search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது விற்பனை"

    • டிபன் கடை வைத்து தந்தால் அதை வைத்து பிழைத்துக் கொள்கிறேன் என பாலம்மாள் கூறினார்.
    • பாலம்மாள் இன்று முதல் தனது வியாபாரத்தை தொடங்கினார்.

    சென்னை:

    சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் பாலம்மாள் என்கிற 42 வயது பெண் கடந்த 10 ஆண்டுகளாக திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்தார்.

    அவர் மீது போலீசார் பலமுறை வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஆனாலும் பாலம்மாள் வேறு வேலைக்கு ஏதும் செல்லாமல் மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்வதை வழக்கமாகவே வைத்திருந்தார்.

    இதையடுத்து அவரை திருத்தி நல்வழிப்படுத்த போலீசார் முடிவு செய்தனர். இதற்காக ராயப்பேட்டை உதவி கமிஷனர் பாலமுருகன், ஐஸ்அவுஸ் இன்ஸ்பெக்டர் விஜய கிருஷ்ணராஜ் ஆகியோர் பாலம்மாளை அழைத்துப் பேசினர்.

    அப்போது அவர் மதுபாட்டில் விற்பனை தவிர வேறு தொழில் எதுவும் எனக்கு தெரியாது என்றார். இருப்பினும் போலீசார் அவருக்கு தொடர்ந்து அறிவுரை வழங்கி மனதை மாற்றினர். இதன் பின்னர் டிபன் கடை வைத்து தந்தால் அதை வைத்து பிழைத்துக் கொள்கிறேன் என பாலம்மாள் கூறினார்.

    இதையடுத்து தள்ளுவண்டி மற்றும் டிபன் கடைக்கு தேவையான பாத்திரங்கள், தட்டுகள், கரண்டிகள் உள்ளிட்ட பொருட்களையும் வாங்கி கொடுத்தனர்.

    முதலில் பிரிஞ்சி வியாபாரம் செய்ய விரும்புவதாக பாலம்மாள் தெரிவித்ததை தொடர்ந்து 4 நாட்களுக்கு உணவையும் வாங்கி தருவதாக தெரிவித்து வாங்கி கொடுத்துள்ளனர்.

    இதை தொடர்ந்து பாலம்மாள் இன்று முதல் தனது வியாபாரத்தை தொடங்கினார். ஐஸ்அவுஸ் போலீசாரின் இந்த கருணை உள்ளத்தை உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். மது பாட்டில்களை பிடித்த கைகளில் கரண்டியை தூக்கி பிடித்தபடியே பாலம்மாள் தனது புதிய வாழ்க்கை பயணத்தை தொடங்கி இருக்கிறார்.

    • ரோந்து பணியில் சிக்கினர்
    • 12 பாட்டில்களை பறிமுதல்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் மாதனூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் போலி மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி ஆம்பூர் தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அருளானந்தம் மற்றும் போலீசார் மாதனூர், பெரியாங்குப்பம், சுபேதர் தெரு, தோட்டாளம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சுபேதர் தெருவை சேர்ந்த கண்ணப்பன் மனைவி ராதிகா (வயது 36) என்பவர் போலி மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்ததுடன், அவரிடமிருந்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • சட்டவிரோத மது விற்ப னையைத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
    • மேலும் அவர்கள் பதுக்கி வைத்தி ருந்த 41 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    சட்டவிரோத மது விற்ப னையைத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு தாலு கா, தாளவாடி, அம்மாபே ட்டை, அந்தியூர், கடம்பூர் போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதி யில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடு பட்டிருந்தனர்.

    அப்போ து அரசு மதுபா னத்தை சட்ட விரோதமாக கடத்தி வந்து அதிக விலை க்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த, ஈரோடு, மேட்டுக்கடையை சேர்ந்த நாகராஜ் (45), தாள வாடி நேரு நகரைச் சேர்ந்த ஆரோ க்கியசாமி (47), அந்தி யூர், கண்ணப்ப–ள்ளியைச் சேர்ந்த செந்தில் (42), அந்தி யூர், வ.உ.சி. நகரைச் சேர்ந்த தர்மராஜ் (19), அந்தியூரைச் சேர்ந்த சின்னக்கண்ணன் (55) ஆகிய 5 பேரைக் கண்டு பிடித்தனர்.

    இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்கள் பதுக்கி வைத்தி ருந்த 41 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    • 47 பாட்டிகள், பைக் பறிமுதல்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி 5 கண் பாலம் அருகே வந்தவாசி-திண்டிவனம் சாலையில் தெற்கு போலீஸ் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அந்த வழியாக வந்த பைக்கை மடக்கி சோதனை செய்தனர்.

    இதில் வந்தவாசி திண்டிவனம் சாலையைக் சேர்ந்த தேவேந்திரன் (வயது 47) மது பாட்டில் களை கடத்தியது தெரிய வந்தது.

    அவரை கைது செய்தபோலீசார் 47 மதுபாட்டிகள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவரது வீட்டில் சோதனை செய்தபோது பதுக்கி வைத்திருந்த 120 மது பாட்டில்களை கைப்பற்றினர்.

    பின்னர் தேவேந்திரனின் மனைவி சைதானியை (44) கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தேவேந்திரன் இதயநோயாளி என்பதால் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

    • 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்
    • போலீசார் சோதனையில் சிக்கினார்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி ஊராட்சி பக்கிரித்தக்கா பகுதியில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் அரசு டாஸ்மாக் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெட்டிக்கடையில் சோதனையிட்டனர். அப்போது விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    அதே பகுதியை சேர்ந்த அனுமுத்து என்பவர் என் மனைவி பவுனம்மாள் (வயது 71) என்பவரை போலீசார் செய்தனர்.

    • டாஸ்மாக் கடை வாடகையினால் கடை ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
    • மதுப்பழக்கத்தை நிறுத்துவது பற்றி தனியாக கவுன்சிலிங் வழங்கப்படும்.

    சென்னை:

    சென்னை தலைமைச்செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி, டாஸ்மாக் தொடர்பான 21 சங்கத்தினரை அழைத்து அவர்களின் கோரிக்கைகள் பற்றி ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் முத்துசாமி அளித்த பேட்டி வருமாறு:-

    21 சங்கத்தினரும் 55 கோரிக்கைகளை அளித்தனர். அவற்றில் 39 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சில கோரிக்கைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மற்ற கோரிக்கைகள் பற்றி அடுத்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.

    டாஸ்மாக் கடை வாடகையினால் கடை ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அரசு அந்தக்கடையின் வாடகையை நிர்ணயம் செய்து, துறையே அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதென்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிக அதிக வாடகை கேட்கப்படும் சில இடங்களுக்கு அதிகாரிகள் சென்று பேசி தீர்வு காணப்படும்.

    கடைக்கு தனி மின் இணைப்பு இல்லாத இடங்களில் தொழிலாளர்கள் அதிக கட்டணத்தை செலுத்தும் நிலை இருந்தது. இப்போது கடைக்கென்று தனி மீட்டர் பொருத்தவேண்டும் என்றும் கட்டணத்தை டாஸ்மாக் தலைமையகம் கட்டவேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கண்காணிப்பு கேமரா 3 ஆயிரம் கடைகளில் உள்ளது. உடனடியாக 500 கடைகளில் அவற்றை பொருத்த ஏற்பாடு செய்துள்ளோம். அந்த வகையில் அனைத்துக்கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளோம்.

    மது விற்ற பணத்தை கடைகளில் வைக்க பாதுகாப்பு பெட்டகம் கேட்டுள்ளனர். ஏற்கனவே அவை பல கடைகளில் உள்ளன. மேலும் 500 கடைகளில் அவை உடனடியாக வைக்கப்படும். பின்னர் அனைத்து கடைகளுக்கும் அவை அமைக்கப்படும்.

    கடைகளில் மதுபாட்டில் உடையும்போது விற்பனையாளர்களே அதற்கு பொறுப்பு ஏற்றனர். உடையும் பாட்டிலுக்கு சரியான கணக்கை கொடுத்தால் அதை துறையின் சார்பில் ஈடுகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பணியாளர்களுக்கான கூட்டுறவு சங்கம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் கடைகளில் பணம் திருட்டு, தீவிபத்து மற்றும் வங்கிக்கு செல்லும்போது வழிப்பறி ஆகியவை நிகழ்வதால், அதற்கான காப்பீடு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு அனைத்து பாதுகாப்பையும் அளித்து, பிரச்சினை வந்தால் போலீசிடம் தெரிவித்து உடனே நடவடிக்கை எடுக்க வழிமுறைகள் செய்து தரப்பட்டுள்ளன.

