search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூ மார்க்கெட்"

    • காதலர் தினத்தில் ஒற்றை ரோஜா பூ கொடுத்து அன்பை பரிமாறிக்கொள்ளும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
    • மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    காதலர் தினம் நாளை (பிப்ரவரி 14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்குவது வழக்கம். பரிசு பொருட்களை பரிமாறி கொள்ளும்போது அதனுடன் ரோஜா பூவையும் சேர்த்து கொடுத்து அன்பை வெளிப்படுத்துவார்கள்.

    பரிசு பொருட்கள் கொடுக்க முடியாமல் இருந்தாலும் காதலர் தினத்தில் ஒற்றை ரோஜா பூ கொடுத்து அன்பை பரிமாறிக்கொள்ளும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.

    இதையடுத்து காதலர்தின ஸ்பெஷல் ரோஜா பூக்கள் திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள பூ மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஓசூர், பெங்களூர் போன்ற பகுதிகளில் இருந்து பட்டர்ரோஜா, சிவப்பு ரோஜா, மஞ்சள் ரோஜா, வெள்ளை ரோஜா, காஷ்மீர் ரோஜா என பல வகைகளிலும், பல வண்ணங்களிலும் ரோஜா பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

    சில்லரை வியாபாரிகள் இந்த ரோஜாக்களை பொக்கே தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கட்டு ரோஜா பூக்கள் ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ரோஜா பூ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதனை காதலர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். பனிப்பொழிவு காரணமாக ரோஜாப்பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • கோவை மாவட்டத்தில் கார்த்திகை திருவிழாவை கொண்டாடும் பணிகள், அங்கு உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பாக நடந்து வருகின்றன.
    • கோவை பூ மார்க்கெட்டுகளில் பூக்க ளின் விலை தற்போது அதிகரித்து உள்ளது.

    கோவை,

    உலகம் முழுவதும் கார்த்திகை தீபத்திருவிழா நாளை (26-ந்தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் கார்த்திகை திருவிழாவை கொண்டாடும் பணிகள், அங்கு உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பாக நடந்து வருகின்றன.

    மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அங்குள்ள கோவில்களுக்கு சென்று வழிபடுவதற்கா கவும், வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்வதற்காகவும் பல்வேறு வகையான பூக்கள் மற்றும் பொரி-கடலை ஆகியவற்றை வாங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளையும் பூக்கள் விற்பனை க்காக கொண்டு வரப்படுகி ன்றன. மேலும் வெளி மாவட்டம் -மாநிலங்களில் இருந்து பல்வேறு வகையான பூக்கள் சரக்கு லாரிகளில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படு கிறது.

    கோவை மாவட்டத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் ஒட்டுமொத்த மாக சுமார் 5 டன் பூக்கள் விற்ப னைக்காக கொண்டு வரப்படுகி ன்றன. அங்கு அவை உள்ளூர் வியாபா ரிகளுக்கு ஏலமுறையில் விற்கப்ப்ப ட்டு வருகின்றன. மேலும் பொதுமக்களும் குடும்பத்து டன் வந்திருந்து கிலோக்க ணக்கில் பூக்களை கொள்மு தல் செய்து வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் கார்த்திகை தீபத்திரு விழாவை முன்னிட்டு பூ மார்க்கெட்டில் வாடிக்கை யாளர்களின் கூட்டம் அலைமோதியது. அதேநே ரத்தில் வெளியூர்-வெளி மாவட்டங்களில் இருந்து பூக்களின் வரத்து வெகுவாக குறைந்து இருந்தது.

    எனவே கோவை பூ மார்க்கெட்டுகளில் பூக்க ளின் விலை தற்போது அதிகரித்து உள்ளது.

    மேலும் பொரி மற்றும் கடலை வகைகளின் விலை களும் சற்று அதிகரித்து உள்ளன. கோவை பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகை ரூ.1200-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவற்றின் விலை ரூ.400 அதிகரித்து இன்று ஒரு கிலோ மல்லி ரூ.1600-க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல முல்லைப்பூவின் விலை தற்போது ரூ.800-க்கு விற்பனை செய்யப்ப டுகிறது. அரளிப்பூவின் விலை மட்டும் ரூ.40 குறைந்து தற்போது ரூ.160-க்கு விற்கப்பட்டு வருகிறது.

    கோவை ஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ பூக்களின் விலைவிவரம் (அடைப்புக்குறிக்குள் பழைய விலை):

    ெசவ்வந்தி-120, அரளி-160 (200), சம்பங்கி-80, தாமரை ஒரு பூ-20, ஜாதிமல்லி-800 (600), கோழிக்கொண்டை-50, துளசி-30, மரிக்கொழுந்து ஒரு கட்டு-50, ரோஜா-120, வெள்ளை செவ்வந்தி-280, கலர் செவ்வந்தி-200 (160).

