search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு குறைபாடு"

    • 4 கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கடந்துதான் பாராளுமன்றத்துக்குள் பார்வையாளர்கள் செல்ல முடியும்.
    • பாராளுமன்றத்தில் கடுமையான பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் நேற்று சபை கேள்வி நேரம் நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 பேர் சபைக்குள் குதித்தனர்.

    அவர்கள் இருவரும் தங்கள் ஷூவுக்குள் மறைத்து வைத்திருந்த புகை குப்பிகளை திறந்து தாக்குதலில் ஈடுபட்டனர். அந்த புகை குப்பிகளில் இருந்து மஞ்சள் நிற புகை வெளியேறியதால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது.

    புகை வீசி தாக்குதலில் ஈடுபட்ட 2 இளைஞர்களில் ஒருவர் எம்.பி.க்கள் அமரும் இருக்கைகள் மீது தாவி குதித்து அங்கும் இங்குமாக ஓடினார். இதனால் எம்.பி.க்கள் பீதியுடன் உறைந்து நின்ற நிலையில் சில எம்.பி.க்கள் மட்டும் துணிச்சலாக செயல்பட்டு அந்த இளைஞரை பிடித்தனர்.

    மற்றொரு இளைஞரை மக்களவை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். இந்த சம்பவம் நிகழ்ந்து கொண்டிருந்த போதே பாராளுமன்றத்துக்கு வெளியே ஒரு பெண் உள்பட 2 பேர் புகை குப்பிகளை வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்கள் இருவரையும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    இதற்கிடையே இவர்கள் 4 பேருடன் வந்திருந்த 2 பேர் தப்பி சென்றது தெரியவந்தது. அவர்களில் ஒருவரை நேற்று மாலை டெல்லி போலீசார் கைது செய்தனர். கைதான 5 பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    6-வது நபரான லலித் தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளார். அவரிடம் தான் முக்கிய ஆவணங்கள் உள்ளன. எனவே அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தநிலையில் பாராளுமன்றத்தில் கடுமையான பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பில் இருந்தும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்றத்தில் வழக்கமாக 4 அடுக்கு பாதுகாப்பு நடைமுறையில் உள்ளது. பாராளுமன்றத்துக்கு செல்பவர்கள் முதலில் அங்குள்ள வரவேற்பு அறையில் தங்களை பதிவு செய்ய வேண்டும். அவர்களிடம் மெட்டல் டிடெக்டர் மூலமாக சோதனை செய்வார்கள்.

    அப்போது பார்வையாளர்களின் அடையாள அட்டை, கைப்பை, போன் போன்றவை ஆய்வு செய்யப்படும். போன் மற்றும் பைகளை உள்ளே எடுத்துச்செல்ல அனுமதிக்கமாட்டார்கள்.

    2-வது கட்ட பாதுகாப்பு ஏற்பாட்டில் பார்வையாளர்களின் நுழைவு சீட்டு ஸ்கேன் செய்து ஆய்வு செய்யப்படும். பார்வையாளர்களின் அடையாள அட்டை உண்மையானது தானா என்பதும் பரிசோதிக்கப்படும். மீண்டும் மெட்டல் டிடெக்டர் மூலம் பார்வையாளர்களை அங்கு சோதனை செய்வார்கள்.

    3-வது கட்டமாக பாராளுமன்றத்தின் முக்கிய நுழைவு வாயிலுக்கு பார்வையாளர்கள் அழைத்து செல்லப்படுவார்கள். அங்கும் மெட்டல் டிடெக்டர் மூலமாக சோதனை செய்யப்படும். பார்வையாளர்களின் நுழைவு சீட்டு மீண்டும் கடுமையாக ஆய்வு செய்யப்படும்.

    4-வது கட்டமாக பார்வையாளர்கள் பாராளுமன்ற மாடத்துக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அதற்கு முன்னதாக மீண்டும் ஒருதடவை பார்வையாளர்கள் சோதிக்கப்படுவார்கள்.

