மது விற்ற வாலிபர் கைது

மது விற்பனை செய்யப்படுவதாக திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியதம்பிக்கு தகவல் கிடைத்துள்ளது.இதில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட படமுடிபாளையம் ஜே.ஜே.நகரை சேர்ந்த சபாபதி (26) என்பவரை கைது செய்தனர்.
மது விற்ற வாலிபர் கைது
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள படமுடிபாளையத்தில் மது விற்பனை செய்யப்படுவதாக திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியதம்பிக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பெரியதம்பி மற்றும் போலீசார் படமுடிபாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். இதில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட படமுடிபாளையம் ஜே.ஜே.நகரை சேர்ந்த சபாபதி (26) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 30 மது பாட்டில்கள், அவரது மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com