    கோவை பலசரக்கு மட்டும் ஒட்டுமொத்த கடைகளில் தற்போது பொரிகடலை மற்றும் அவல்பொரியின் விலை சற்று அதிகரித்து உள்ளது. நாளை திருக்கார்த்திகை என்பதால் பொதுமக்கள் விலைஉயர்வு பற்றி கவலைப்படாமல் பூக்கள் மற்றும் பலசரக்கு பொரு ட்களை வாங்கி செல்கின்ற னர்.

    • மதுரை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
    • 400 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த மல்லிகை பூ இன்று 600 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது.

    மதுரை

    நாளை ஆடி பவுர்ணமி தினம் என்பதால் மதுரை பூ மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை அதிகரித் துள்ளது. மல்லிகை பூ 600 ரூபாய்க்கு விற்பனையானது.

    மதுரை பூ மார்க்கெட்டில் கடந்த ஒரு வாரமாக மல்லிகை பூக்கள் வழக்கமாக 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனையாகி வந்தது. மற்ற பூக்களான பிச்சு, சம்பங்கி, செவ்வந்தி, பட்டன் ரோஸ் உள்ளிட்ட பூக்களின் விலையும் சராசரியாக 100 முதல் 200 வரை விற்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நாளை ஆடி பவுர்ணமி தினம் என்ப தாலும், இன்னும் 2 நாட்க ளில் ஆடி 18 வருவதாலும் பூக்கள் தேவை அதிகரித்துள்ளது. இதனால் பூக்க ளைத் தேடி பொது மக்கள் ஆர்வத்துடன் சென்று வாங்கி வருகிறார்கள்.

    இதன் காரணமாக மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர் வணிக வளாகத்தில் பூக்களை வாங்க ெபாதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    இதன் காரணமாக அனைத்து பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. வழக்கமாக 400 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த மல்லிகை பூ இன்று 600 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது. மேலும் சம்பங்கி 100 ரூபாய் அதிகரித்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிச்சிப்பூ 500 ரூபாய்க்கும், செவ்வந்தி, அரளி ஆகிய மலர்கள் 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பட்டன் ரோஸ் இன்று 200 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.

    மற்ற பூக்களின் விலையும் சற்று அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து cள்ளனர். இன்னும் சில தினங்களில் ஆடி 18 வர இருப்பதால் பூக்களின் விலை இன்னும் சில நாட்க ளுக்கு தொடர்ந்து அதிக ரிக்கும் என்று வியா பாரிகள் தெரிவித்தனர்.

    • சேலம் கடை வீதியில் வ.உ.சி பூ மார்க்கெட் செயல்பட்டு வந்தது.
    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருவதால் தற்காலிகமாக பூ மார்க்கெட் இடம் மாற்றம் செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் கடை வீதியில் வ.உ.சி பூ மார்க்கெட் செயல் பட்டு வந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருவதால் தற்காலிகமாக பூ மார்க்கெட் இடம் மாற்றம் செய்யப்பட்டது.

    இதனால் போஸ் மைதானத்தில் பூ மார்க்கெட் மற்றும் பல்பொருள் அங்காடி, காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. வ.உ.சி மார்க்கெட் கட்டு மான பணிகள் முடிவடைந்த தால் விரைவில் பூ மார்க்

    கொட் அங்கு மாற்றப்பட உள்ளது.

    இந்த நிலையில் வருகிற 11-ந் தேதி ஈரடுக்கு பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதையொட்டி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள வணிக வளாகம் அருகே போஸ் மைதானத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக பூ கடைகளை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    இதன்படி, போஸ் மைதா னத்தில் உள்ள தற்காலிக கடைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்று வதற்கான நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் இறங்கினர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாபார நல சங்க நிர்வாகி ஆறுமுகம் தலைமையில் வியாபாரிகள் அங்கு குவிந்தனர். அவர்கள் அதிகாரியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து கடைகளை அகற்ற அதிகாரிகள், வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இதனால் அங்கு தொடர்ந்து பரபரப்பு நிலவி வருவதால் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    • பூக்களை விவசாயிகள் சாலை ஓரங்களிலும், ஆறுகளிலும் கொட்டி வந்தனர்.
    • இன்று மீண்டும் விலை சரிந்தது. சாமந்திப்பூ ஒரு கிலோ ரூ.20-க்கு மட்டுமே விற்பனையானது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, தொப்பூர், சாமிசெட்டிபட்டி, ஜருகு உள்ளிட்ட பகுதிகளி 2345 ஹெக்டர் பரப்பளவில் விவசாயிகள் சாமந்திப்பூக்களை சாகுபடி செய்துள்ளனர்.