    இத்தகைய 4 கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கடந்துதான் பாராளுமன்றத்துக்குள் பார்வையாளர்கள் செல்ல முடியும். இந்த 4 கட்ட சோதனைகளையும் தாண்டி 2 இளைஞர்கள் புகை குப்பிகளை கொண்டு சென்று தாக்குதல் நடத்தியது கடும் அதிர்ச்சியாக மாறி உள்ளது.

    இதையடுத்து பாராளுமன்றத்துக்கு பாதுகாப்பு இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் யாரும் இந்த கூட்டத்தொடருக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மக்களவை, மாநிலங்களவை, பார்வையாளர் மாடம் மூடி சீல் வைக்கப்பட்டது.

    அதுபோல பார்வையாளர்களுக்கு நுழைவு சீட்டு வழங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற வளாகத்திலும், பாராளுமன்றத்துக்குள்ளேயும் பாதுகாவலர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    பாதுகாப்பு ஏற்பாடுகளில் இனி எந்த குறையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சில புதிய பாதுகாப்பு அம்சங்களும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி விமான நிலையங்களில் நடத்தப்படுவது போன்று முழு உடல் பரிசோதனைக்கான ஸ்கேனர் கருவிகள், எந்திரங்கள் பாராளுமன்றத்தில் நிறுவப்பட உள்ளது.


    இது தவிர பார்வையாளர்கள் அனைவரையும் இனி முழுமையாக சோதிக்க கூடுதல் பாதுகாப்பு படையினரை பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எம்.பி.க்கள் இருக்கைக்கும், பார்வையாளர்களின் மாடத்துக்கும் இடைப்பட்ட பகுதி மிக குறுகியதாக உள்ளது.

    இதைப்பயன்படுத்தி தான் பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 இளைஞர்களும் மிக எளிதாக சபை உள்ளே குதித்து விட்டனர். எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வு நடப்பதை தடுப்பதற்காக பார்வையாளர் மாடத்தில் கண்ணாடி தடுப்பு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் பாராளுமன்றத்துக்குள் மந்திரிகள், எம்.பிக்கள் நுழைய தனி வழி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற ஊழியர்கள், செய்தியாளர்கள் தனி வழியில் செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் மந்திரிகளின் உதவியாளர்களையும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    அதன்படி இன்று பாராளுமன்றம் கூடிய போது மந்திரிகள், எம்.பி.க்களுடன் வந்த உதவியாளர்கள் கடுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

    பாராளுமன்றத்துக்குள் வருபவர்களை கண்காணிக்க ஏற்கனவே ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. நேற்று நடந்த அத்துமீறலை தொடர்ந்து இன்று உடனடியாக கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

    இதன் மூலம் பாராளுமன்றத்துக்குள் வரும் ஒவ்வொருவரையும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    • ஒருவர் கடந்த மார்ச் மாதம் பாராளுமன்றத்துக்கு உள்ளே நுழைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி உள்ளது என்று ஆய்வு செய்திருக்கிறார்.
    • எந்த எந்த இடங்களில் பாதுகாப்பு குறைபாடு இருக்கிறது என்பதையும் அவர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள்.

    பாராளுமன்றத்தில் புகைகுப்பிகள் மூலம் தாக்குதல் நடத்திய இளைஞர்கள் பற்றிய புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த 6 இளைஞர்களும் சமூக வலைத்தளத்தில் உள்ள "பகத்சிங் பேன் கிளப்" என்ற இணைய தளம் மூலம் ஒருங்கிணைந்தது தெரியவந்துள்ளது.

    ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் 6 பேரும் மைசூரில் சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் 6 பேரும் ஒரே மனநிலையில் இருப்பது தெரியவந்தது.

    அரசு மீது உள்ள கோபம், வெறுப்பு காரணமாக அதிரடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று 6 பேரும் திட்டமிட்டனர். இதற்காக அடிக்கடி டெல்லியில் கூடி பேசினார்கள்.

    அப்போதுதான் பாராளுமன்ற தாக்குதல் தினமான டிசம்பர் 13-ந்தேதி பாராளுமன்றத்துக்குள் நுழைந்து மீண்டும் ஒரு புதுமையான தாக்குதலை அரங்கேற்ற வேண்டும் என்று முடிவு செய்தனர். கடந்த ஆண்டே அவர்கள் இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது.

