search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது விற்பனை"

    • தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கமான நாட்களில் சுமார் ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடைபெறுவது உண்டு.
    • வெள்ளிக்கிழமை மாலையில் இருந்தே மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.

    தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களில் ரூ.708 கோடிக்கு மது விற்பனை செய்து டாஸ்மாக் நிர்வாகம் வசூலை குவித்து உள்ளது.

    தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கமான நாட்களில் சுமார் ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடைபெறுவது உண்டு. விடுமுறை காலங்களில் ரூ.175 கோடி வரை விற்பனை அதிகரிக்கும். ஆனால் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் விற்பனையாகும் மது பானங்களின் சாதனை ஒவ்வொரு ஆண்டும் முறியடிக்கப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளில் வந்தது. இதனால் வெள்ளிக்கிழமை மாலையில் இருந்தே மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.

    மது அருந்துபவர்கள் வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்களும் மது குடித்து குதூகலம் அடைந்தனர்.

    தீபாவளி பண்டிகைக்காக மது குடித்தவர்கள், தொடர் விடுமுறை காரணமாக மது குடிப்பவர்கள் என பல காரணங்களால் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் டாஸ்மாக் கடைகளில் வெள்ளி, சனி, ஞாயிறு 3 நாட்களாக விற்பனைகளை கட்டியது. இதில் ரூ.708 கோடி மதிப்பிலான மது பானங்கள் விற்பனையாகி உள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை மட்டும் ரூ.241.02 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. சனிக்கிழமை ரூ.220.85 கோடிக்கும், ஞாயிற்றுக் கிழமை ரூ.246.78 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றது.

    இந்த 3 நாட்களில் மட்டும் ரூ.708 கோடி மது விற்பனை நடந்துள்ளது. மது பிரியர்கள் 3 நாட்களும் மது குடித்து குதூகலம் அடைந்துள்ளனர்.

    இதில் 11-ந்தேதி (சனிக்கிழமை) சென்னை மண்டலத்தில் ரூ.48.12 கோடிக்கும் திருச்சி-ரூ.40.02 கோடிக்கும், சேலம்-ரூ.39.78 கோடிக்கும், மதுரை ரூ.52.73 கோடிக்கும் கோவையில் ரூ.40.20 கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளது. 12-ந்தேதி (ஞாயிறு) மண்டலவாரியாக சென்னையில் ரூ.52.98 கோடி, திருச்சி ரூ.55.60 கோடி, சேலம் ரூ.46.62 கோடி, கோவை ரூ.39.61 கோடி அளவுக்கு மது விற்கப்பட்டது.

    கடந்த ஆண்டு தீபாவளி 2 நாள் மது விற்பனை ரூ.431 கோடியாகும். இந்த ஆண்டு 2 நாள் விற்பனை ரூ.467.69 கோடியாகும். இதன்மூலம் கடந்த ஆண்டு சாதனையை இந்த ஆண்டு விற்பனை முறியடித்து உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 'காட்பாதர்' என்ற பீர் பாட்டில் புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது.
    • வருகிற டிசம்பர் மாதத்துக்குள் இன்னும் 5 வகைகளில் புதிய பீர் பாட்டில்களை அறிமுகம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் தற்போது புதிதாக 2 வகைகளில் பீர் பாட்டில்களை அறிமுகம் செய்துள்ளது. குடிமகன்களின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த பீர் பாட்டில்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

    தற்போது 'தண்டர்போல்ட் ஸ்டிராங்' என்ற புதிய வகை பீர் பாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் நேற்று முன்தினம் இரவு முதல் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த பீர் பாட்டிலின் விலை ரூ.160 ஆகும். மேலும் மற்றொரு ரகமாக 'காட்பாதர்' என்ற பீர் பாட்டிலும் புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது.

    இந்த புதிய பீர் பாட்டில் வகைகளை தீபாவளி விருந்தாக குடிமகன்கள் பார்க்கிறார்கள். வருகிற டிசம்பர் மாதத்துக்குள் இன்னும் 5 வகைகளில் புதிய பீர் பாட்டில்களை அறிமுகம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.

    • ஜெகன்மோகன் ரெட்டி பதவியில் நீடிப்பதற்கான தார்மீக உரிமையை இழந்து விட்டார்.
    • ஆந்திராவில் மது விற்பனையில் ஊழல் நடக்கிறது.

