search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை பொருள்"

    • தற்போது சுட்டுவீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் டிரோன் அம்ரித்சர் பகுதியில் கீழே விழுந்தது.
    • இதில் இருந்த போதை பொருளின் மதிப்பை அறிந்து கொள்வதற்கான பரிசோதனை நடைபெற்று வருகிறது.

    சர்வதேச எல்லை பகுதியில் பஞ்சாப் வழியே இந்தியாவுக்குள் போதை பொருளை கொண்டுவந்த பாகிஸ்தான் டிரோனை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். கடந்த நான்கு நாட்களில் இது போன்ற டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது ஐந்தாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது சுட்டுவீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் டிரோன் அம்ரித்சர் பகுதியில் கீழே விழுந்தது. கீழே விழுந்த கருப்பு நிற டிரோனை எல்லை பாதுகாப்பு படையினர் மீட்டனர். அளவில் பெரியதாகவும், கருப்பு நிறத்திலும் இருந்த டிரோனில் சந்தேகத்திற்குரிய போதை மருந்து வைக்கப்பட்டு இருந்தது. இதில் இருந்த போதை பொருளின் மதிப்பை அறிந்து கொள்வதற்கான பரிசோதனை நடைபெற்று வருகிறது.

     

    மே 19 ஆம் தேதி முதல் இந்திய எல்லைக்குள் இதே போன்று அத்துமீறி நுழைந்த ஐந்தாவது டிரோன் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பல சமயங்களில் டிரோன் பறந்து வருவது போன்ற சத்தம் மட்டும் கேட்கும். ஆனால் விசாரணையில் டிரோன் எதுவும் மீட்கப்படாத சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.

    ஏற்கனவே இரண்டு டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. மூன்றாவது டிரோன் ஊடுறவ முயன்ற போது சுட்டதில், அது பாகிஸ்தான் எல்லை பகுதியில் வீழ்ந்தது என்று எல்லை பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மே 20 ஆம் தேதி ஊடுறவிய டிரோனில் 3.3 கிலோகிராம் போதை பொருள் இருந்தது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

    • இந்திய கடற்படையும், மத்திய போதை பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் கப்பலுக்கு சென்று பார்த்தபோது அங்கு போதை பொருள் இருப்பது தெரியவந்தது.
    • சுபைரை கைது செய்து எர்ணாகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    திருவனந்தபுரம்:

    இந்தியா வழியாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக பெரும் அளவு போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன.

    இதனை தடுக்க இந்திய கடற்படையும், மத்திய போதை பொருள் தடுப்பு துறையும் இணைந்து ஆபரேஷன் சமுத்திரகுப்த் என்ற பெயரில் தீவிர சோதனையில் இறங்கியது. இவர்கள், கொச்சி அருகே ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கு இடமாக ஒரு கப்பல் செல்வதை பார்த்தனர். அதனை நோக்கி விரைந்து சென்றபோது அந்த கப்பல் தண்ணீரில் மூழ்க தொடங்கியது.

    இருப்பினும் இந்திய கடற்படையும், மத்திய போதை பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் கப்பலுக்கு சென்று பார்த்தபோது அங்கு போதை பொருள் இருப்பது தெரியவந்தது.

    அவர்கள் கப்பலில் கடத்தி வரப்பட்ட 2,500 கிலோ மெத்தாம்பெட்டமைன் என்ற போதை பொருளை கைப்பற்றினர். மேலும் கப்பலில் இருந்த பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரையும் பிடித்தனர்.

    தொடர்ந்து அவரை கொச்சி அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவரது பெயர் சுபைர் என தெரியவந்தது. இவர்கள், ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருள் கொண்டு வந்ததாகவும், இந்திய அதிகாரிகளை கண்டதும் அதனை கடலில் மூழ்கடிப்பதற்காக கப்பலை சேதப்படுத்தி தண்ணீரில் மூழ்க செய்ததாகவும் தெரிவித்தார். மேலும் பல திடுக்கிடும் தகவல்களை அவர் தெரிவித்தார்.