    இதனால் தருமபுரி பூ மார்க்கெட்டிற்கு சாமந்தி பூக்கள் குவிய தொடங்கியதால் கடந்த இரண்டு வாரங்களாக சாமந்திப்பூ விலை குறைந்து கிலோ 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்பனையானது.

    விவசாயிகளுக்கு பூக்கள் பறிக்கும் கூலியே கிடைக்கவில்லை என பூக்களை விவசாயிகள் சாலை ஓரங்களிலும், ஆறுகளிலும் கொட்டி வந்தனர்.

    இந்நிலையில் மார்கழி அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தி விழாவை ஒட்டி பூக்களின் விலை உயர்ந்து கிலோ 50 ரூபாய்க்கு விலை போனது.

    இதனை தொடர்ந்து மீண்டும் சாமந்தி பூக்களின் விலை சரிந்து கிலோ 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டு பிறப்பை ஒட்டி அதிகப்படியான விவசாயிகள் பூ மார்க்கெட்டில் சாமந்தி பூக்களை குவித்தனர். வியாபாரிகளும் பொது மக்களும் நேற்று காலை முதலே பூ மார்க்கெட்டில் குவிந்ததால் சாமந்திப்பூ கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இதனால் பூக்களை கொண்டு வந்திருந்த வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இன்று மீண்டும் விலை சரிந்தது. சாமந்திப்பூ ஒரு கிலோ ரூ.20-க்கு மட்டுமே விற்பனையானது.

    • ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனையானது.
    • இன்று கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.

    கோவை,

    கோவை ஆர்.எஸ்.புரத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த பூ மா ர்க்கெட்டிற்கு சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து முல்லை, மல்லிகை பூவும், ஓசூர், பெங்களூரு பகுதிகளில் இருந்து ரோஜா, காக்கடை பூக்களும் வருகிறது.

    இதுதவிர சேலத்தில் இருந்து அரளி பூவும், நிலக்கோட்டையில் இருந்து குண்டுமல்லியும் விற்பனைக்கு வருகிறது. இந்த பூ மார்க்கெட்டில் கோவை மாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மல்லிகை, முல்லை, அரளி, குண்டுமல்லி, ரோஜா, செவ்வந்தி என பூக்களை தேர்வு செய்து வாங்கி செல்கிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து சற்று குறைவாக உள்ளது. இதனால் பூக்களின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கார்த்திகை மாதம் என்பதால் கோவில் விசேஷங்கள், திருமண நிகழ்ச்சிகள் என பல்வேறு விழாக்களுக்கு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் இன்று கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இதனால் பூக்கள் விற்பனை அதிகளவில் இருந்தது. அய்யப்ப பக்தர்கள், பொதுமக்கள் காலை முதலே பூக்கள் வாங்க மார்க்கெட்டுக்கு குவிந்தனர்.

    இதையடுத்து கோவை பூமார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனையானது. மற்ற பூக்களும் விலை உயர்ந்து காணப்பட்டது. கோவை பூமார்க்கெட்டில் விற்பனையாகும் பூக்களின் விலை நிலவரம் கிலோவில் வருமாறு:-

    செவ்வந்தி-ரூ.100, ரோஜா ரூ.160, கோழி கொண்டை-ரூ.30 முதல் 60, அரளி-ரூ.240, சம்பங்கி-ரூ.60, வாடாமல்லி-ரூ.80, மரிக்கொழுந்து 1 கட்-ரூ.50, காக்கடைபூ-ரூ.400, செண்டுமல்லி- ரூ.160, மருகு-ஒரு கட்டு ரூ.30, தாமரை ஒன்று ரூ.15க்கும் விற்பனையானது. பூக்கள் வாங்க மார்கெட்டுக்கு பொதுமக்கள் குவிந்ததா ல் காலை முதலே அந்த பகுதியில் கடும்போ க்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.தற்போ து நிலவும் கடும் பனிப்பொழிவால் மல்லிகைப்பூ வரத்து குறை வாகவே காணப்பட்டது.

    • ஒரு வாரமாக மாவட்டத்தில் மழை இன்றி மிதமான சீதோசன நிலை காணப்பட்டது.
    • வியாபாரிகள் வராததால் தருமபுரி பூ மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் அதிகபடியாக பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு சாகுபடி செய்யும் பூக்கள் தினந்தோறும் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் இயங்கும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த பூ மார்க்கெட்டில் இருந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் மற்றும் வெளி மாவட்டங்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தருமபுரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் மழை இன்றி மிதமான சீதோசன நிலை காணப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து வங்க கடலில் புயல் நிலை கொண்டிருப்பதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் எனவும் புயலானது இன்று வலுப்பெற்றுள்ளதால் தொடர் மழை பெய்து வரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தருமபுரி மாவட்டத்தில் நேற்று மாலை 3 மணிக்கு மேல் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு திடீரென மழை பொழிய தொடங்கியது தொடர்ந்து இன்று காலை வரை விட்டு விட்டு மழை பொழிந்து வருகிறது.

    இதனால் தருமபுரி பூ மார்க்கெட்டில் பூக்களின் வரத்து இருந்தும் வாங்குவதற்கு வியாபாரிகள் வராததால் தருமபுரி பூ மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

    • இட நெருக்கடி மற்றும் போக்குவரத்து நெரிசல் இருப்பதால் அதற்கு மாற்றாக வடக்கு தேவித்தெருவில் புதிய பூ மார்க்கெட் கட்டப்பட்டது.
    • இதுவரை அந்த பூ மார்க்கெட் முழுமையாக செயல்பட்டுக்கு வரவில்லை. அங்கு கடை எடுத்துள்ள வியாபாரிகள், மாலை கட்டும் இடமாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் சாத்தார வீதியில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தில் தொடர்ந்து இட நெருக்கடி மற்றும் போக்குவரத்து நெரிசல் இருப்பதால் அதற்கு மாற்றாக வடக்கு தேவித்தெருவில் அ.தி.மு.க. ஆட்சியில் புதிய பூ மார்க்கெட் கட்டப்பட்டது. ஆனால் இதுவரை அந்த பூ மார்க்கெட் முழுமையாக செயல்பட்டுக்கு வரவில்லை. அங்கு கடை எடுத்துள்ள வியாபாரிகள், மாலை கட்டும் இடமாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் மாநகராட்சி சார்பில் தெற்கு தேவித்தெருவில் உள்ள பூ மார்க்கெட்டை மேம்படுத்துவது, அப்பகுதியில் ஒருங்கிணைந்த மார்க்கெட் அமைப்பது தொடர்பாக அமைச்சர் நேரு, கலெக்டர் பிரதீப்குமார், மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் ஆகியோர் சாத்தார வீதி, புதிய பூ மார்க்கெட் சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

    பூ மார்க்கெட்டை இடம் மாற்றுவதில் உள்ள நடைமுறை பிரச்சனைகள், இடவசதி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர், இது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய உத்தரவிட்டார்.

    இது குறித்து மாநகராட்சி வட்டாரங்களில் கேட்ட போது சாத்தார வீதியில் உள்ள பூ மார்க்கெட், அதன் அருகில் உள்ள தெற்கு தேவித் தெரு ஜெ.ஜெ திருமண மண்டபம் முன்பாக ஏற்கனவே கட்டி முழுமையாக செயல்பாட்டுக்கு வராமல் உள்ள பூ மார்க்கெட்டுக்கு மாற்றப்பட உள்ளது. இதற்காக அருகிலுள்ள மாநகராட்சி இடத்தையும் சேர்த்து (மீன் மார்க்கெட் இடம்) வியாபாரிகளுக்கு தேவையான வசதிகள், அமைப்புகள் குறித்து கேட்டறிந்து பூ மார்க்கெட் விரிவுபடுத்தப்படும்.

    மேலும், அதே பகுதியில் பயன்பாட்டில் இல்லாத ஜெ ஜெ திருமண மண்டபம் இடிக்கப்பட்டு அங்கு ஒரு ஏக்கரில் காய்கறி, மீன், இறைச்சி உள்ளிட்ட கடைகள் தனித்தனி வளாகமாக கொண்ட ஒருங்கிணைந்த மார்க்கெட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி வருவாயை பெருக்கும் வகையில் மேற்கொள்ளப்பட உள்ள இத்திட்டத்தை எந்த நிதியிலிருந்து மேற்கொள்வது மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய அமைச்சர் உத்தரவிட்டார். விரைவில் அப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.

    முன்னதாக ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ள அரசு மருத்துவமனை எதிரில் உள்ள இடத்தில் முன்னேற்பாடுகளையும் அமைச்சர் நேரு பார்வையிட்டார்.

    ஆய்வின் போது மாநகராட்சி மேயர் அன்பழகன், மண்டலக் குழுத் தலைவர் ஆண்டாள், நகரப் பொறியாளர் (பொ) சிவபாதம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ×