எம்.பி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் ரேவந்த் ரெட்டி

தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றுக்கொண்டார்.பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ரேவந்த் ரெட்டி ராஜினாமா செய்துள்ளார்.
எம்.பி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் ரேவந்த் ரெட்டி
Published on

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள எல்.பி. மைதானத்தில் புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா கடந்த 7ம் தேதி நடைபெற்றது. இதில் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து 20 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ரேவந்த் ரெட்டி ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ரேவந்த் ரெட்டி தாக்கல் செய்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com