    திருப்பதி:

    ஆந்திராவில் நடந்த கூட்டத்தில் அந்த மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தேஸ்வரி பேசியதாவது:-

    ஆந்திர மாநிலத்தில் மது அருந்துவதால் ஒரு நாளைக்கு குறைந்தது 700 முதல் 1000 இறப்புகள் ஏற்படுகின்றன.

    அணுகுண்டின் வீரியத்தை மிஞ்சும் வகையில் மது ஆபத்தானது. ஜெகன்மோகன் ரெட்டி பதவியில் நீடிப்பதற்கான தார்மீக உரிமையை இழந்து விட்டார்.

    மது விற்பனை பயங்கரவாத செயல். ஆந்திராவில் மது விற்பனையில் ஊழல் நடக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் தண்ணீர் பந்தல் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.
    • மது விற்பனையில் ஈடுபட்ட கரூர், புஞ்சைபுகலூர், காந்திநகரை சேர்ந்த ராஜன் என்பவரது மகன் வீரமணி (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர்

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் தண்ணீர் பந்தல் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இங்கு செயல்பட்டு வரும் பாரில் அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு ஆய்வு மேற்கொண்டதில் அங்கு விற்பனைக்காக வைத்திருந்த 180 மில்லி மது பாட்டில்கள் 10-ம், மது விற்பனை செய்த ரொக்கம் ரூ. 750-ம் பறிமுதல் செய்யப்பட்டது. மது விற்பனையில் ஈடுபட்ட கரூர், புஞ்சைபுகலூர், காந்திநகரை சேர்ந்த ராஜன் என்பவரது மகன் வீரமணி (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 115 டாஸ்மாக் கடைகள் உள்ளன
    • அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளில் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி உள்ளிட்ட விசேஷ நாள்களில் மது விற்பனை வழக்கத்தைவிட அதிகளவில் இருக்கும். இந்த நிலையில், ஆயுதபூஜை, விஜயதசமியையொட்டி, அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

    இந்த தொடர் விடுமுறை காரணமாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிக அளவு மது விற்பனை நடைபெற்றது.

    இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:-

    வேலூர் டாஸ்மாக் மாவட்டத்துக்கு உட்பட்ட வேலூர்,திருப்பத்தூர் மாவட்டங்களில் மொத்தம் 115 டாஸ்மாக் மதுக் கடைகள் உள்ளன.

    இவற்றில் கடந்த 3 நாள்களில் மட்டும் ரூ.11.56 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 83 கடைகள் உள்ளன. இவற்றில் ரூ.7.34 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

    அந்த வகையில், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் ரூ.18.90 கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனை நடைபெற்றுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • 20 பாக்கெட்டுகள் பறிமுதல்
    • போலீசார் சோதனையில் சிக்கியது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது புது ஓட்டல் தெரு அருகே கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் மறைத்து வைத்து விற்பனை செய்வதாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது புது ஓட்டல் தெரு சமத் சாய்பு தெருவைச் சேர்ந்தவர் சமியுல்லா (வயது 44) என்பவர் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை விற்பனை செய்தபோது அவரை பிடித்து கைது செய்து அவரிடமிருந்து 20 மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் அனைத்து மதுக்கடைகளும் இன்று அடைக்கப்பட்டன.
    • குடிமகன்கள் எந்த பேரமும் பேசாமல் மது கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் கூடுதல் பணம் கொடுத்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

    சென்னை:

    காந்தி ஜெயந்தியையொட்டி இன்று நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டன. தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் மூடப்பட்டன.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் அனைத்து மதுக்கடைகளும் இன்று அடைக்கப்பட்டன. இன்று மதுக்கடை மூடப்படுவதை அறிந்த சிலர் நேற்றே ஏராளமான மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்தனர். அவற்றை இன்று கள்ளச்சந்தைகளில் விற்றனர். இதனால் இன்று பல இடங்களில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை ஜரூராக நடந்தது.

    சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலை வடக்கு போக் சாலை பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. காந்தி ஜெயந்தியையொட்டி இந்த மதுக்கடையும் இன்று மூடப்பட்டு இருந்தது.

    இதையடுத்து நேற்று இரவு அதிக அளவில் மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்திருந்த நபர் ஒருவர் இன்று காலையில் மதுபாட்டில்களை ஸ்கூட்டரில் கொண்டு வந்து தி.நகர் ஜி.என்.செட்டி சாலை-வடக்கு போக் சாலை சந்திப்பு அருகே சாலை ஓரம் வைத்தபடி விற்றுக் கொண்டிருந்தார்.

