search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போஸ்டர்"

    • மாநகராட்சி தற்போது ஒவ்வொரு மண்டலத்திற்கும் குப்பைக்கு தலா ரூ.2 லட்சம், போஸ்டர் ஒட்டுவதற்கு தலா ரூ.20 ஆயிரம், கட்டிட கழிவுக்கு தலா ரூ.2 லட்சம் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயித்து உள்ளது.
    • போஸ்டர் ஒட்டியது தொடர்பாக ஆயிரம் பேருக்கு மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியை சிங்கார சென்னையாக மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பது, சாலை ஓரங்களில் போஸ்டர் ஒட்ட தடை, கட்டிட கழிவுகளை கொட்டுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. எனினும் அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி இது நீடிப்பதால் சென்னை நகரின் அழகு சீர்கெட்டு வருகிறது.

    இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் அந்தந்த மண்டலங்களில் தனிக்குழு அமைக்கப்பட்டு குப்பை, கட்டிட கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோர், போஸ்டர் ஒட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அபராதம், வழக்கு, எச்சரிக்கை என அதிகாரிகள் தொடர்ந்து பல்வேறு நட வடிக்கைகள் எடுத்தாலும் பொதுமக்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாமல் உள்ளது.

    இதைத் தொடர்ந்து மாநகராட்சி தற்போது ஒவ்வொரு மண்டலத்திற்கும் குப்பைக்கு தலா ரூ.2 லட்சம், போஸ்டர் ஒட்டுவதற்கு தலா ரூ.20 ஆயிரம், கட்டிட கழிவுக்கு தலா ரூ.2 லட்சம் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயித்து உள்ளது.

    இவற்றின் மூலம் மாதம் ரூ.63 லட்சம் வசூலிக்க முடிவு செய்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    கடந்த மே 12-ந்தேதி முதல் ஜூன் 6-ந்தேதி வரை குப்பைகொட்டியோரிடம் ரூ.13 லட்சத்து 69 ஆயிரம், கட்டிட கழிவு கொட்டியோரிடம் இருந்து ரூ.9 லட்சத்து 47 ஆயிரத்து 165, போஸ்டர் ஒட்டியவர்கள் மீது 674 வழக்கு மற்றும் ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது, "சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தியும் பொது இடங்களில் குப்பை, கட்டிட கழிவுகள் கொட்டுவது, போஸ்டர் ஒட்டுவது, பேனர் வைப்பது தொடர்ந்து நீடிக்கிறது. மாதத்திற்கு ரூ.25 லட்சத்துக்கு மேல் அபராதம் விதிக்கப்படுகிறது. போஸ்டர் ஒட்டியது தொடர்பாக ஆயிரம் பேருக்கு மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    ஆனாலும் பொதுமக்களிடம் பெரிய அளில் மாற்றம் இல்லை. எனவே பள்ளி, கல்லூரி அளவிலும், பொதுமக்களிடமும் குப்பைகளை கையாள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது" என்றார்.

    • 3 நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்
    • சீக்கியர்கள் சிலர், ‘கோ பேக் ராகுல்’ என எழுதப்பட்ட போஸ்டர்களை கையில் பிடித்தபடி கோஷம் எழுப்பினர்.

    நியூயார்க்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், சான்பிரான் சிஸ்கோ, வாஷிங்டன், நியூயார்க் ஆகிய 3 நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். சான்பிரான்சிஸ்கோ, வாஷிங்டனில் நிகழ்ச்சிகளை அவர் முடித்துவிட்டார்.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் கலந்து கொண்டார். அப்போது அவரை வரவேற்பதற்காக ஏராளமானோர் திரண்டிருந்தனர். அந்த சமயத்தில் ராகுலுக்கு திடீர் எதிர்ப்பு கிளம்பியது. சாலையோரத்தில் வரிசையாக நின்ற சீக்கியர்கள் சிலர், 'கோ பேக் ராகுல்' என எழுதப்பட்ட போஸ்டர்களை கையில் பிடித்தபடி கோஷம் எழுப்பினர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள், பஞ்சாப்பை தனி நாடாக அறிவிக்கக் கோரி வரும் காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர்கள் என்பதும், 1984-ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராகுலை கண்டித்து போராட்டம் நடத்தியதும் தெரியவந்தது.

    • மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்ட்ம தீவிரம் அடைந்து வருகிறது.
    • காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு உள்ளது.

    டெல்லியில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிருதி இரானியை காணவில்லை என்று காங்கிரஸ் போஸ்டர் வெளியிட்டு உள்ளது.

    பா.ஜனதா எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பிரிக்பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்ட்ம தீவிரம் அடைந்து வருகிறது.

    இந்த விஷயத்தில் மத்திய பெண்கள் நல மேம்பாட்டுத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டிக்கும் விதமாகவே காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியை காணவில்லை என போஸ்டர் வெளியிட்டு உள்ளது.

    • தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் 2 பிரிவாக பிரிந்தனர். ஒரு சில இடங்களில் 2 பிரிவினருக்கும் இடையே அடிக்கடி மோதல் உருவாகி வருகிறது.
    • உளுந்தூர்பேட்டை ஒன்றிய இணைச் செயலாளர் எம்.பரமசிவம் பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    அ.தி.மு.க.வினர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் கூடிய பொதுக்குழுவில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.   அது முதல் தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் 2 பிரிவாக பிரிந்தனர். ஒரு சில இடங்களில் 2 பிரிவினருக்கும் இடையே அடிக்கடி மோதல் உருவாகி வருகிறது.  மேலும், பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்க கோரி ஓ.பி.எஸ். சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.  இந்நிலையில் உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க.வின் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் க.வேங்கையன், உளுந்தூர்பேட்டை ஒன்றிய இணைச் செயலாளர் எம்.பரமசிவம் பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.  இதில் வெளியேறு! வெளியேறு! தலைமை பதவிக்கு தகுதியில்லாத நயவஞ்சகன் நம்பிக்கை துரோகி எடப்பாடியே அ.இ.அ.தி.மு.க.வை விட்டு வெளியேறு, உனக்கு துதிபாடும் மூளை இல்லாத முட்டாள்களுடன் வெளியேறு என்று அச்சிடப்பட்டுள்ளது.    மேலும், மறைந்த ஜெயலலிதா, முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோரின் புகைப்படங்கள் உள்ளன. அதேபோல கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் க.வேங்கையன், உளுந்தூர்பேட்டை ஒன்றிய இணைச் செயலாளர் எம்.பரமசிவம் ஆகியோரின் புகைப்படங்களும் உள்ளது.

    இந்த போஸ்டர் உளுந்தூர்பேட்டை நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் அ.தி.மு.க. நகர செயலாளர் துரை தலைமையிலான கட்சியினர் புகார் மனு அளித்தனர். இதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    • ரஜினிகாந்தை அரசியலுக்கு இழுக்கும் வகையில் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
    • மதுரை மண்ணின் மைந்தர்கள் வித்தியாசமாக யோசிக்க கூடியவர்கள்.

    மதுரை:

    தமிழ் திரை உலகில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். அவரது பிறந்தநாள் சில நாட்களில் வருகிறது. இதையொட்டி ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

    மதுரையில் வித்தியாசமாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், "கோடிகளை குவிக்க விளம்பரத்தில் கூட நடிக்காதவன் நீ, தேடி வந்த உயர் பதவிகளை விரும்பாதவன் நீ, இதுவே தமிழகத்தை நீ ஆள தகுதி என 7 கோடி மக்களின் தீர்ப்பு ஆயிரம் அதிசயம் அமைந்தது உன் ஜாதகம்" என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த வாசகங்கள் ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைப்பது போல உள்ளது.

    மதுரை மண்ணின் மைந்தர்கள் வித்தியாசமாக யோசிக்க கூடியவர்கள், போஸ்டர்கள் மூலம் பரபரப்பை ஏற்படுத்துபவர்கள். அந்த வகையில் இந்த போஸ்டர்களும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெற்றிடத்தை நிரப்ப வரும் தமிழகத்தின் செல்ல பிள்ளை எங்கள் முதல்வரே.
    • தமிழக மக்களின் கனவை நினைவாக்க வரும் நாளைய தமிழக முதல்வரே'' என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அந்த போஸ்டர்களில் இடம் பெற்றுள்ளன.

