என் மலர்
நீங்கள் தேடியது "alcohol sales"
- 41 பாட்டில்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த சாலவேடு கிராமம் குட்டிச் சாலை புளிய மரத்தின் அருகே கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதாக கீழ்கொடுங்காலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது கீழ்கொடுங்கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (வயது 51) என்பவர் மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
பின்னர் போலீசார் முத்துராமலிங்கத்தை கைது செய்து அவரிடம் இருந்த 41 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- 5 லிட்டர் சாராயம் பறிமுதல்
- ஜெயிலில் அடைப்பு
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் காதர்கான், அரசு மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடு பட்டனர்.
அப்போது அண்ணான்ட ப்பட்டி சுடுகாடு அருகே மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 38) என்பவர் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் மற்றும் 5 லிட்டர் சாராயம் மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து கர்நாடக மாநில 10 மது பாக்கெட்டுகள் மற்றும் 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை திருப்பத்தூர்கோர்ட்டில் ஆஜர்ப டுத்தி சிறையில் அடைத்தனர்.
- திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் இரு மடங்கு விற்பனை
- அதிகளவில் வருவாய் ஈட்டி உள்ளதாக அதிகாரிகள் தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் 216 கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக சுமார் ரூ.3 கோடி முதல் ரூ.3½ கோடி வரை மதுபான விற்பனை நடைபெறும்.
ஆனால் இந்த வருடம் தீபாவளி அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் இரு மடங்கு மதுபானம் விற்பனை நடைபெற்று உள்ளது. இதில் 8 ஆயிரத்து 79 பெட்டி பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மதுபான வகைகளும், 10 ஆயிரத்து 637 பெட்டி பீர் வகைகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரூ.7 கோடியே 62 லட்சத்து87 ஆயிரத்து 920 வருவாய் ஈட்டி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தீபாவளியையொட்டி விற்று தீர்ந்தது
- வழக்கத்தைவிட அதிகளவில் மது வகைகளை வாங்கி சென்றனர்
வேலூர்:
தீபாவளி பண்டிகையையொட்டி வேலூா் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.10 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.
ஆண்டுதோறும் பண்டிகை நாட்களில் தமிழகத்தில் மதுவிற்பனை அதிகரிப்பது வழக்கம். நேற்று நடந்த தீபாவளி பண்டிகையையொட்டி மதுவிற்பனையை அதிகரித்திட இலக்கு நிா்ணயிக்கப்பட்டு விற்பனை மேற்கொள்ளப்பட்டது.
அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளிலும் தேவையான அளவு மது வகைகளும் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. மதுபிரியா்களும் வழக்கத்தைவிட அதிகளவில் மது வகைகளை வாங்கி சென்றனர்.
தீபாவளியையொட்டி வேலூா் டாஸ்மாக் மாவட்டத்தில் உள்ள 108 மதுக்கடைகள், உயர்ரக மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் எலைட் கடைகள் ஆகியவற்றில் கடந்த ஞாயிறு, திங்கள்கிழமை மட்டும் ரூ.10 கோடிக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள 79 கடைகளில் ரூ.7.13 கோடிக்கு என மாவட்டம் முழுவதும் ரூ.17.13 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
- தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.52.87 கோடிக்கு மது விற்று மதுரை மண்டலம் முதலிடம் பிடித்தது.
- 3 நாளில் ரூ.152 கோடியை தாண்டியது.
மதுரை
மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அசைவ பிரியர்களும், மது பிரியர்களும் கடைகளில் அதிக அளவில் குவிந்தனர். இதனால் இறைச்சி கடைகள் மற்றும் மது கடைகளில் கடந்த 2 நாட்களாக கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக வியாபாரம் அதிக அளவில் இருந்தது.
இறைச்சி கடைகளில் நேற்று முன்தினம் தொடங்கி விடிய, விடிய இறைச்சி விற்பனை செய்யப்பட்டது. சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மதுரை பகுதியில் இறைச்சிக்காக வெட்டப்பட்டது. இது தவிர மீன், கோழி கடைகளிலும் மக்கள் வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.
மது விற்பனையில் மதுரை முதலிடம்
வழக்கம்போல இந்த ஆண்டும் தீபாவளி தினத்திலும் அதிக அளவில் மதுவை விற்று மதுரை மண்டலம் சாதனை படைத்துள்ளது. தீபாவளி தினமான நேற்று மட்டும் மதுரை மண்டலத்தில் ரூ.52.87 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.
- ரோந்து பணியில் சிக்கினர்
- சிறையில் அடைப்பு
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை சுற்று பகுதியில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் காதர் கான் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து பணி ஈடுபட்டனர்.
அப்போது அண்ணாண்டப்பட்டி, அம்பேத்கர் நகர் பகுதியில் கள்ள சாராயம், மது பாட்டில்கள் விற்கப்படுகிறதா என்பது குறித்து சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்த வாலிபரை போலீசார் விரட்டி மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் அவர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது 34) என்பதும் இவர் வெளிமாநில மது பாக்கெட்டுகளை கள்ளத்தனமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது.
போலீசார் அவரை கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த 15 மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சேடபாளையத்தை சேர்ந்த சசிகுமார்(49) என்பவரை கைது செய்து அவனிடமிருந்து 14 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- அவர்களிடமிருந்து 23 பிராந்தி பாட்டில்கள் மற்றும் பணம் ரூ 10,200- பறிமுதல் செய்தனர்.