    ஆப்கானிஸ்தானில் இந்த போதை பொருள் தயாரித்து அங்கேயே பேக் செய்து வெளிநாடுகளுக்கு கடத்துவோம். தற்போது பாகிஸ்தானை சேர்ந்த கடத்தல் கும்பல் தலைவன் ஷாஜி சலீம் இந்த கடத்தலை தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.

    இவர், பாகிஸ்தானிலேயே போதை பொருள்களை பாக்கெட்டுகளில் அடைத்து இலங்கை உள்பட பல நாடுகளுக்கு அனுப்பி வருகிறார். இந்த போதை கும்பல் இந்தியாவில் தீவிரவாத செயல்களுக்கு பெரும் அளவு பணம் உதவி செய்து வருவதாகவும் சுபைர் தெரிவித்துள்ளார்.

    அவருடன் மேலும் சிலர் வந்ததாகவும், அவர்கள் படகுகளில் தப்பிச் சென்று விட்டதாகவும், சுபைர் கூறினார். போதை பொருள்கள் தண்ணீரில் நனையாமல் இருப்பதற்காக அனைத்து பாக்கெட்டுகளிலும் பிளாஸ்டிக் கவர் சுற்றப்பட்டிருப்பதாகவும் இந்திய அதிகாரிகள் அந்த பகுதியை விட்டு சென்ற பிறகு கடலில் மூழ்கடித்த போதை பொருள்களை மீட்கலாம் என திட்டமிட்டதாகவும் ஆனால் அதிகாரிகள் போதை பொருளை கைப்பற்றி விட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

    அவர் கூறிய கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சுபைரை கைது செய்து எர்ணாகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    பின்னர் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்தியாவில் தீவிரவாத செயல்களுக்கு போதை கும்பல் பண உதவி செய்வதாக சுபைர் கூறி உள்ளதால் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகளும் விசாரணை நடத்த உள்ளனர்.

    • ஒரு கட்டத்தில் கடற்படையினரிடம் சிக்கி கொண்ட கப்பலை போதை பொருள் கடத்தல் குழுவினர் சோதனை செய்தனர்.
    • போதை பொருளை ஏற்றி வந்த பிரதான கப்பல் பற்றிய தகவல்களும் அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை.

    திருவனந்தபுரம்:

    பாகிஸ்தானில் இருந்து இந்திய கடல் வழியாக போதை பொருள் கடத்தப்படுவதாக உளவு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை உளவு துறை இந்திய கடற்படைக்கும், போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் தெரிவித்தது.

    இதற்காக ஆபரேசன் சமுத்திரகுப்தா என்ற பெயரில் கடற்படை மற்றும் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் இணைந்து வேட்டையில் இறங்கினர். இதில் பாகிஸ்தானில் இருந்து இந்திய கடல் பகுதிக்குள் நுழையும் கப்பல்களை கண்காணித்து வந்தனர். இதில் சந்தேகப்படும்படி வந்த கப்பல் ஒன்றை கடற்படை மற்றும் போதை பொருள் கடத்தல் பிரிவினர் இணைந்து விரட்டி சென்றனர்.

    சினிமாவில் வருவது போல் நடுக்கடலில் இந்த சேசிங் சம்பவம் நடந்தது. ஒரு கட்டத்தில் கடற்படையினரிடம் சிக்கி கொண்ட கப்பலை போதை பொருள் கடத்தல் குழுவினர் சோதனை செய்தனர்.

    அந்த கப்பலில் மெத்தாம் பேட்டமைன் எனப்படும் விலை உயர்ந்த போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுசிறு மூட்டைகளில் மொத்தம் 2525 கிலோ போதை பொருள் இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சர்வதேச சந்தையில் இதன்மதிப்பு ரூ.25 ஆயிரம் கோடி எனக்கூறப்படுகிறது.

    இந்த போதைபொருளை அதிகாரிகள் கொச்சியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்தனர். அவர்கள் போதை பொருளை கைப்பற்றி கொச்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் இந்த தகவலை கோர்ட்டுக்கும் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக போதை பொருள் தடுப்பு பிரிவினர் கூறும்போது, பாகிஸ்தானை சேர்ந்த போதை பொருள் கடத்தல்காரன் ஹாஜி சலீம் என்பவருக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகவும், அவரது குழுவினர்தான் போதை பொருளை கடத்தி வந்ததாகவும் தெரிவித்தனர்.

    தற்போது ஹாஜி சலீம் குழுவை சேர்ந்த பாகிஸ்தானியர் ஒருவர் இந்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர் மூலம் போதை பொருள் யாருக்காக கொண்டு வரப்பட்டது? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க அதிகாரிகள் குழு விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் போதை பொருளை கடத்தி வந்த பிரதான கப்பலை அதிகாரிகள் தாய் கப்பல் என்று குறிப்பிட்டனர். அந்த கப்பலில் இருந்து போதை பொருள் சிறுசிறு பார்சல்களாக பிரிக்கப்பட்டு அவை நடுக்கடலில் சிறிய ரக படகுகளில் ஏற்றப்பட்டு கரைக்கு கொண்டு வரப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இவ்வாறு போதை பொருளை ஏற்ற வந்த சிறிய படகுகளில் 3 படகுகள் கடற்படையிடம் சிக்கியதாகவும், 2 படகுகள் தப்பி சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது. அந்த படகுகளை தேடிவருவதாக கடற்படை தெரிவித்தது.

    இதற்கிடையே போதை பொருளை ஏற்றி வந்த பிரதான கப்பல் பற்றிய தகவல்களும் அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை.

    அந்த கப்பல் நடுக்கடலில் இருந்து மாயமாகி விட்டதா? அல்லது கடலில் மூழ்கிவிட்டதா? என்பதும் தெரியவில்லை. இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, தாய் கப்பல் பற்றி விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

    • கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
    • தகவல் தெரிவிப்பவரின் விபரம் பாதுகாக்கப்படும்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத் தில் மது, போதை பொருள் தடுப்பு நடவ டிக்கையில் கடந்த 4 மாதத்தில் 1,307 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டத் தில் சாராயம் மற்றும் போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கத்தோடு கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று முன்தினம் வரை மாவட்டம் முழுவதும் நடத் திய மதுவிலக்கு மற்றும் போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கை குறித்த சோத னையில் 1,355 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் 10,011 லிட்டர் சாரா யம், 3,357 லிட்டர் கர்நாடகா மது பாட்டில்கள், 1,342 லிட் டர் மது பாட்டில்கள் 75,100 லிட்டர் சாராய ஊறல், 21 கிலோ கஞ்சா, 218 கிலோ புகையிலை பொருட்கள். மது மற்றும் கஞ்சா கடத்த பயன்ப டுத்தபட்ட நான்கு சக்கரவாக னங்கள் 3, இரு சக்கரவாகனம் 14 கைப்பற்றப்பட்டது.

    மேலும் 1.307 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 6பேர் மீது தடுப்பு காவல் சட் டத்தின் கீழ் நடவடிக்கைமேற் கொள்ளப்பட்டது, மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்ட 160

    பேர் மீது 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.28,470 பறிமு தல் செய்து நடவடிக்கைமேற் கொள்ளப்பட்டது.

    திருப்பத்தூர் மாவட்டத் தில் சாராயம், போதை பொருட்கள் மற்றும் சூதாட் டத்தை முற்றிலுமாக ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. சாரா யம் காய்ச்சுபவர்கள், சட்டவி ரோதமாக மது பாட்டில்கள் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் மேற்குறிப் பிட்ட குற்றவாளிகள் குறித்த தகவலை 9159959919 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விபரம் பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உசிலம்பட்டியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.
    • கஞ்சா மற்றும் போதை பொருள் வியாபாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்ட காவல்துறை சார்பாக உசிலம்பட்டி மதுரை ரோட்டில் தனியார் மகாலில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் மற்றும் உசிலம்பட்டி டி.எஸ்.பி. நல்லு ஆகியோர் தலைமையில் உசிலம்பட்டி பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யும் மற்றும் கஞ்சா தொழில் செய்யும் கஞ்சா வியாபாரிகளுக்கு போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.

    போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப்பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன்.

    போதைப்பொருட்களின் உற்பத்தி, நடவடிக்கைகளின் மூலம் நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு போதைப்பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன் எனவும், கஞ்சா மற்றும் போதை பொருள் வியாபாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இதில் உசிலம்பட்டி போலீசார் கலந்து கொண்டனர்.

    • சுமார் 150 பேர் தங்க வைக்கப்பட்டு இருந்ததும் மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்து வந்ததும் தெரியவந்தது.
    • 5 ஆண்டுகளில் போதைப்பொருள் கொடுத்து பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டார்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி என்கிற பெயரில் ஆசிரமம் இல்லம் இயங்கி வருகிறது. இங்கு சேர்க்கப்பட்டு இருந்தவர்களில் பலர் மாயமானதாக புகார் எழுந்தது.

    இதன் தொடர்ச்சியாக கெடார் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் சுமார் 150 பேர் தங்க வைக்கப்பட்டு இருந்ததும் மேலும் இங்கிருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்து வந்ததும் தெரியவந்தது.

    இது தொடர்பாக கெடார் போலீசார் ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த மனநலம் பாதிக்கப்பட்டோரை சித்ரவதை செய்தல், உள்நோக்கத்துடன் அவர்களை வெளிமாநிலத்துக்கு அழைத்து செல்லுதல், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தல் உள்ளிட்ட 13 பிரிவின் கீழ் உரிமையாளர், அவரது மனைவி உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

    இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    தப்பி வந்த பெண் ஒருவர் தன்னார்வலர்களிடம், கூறுகையில் தான் ஒடிசாவிலிருந்து விழுப்புரத்தில் பிச்சை கேட்டு வந்ததாகவும், அங்கு ஒரு 'மீட்பு' குழு தன்னை அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறினார்.

    5 ஆண்டுகளில், போதைப்பொருள் கொடுத்து பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டார். சங்கிலியால் பிணைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார். இதனை அந்த பெண் எதிர்க்க முயன்றபோது, உரிமையாளர் கூண்டில் வைத்திருந்த குரங்குகள் மூலம் கொடூரமாக கடிக்க செய்தனர் என கண்ணீர்மல்க தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் நடந்த விசாரணையில் சம்பவங்கள் உண்மை என தெரியவந்தது. அதனை தொடர்ந்து ஆசிரமத்தை மூடுவதற்கு கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

    • ஏ.டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால் அறிவுரை
    • பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போதைக்கு எதிரான பிரசாரத்தை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.

    நாகர்கோவில்:

    தமிழ்நாடு ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் நேற்று குமரி மாவட்டம் வந்தார். நாகர்கோவில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அவர் போலீஸ் அதிகாரிகளு டன் ஆலோ சனை மேற்கொண் டார்.

    அப்போது போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஈஸ்வரன், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆலோசனையின்போது, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டம் கஞ்சா இல்லாத மாவட்டமாக மாற்றப்பட வேண்டும். வெளி மாநிலங்க ளில் இருந்து கஞ்சா விற்பனைக்கு கொண்டு வரப்படுவதை முற்றிலும் தடுக்க வேண்டும் என ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் அறிவுரை வழங்கினார்.

    அதோடு கஞ்சா மற்றும் போதைக்கு அடிமையான இளை ஞர்கள், மாண வர்களை மீட்கும் வகையில் காவல்துறையினர் விழிப்பு ணர்வு நடவடிக்கை களை மேற்கொள்ள வேண் டும் என்றும் கூறினார். மேலும் மாவட்டத்தில் போதை மீட்பு சிகிச்சை மையங்களுடன் காவல்துறையினர் இணைந்து செயலாற்ற வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போதைக்கு எதிரான பிரசாரத்தை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.

    இது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை அதிகப்படுத்த வேண்டும். மேலும் போதைக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொள்ளும் வகையில் போட்டோ பாயின்ட் ஏற்படுத்தும் நிகழ்ச்சியையும் ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். பின்னர் போலீஸ் சூப்பிரண்டுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த போட்டோ பாயிண்ட், பல்வேறு முக்கிய இடங்களில் வைக்கவும், பள்ளி, கல்லூரிகளில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். மேலும் ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் பறிமுதல் செய்த கஞ்சா வைக்கப்பட்டுள்ள குடோனையும் ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் பார்வையிட்டார்.

    • மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணி ஒவரின் பேக்கை சோதனை செய்தனர்.
    • மும்பையைச் சேர்ந்த அந்த பயணியை சுங்க அதிாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    மும்பை:

    மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணி ஒவரின் பேக்கை சோதனை செய்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் அந்த பையின் உள் பகுதியை கிழித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது அந்த பையில் கோகைன் எனும் போதை பொருள் இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து பையில் இருந்த 2.81 கிலோ மதிப்புள்ள கோகைக்கனை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.28.10 கோடியாகும்.

    இதை தொடர்ந்து மும்பையைச் சேர்ந்த அந்த பயணியை சுங்க அதிாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    சமூக வலைதளம் மூலம் அறிமுகமா நபர் ஒருவர் அந்த போதை பொருளை தன்னிடம் கொடுத்ததாக கைதான அந்த பயணி தெரிவித்தார்.

    கடந்த வாரம் மும்பை சர்வதேச விமான நிலையத்தல் ரூ.47 கோடி மதிப்புள்ள கோகைன் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • போதைப் பொருட்கள் உட்கொண்டால் உடல்நிலை சீர்கெடுவது மட்டுமின்றி ஆயுள் காலம் குறைவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
    • மாணவர்கள் போதைப் பொருட்கள் பழக்கத்துக்கு ஆளாக கூடாது.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டையில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருட்கள் உட்கொண்டால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தமிழ்ச் செல்வம் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இன்ஸ்பெக்டர் ஏழுமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

    கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருட்கள் உட்கொண்டால் உடல்நிலை சீர்கெடுவது மட்டுமின்றி ஆயுள் காலம் குறைவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    எனவே மாணவர்கள் போதைப் பொருட்கள் பழக்கத்துக்கு ஆளாக கூடாது. படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். யாராவது கஞ்சா போன்ற போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்தால் 9444005105 செல்போன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிவிப்போரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும். மேலும் தகவல் தெரிவிப்போருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.

    இவ்வாறு இன்ஸ்பெக்டர் ஏழுமலை தெரிவித்தார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் திறந்து வைத்தார்

    கன்னியாகுமரி:

    பள்ளி மாணவ-மாணவிகள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தாலோ அல்லது போதை பொருள் சம்பந்தப்பட்ட ஏதேனும் தகவல் தெரிந்தாலோ, தகவல் அளிக்க குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாவட்ட காவல்துறை சார்பில் புகார் பெட்டி வைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

    அதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் புகார் பெட்டி வைக்கப்பட்டது. அதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் திறந்து வைத்தார். பின்னர் அவர் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற் படுத்தினார்.

    அப்போது அவர் கூறுகையில், போதைப் பொருட்களை விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் 70103 63173 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டும், புகார் பெட்டி மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். மேலும் தகவல் அளிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்றார்.

    • குற்றவாளியை பிடிக்க தனிப்படை ராஜஸ்தானுக்கு விரைந்தது
    • தப்பி ஓடிய கணேஷ் மற்றும் அவரது சக கூட்டாளிகளை பிடிக்க ராஜஸ்தான் போலீசின் உதவியை நாட குமரி மாவட்ட போலீசார் முயற்சி

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் போதைப் பொருள்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதத்தில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    நேற்று படந்தாலு மூடு சோதனை சாவடி யில் தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வர ராஜ் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது சொகுசு கார் வேகமாக வந்தது.

    அந்த காரை போலீசார் நிறுத்தும்படி கூறியும் நிற்காமல் சென்றதால் அதனை விரட்டிச் சென்று குழித்துறை சப்பாத்து பாலம் பகுதியில் போலீசார் மடக்கினர்.

    காரில் இருந்த ஓட்டுநர் மற்றும் 2 பேரை பிடித்து விசாரித்த போது அவர்களி டமிருந்து எம். டி .எம். ஏ. என்ற 300 கிராம் போதை பொருள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவர் தான் இதனை கடத்தி வந்ததாகவும் அவர் காரில் இருந்து தப்பி சென்று விட்டதும் தெரியவந்தது. மேலும் காரில் வந்த 2 பேர்

    மார்த்தாண்டத்தில் ஜவுளிக்கடை நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த புத்தாரம் மகன் பிரகாஷ் (வயது30) மற்றும் கிருஷ்ணாலால் மகன் ராஜேஷ் (27) என தெரியவந்தது.

    இவர்கள் மூலம் ராஜஸ்தா னிலிருந்து கணேஷ் போதைப் பொருளை கடத்தி வந்து குமரி மாவட்டம், கேரளா, பெங்களுர் உட்பட பல இடங்களில் புழக்கத்தில் விட்டுள்ளான்.

    இந்தநிலையில் தப்பி ஓடிய கணேஷ் மற்றும் அவரது சக கூட்டாளிகளை பிடிக்க ராஜஸ்தான் போலீசின் உதவியை நாட குமரி மாவட்ட போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். மேலும் அவர்களை பிடிக்க குமரி மாவட்ட தனிப்படை ராஜஸ்தான் சென்றுள்ளது.

    • பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகன் தான் சித்தாந்த்.
    • பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் சித்தாந்தின் சகோதரி ஆவார்.

    பெங்களூரு :

    கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருக்கும் சொகுசு ஓட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு நடந்த விருந்து நிகழ்ச்சியில் போதை பொருள் பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அதில் விருந்தில் போதை பொருள் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, சிலரை கைது செய்து, சோதனைக்காக அவர்களின் ரத்தமாதிரி எடுக்கப்பட்டது.

    35 பேரில் 5 பேர் போதை பொருள் பயன்படுத்தியது ரத்த பரிசோதனையில் தெரிய வந்தது. அதில் பாலிவுட் நடிகர் சித்தாந்த் கபூரும் ஒருவர். போலீசார் சித்தாந்த் கபூரை கைது செய்து, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகன் தான் சித்தாந்த். பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் சித்தாந்தின் சகோதரி ஆவார். முன்னதாக பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்தபோது இந்தி திரையுலகை சேர்ந்த பலரை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதில் ஷ்ரத்தா கபூரும் ஒருவர். ஆனால் அவருக்கு எதிராக எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

    பெங்களூரு ஓட்டலில் நடந்த போதை விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில், போதை பொருட்களை உட்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் சித்தாந்த் கபூர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இதுபற்றி பெங்களூரு நகர கிழக்கு டி.சி.பி. பீமசங்கர் எஸ் குலெட் செய்தியாளர்களிடம் கூறும்போது, சித்தாந்த் கபூர் போதை பொருட்களை எடுத்துள்ளார் என மருத்துவ பரிசோதனை உறுதிப்படுத்தி உள்ளது.

    அவரை முன்பே கைது செய்து, அதன் பின்னரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என நேற்று கூறினார். தொடர்ந்து அவரை காவலுக்கு எடுத்து விசாரிக்க இருக்கிறோம் என கூறினார். இந்நிலையில் அவர் கூறும்போது, காவல் நிலைய ஜாமீன் அடிப்படையில் சித்தாந்த் கபூர் உள்பட 5 பேரை விடுவித்து உள்ளோம். தேவைப்பட்டால் விசாரணைக்கு ஆஜராக அவர்களுக்கு அழைப்பு விடப்படும். அதன்பேரில் அவர்கள் நேரில் ஆஜராவார்கள் என்று குலெட் கூறியுள்ளார்.

    ×