    இதற்காக 6 பேரும் அடிக்கடி பாராளுமன்றத்துக்கு வந்து சென்றனர். அவர்களில் ஒருவர் கடந்த மார்ச் மாதம் பாராளுமன்றத்துக்கு உள்ளே நுழைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி உள்ளது என்று ஆய்வு செய்திருக்கிறார்.

    எந்த எந்த இடங்களில் பாதுகாப்பு குறைபாடு இருக்கிறது என்பதையும் அவர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள். அப்போதுதான் 4 அடுக்கு பாதுகாப்பில் உடல் முழுவதையும் சோதனை செய்தாலும் காலில் அணிந்து செல்லும் ஷூவை கழற்றி ஆய்வு செய்யவில்லை என்பதை அறிந்தனர்.

    எனவே தாக்குதல் நடத்தும் பொருளை ஷூவுக்குள் மறைத்து எடுத்து செல்ல தீர்மானித்தனர். அதன்படிதான் ரூ.1200-க்கு புகைக்குப்பிகள் வாங்கி ஷூவுக்குள் எடுத்து வந்துள்ளனர்.

    தாக்குதலுக்கு முன்பு கடந்த மார்ச் மாதம் அவர்கள் பாராளுமன்ற பகுதியில் ஒத்திகை நடத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் பாராளுமன்ற தாக்குதல் நன்கு திட்டமிட்டு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

    இந்த தாக்குதலுக்காக கடந்த வாரம் 6 பேரும் ஒருங்கிணைந்து உள்ளனர். டெல்லி புறநகர் பகுதியான குருகிராமில் உள்ள வீட்டில் தங்கி இருந்து அவர்கள் சதி திட்டம் தீட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    • பாராளுமன்றத்தில் கலர் புகை குண்டு வீசியதில் 6 பேருக்கு தொடர்புள்ளதாக தகவல் கிடைத்தது.
    • இதுவரை இந்தத் தாக்குதலில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மதியம் மக்களவையில் பார்வையாளர் இடத்திலிருந்து 2 பேர் எம்.பி.க்கள் இருந்த இடத்திற்குள் குதித்து கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பதற்றம் அடைந்த எம்.பி.க்கள் அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர். பாதுகாவலர்கள், உறுப்பினர்கள் சேர்ந்து அவர்களை மடக்கினர்.

    இதேபோல், பாராளுமன்றத்திற்கு வெளியேயும் புகை குண்டு வீச்சில் ஈடுபட்டனர். தாக்குதல் நடத்திய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்,

    தாக்குதல் நடத்திய ஆசாமிகளில் ஒருவரான சாகர் சர்மாவிடம் இருந்து மைசூர் பா.ஜ.க. எம்.பி.யான பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரை பாஸ் கிடைத்துள்ளது.

    பாராளுமன்றத்தில் கலர் புகை குண்டு வீசிய சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்பு உள்ளது. இதில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். தாக்குதலில் தொடர்புடைய மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற தாக்குதல் நடத்திய ஆசாமிகளில் மேலும் ஒருவர் குர்கானில் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

    • பாராளுமன்றத்தில் கலர் புகை குண்டு வீசிய சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்புள்ளதாக தகவல் வெளியானது.
    • தாக்குதல் நடத்திய ஆசாமிகளில் ஒருவரிடம் இருந்து பா.ஜ.க. எம்.பி.யின் பரிந்துரை பாஸ் கிடைத்தது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மதியம் மக்களவையில் பார்வையாளர் இடத்திலிருந்து 2 பேர் எம்.பி.க்கள் இருந்த இடத்திற்குள் குதித்து கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பதற்றம் அடைந்த எம்.பி.க்கள் அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர். பாதுகாவலர்கள், உறுப்பினர்கள் சேர்ந்து அவர்களை மடக்கினர்.

    இதேபோல், பாராளுமன்றத்திற்கு வெளியேயும் புகை குண்டு வீச்சில் ஈடுபட்டனர். தாக்குதல் நடத்திய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்,

    தாக்குதல் நடத்திய ஆசாமிகளில் ஒருவரான சாகர் சர்மாவிடம் இருந்து மைசூர் பா.ஜ.க. எம்.பி.யான பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரை பாஸ் கிடைத்துள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்றத்தில் கலர் புகை குண்டு வீசிய சம்பவத்தில் 6 பேருக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியானது.

    இதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலில் தொடர்புடைய மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    • சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் ஆகிய இருவரும் பாஸ் பெற்று உள்ளே நுழைந்துள்ளனர்
    • புது டெல்லியில் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

    மக்களவையில் இன்று மதியம், சபை நடவடிக்கைகள் நடைபெற்று கொண்டிருந்த போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து திடீரென கீழே குதித்த இருவர் கோஷமிட்டு கொண்டே சபாநாயகரை நோக்கி சென்றனர். அவர்கள் தங்கள் உடலில் மறைத்து வைத்திருந்த புகை குண்டுகளை வீசினர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளிப்பட்டது.

    இச்சம்பவத்தில் சில உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்தாலும், வேறு சில உறுப்பினர்கள் அந்த இருவரையும் துணிந்து மடக்கி பிடித்து அங்கு விரைந்து வந்த சபை காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

    இச்சம்பவம் நடந்த அதே நேரம் பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியேயும் இருவர் கோஷமிட்டபடி புகை குண்டுகளை வீசினர். அவர்களும் காவல்துறையால் பிடிக்கப்பட்டனர். நால்வரும் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் புது டெல்லி துணை ஆணையர் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார்.

    மக்களவையின் உள்ளே நுழைந்து தாக்குதலில் ஈடுபட முயன்ற, சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் எனப்படும் இரு நபர்களும் பார்வையாளர்களாக உள்ளே சென்று சபை நடவடிக்கைகளை காண, எம்.பி.க்களின் பரிந்துரையில் வழங்கப்படும் "பாஸ்" (அனுமதிச்சீட்டுக்களை) பெற்றிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதனை தொடர்ந்து பார்வையாளர்களுக்கான பாஸ் வழங்குதலை நிறுத்தவும் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.

    பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட புது டெல்லியில் உள்ள அனைத்து முக்கிய பிரமுகர்களின் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    • சில எம்.பி.க்கள் அந்த இருவரையும் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர்
    • நால்வரும் காவலில் எடுக்கப்பட்டு முழு விசாரணை நடந்து வருகிறது என்றார் ஓம் பிர்லா

    மக்களவையில் இன்று அலுவலகள் நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து அவைக்குள் இருவர் குதித்தனர். கோஷமிட்டு கொண்டே சபாநாயகரின் இருக்கைக்கு அருகே செல்ல முயன்ற அவர்கள் புகை குண்டுகளை போன்று எதையோ வீசினர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளிக்கிளம்பியது.

    இச்சம்பவத்தில் ஒரு சில எம்.பி.க்கள் அச்சத்துடன் ஓட முயன்றனர்.

    ஆனால், ஒரு சில எம்.பிக்கள் அஞ்சாமல் அவர்களை பிடித்து சபை பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர்.

    அதே நேரம், பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியேயும் இருவர் கோஷங்களை எழுப்பி கொண்டே "கலர்" புகை குண்டுகளை வீசினர்.

    நால்வரும் காவல்துறையால் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

    பெரும் பாதுகாப்பு குளறுபடியாக பார்க்கப்படும் இச்சம்பவம் குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கருத்து தெரிவித்தார்.

    "பாராளுமன்ற வளாகத்திற்கு வெளியேயும் உள்ளேயும் வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பில் நடந்திருக்கும் குளறுபடிகள் மற்றும் குறைபாடுகள் குறித்து முழு விசாரணை நடக்கிறது. இன்று அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. அனைவரிடமும் இது குறித்து கருத்து கேட்கப்படும். டெல்லி காவல்துறையும் மக்களவையும் தனித்தனியே விசாரணை மேற்கொண்டு வருகிறது. மர்ம நபர்கள் குண்டுகளை வீசி அதிலிருந்து வெளியே வந்த வர்ண புகை ஆபத்தில்லாதது என தெரிய வந்துள்ளது. பரபரப்புக்காக அவர்கள் இதை வீசியுள்ளதாக தெரிகிறது" என ஓம் பிர்லா கூறினார்.

    • சபாநாயகரை நோக்கி ஓடிய அவர்கள் புகை குண்டுகளை வீசினர்
    • வெளிவந்த புகை மஞ்சள் நிறமாக இருந்ததாக எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்

    2001ல் இந்திய பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்று அது முறியடிக்கப்பட்ட 22-வது வருட நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்திய பாராளுமன்றத்தில் மக்களவையில் இன்று அலுவல் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து திடீரென 2 பேர் கூச்சலிட்டு கொண்டே அத்துமீறி உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் உள்ளே குதித்தனர். அவர்கள் கைகளில் கண்ணீர் புகை குண்டுகள் இருந்தது. சபாநாயகரை நோக்கி ஓடிய அவர்கள் புகை குண்டுகளை வீசினர்.

    இதனால் அவையில் இருந்த உறுப்பினரகள் அச்சத்துடன் ஓடினர்.


    கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால் கண்களில் எரிச்சல் ஏற்பட்டதாக காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்திருக்கிறார்.

    வெளிவந்த புகை மஞ்சள் நிறமாக இருந்ததாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

    அத்துமீறிய அந்த இருவரும் சில உறுப்பினர்களால் பிடிக்கப்பட்டு பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

    • உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்து கொண்டிருந்த போது விழா மேடைக்கு கீழே நின்று தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகளை பார்த்து நேரு எம்.எல்.ஏ. சரமாரியாக குற்றம்சாட்டி பேசினார்.
    • மேடையில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா ஆகியோரும் இருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் ஊழல், முறைகேடுகள் நடப்பதாக உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு குற்றம்சாட்டி வந்தார்.

    தனது தொகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் அண்ணா திடல் மேம்பாட்டு பணி ஓராண்டுக்குள் முடித்திருக்க வேண்டும். 2½ ஆண்டாக பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது.

    அதோடு தரமில்லாமல் பணிகள் நடந்து வருகிறது. தொகுதிக்குட்பட்ட புதிய பஸ் நிலைய மேம்பாட்டு பணிகளை தொடங்கவில்லை என்றும் புகார் கூறியிருந்தார்.

    இதை கண்டித்தும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் சேர்மனான தலைமை செயலாளர் ராஜீவ் வர்மாவை கண்டித்தும் தலைமை செயலகத்தை நேற்று நேரு எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.

    ஆனால் தலைமை செயலாளர் அரசு விழாவில் பங்கேற்றிருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேரு எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்கள், சமூக நல அமைப்பினரோடு அரசு விழா நடந்த கம்பன் கலையரங்கிற்கு வந்தார்.

    நேரு எம்.எல்.ஏ. வரும் தகவல் கிடைத்ததை தொடர்ந்து கம்பன் கலையரங்கின் 2 நுழைவு வாயில்களையும் போலீசார் மூடினர். மேலும் அங்கு வந்த நேரு எம்.எல்.ஏ மற்றும் அவரது ஆதரவாளர்களை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த நேரு எம்.எல்.ஏ கேட் மீது ஏறி குதித்து கம்பன் கலையரங்கில் உள்ளே சென்றார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் கேட் ஏறி குதித்து சென்றனர்.

    அங்கு உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்து கொண்டிருந்த போது விழா மேடைக்கு கீழே நின்று தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகளை பார்த்து நேரு எம்.எல்.ஏ. சரமாரியாக குற்றம்சாட்டி பேசினார்.

    மேடையில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா ஆகியோரும் இருந்தனர்.

    இதனால் அரசு விழா சில நிமிடங்கள் தடைபட்டது. இதன்பின்னர் நேரு எம்.எல்.ஏ. விழாவில் முதலமைச்சர் பேச்சுக்கு இடையூறு செய்ய விரும்பவில்லை என கூறி வெளியேறினார்.

    இந்த நிலையில் கம்பன் கலையரங்கிற்கு நேரு எம்.எல்.ஏ. வரும் தகவல் கிடைத்தும், சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை காவல்துறை எடுக்கவில்லை என புகார் எழுந்தது.

    அதோடு அரசு விழாவுக்கு வந்த எம்.எல்.ஏ.வை தடுப்பதா? என்ற கேள்வியும் எழுந்தது. அவரை மட்டும் அனுமதித்து, ஆதரவாளர்களை தடுத்திருக்கலாம் என கருத்து தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கம்பன் கலையரங்கில் அரசு விழாவில் பாதுகாப்பு குறைபாடு புகாரை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த ஓதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் கண்ணன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி, ஓதியஞ்சாலை போலீஸ் நிலைய பணிகளை கூடுதலாக கவனிப்பார் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

    மேலும், அரசு விழாவில் கேட் ஏறி குதித்து உள்ளே சென்று வாக்குவாதம் செய்த சுயேட்சை எம்.எல்.ஏ நேரு மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
    • நேற்று 84,539 பேர் சாமி தரிசனம் செய்தனர். 39,812 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ள மலைப்பகுதி மிகவும் புனிதமான தலமாக கருதப்படுகிறது.

    இதனால் மலை மீது பீடி, சிகரெட், மது, மாமிசம் மற்றும் வாகனங்களில் வேற்று மதம் சார்ந்த ஸ்டிக்கர்கள், சாமி படங்கள், கட்சி கொடி, பேனர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் உடைமைகள் மலை அடிவாரத்தில் சோதனை செய்யப்படுகிறது.

    தீவிர சோதனைக்கு பின்னரே வாகனங்களை அனுமதிக்கின்றனர்.

    இந்த நிலையில் நேற்று காலை ஏழுமலையான் கோவில் அருகே உள்ள ஒரு கடையில் இருந்து மதுபாட்டில்களை விஜிலென்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ராஜசேகர் என்பவரை கைது செய்தனர்.

    தேவஸ்தான வருவாய்த்துறை அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர். கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்த ஒருவர் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று 5 வாலிபர்கள் ஒரு காரில் திருமலைக்கு வந்தனர். அவர்களது காரில் முன் பகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் கொடி கட்டப்பட்டு இருந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் கொடியை அகற்றாமல் திருமலைக்கு காரை அனுமதித்தனர்.

    திருப்பதியில் கடந்த மாதம் பயங்கரவாதி புகுந்ததாக மிரட்டல் விடுத்தனர். பாதுகாப்பை மீறி கோவிலில் செல்போனை கொண்டு சென்று வீடியோ எடுத்து வெளியிட்டனர்.

    தற்போது மது சிக்கியதன் மூலம் திருப்பதி மலையில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    புனித தன்மை கொண்ட திருமலையில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இதனிடையே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று 84,539 பேர் சாமி தரிசனம் செய்தனர். 39,812 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.72 கோடி உண்டியல் வசூலானது. ரூ.300 டிக்கெட் தரிசனத்தில் 4 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு டோக்கன் பெற்றவர்கள் 6 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர். நேரடியாக இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    கூகுள் சர்வரில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்த உருகுவே நாட்டைச் சேர்ந்த சிறுவனுக்கு ரூ.24 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. #Google
    உருகுவே நாட்டைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கூகுளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டியதால், அவருக்கு கூகுள் நிறுவனம் 24 லட்சம் ரூபாய் பரிசாக கொடுத்துள்ளது. கூகுள் தனது குறைபாடுகளை சரி செய்து கொள்வதற்காக அவ்வப்போது சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறது.

    அதன் படி உருகுவே நாட்டைச் சேர்ந்த எஸ்க்வீயல் பெரேரா  என்ற 17 வயது சிறுவன், கூகுள் சர்வர்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக் காட்டி இதன் மூலம் ஹேக்கர்கள் நுழைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை கண்டறிந்துள்ளார்.

    இதையடுத்து அந்த குறைபாட்டை சரி செய்த கூகுள் நிறுவனம், பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்த சிறுவனுக்கு 24 லட்ச ரூபாய் பரிசாக கொடுத்துள்ளது.
    ×