    தற்போது அவர்களுக்கு கூடுதல் பணி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்த வயதுள்ள, முதல் முறையாக கடைக்கு வந்து மது வாங்குபவரை கண்டறிந்து, குடிப்பழக்கத்தில் விழாமல் அவர்களை தடுக்கவேண்டும். அவர்களது பெயர், செல்போன் எண்ணை வாங்கி மாவட்ட நிர்வாகத்திற்கு அளிக்கவேண்டும்.

    அவர்களுக்கு மதுப்பழக்கத்தை நிறுத்துவது பற்றி தனியாக கவுன்சிலிங் வழங்கப்படும். இதுபோன்ற நடவடிக்கைகளை யார் அதிகமாக எடுத்தார்களோ அவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை ஊக்கத்தொகை வழங்கி கவுரவிக்கப்படுவார்கள்.

    அனைத்து கடைகளுக்கும் மின்னணு விலைப்பட்டியல் வைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மதுபாட்டில் கொள்முதல் முதல் விற்பனை செய்யப்படும் வரையில் கணினி மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வரும்.

    விற்பனை ரசீது வழங்கவும் வசதி செய்யப்படுகிறது. அவர்களுக்கு இருந்த சில சிரமங்களை நீக்கிவிட்டதால் மதுபானங்களுக்கு ஒரு ரூபாய் கூட அதிகமாக வாங்கக்கூடாது என்று ஊழியர்களிடம் கண்டிப்பாக தெரிவித்துள்ளோம். அவர்களின் ஊதிய உயர்வு குறித்து அடுத்த கூட்டத்தில் பேச உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மது விற்பனை செய்யப்படுவதாக திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியதம்பிக்கு தகவல் கிடைத்துள்ளது.
    • இதில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட படமுடிபாளையம் ஜே.ஜே.நகரை சேர்ந்த சபாபதி (26) என்பவரை கைது செய்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள படமுடிபாளையத்தில் மது விற்பனை செய்யப்படுவதாக திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியதம்பிக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பெரியதம்பி மற்றும் போலீசார் படமுடிபாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். இதில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட படமுடிபாளையம் ஜே.ஜே.நகரை சேர்ந்த சபாபதி (26) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 30 மது பாட்டில்கள், அவரது மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 10 பாட்டில்களை பறிமுதல்
    • சிறையில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே உள்ள சோலையூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ெரயில்வே குடியிருப்பு பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு மது பாட்டில்களை விற்பனை செய்த குமார் (52) என்பவரை கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தன்.

    மேலும் குமாரை திருப்பத்தூர் கோர்ட்டி ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
    • 200 பாட்டில்கள் பறிமுதல்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சிறுணமல்லி பகுதியில் நெமிலி சப்இன்ஸ்பெக்டர் லோகேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது புத்தேரி கிராமத்தில் சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

    அவர் சிறுணமல்லி கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் அருண் (வயது 23) என்பதும், அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்றதும் தெரிய வந்தது.

    போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 200 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எந்த தவறும், பிரச்சனையும் இல்லாமல் மது விற்பனை செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்.
    • விளைநிலங்களில் மதுபாட்டில்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகள் புகார்களை தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கோவை தி.மு.க மாவட்ட செயலாளர் பேசியதாக வெளியான ஆடியோ தவறான ஆடியோ. இது பற்றி வழக்கு பதிவு செய்துள்ளார். அவர் அப்படிப்பட்ட நபர் அல்ல. வேண்டுமென்றே இட்டுகட்டி போடப்பட்டுள்ளது. இது விசாரணையில் உள்ளது.

    பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைபயணம் தொடங்குவது என்பது ஒரு கட்சிக்காக அவர் வேலை. அவருடைய வேலையை அவர் செய்கிறார். நாங்கள் எங்களது வேலையை செய்கிறோம்.

