search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊழல் இல்லாத இந்தியாவை இளைஞர்கள் உருவாக்க ‌வேண்டும்- மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
    X

    மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

    ஊழல் இல்லாத இந்தியாவை இளைஞர்கள் உருவாக்க ‌வேண்டும்- மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தல்

    • இந்திய இளம் தலைமுறையினர் கல்வி தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகின்றனர்.
    • பொது மக்களின் நலனை நோக்கமாகக் கொண்ட சட்டங்களின் தேவை அதிகமாக உள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    இந்திய இளம் தலைமுறையினர் கல்வி தொழில்நுட்பத்தில் உலக அளவில் சிறந்து விளங்குகின்றனர். 21ஆம் நூற்றாண்டு இந்தியாவிற்கானது. 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி ஊழலுக்கு எதிராகவும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.


    பொது மக்களின் நலனை நோக்கமாகக் கொண்ட சட்டங்களின் தேவை அதிகமாக உள்ளது. சிறந்த வலுவான இந்தியாவை உருவாக, ஊழல் இல்லாத இந்தியாவை இளைஞர்கள் உருவாக்க வேண்டும். அதற்காக பாடுபட வேண்டும். தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியா உருவாகி வருகிறது.

    நமது நாட்டிற்கு மட்டுமல்ல உலகிற்கு பிரச்சினையான சவால்களுக்கு தீர்வு காணும் திறனைப் நமது தேசம் பெற்றுள்ளது. பருவநிலை மாற்றங்கள், எரிசக்தி உட்பட அனைத்து பிரச்சனைகளுக்கும் தொழில்நுட்பம் மூலம் தீர்வு காணும் வகையில் இந்திய கல்வி‌ நிறுவனங்கள் சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×