக்கள் பிரதிநிதிகளுக்கு இந்த வழிமுறை அமைகிறது.

    மக்களவையின் உறுப்பினர்களில் யார் வேண்டுமென்றாலும் இதனை கொண்டு வரலாம். தீர்மானம் கொண்டு வருவது குறித்த தகவல்களை எழுத்துபூர்வமாக காலை 10 மணிக்குள் சபாநாயகருக்கு அளிக்க வேண்டும். ஆனால் அதற்கு குறைந்தபட்சம் 50 உறுப்பினர்களின் ஆதரவு இருக்க வேண்டும்.

    சபாநாயகர் இதனை விவாதத்திற்கு எடுத்து கொள்ளலாமா? வேண்டாமா? என தீர்மானிப்பார். அனுமதிக்கும் பட்சத்தில் அதற்கான தேதியும் நேரமும் தெரிவிப்பார். மக்களவையின் 198 விதிகளின் கீழ், சபாநாயகர் அழைப்பு விடுத்த பின்னரே இதனை அறிமுகப்படுத்தி விவாதிக்க முடியும்.

    இந்த தீர்மானத்தை கொண்டு வந்த உறுப்பினர் முதலில் பேச, ஆளும் கட்சி தரப்பு இதற்கு ஒரு விளக்கமளித்து தங்கள் நிலைப்பாட்டை விளக்கும். எதிர்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் இதன் மீது கேள்வி எழுப்பி கருத்துக்களை கூறுவார்கள்.

    நீண்ட, முழுமையான விவாதத்திற்கு பிறகு மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்படும். பெரும்பான்மை ஆதரவு கிடைத்தால் இந்த தீர்மானம் வெற்றியாக கருதப்படும். அவ்வாறு நடந்தால் ஆளும் அரசு ராஜினாமா செய்ய வேண்டும்.

    மாறாக தீர்மானத்திற்கு போதிய பெரும்பான்மை கிடைக்காமல் போனால், ஆளும் அரசு வெற்றி பெற்றதாகவும், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாகவும் அறிவிக்கப்படும்.

    இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து மக்களவையில் 27 முறை இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

    தற்போது காங்கிரஸ் கட்சி, பல கட்சிகளின் உதவியுடன் புதிதாக அமைத்துள்ள கூட்டணியின் ஒரு பகுதியாக, தெலுங்கானாவின் பாரதிய ராஷ்டிர சமிதி (BRS) உடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக மக்களவையில் 2 தனித்தனி நம்பிக்கையில்லா தீர்மானங்களை தாக்கல் செய்தது.

    நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு முதல் 2018-ம் ஆண்டு நரேந்திர மோடி வரை பல தலைவர்கள் இந்த தீர்மானத்தை எதிர்கொண்டுள்ளனர்.

    நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக கூட்டணி அரசு கடந்த 2018-ம் ஆண்டு சந்தித்த நம்பிக்கையில்லா தீர்மானம் 199 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • காங்கிரஸ் எம்.பி. முன்மொழிய எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் ஆதரவு
    • அனைத்துக்கட்சி தலைவர்களிடம் ஆலோசித்த பிறகு தேதி அறிவிக்கப்படும் என்றார் சபாநாயகர்

    பா.ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் மக்களவையில் கொண்டுவர முடிவு செய்தன. அதன்படி காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் மற்றும் பாரதிய ராஷ்டிரிய சமிதி எம்.பி. நம நாகேஸ்வர ராவ் ஆகியோர் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கான நோட்டீஸை இன்று காலை வழங்கினர்.

    இன்று காலை மக்களவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் 12 மணிக்கு அவை கூடியதும்,  நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். அனைத்துக் கட்சி தலைவர்களிடம் ஆலோசித்து விவாதத்திற்கான தேதி அறிவிக்கப்படும் என்றார்.

    முன்னதாக,

    பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் 32 மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை திட்டமிட்டபடி நடத்த முடியாத அளவுக்கு மணிப்பூர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறை தொடர்பாகவும், 2 பெண்கள் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட கொடூர சம்பவம் குறித்தும், பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி வலியுறுத்தி வருகிறது. மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க தயார் என்று அறிவித்துள்ள மத்திய அரசு, உள்துறை மந்திரி அமித் ஷா மூலம் பதில் அளிக்கும் என்று கூறுகிறது.

