தடையை மீறி கூடுதல் விலைக்கு மது விற்பனை

300 பாட்டில்கள் பறிமுதல் 3 பேர் கைது
தடையை மீறி கூடுதல் விலைக்கு மது விற்பனை
Published on

வேலூர்:

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று தமிழக முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேலூர் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சைதாப்பேட்டை முருகன் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்காளம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த விமலா(வயது 75), கமலா ( 70), லட்சுமி (76) ஆகியோர் கள்ளத்தனமாக வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

மேலும் போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.40,000 மதிப்பிலான 300 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com