search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புறநகர் ரெயில்"

    • தனியாக செயலி உருவாக்க டெண்டர் கோரிக்கை.
    • க்யூஆர் கோடு மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் பயணம் செய்யலாம்.

    சென்னையில் பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் அறிமுகம் செய்யப்படுகிறது.

    இதற்காக, தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரியுள்ளது.

    இந்த செயலியில் க்யூஆர் கோடு மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யலாம். 

    • ரெயில்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில்கள் சேவை குறைக்கப்பட்டுள்ளது.
    • நள்ளிரவு முதல் அதிகாலை வரையில் கூடுதலாக பஸ் போக்குவரத்து சேவையை அறிவித்து உள்ளது.

    சென்னை:

    சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மார்க்கத்தில் ரெயில்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில்கள் சேவை குறைக்கப்பட்டுள்ளது.

    இதனால் புறநகர் மின்சார பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். நேற்று விடுமுறை நாளில் குறைவான அளவில் சேவை இருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    இதையடுத்து மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் அதிகாலை வரையில் கூடுதலாக பஸ் போக்குவரத்து சேவையை அறிவித்து உள்ளது.

    இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    மின்சார ரெயில் வழித் தடத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் 22-ந் தேதி வரை இரவு 11.45 மணி முதல் அதிகாலை 4.30 மணிவரை சென்னை கடற்கரை-முதல் தாம்பரம் வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பஸ்களுடன் கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • ஆவடி ரெயில் நிலையத்தில் இன்று காலையில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    • ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்து பஸ்களில் ஏறி பயணம் செய்தனர்.

    ஆவடி:

    சென்னை ஆவடி ரெயில் நிலையத்தில் பழைய நடைபாதை மேம்பாலம் உள்ளது. இந்த நடை மேம்பாலத்தை இடித்து அப்புறப்படுத்தும் பணிகள் நேற்று இரவு நடந்தது. இந்த பணிகள் இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 4.30 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதற்காக சென்னை சென்ட்ரல், திருவள்ளூர், அரக்கோணம் இடையே இரவு நேரத்தில் 10 ரெயில்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆவடி ரெயில் நிலையத்தில் நேற்று இரவு நடைபாதை மேம்பாலத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியது. இதையடுத்து நேற்று இரவில் 10 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    ஆனால் இன்று அதிகாலை 4.30 மணிக்கு முடிய வேண்டிய பணிகளில் திடீரென்று காலதாமதம் ஏற்பட்டது. இதனால் காலை 6.30 மணி வரை பணிகள் நடந்தன. இதையடுத்து இன்று காலை 6.30 மணி வரை ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக காலை நேரத்தில் ரெயில் நிலையங்களுக்கு வந்த பயணிகள் தவித்தனர். குறிப்பாக ஆவடி ரெயில் நிலையத்தில் இன்று காலை யில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    காலை 6.30 மணிக்கு பிறகு அரக்கோணம் மற்றும் திரு வள்ளூரில் இருந்த சென்ட்ர லுக்கு வரும் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரெயில்கள் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்லும் பாதை யில் இயக்கப்பட்டதால் பட்டாபிராமில் இருந்து பட்டரவாக்கம் வரை இடை யில் உள்ள எந்த ரெயில் நிலையங்களிலும் ரெயில்கள் நிறுத்தப்படவில்லை.

    இதன் காரணமாக இந்த ரெயில் நிலையங்களில் ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்த மார்க்கத்தில் வந்த ரெயில்கள் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்குள் வர அனுமதிக்கப்பட்டன. இதனால் சென்ட்ரலில் இருந்து திரு வள்ளூர் மார்க்கத்தில் இன்று காலையில் செல்லும் 4 புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. சென்ட்ரலில் இருந்து இன்று அதிகாலை 5.20 மணிக்கு நெல்லூர் செல்லும் ரெயில், 5.40 மணிக்கு திருவள்ளூர் செல்லும் ரெயில், 6.15 மற்றும் 6.20 மணிக்கு பட்டாபிராம் செல்லும் ரெயில்கள் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலும் இன்று காலையில் பயணிகள் தவித்தனர்.

    ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்து பஸ்களில் ஏறி பயணம் செய்தனர். அதன் பிறகு ரெயில் போக்குவரத்து தொடங்கினாலும் பயணிகள் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது. காலை 8 மணிக்கு பிறகு நிலைமை சீரடைந்தது. இதற்கிடையே ஆவடி ரெயில் நிலையத்தில் நடை பாதை மேம்பாலத்தை இடித்து அப்புறப்படுத்துவதில் மீதமுள்ள பணிகள் இன்று இரவு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • திரிசூலம்- மீனம்பாக்கம் இடையே தண்டவாளத்தில் விரிசல்.
    • நேற்று செங்கல்பட்டு அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டதால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

    தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரையிலான மின்சார ரெயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திரிசூலம்- மீனம்பாக்கம் இடையே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    ஊழியர்கள் விரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வேலைக்குச் செல்லும் நபர்கள் மின்சார ரெயில்களை அதிக அளவில் பயன்படுத்துவார்கள். இதனால் அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    நேற்று செங்கல்பட்டு அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டதால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. தற்போது 2-வது நாளாக மற்றொரு சம்பவத்தில் மின்சார ரெயில் போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளது.

    • மிச்சாங் புயல் பாதிப்பு காரணமாக புறநகர் ரெயில் சேவை தடைப்பட்டது.
    • புறநகர் ரெயில் சேவை குறித்து தெற்கு ரெயில்வே முக்கிய அறிவிப்பு.

    மிச்சாங் புயல் பாதிப்பு காரணமாக சென்னை புறநகர் ரெயில்கள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக இன்று (டிசம்பர் 07) சென்னை எழும்பூர் - தாம்பரம் - செங்கல்பட்டு, திருவள்ளூர் - அரக்கோணம், சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி பறக்கும் ரெயில் வழித்தடங்களில் அரை மணி நேரத்திற்கு ஒரு ரெயில் என்ற விகிதத்தில் இயக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், நாளை (டிசம்பர் 08) முதல் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் வழக்கமான கால அட்டவணைப்படி ரெயில்கள் சீராக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. திருவொற்றியூர் - சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் அரை மணி நேர இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து இருக்கிறது. 

    ×