    மது விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல. எந்த தவறும், பிரச்சனையும் இல்லாமல் மது விற்பனை செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். மதுப்பழக்கம் உள்ளவர்களை உரிய முறையில் அணுகி அதில் இருந்து அவர்களை விடுவிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளவும், மதுப்பழக்கத்தை அவர்களாகவே கைவிடும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம்.

    புதிதாக மது அருந்த வரும் இளம் வயதினருக்கு கவுன்சிலிங் தரப்படும். இதற்காக ஆலோசனை குழு அமைக்கப்பட உள்ளது.

    விளைநிலங்களில் மதுபாட்டில்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகள் புகார்களை தெரிவித்துள்ளனர். இதற்கு மாற்றாக டெட்ரா பேக் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். மற்ற மாநிலங்களில் உள்ளதையும் பார்த்து விட்டு அதில் எது சிறந்ததோ அதை முடிவு செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருட்டுத்தனமாக மதுவிற்ற 2 நபர்கள் மீது ஓரண்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
    • குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அந்தந்த போலீஸ் நிலையங்களில் உள்ள போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு, திருட்டுத்தனமாக மது விற்பவர்களை தீவிரமாக கண்காணித்து குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு திருட்டுத்தனமாக அரசு மதுபானங்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்றதாக இதுவரை 1,196 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,204 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 17 ஆயிரத்து 110 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

    மேலும் திருட்டுத்தனமாக மதுவிற்ற 2 நபர்கள் மீது ஓரண்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 2 ஆதாய கொலை வழக்கு, 10 வழிப்பறி வழக்குகள், 23 வீடு புகுந்து திருடுதல் வழக்குகள் மற்றும் 65 திருட்டு வழக்குகள் என மொத்தம் 100 வழக்குகள்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் களவுபோன சொத்துகளின் மதிப்பு ரூ.1 கோடியே 54 லட்சத்து 61 ஆயிரத்து 224 என கண்டறியப்பட்டுள்ளது. இதில் 19 வழக்குகள் தவிர மற்ற 81 வழக்குகள் துரிதமாக அறிவியல் நுட்பத்தை பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டு ரூ.1 கோடியே 46 லட்சத்து 1,324 மதிப்புள்ள சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

    மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சைபர்கிரைம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 20 குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.23,55,448 பணம் மீட்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை மற்றும், குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    • பார் உள்ள கட்டிடத்தின் உரிமையாளர்களுக்கும் எங்களுக்கும்தான் வாடகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
    • டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    சென்னை:

    டாஸ்மாக் மதுபான கடை அருகில் தின்பண்டங்களை விற்பனை செய்வது மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கான பார்களை நடத்துவதற்கான உரிமங்களுக்கான டெண்டருக்கு விண்ணப்பங்களை வரவேற்று டாஸ்மாக் நிர்வாகம் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ந்தேதி அறிவிப்பாணை வெளியிட்டது.

    அதில், தற்போது பார் உள்ள இடத்தை டெண்டரில் வெற்றி பெற்றவருக்கு, ஏற்கனவே பார் நடத்தும் உரிமத்தை பெற்றவர்கள் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதனால் இந்த அறிவிப்பாணையை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில், ஏற்கனவே பார் நடத்தும் பார் உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

    அந்த மனுக்களில், 'பார் உள்ள கட்டிடத்தின் உரிமையாளர்களுக்கும் எங்களுக்கும்தான் வாடகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்துக்கும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படி இருக்கும்போது, டெண்டரில் வெற்றிப் பெற்றவர்களுக்கு, நாங்கள் வாடகைக்கு எடுத்துள்ள கடையை கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது'' என்று கூறியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், டாஸ்மாக் பார் டெண்டர் குறித்த அறிவிப்பாணைகளை ரத்து செய்து கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், "எல்லா மாநில அரசுகளும் மதுவிலக்கு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அரசியல் சாசனச் சட்ட கொள்கையில் கூறும்போது, தமிழ்நாட்டில் அரசே மதுபானம் அருந்துவதை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுகிறதே?'' என்று கருத்து தெரிவித்தனர்.

    பின்னர், இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை தொடர்ந்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    ×