கர்நாடக மாநில மது விற்றவர் கைது

20 பாக்கெட்டுகள் பறிமுதல் போலீசார் சோதனையில் சிக்கியது
கர்நாடக மாநில மது விற்றவர் கைது
Published on

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

அப்போது புது ஓட்டல் தெரு அருகே கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் மறைத்து வைத்து விற்பனை செய்வதாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது புது ஓட்டல் தெரு சமத் சாய்பு தெருவைச் சேர்ந்தவர் சமியுல்லா (வயது 44) என்பவர் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை விற்பனை செய்தபோது அவரை பிடித்து கைது செய்து அவரிடமிருந்து 20 மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com