    ஆனால் எதிர்க்கட்சிகள் இதை ஏற்கவில்லை. பிரதமர்தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு இருந்தனர். இதனால் கடந்த 20, 21, 24, 25-ந்தேதிகளில் 4 நாட்கள் பாராளுமன்றம் முடங்கும் நிலை ஏற்பட்டது.

    பாராளுமன்றத்தில் சுமூக நிலை ஏற்படுத்துவதற்காக சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் இரு தரப்பினரும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

    இதையடுத்து பாராளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க ஒத்துழைப்பு அளிக்கக் கோரி எதிர்க்கட்சி தலைவர் கார்கே உள்பட அனைத்து கட்சி தலைவர்களுக்கும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கடிதம் அனுப்பினார். மணிப்பூரில் வன்முறை ஏன் ஏற்பட்டுள்ளது என்பதற்கான விளக்கத்தையும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அமித் ஷாவின் கோரிக்கையையும் எதிர்க்கட்சிகள் ஏற்க மறுத்துவிட்டன.

    இதற்கிடையே பிரதமர் மோடியை மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்க செய்யும் வகையில் எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி நேற்று முன்தினம் மாலை காங்கிரஸ் தலைவர் கார்கே ஆலோசனை நடத்தினார். அப்போது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் சட்ட விதிகளின்படி பிரதமர் விளக்கம் அளித்தே தீர வேண்டும் என்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.

    இதுகுறித்து நேற்று காலை மற்ற கட்சித் தலைவர்களுடன் கார்கே விவாதித்தார். இதன் தொடர்ச்சியாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது பற்றி நேற்று எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எந்தெந்த வகையில் நெருக்கடி கொடுக்க முடியும் என்பது பற்றியும் எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று மதியம் வரை நீண்ட நேரம் ஆய்வு செய்தனர்.

    பல்வேறு வழிமுறைகளை ஆலோசித்த பிறகு நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதற்கான முடிவை எதிர்க்கட்சி தலைவர்கள் ஒருமனதாக மேற்கொண்டனர். இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆவணங்கள் தயாரிக்கும் பணியை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மேற்கொண்டனர்.

    பாராளுமன்றத்தில் எந்த ஒரு எம்.பி.யும் 198-வது பிரிவின் கீழ் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர முடியும். ஆனால் அந்த தீர்மானத்துக்கு குறைந்த பட்சம் 50 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து கையெழுத்து போட்டிருக்க வேண்டும். மேலும் மக்களவை தொடங்குவதற்கு முன்பு காலை 10 மணிக்குள் அந்த தீர்மானத்தை சபாநாயகரிடம் கொடுக்க வேண்டும். அதை சபாநாயகர் ஆய்வு செய்வார். அதில் கையெழுத்து போட்டுள்ள 50 எம்.பி.க்கள் பற்றி கணக்கிடுவார். அதன் பிறகுதான் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்துக்கு தேதியை அறிவிப்பார்.

    இந்த நடைமுறைகளை எடுத்து வைப்பதற்காக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் ஆவணத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு சோனியா தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தனியாக ஆலோசனை நடத்தினார்கள்.

    இதையடுத்து பாராளுமன்ற காங்கிரஸ் துணை தலைவரும், அசாம் மாநில எம்.பி.யுமான கவுரவ் கோகாய் மக்களவை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவர் மக்களவை செயலாளரிடம் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான கடிதங்களை ஒப்படைத்தார்.

    • பிரதமர் மோடியை பேச வைக்க இது ஒன்றே வழி என்பதால் எதிர்க்கட்சிகள் இந்த முடிவு
    • மக்களவையில் இரண்டு கட்சிகளின் எம்.பி.க்கள் கடிதம் கொடுத்துள்ளனர்

    பா. ஜனதா அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் மக்களவையில் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. இதற்கான அனைத்து வேலைகளும் நேற்றே முடிவந்து விட்டன. இன்று அவை தொடங்கியதும் அதற்கான நகர்வுகளை காங்கிரஸ் தலைவர் எடுத்துச் செல்வார் என தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் மற்றும் பாரதிய ராஷ்டிரிய சமிதி எம்.பி. நம நாகேஸ்வர ராவ் ஆகியோர் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கான நோட்டீஸை வழங்கியுள்ளனர்.

    • பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இரு அவைகளிலும் மணிப்பூர் சம்பவம் எதிரொலித்தது.
    • மணிப்பூர் சம்பவம் பற்றி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் சம்பவம் பற்றி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இரு அவை நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதன்படி, மாநிலங்களவை எம்.பி.க்களான கேசவ ராவ், சுரேஷ் ரெட்டி, ஜோகினிபள்ளி சந்தோஷ் குமார், படுகுலா லிங்கையா யாதவ், ரஞ்சித் ரஞ்சன், மனோஜ் ஜா, சையது நசீர் உசைன், திருச்சி சிவா, இம்ரான் பிரதாப்காதி ஆகியோர் 267-வது விதியின் கீழ் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

    மணிப்பூர் விவகாரம் பற்றி இரு அவைகளிலும் பிரதமர் மோடி அறிக்கை அளிக்க வேண்டும். அதுவரை தங்களது போராட்டம் தொடரும் என எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன.

    இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர உள்ளது என மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பேசிய அவர், நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான நோட்டீஸ் கட்சி அலுவலகத்தில் தயாராக உள்ளது. காலை 10 மணிக்கு முன்னதாக மக்களவைச் செயலர் அலுவலகத்துக்கு வந்து சேரும் என தெரிவித்தார்.

    • இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதும் நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
    • சத்தீஸ்கரில் உள்ள 72,000 பேர் இந்த சட்டத்தின்மூலம் பயனடைவார்கள் என மத்திய மந்திரி அர்ஜுன் முண்டா கூறினார்.

    சத்தீஸ்கரில் உள்ள தனுஹர், தனுவர், கிசான், சான்ரா, சவோன்ரா மற்றும் பிஞ்சியா சமூகங்களை பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) பட்டியலில் சேர்ப்பதற்கான சட்ட மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது.

    பாராளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுவருகின்றனர்.  மாநிலங்களவையில் அமளிக்கு மத்தியில் அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) சட்டம் (ஐந்தாவது திருத்தம்) மசோதா-2022 விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விவாதத்திற்கு பின் குரல் வாக்கெடுப்பின்மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.  எதிர்க்கட்சி எம்பி.க்கள் ஏற்கனவே வெளிநடப்பு செய்ததால் அவர்கள் இல்லாமலேயே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    முன்னதாக விவாதத்திற்கு பதிலளித்த மத்திய மந்திரி அர்ஜுன் முண்டா, சத்தீஸ்கரில் உள்ள 72,000 பேர் இந்த சட்டத்தின்மூலம் பயனடைவார்கள் என்றார். இது ஒரு சிறிய எண்ணிக்கைதான், ஆனால் இது பழங்குடியினர் நலனில் அரசின் அக்கறையை எடுத்துரைக்கிறது என்றும் அவர் கூறினார்.

    தனுஹர், தனுவர், கிசான், சான்ரா, சவோன்ரா மற்றும் பிஞ்சியா சமூகங்களை பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) பட்டியலில் சேர்க்க இந்த சட்டத்திருத்தம் வகை செய்கிறது. புயின்யா, புய்யான் மற்றும் புயான் ஆகிய சமூகங்களை பரியா பூமியா சமூகத்தின் ஒத்த வார்த்தைகளாக முறைப்படுத்தவும் இந்த சட்டத்தில் உள்ளது. மேலும் இந்த மசோதாவில் பாண்டோ சமூக பெயரின் மூன்று தேவநாகரி பிரிவுகளும் அடங்கும்.

    இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதும் நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த மசோதா 2022 டிசம்பரில் மக்களவையில் நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.

    • மேல்சபை 12 மணிக்கு பிறகு நடைபெற்று வருகிறது.
    • சபையை சுமூகமாக நடத்துவது குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

    புதுடெல்லி:

    மணிப்பூர் கலவர சம்பவத்தால் பாராளுமன்றம் இன்று 4-வது நாளாக முடக்கப்பட்டது. மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மேல்சபை 12 மணிக்கு பிறகு நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் அனைத்து கட்சி தலைவர்கள், பிரதிநிதிகளுடன் சபாநாயகர் ஓம் பிர்லா இன்று ஆலோசனை நடத்தினார். சபையை சுமூகமாக நடத்துவது குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

    ×