என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தாம்பரம்- சென்னை கடற்கரை மார்க்கத்தில் மின்சார ரெயில் போக்குவரத்து பாதிப்பு
- திரிசூலம்- மீனம்பாக்கம் இடையே தண்டவாளத்தில் விரிசல்.
- நேற்று செங்கல்பட்டு அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டதால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரையிலான மின்சார ரெயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திரிசூலம்- மீனம்பாக்கம் இடையே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஊழியர்கள் விரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வேலைக்குச் செல்லும் நபர்கள் மின்சார ரெயில்களை அதிக அளவில் பயன்படுத்துவார்கள். இதனால் அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று செங்கல்பட்டு அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டதால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. தற்போது 2-வது நாளாக மற்றொரு சம்பவத்தில் மின்சார ரெயில் போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளது.
Next Story






