search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேம்பாலம் பணி"

    • ஆவடி ரெயில் நிலையத்தில் இன்று காலையில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    • ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்து பஸ்களில் ஏறி பயணம் செய்தனர்.

    ஆவடி:

    சென்னை ஆவடி ரெயில் நிலையத்தில் பழைய நடைபாதை மேம்பாலம் உள்ளது. இந்த நடை மேம்பாலத்தை இடித்து அப்புறப்படுத்தும் பணிகள் நேற்று இரவு நடந்தது. இந்த பணிகள் இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 4.30 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதற்காக சென்னை சென்ட்ரல், திருவள்ளூர், அரக்கோணம் இடையே இரவு நேரத்தில் 10 ரெயில்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆவடி ரெயில் நிலையத்தில் நேற்று இரவு நடைபாதை மேம்பாலத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியது. இதையடுத்து நேற்று இரவில் 10 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    ஆனால் இன்று அதிகாலை 4.30 மணிக்கு முடிய வேண்டிய பணிகளில் திடீரென்று காலதாமதம் ஏற்பட்டது. இதனால் காலை 6.30 மணி வரை பணிகள் நடந்தன. இதையடுத்து இன்று காலை 6.30 மணி வரை ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக காலை நேரத்தில் ரெயில் நிலையங்களுக்கு வந்த பயணிகள் தவித்தனர். குறிப்பாக ஆவடி ரெயில் நிலையத்தில் இன்று காலை யில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    காலை 6.30 மணிக்கு பிறகு அரக்கோணம் மற்றும் திரு வள்ளூரில் இருந்த சென்ட்ர லுக்கு வரும் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரெயில்கள் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்லும் பாதை யில் இயக்கப்பட்டதால் பட்டாபிராமில் இருந்து பட்டரவாக்கம் வரை இடை யில் உள்ள எந்த ரெயில் நிலையங்களிலும் ரெயில்கள் நிறுத்தப்படவில்லை.

    இதன் காரணமாக இந்த ரெயில் நிலையங்களில் ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்த மார்க்கத்தில் வந்த ரெயில்கள் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்குள் வர அனுமதிக்கப்பட்டன. இதனால் சென்ட்ரலில் இருந்து திரு வள்ளூர் மார்க்கத்தில் இன்று காலையில் செல்லும் 4 புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. சென்ட்ரலில் இருந்து இன்று அதிகாலை 5.20 மணிக்கு நெல்லூர் செல்லும் ரெயில், 5.40 மணிக்கு திருவள்ளூர் செல்லும் ரெயில், 6.15 மற்றும் 6.20 மணிக்கு பட்டாபிராம் செல்லும் ரெயில்கள் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலும் இன்று காலையில் பயணிகள் தவித்தனர்.

    ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்து பஸ்களில் ஏறி பயணம் செய்தனர். அதன் பிறகு ரெயில் போக்குவரத்து தொடங்கினாலும் பயணிகள் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது. காலை 8 மணிக்கு பிறகு நிலைமை சீரடைந்தது. இதற்கிடையே ஆவடி ரெயில் நிலையத்தில் நடை பாதை மேம்பாலத்தை இடித்து அப்புறப்படுத்துவதில் மீதமுள்ள பணிகள் இன்று இரவு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ரெயில்வே மேம்பாலம் மற்றும் தண்டவாள விரிவாக்க பணிகள் மந்தமாக நடந்து வருவதாக பொது மக்கள் புகார்
    • சம்பவம் குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரணியல் :

    இரணியல் அருகே தெற்கு ரெயில்வே இரட்டை ரெயில் பாதைக்காக நெய்யூர்-பரம்பை மேம்பாலத்தை இடித்து புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ரெயில்வே மேம்பாலம் மற்றும் தண்டவாள விரிவாக்க பணிகள் மந்தமாக நடந்து வருவதாக பொது மக்கள் புகார் கூறி வருகின்ற னர். இந்தநிலையில் நேற்று இரவு சுமார் 9.30 மணி அளவில் மணவாளக்கு றிச்சியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அழகியமண்டபம் செல்ல திங்கள்நகரில் இருந்து பைக்கில் சென்றார். அவர் தடுப்பு வேலிகளை கவனிக்காமல் நெய்யூரில் இருந்து அழகியமண்டபம் சாலையில் சென்றுள்ளார்.அப்போது எதிர்பாரா தவிதமாக மேம்பால த்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுபோல் கடந்த ஜூலை மாதம் 10-ந்தேதி இரவு வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்ற போக்குவரத்து போலீசார் அறிவிப்பு பலகையை கவனிக்க தவறி விழுந்து படுகாயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரூ.18 கோடி மதிப்பீட்டில் அமைகிறது
    • ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே சோமநாயக்கன்பட்டி பகுதியில் சுமார் ரூ.18 கோடி மதிப்பீட்டில் புதிய ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது.

    இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளை வருவாய் துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் இணைந்து அகற்றினர்.

    ரெயில்வே மேம்பாலப் பணி நடைபெற்று வருவதால் திருப்பத்தூர் - நாட்டறம்பள்ளி செல்ல தற்காலிக மாற்றுவழி அமைப்பது குறித்து திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் பானு தலைமையில் வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், மண்டல துணை தாசில்தார் நடராஜன், வருவாய் அலுவலர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் அருணா, மற்றும் உதவி கோட்ட பொறியாளர் அண்ணாமலை உட்பட வருவாய் துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் பலர் உடன் இருந்தனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
    • வாலாஜாப்பேட்டை அரசு தலைமை மருத்துவமனை அருகே கட்டப்படுகிறது

    வாலாஜா:

    வாலாஜா நகரத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் தினசரி சுமார் 300-க்கும் மேற்பட்ட வெளிப்புற நோயாளிகளும் உள்புற நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் தேசிய நெடுஞ்சாலயில் வாகன விபத்து ஏற்பட்டால் இங்கு தான் சிகிச்சைக்காக கொண்டு வருவர்.

    மேலும் வாலாஜா சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராம மக்களும் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் தான் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவார்கள்.மேலும் இம்மருத்துவமனையானது நெடுஞ்சாலை ஒட்டி அமைந்துள்ளது.

    இந்த மருத்துவமனை சாலையின் இருபக்கமும் கட்டிடங்கள் உள்ளன. நோயாளிகள் சாலையை கடக்கும் போது அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுகிறது. கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் இதனால் பெரிதும் சிரமப்பட்டு பாதிக்கப்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில் இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்களும் நோயாளிகளும் கோரிக்கை வைத்தனர்.அதன் அடிப்படையில் கடந்த நிதியாண்டில் ரூ.13½ கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது.

    இதில் சித்தூர்- பெங்களூர் சாலையில் வாலாஜா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அவசர ஊர்திகள் மற்றும் நோயாளிகள் சென்று வர இலகுரக வாகன சுரங்கபாதை அமைக்கப்படுகிறது.

    இதன் ஆரம்ப கட்ட பணிக்காக வாலாஜா சித்தூர் பெங்களூர் சாலையில் இருபுறமும் கடந்த 3-ந் தேதி ஆக்கிரமிப்பு எடுக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அரசு தலைமை மருத்துவமனை அருகே மேம்பாலம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி வாலாஜா எம்.பி.டி சாலையில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு ரூ.13.½ கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார். 

    ×