search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hype"

    • தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் 2 பிரிவாக பிரிந்தனர். ஒரு சில இடங்களில் 2 பிரிவினருக்கும் இடையே அடிக்கடி மோதல் உருவாகி வருகிறது.
    • உளுந்தூர்பேட்டை ஒன்றிய இணைச் செயலாளர் எம்.பரமசிவம் பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    அ.தி.மு.க.வினர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் கூடிய பொதுக்குழுவில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.   அது முதல் தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் 2 பிரிவாக பிரிந்தனர். ஒரு சில இடங்களில் 2 பிரிவினருக்கும் இடையே அடிக்கடி மோதல் உருவாகி வருகிறது.  மேலும், பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்க கோரி ஓ.பி.எஸ். சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.  இந்நிலையில் உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க.வின் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் க.வேங்கையன், உளுந்தூர்பேட்டை ஒன்றிய இணைச் செயலாளர் எம்.பரமசிவம் பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.  இதில் வெளியேறு! வெளியேறு! தலைமை பதவிக்கு தகுதியில்லாத நயவஞ்சகன் நம்பிக்கை துரோகி எடப்பாடியே அ.இ.அ.தி.மு.க.வை விட்டு வெளியேறு, உனக்கு துதிபாடும் மூளை இல்லாத முட்டாள்களுடன் வெளியேறு என்று அச்சிடப்பட்டுள்ளது.    மேலும், மறைந்த ஜெயலலிதா, முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோரின் புகைப்படங்கள் உள்ளன. அதேபோல கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் க.வேங்கையன், உளுந்தூர்பேட்டை ஒன்றிய இணைச் செயலாளர் எம்.பரமசிவம் ஆகியோரின் புகைப்படங்களும் உள்ளது.

    இந்த போஸ்டர் உளுந்தூர்பேட்டை நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் அ.தி.மு.க. நகர செயலாளர் துரை தலைமையிலான கட்சியினர் புகார் மனு அளித்தனர். இதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    ×