search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூத்துக்குடி சித்தர்"

    • தமிழகத்தை சேர்ந்த திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை என்பவர் ‘’காளி’’ என்ற பெயரில் ஒரு ஆவணப்படத்தை எடுத்துள்ளார்.
    • லீனா மணிமேகலையை கைது செய்து, தவறுக்கான தண்டனையை மத்திய அரசு கண்டிப்பாக கொடுத்தே ஆகவேண்டும் என சித்தர் கூறியுள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கோரம்பள்ளம், அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தை சேர்ந்த திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை என்பவர் ''காளி'' என்ற பெயரில் ஒரு ஆவணப்படத்தை எடுத்துள்ளார். இந்த ஆவணப்படத்தில் இவரே நடித்துள்ளதுடன், இந்துக்களின் தெய்வமான காளியை படபோஸ்டரில் புகை பிடிப்பது போன்று அவதூறாக சித்தரித்துள்ளார்.

    மதவழிபாடுகளில் முன்னோர்கள் காலம் முதல் இப்போது வரையிலும் பாரம்பரியத்தை தவறாமல் கடைபிடித்து வரும் தமிழகத்தை சேர்ந்த இந்த இயக்குநர் இந்த அளவுக்கு கீழ்த்தரமாக நடந்துகொண்டுள்ளது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

    இந்து தெய்வத்தின் புனிதத்தை பாழ்படுத்தியற்காக இந்த லீனா மணிமேகலையை கைது செய்து, தவறுக்கான தண்டனையை மத்திய அரசு கண்டிப்பாக கொடுத்தே ஆகவேண்டும்.

    மேலும், அவரது ஆவணப்படத்தை உலகின் எந்தப்பகுதியிலும் வெளியிட முடியாத அளவிற்கு மத்திய அரசு தகுந்த நடவடிக்கையை தாமதமின்றி உடனடியாக எடுத்திடவேண்டும். சமூகவலை–தளங்களில் பதிவிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தின் போஸ்டர்களை எல்லாம் முற்றிலுமாக இல்லாமல் செய்திடவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×