அவினாசி:
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று டாஸ்மாக் மதுபானகடை விடுமுறை டாஸ்மாக் மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அவினாசி அருகே தெக்கலூர் செங்காளிபாளையம் பகுதியில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி மற்றும் சிவலிங்கம் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடமிருந்து 23 பிராந்தி பாட்டில்கள் மற்றும் பணம் ரூ 10,200- பறிமுதல் செய்தனர். மேலும் அவினாசி பட்டறை பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரிடமிருந்து 18 பிராந்தி பாட்டில்கள் மற்றும் பணம் ரூ. 800 ஆகியவற்றை கைபற்றி 3 பேரையும் கைது செய்தனர்.
பல்லடம் அருகே தெற்குபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதையடுத்து பல்லடம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன்,சப் - இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையிலான போலீசார் அந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது தெற்குபாளையம் காட்டு பகுதியில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த தெற்குபாளையம் பிராமிஸ் நகரை சேர்ந்த பாலசந்தர்( 36) என்பவனை கைது செய்து அவனிடமிருந்து 47 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.இதே போல பல்லடம் அருகே உள்ள சின்னக்கரையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த சேடபாளையத்தை சேர்ந்த சசிகுமார்(49) என்பவரை கைது செய்து அவனிடமிருந்து 14 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- வருவாய்த்துறையினர் சோதனை
- 145 மது பாட்டில்கள் பறிமுதல்
குடியாத்தம்:
குடியாத்தம் நேதாஜி பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. அதனை ஒட்டிய படி பாரும் உள்ளது சுதந்திர தினத்தன்று அரசு உத்தரவை மீறி அந்த பாரில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் தொடர்ந்து மது பாட்டில்கள் விற்பனை நடைபெற்றது. அப்பகுதி பொதுமக்கள் வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன் தலைமையில் தாசில்தார் விஜயகுமார், துணை தாசில்தார் சுபிசந்தர் உள்ளிட்ட வருவாய் துறையினர் திடீரென அப்பகுதியில் மதுக்கடை ஒட்டியபடி உள்ள பாரில் சோதனையிட்டனர்.
அப்போது மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து வருவாய்த்துறையினர் அங்கிருந்து 145 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அங்கிருந்த ஊழியர்களை மது பாட்டில்களையும் மேல் நடவடிக்கையாக குடியாத்தம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் 22 சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் 38 பாராளுமன்றத்துக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் ஓட்டலில் உள்ள மதுபான கூடங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று அவைகள் அடைக்கப்பட்டன.
இதனை பயன்படுத்தி யாராவது மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்கிறார்களா? என்று சோதனை செய்ய தஞ்சையில் பல இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கிழக்கு போலீசார் தஞ்சை பழைய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றபோது, திருவையாறு பஸ் நிறுத்தம் அருகே 2 பேர் மதுபாட்டில்களை விற்றுக்கொண்டிருந்தனர்.
உடனடியாக போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில், வடுவூரை சேர்ந்த பஞ்சமூர்த்தி, சொக்கலிங்கம் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
காஞ்சீபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகளின் பார்களில் அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானிக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் காஞ்சீபுரம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ மற்றும் போலீசார் காஞ்சீபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பார்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அனுமதியின்றி அரசு மதுபானங்களை விற்பனை செய்த காஞ்சீபுரம் ரெட்டிபேட்டை சாலியர் தெருமேட்டு தெரு நெல்லுக்காரதெரு பகுதியில் உள்ள பார் ஊழியர்கள் கிருபானந்தன், நாகராஜ், முருகன், பசுபதி ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 150 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்கள் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கவிதா (25) இன்று அதிகாலை 5.30 மணியளவில் இவர் அண்ணாநகரில் இருந்து பாண்டியன் நகர் செல்லும் வழியில் உள்ள ஒரு டாஸ்மாக் மது பாருக்கு சென்றார்.
அப்போது அங்கு இருந்த ஒரு ஊழியரிடம் மது பாட்டில் இருக்கிறதா? என்று கேட்டார். அதற்கு ஊழியர் இருக்கிறது. ஆனால் குவாட்டருக்கு ரூ. 50 கூடுதலாகும் என்றார்.
இதையடுத்து கவிதா திடீரென அந்த ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது பகல் 12 மணிக்கு தான் மதுக்கடை திறக்க வேண்டும். ஆனால் நீங்கள் எந்நேரமும் மது விற்பனை செய்கிறீர்கள்.
இதனால் எனது கணவர் வேலைக்கு ஏதும் செல்லாமல் காலையிலேயே மதுகுடித்து விட்டு வேலைக்கு செல்வதில்லை. எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். காலையிலே இப்படி மது விற்றால் எப்படி குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்று வாக்குவாதம் செய்தார்.
இதைக்கேட்ட பார் ஊழியர் கவிதாவை தகாத வார்த்தையில் திட்டியதாக தெரிகிறது. இதில் அதிர்ச்சி அடைந்த கவிதா தான் கொண்டு வந்திருந்த ஒரு கத்தியுடன் திடீரென கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.
இதுப்பற்றி தெரியவந்ததும் அந்த பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் திருமுருகன்பூண்டி போலீசார் வந்தனர். போலீசார் வருவதை பார்த்த பார் ஊழியர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் பாருக்குள் சென்று பார்த்த போது அங்கு 2 பாக்ஸ் மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆனாலும் கவிதா தொடர்ந்து போராட்டம் நடத்தினார். இதனால் பரபரப்பு நிலவியது. பின்னர் திடீரென அவர் சாலையில் அமர்ந்து கொண்டார். போலீசார் அவரை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் அவர் அரசு அனுமதித்த நேரத்துக்கு முன் எப்படி மது விற்கலாம் என்ற ஆவேசமாக கேள்வி கேட்டார்.
இதையடுத்து போலீசார் கவிதாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் எதற்காக கத்தி கொண்டு வந்தார் என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கணவரின் குடிபோதையால் மனம் உடைந்த இளம்பெண் மதுபாரில் தகராறு செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. #tamilnews