    தேனி:

    நடிகர் விஜய் சினிமாவில் நடிக்க வந்து நேற்றோடு 30 ஆண்டுகள் ஆகிறது. இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியும், சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்தும் வருகின்றனர்.

    தேனியில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், நேற்று பல்வேறு இடங்களில் பரபரப்பான அரசியல் வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில் அரசியல் கட்சிகளை விஜய் தலைமையிலான கூட்டணிக்கு அழைப்பது உள்பட பல்வேறு அரசியல் வசனங்களும் இடம் பெற்றுள்ளன.

    ''தமிழக மக்களின் பேராதரவோடு 30 ஆண்டுகள் சினிமாவில் வெற்றி. அடுத்த 30 ஆண்டு அரசியல் வெற்றி. முதல்வராக தமிழக மக்களின் பேராதரவோடு எதிர்பார்ப்பு''. ''அரசியல் கட்சிகளுக்கு... கூட்டணி அழைப்புக்கு தளபதியாரின் தலைமையில் தயாராகுங்கள்''. ''வெற்றிடத்தை நிரப்ப வரும் தமிழகத்தின் செல்ல பிள்ளை எங்கள் முதல்வரே''.

    ''இன்று சினிமாவில் தளபதி. நாளைய தமிழகத்தின் முதல்வரே''. ''இன்றைய இளைஞர்களின் கனவு முதல்வரே. தமிழக மக்களின் கனவை நினைவாக்க வரும் நாளைய தமிழக முதல்வரே'' என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அந்த போஸ்டர்களில் இடம் பெற்றுள்ளன.

    இந்த போஸ்டர்கள், தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தமிழகத்தை சேர்ந்த திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை என்பவர் ‘’காளி’’ என்ற பெயரில் ஒரு ஆவணப்படத்தை எடுத்துள்ளார்.
    • லீனா மணிமேகலையை கைது செய்து, தவறுக்கான தண்டனையை மத்திய அரசு கண்டிப்பாக கொடுத்தே ஆகவேண்டும் என சித்தர் கூறியுள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கோரம்பள்ளம், அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தை சேர்ந்த திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை என்பவர் ''காளி'' என்ற பெயரில் ஒரு ஆவணப்படத்தை எடுத்துள்ளார். இந்த ஆவணப்படத்தில் இவரே நடித்துள்ளதுடன், இந்துக்களின் தெய்வமான காளியை படபோஸ்டரில் புகை பிடிப்பது போன்று அவதூறாக சித்தரித்துள்ளார்.

    மதவழிபாடுகளில் முன்னோர்கள் காலம் முதல் இப்போது வரையிலும் பாரம்பரியத்தை தவறாமல் கடைபிடித்து வரும் தமிழகத்தை சேர்ந்த இந்த இயக்குநர் இந்த அளவுக்கு கீழ்த்தரமாக நடந்துகொண்டுள்ளது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

    இந்து தெய்வத்தின் புனிதத்தை பாழ்படுத்தியற்காக இந்த லீனா மணிமேகலையை கைது செய்து, தவறுக்கான தண்டனையை மத்திய அரசு கண்டிப்பாக கொடுத்தே ஆகவேண்டும்.

    மேலும், அவரது ஆவணப்படத்தை உலகின் எந்தப்பகுதியிலும் வெளியிட முடியாத அளவிற்கு மத்திய அரசு தகுந்த நடவடிக்கையை தாமதமின்றி உடனடியாக எடுத்திடவேண்டும். சமூகவலை–தளங்களில் பதிவிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தின் போஸ்டர்களை எல்லாம் முற்றிலுமாக இல்லாமல் செய்திடவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? என்ற குழப்பம் நீடித்து வரும் வேளையில் திருவிடைமருதூரில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளது.
    • எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெற்றி பயணம் தொடரட்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    சுவாமிமலை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? என்ற குழப்பம் நீடித்து வரும் வேளையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்களும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்களும் போஸ்டர் ஓட்டி தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் வடக்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டி உள்ளனர்.

    அதில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெற்றி பயணம் தொடரட்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதேப்போல் ஆடுதுறை, திருப்பனந்தாள், பந்தனல்லூர், திருபுவனம் ஆகிய இடங்களிலும் எடப்பாடிக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

    ×