என் மலர்
உள்ளூர் செய்திகள்

மது விற்பனை செய்த மூதாட்டி கைது
- 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்
- போலீசார் சோதனையில் சிக்கினார்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி ஊராட்சி பக்கிரித்தக்கா பகுதியில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் அரசு டாஸ்மாக் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெட்டிக்கடையில் சோதனையிட்டனர். அப்போது விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதே பகுதியை சேர்ந்த அனுமுத்து என்பவர் என் மனைவி பவுனம்மாள் (வயது 71) என்பவரை போலீசார் செய்தனர்.
Next Story