    இந்த தகவல் அந்த பகுதியில் உள்ள குடிமகன்களுக்கு பரவியது. மதுக்கடைகள் இன்று அடைக்கப்பட்டிருந்ததால் விடுமுறை தினத்தை எப்படி கொண்டாடுவது என்று தவித்த குடிமகன்கள் உடனடியாக கள்ளச்சந்தையில் மது விற்கப்படும் இடத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஸ்கூட்டரில் வைத்து மது விற்றவரிடம் இருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

    வழக்கமாக ரூ.140-க்கு விற்கப்படும் மதுபாட்டில்கள் அந்த நபர் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.110 விலை வைத்து ரூ.250-க்கு விற்றுக் கொண்டிருந்தார். குடிமகன்கள் எந்த பேரமும் பேசாமல் மது கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் கூடுதல் பணம் கொடுத்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். இதனால் பட்டப்பகலில் சாலை ஓரத்தில் மது விற்பனை மிகவும் ஜரூராக நடந்தது.

    அதேபோல் சென்னையின் சில இடங்களிலும் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு கூடுதல் விலைக்கு விற்கப்பட்டன.

    • 300 பாட்டில்கள் பறிமுதல்
    • 3 பேர் கைது

    வேலூர்:

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று தமிழக முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வேலூர் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சைதாப்பேட்டை முருகன் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்காளம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த விமலா(வயது 75), கமலா ( 70), லட்சுமி (76) ஆகியோர் கள்ளத்தனமாக வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

    மேலும் போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.40,000 மதிப்பிலான 300 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • கிராம கட்டுப்பாட்டை மீறி மது குடிப்பவர்கள், விற்பவர்களை போலீசாரிடம் ஒப்படைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    • கிராம பகுதிகளில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு உள்ளது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே புளியங்குறிச்சியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

    இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது வாங்கும் குடிமகன்கள் புளியங்குறிச்சி பஸ் நிறுத்தம், நீரோடை, பள்ளி வளாகம் உள்ளிட்ட பொது இடங்களில் அமர்ந்து குடித்து வந்தனர்.

    மேலும் கல்வராயன்மலையில் இருந்து கடத்தி வரும் சாராயத்தையும் விற்று வந்தனர். இதனால் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்து வந்தது.

    இதை தடுக்க புளியங்குறிச்சி எல்லை பகுதியில் மது அருந்த, விற்க ஊராட்சி நிர்வாகம் தடை விதித்து உள்ளது. மேலும் கிராம கட்டுப்பாட்டை மீறி மது குடிப்பவர்கள், விற்பவர்களை போலீசாரிடம் ஒப்படைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக கிராம பகுதிகளில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு உள்ளது. அந்த பலகையில் 'புளியங்குறிச்சி ஊராட்சியில் மது விற்க தடை செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் மது அருந்துவோர் மீது போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இதனை தொடர்ந்து தலைவாசல் புளியங்குறிச்சியில் மது அருந்துவோர் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைப்பு கூட்டம் நடந்தது.
    • அதிகளவில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் ஒன்றியம் வளநாடு, செங்கப்படை ஆகிய கிராமங்களில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைம யில் பூத் கமிட்டி அமைக்கப் பட்டன. வளநாடு கிரா மத்தில் நடந்த பூத் கமிட்டி அமைக்க நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனிய சாமி தலைமை தாங்கினார்.

    முன்னாள் மாவாட்ட செயலாளர் சுந்தர பாண்டியன் முன்னிலை வகித்தார். வெங்கலகுறிச்சி ஊராட்சி மன்றதலைவரும், முதுகுளத்தூர் ஒன்றிய துணைச் செயலாளருமான செந்தில்குமார் வரவேற்றார். பூத்கமிட்டி உறுப்பி னர்களுக்கு நோட்டுகளை வழங்கி மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசிய தாவது:

    தி.மு.க.ஆட்சியில் விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு என வரிகளை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கிறது. நகர் பகுதிகளில் 20 ஆயிரம் சம்பாதிப்பவர்கள் கூட குடும்பம் நடத்த முடியாமல் அல்லல்பட்டு வருகின்றனர். கனிமொழி எம்.பி.தேர்தலின்போது மதுவை ஒழிப்போம் என்றார். ஆனால் அதிகளவில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் முது குளத்தூர் நகர் செயலாளர் ஷங்கரபாண்டியன், அபிராமம் கர்ணன், கண்ணன், பூசேரி சதிஸ் மிக்கேல், முத்துமணி, கருப்பசாமி, கவுன்சிலர் அர்ச்சுனன் , சித்திரைவேலு, ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பெரும்பாலான கடைகளில் ‘குவார்ட்டர்' பாட்டிலுக்கு 10 ரூபாயும், ‘ஆப்' பாட்டிலுக்கு 20 ரூபாயும் வசூலிக்கப்படுவதாக மதுப்பிரியர்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 'டாஸ்மாக்' மதுபானக்கடைகளில் அதிகபட்ச சில்லரை விற்பனையை விட ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுவதும், இதற்கு 'டாஸ்மாக்' நிர்வாகம் சார்பில் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யும் ஊழியர்கள் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் (டிஸ்மிஸ்) என்று கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக 'டாஸ்மாக்' மேலாண்மை இயக்குனர் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க தவறிய குற்றத்துக்காக கடை மேற்பார்வையாளர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் அதிகாரிகள் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்தாலும் பெரும்பாலான கடைகளில் 'குவார்ட்டர்' பாட்டிலுக்கு 10 ரூபாயும், 'ஆப்' பாட்டிலுக்கு 20 ரூபாயும் வசூலிக்கப்படுவதாக மதுப்பிரியர்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த அறிவிப்பு வெறும் சம்பிரதாயம் போன்று இல்லாமல் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்பது மதுப்பிரியர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

    • ‘டாஸ்மாக்' கடைகளில் சாதாரண ரக மதுபாட்டில்கள் குவாட்டர் ரூ.140-க்கு கீழ் விற்கப்படுகிறது.
    • உற்பத்தி குறைப்பால் ‘டாஸ்மாக்' கடைகளில் சாதாரண ரக மதுபாட்டில்களுக்கு விரைவில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சர்க்கரை ஆலைகளில் கரும்பை பிழிந்து எடுக்கும்போது, கடைசியில் 'மொலாசஸ்' (ஸ்பிரிட்) எனப்படும் வேதிப்பொருள் கிடைக்கும். இதுதான் மதுபானங்கள் தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருள் ஆகும். ஒரு லிட்டர் மொலாசசில் 10 லிட்டர் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து, ஒரு லிட்டர் 'ஸ்பிரிட்' பிரித்து எடுக்கப்படுகின்றன. அதன் மூலம் மதுபானங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது 'மொலாசஸ்' விலை லிட்டருக்கு ரூ.3.47 அதிகரித்துள்ளது. மேலும் இதற்கு ஜி.எஸ்.டி. வரியும் உயர்ந்துள்ளது.

    இதன் காரணமாக மதுபான ஆலைகளுக்கு உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. சாதாரணம், நடுத்தரம், உயர்தரம் என்று 3 ரகங்களில் மதுபானங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் நடுத்தர, உயர்தர மதுபானங்களை உற்பத்தி செய்வதில்தான் அதிக லாபம் கிடைக்கும் என்றும், சாதாரண ரகங்களில் போதியளவு லாபம் இல்லை என்பதும் மதுபான உற்பத்தி ஆலை உரிமையாளர்களின் கருத்தாகும். எனவே 'மொலாசஸ்' மூலப்பொருள் விலையேற்றதால், சாதாரண ரக மது உற்பத்தியை மதுபான ஆலைகள் வெகுவாக குறைத்துள்ளன.

    'டாஸ்மாக்' கடைகளில் சாதாரண ரக மதுபாட்டில்கள் குவாட்டர் ரூ.140-க்கு கீழ் விற்கப்படுகிறது. கூலித்தொழிலாளர்கள் இந்த ரக மதுபானத்தைதான் நாடி செல்கிறார்கள். இந்த நிலையில் உற்பத்தி குறைப்பால் 'டாஸ்மாக்' கடைகளில் சாதாரண ரக மதுபாட்டில்களுக்கு விரைவில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில் சாதாரண ரக மதுபானங்கள் உற்பத்தியை குறைக்கக்கூடாது என்று ஆலைகள் நிர்வாகத்துக்கு 'டாஸ்மாக்' நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மதுபான ஆலைகள் சார்பில் மதுபானங்கள் உற்பத்தி செலவை உயர்த்தி வழங்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த விவகாரம் பேச்சுவார்த்தையில் உள்ளது. இதில் மதுபான ஆலைகளின் கோரிக்கைகள் ஏற்கப்படும் பட்சத்தில், 'டாஸ்மாக்' கடைகளில் மதுபானங்கள் விலை குவாட்டருக்கு குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகரிக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ×