search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடம் மாற்றம்"

    • சேலம் கடை வீதியில் வ.உ.சி பூ மார்க்கெட் செயல்பட்டு வந்தது.
    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருவதால் தற்காலிகமாக பூ மார்க்கெட் இடம் மாற்றம் செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் கடை வீதியில் வ.உ.சி பூ மார்க்கெட் செயல் பட்டு வந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருவதால் தற்காலிகமாக பூ மார்க்கெட் இடம் மாற்றம் செய்யப்பட்டது.

    இதனால் போஸ் மைதானத்தில் பூ மார்க்கெட் மற்றும் பல்பொருள் அங்காடி, காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. வ.உ.சி மார்க்கெட் கட்டு மான பணிகள் முடிவடைந்த தால் விரைவில் பூ மார்க்

    கொட் அங்கு மாற்றப்பட உள்ளது.

    இந்த நிலையில் வருகிற 11-ந் தேதி ஈரடுக்கு பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதையொட்டி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள வணிக வளாகம் அருகே போஸ் மைதானத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக பூ கடைகளை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    இதன்படி, போஸ் மைதா னத்தில் உள்ள தற்காலிக கடைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்று வதற்கான நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் இறங்கினர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாபார நல சங்க நிர்வாகி ஆறுமுகம் தலைமையில் வியாபாரிகள் அங்கு குவிந்தனர். அவர்கள் அதிகாரியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து கடைகளை அகற்ற அதிகாரிகள், வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இதனால் அங்கு தொடர்ந்து பரபரப்பு நிலவி வருவதால் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    • நாளை (5-ந்தேதி) முதல் கிச்சிபாளைம் பிரிவு அலுவலகம், களரம்பட்டி பிரிவு மற்றும் கிச்சி பாளையம் உபக்கோட்டம் அலுவலகம், ஆகிய 3 அலுவலகங்களும் எருமாபாளையம் பஞ்சாயத்து கிச்சிபாளையம் துணை மின் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள கட்டிடத்தில் இயங்க உள்ளது.
    • இந்த தகவலை சேலம் நகரம் மின் வாரிய செயற்பொறியாளர் சுந்தரி தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    சேலம் சன்னியாசி குண்டு மெயின் ரோடு கணபதி நகரில் கிச்சிபா ளையம் பிரிவு மின்வாரிய அலுவலகம், களரம்பட்டி மெயின் ரோடு, வீரவாஞ்சி தெருவில் களரம்பட்டி பிரிவு உதவி பொறியாளார் அலுவலகம் (இயக்கமும், பராமரிப்பும்) மற்றும் திருச்சி மெயின் ரோடு ஜவுளி கடை பஸ் நிறுத்தத்தில் கிச்சிபாளையம் உபக்கோட்ட அலுவலகம் உதவி செயற்பொறியாளர் (இயக்கமும் பராமரிப்பும்) அலுவலகம் இயங்கி வருகிறது.

    நாளை (5-ந்தேதி) முதல் கிச்சிபாளைம் பிரிவு அலுவலகம், களரம்பட்டி பிரிவு மற்றும் கிச்சி பாளையம் உபக்கோட்டம் அலுவலகம், ஆகிய 3 அலுவலகங்களும் எருமாபாளையம் பஞ்சாயத்து கிச்சிபாளையம் துணை மின் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள கட்டிடத்தில் இயங்க உள்ளது.

    இந்த தகவலை சேலம் நகரம் மின் வாரிய செயற்பொறியாளர் சுந்தரி தெரிவித்துள்ளார்.

    • விதிகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்களின் மீதும் நடவடிக்கை தேவை
    • வெள்ளமடம் டோல்கேட் 4 வழி சாலை அருகேயும் அதிக அளவு விபத்துகள் நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் அதிக அளவு விபத்து மற்றும் உயிர் பலி ஆரல்வாய்மொழி சுற்று வட்டாரத்தில் கடந்த சில மாதங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்த விபத்துகளுக்கு டாஸ்மாக் கடை மற்றும் விதிமுறைகளை மீறி ஆங்காங்கே நிறுத்தப்படும் வாகனங்கள் தான் காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.ஆரல்வாய்மொழி பேரூ ராட்சி அலுவலகம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு வருவோர், கடையை சுற்றி உள்ள பகுதியில் பொதுமக்கள் நடக்க முடியாத அளவுக்கு இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.

    இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடி யில் சிக்குகின்றன. மேலும் அடிக்கடி விபத்து நடைபெற்று உயிர் பலியும் தொடர்கிறது. குறுகிய ரோட்டில் வழி பாதை சரியாக இல்லாததால் கார்கள் தாறுமாறாக செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆகவே மாவட்ட நிர்வா கம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் தலையிட்டு ரோட்டோரத்தில் இருக்கும் டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமல்லாது போக்கு வரத்து போலீசார் அல்லது உள்ளூர் போலீசார் போக்குவரத்தை சீரமைக்க வேண்டும்.

    மேலும் போக்குவர த்துக்கு இடையூறாக உள்ள ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆர். சிலை முதல் பேரூராட்சி அலுவலகம் வரை தேவையில்லாமல் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது உரிய நட வடிக்கை எடுத்து விபத்தை கட்டுப்படுத்தலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    வெள்ள மடம் டோல்கேட் 4 வழி சாலை அருகேயும் அதிக அளவு விபத்து கள் நடந்து வருகிறது. குறிப்பாக வெள்ள மடம்-குலகேசரன்புதூர் ரோட்டில் உள்ள பாலத்தின் அருகே விபத்துகள் நடந்து வருவதால் அங்கு வேகத்தை குறைக்க வேகத்தடையும் பேரிக்காடும் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.

    ×