search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதை பொருள் கொடுத்து பெண் பாலியல் பலாத்காரம்- ஆசிரமத்தை மூட உத்தரவிட்ட கலெக்டர்
    X

    போதை பொருள் கொடுத்து பெண் பாலியல் பலாத்காரம்- ஆசிரமத்தை மூட உத்தரவிட்ட கலெக்டர்

    • சுமார் 150 பேர் தங்க வைக்கப்பட்டு இருந்ததும் மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்து வந்ததும் தெரியவந்தது.
    • 5 ஆண்டுகளில் போதைப்பொருள் கொடுத்து பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டார்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி என்கிற பெயரில் ஆசிரமம் இல்லம் இயங்கி வருகிறது. இங்கு சேர்க்கப்பட்டு இருந்தவர்களில் பலர் மாயமானதாக புகார் எழுந்தது.

    இதன் தொடர்ச்சியாக கெடார் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் சுமார் 150 பேர் தங்க வைக்கப்பட்டு இருந்ததும் மேலும் இங்கிருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்து வந்ததும் தெரியவந்தது.

    இது தொடர்பாக கெடார் போலீசார் ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த மனநலம் பாதிக்கப்பட்டோரை சித்ரவதை செய்தல், உள்நோக்கத்துடன் அவர்களை வெளிமாநிலத்துக்கு அழைத்து செல்லுதல், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தல் உள்ளிட்ட 13 பிரிவின் கீழ் உரிமையாளர், அவரது மனைவி உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

    இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    தப்பி வந்த பெண் ஒருவர் தன்னார்வலர்களிடம், கூறுகையில் தான் ஒடிசாவிலிருந்து விழுப்புரத்தில் பிச்சை கேட்டு வந்ததாகவும், அங்கு ஒரு 'மீட்பு' குழு தன்னை அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறினார்.

    5 ஆண்டுகளில், போதைப்பொருள் கொடுத்து பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டார். சங்கிலியால் பிணைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார். இதனை அந்த பெண் எதிர்க்க முயன்றபோது, உரிமையாளர் கூண்டில் வைத்திருந்த குரங்குகள் மூலம் கொடூரமாக கடிக்க செய்தனர் என கண்ணீர்மல்க தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் நடந்த விசாரணையில் சம்பவங்கள் உண்மை என தெரியவந்தது. அதனை தொடர்ந்து ஆசிரமத்தை மூடுவதற்கு கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

    Next Story
    ×