என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
    X

    விழிப்புணர்வு முகாம் நடந்த போது எடுத்த படம்.

    போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

    • உசிலம்பட்டியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.
    • கஞ்சா மற்றும் போதை பொருள் வியாபாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்ட காவல்துறை சார்பாக உசிலம்பட்டி மதுரை ரோட்டில் தனியார் மகாலில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் மற்றும் உசிலம்பட்டி டி.எஸ்.பி. நல்லு ஆகியோர் தலைமையில் உசிலம்பட்டி பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யும் மற்றும் கஞ்சா தொழில் செய்யும் கஞ்சா வியாபாரிகளுக்கு போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.

    போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப்பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன்.

    போதைப்பொருட்களின் உற்பத்தி, நடவடிக்கைகளின் மூலம் நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு போதைப்பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன் எனவும், கஞ்சா மற்றும் போதை பொருள் வியாபாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இதில் உசிலம்பட்டி போலீசார் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×