search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களவை சபாநாயகர்"

    • காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலை எப்படி இருந்தது.
    • பிரதமர் மோடி ஆட்சி அமைந்ததும் பொருளாதார நிலை எப்படி மாற்றத்தை சந்தித்தது குறித்து வெள்ளை அறிக்கை.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அடுத்த நாள் பிப்ரவரி 1-ந்தேதி மந்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    அதனைத் தொடர்ந்து கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பிரதமர் மோடி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக மக்களவையில் பேசினார். இன்று மாநிலங்களவையில் பேசுகிறார். நாளைமறுநாள் (பிப்ரவரி 9-ந்தேதி) வெள்ளிக்கிழமையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைய இருந்தது.

    இந்த நிலையில் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, 2014-க்கு முன் இந்திய பொருளாதாரம், மோடி தலைமையிலான பா.ஜனதா அமைந்த பின் 2014-க்குப்பின் நாட்டின் பொருளாதாரம் தொடர்பான ஒப்பீடு குறித்து வெள்ளை அறிக்கை மக்களைவில் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார்.

    இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 9-ந்தேதி முடிவடையும் நிலையில், மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டு 10-ந்தேதி வரை நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்த நாட்டின் மோசமான பொருளாதார நிலை, பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய அரசு எப்படி திருப்பத்தை கொண்டு வந்தது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார். இரு அவைகளிலும் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார்.

    பொதுவாக பாராளுமன்றத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அலுவல் பணிகள் செயல்படாது. இருந்த போதிலும் சனிக்கிழமைகளில் நடைபெற்ற நிகழ்வுகள் உள்ளன.

    • சில எம்.பி.க்கள் அந்த இருவரையும் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர்
    • நால்வரும் காவலில் எடுக்கப்பட்டு முழு விசாரணை நடந்து வருகிறது என்றார் ஓம் பிர்லா

    மக்களவையில் இன்று அலுவலகள் நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து அவைக்குள் இருவர் குதித்தனர். கோஷமிட்டு கொண்டே சபாநாயகரின் இருக்கைக்கு அருகே செல்ல முயன்ற அவர்கள் புகை குண்டுகளை போன்று எதையோ வீசினர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளிக்கிளம்பியது.

    இச்சம்பவத்தில் ஒரு சில எம்.பி.க்கள் அச்சத்துடன் ஓட முயன்றனர்.

    ஆனால், ஒரு சில எம்.பிக்கள் அஞ்சாமல் அவர்களை பிடித்து சபை பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர்.

    அதே நேரம், பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியேயும் இருவர் கோஷங்களை எழுப்பி கொண்டே "கலர்" புகை குண்டுகளை வீசினர்.

    நால்வரும் காவல்துறையால் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

    பெரும் பாதுகாப்பு குளறுபடியாக பார்க்கப்படும் இச்சம்பவம் குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கருத்து தெரிவித்தார்.

    "பாராளுமன்ற வளாகத்திற்கு வெளியேயும் உள்ளேயும் வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பில் நடந்திருக்கும் குளறுபடிகள் மற்றும் குறைபாடுகள் குறித்து முழு விசாரணை நடக்கிறது. இன்று அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. அனைவரிடமும் இது குறித்து கருத்து கேட்கப்படும். டெல்லி காவல்துறையும் மக்களவையும் தனித்தனியே விசாரணை மேற்கொண்டு வருகிறது. மர்ம நபர்கள் குண்டுகளை வீசி அதிலிருந்து வெளியே வந்த வர்ண புகை ஆபத்தில்லாதது என தெரிய வந்துள்ளது. பரபரப்புக்காக அவர்கள் இதை வீசியுள்ளதாக தெரிகிறது" என ஓம் பிர்லா கூறினார்.

    • தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றுக்கொண்டார்.
    • பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ரேவந்த் ரெட்டி ராஜினாமா செய்துள்ளார்.

    தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள எல்.பி. மைதானத்தில் புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா கடந்த 7ம் தேதி நடைபெற்றது. இதில் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

    அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து 20 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ரேவந்த் ரெட்டி ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ரேவந்த் ரெட்டி தாக்கல் செய்துள்ளார்.

    • இந்திய இளம் தலைமுறையினர் கல்வி தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகின்றனர்.
    • பொது மக்களின் நலனை நோக்கமாகக் கொண்ட சட்டங்களின் தேவை அதிகமாக உள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    இந்திய இளம் தலைமுறையினர் கல்வி தொழில்நுட்பத்தில் உலக அளவில் சிறந்து விளங்குகின்றனர். 21ஆம் நூற்றாண்டு இந்தியாவிற்கானது. 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி ஊழலுக்கு எதிராகவும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 


    பொது மக்களின் நலனை நோக்கமாகக் கொண்ட சட்டங்களின் தேவை அதிகமாக உள்ளது. சிறந்த வலுவான இந்தியாவை உருவாக, ஊழல் இல்லாத இந்தியாவை இளைஞர்கள் உருவாக்க வேண்டும். அதற்காக பாடுபட வேண்டும். தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியா உருவாகி வருகிறது.

    நமது நாட்டிற்கு மட்டுமல்ல உலகிற்கு பிரச்சினையான சவால்களுக்கு தீர்வு காணும் திறனைப் நமது தேசம் பெற்றுள்ளது. பருவநிலை மாற்றங்கள், எரிசக்தி உட்பட அனைத்து பிரச்சனைகளுக்கும் தொழில்நுட்பம் மூலம் தீர்வு காணும் வகையில் இந்திய கல்வி‌ நிறுவனங்கள் சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×