search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதயாத்திரை"

    • பாரத் ஜோடோ பாதயாத்திரையில் வரும் 6-ம் தேதி சோனியா காந்தி கலந்து கொள்கிறார்.
    • அவருடன் பிரியங்கா காந்தியும் இணைய உள்ளார். இதனால் அவர்கள் கர்நாடகம் செல்கிறார்கள்.

    பெங்களூரு:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. இவர் பாரத் ஜோடோ என்ற பெயரில் பாதயாத்திரையை கடந்த மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார்.

    தமிழகத்தைத் தொடர்ந்து கேரளாவில் 19 நாட்கள் பாதயாத்திரை நடைபெற்றது. ராகுல் காந்தியின் பாதயாத்திரை கடந்த 30-ம் தேதி கர்நாடகத்துக்குள் நுழைந்தது.

    இந்நிலையில், இந்தப் பாதயாத்திரையில் ஒருநாள் மட்டும் கலந்து கொள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் விரைவில் கர்நாடகம் வருகிறார்கள். அவர்கள் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மைசூருவுக்கு வரவுள்ளனர். வரும் 6-ம் தேதி அவர்கள் ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. சிறிது தூரம் அவர்கள் பாதயாத்திரையில் பங்கேற்று நடப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

    சோனியா காந்தி, பிரியங்கா காந்தி வருகையையொட்டி அவர்கள் தங்கவுள்ள ரெசார்ட் உள்பட பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • கல்லூரியில் படிக்கிற ஏழை, எளிய மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 என்பது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு திட்டம் என்று பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.
    • சீனாவை போல ஒரு கட்சி ஆட்சி வைத்து நடத்துவதற்காக தான் பா.ஜ.க. திட்டமிடுவதாக பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூரை அடுத்த சுந்தரேசபுரத்தில் சிறுபான்மை நல ஆணையர் பீட்டர் அல்போன்ஸ் காங்கிரஸ் கட்சி கொடி ஏற்றி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாணவிகளுக்கு மாதம் ரூ.1000

    கல்லூரியில் படிக்கிற ஏழை, எளிய மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 என்பது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு திட்டம். மாதம் ரூ.1000 என்பது ஒவ்வொரு ஏழை வீட்டு பெண்ணிற்கும் எவ்வளவு பெரிய உதவியாகவும், நல்ல காரியங்களை செய்ய முடியும் என்பதை கடந்த சில தினங்களாக என்னிடம் நேரில் பேசிய மாணவிகளின் பேச்சிலேயே நான் அறிவேன்.

    தன்னுடைய அன்றாட தேவைக்காக மட்டுமல்ல அத்தியாவசிய தேவைக்காக கூட பணம் கேட்க முடியாத மாணவிகள் இந்தப் பணத்தை தன்னுரிமை பணமாக வைத்துக் கொள்ள முடியும்.

    அப்படிப்பட்ட ஒரு திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி இருக்கிறார். இந்த உரிமைத் தொகை ஒரு லட்சம் பெண்களுக்கு போய் சேர்கிறது.

    ஒரு கட்சி ஆட்சி

    ராகுல் காந்தியை மட்டுமல்ல இந்தியாவில் எந்த எதிர்க் கட்சி தலைவர்களையும் செயல்பட விடாமல் முடக்குவது தான் பா.ஜ.க.வின் வேலை. இந்தியா முழுவதும் ஒரு கட்சி ஆட்சியை நோக்கி பா.ஜ.க. காய் நகர்த்துகிறது.

    காங்கிரஸ் இல்லாத பாரதம், கம்யூனிஸ்டுகள் இல்லாத இந்தியா, கழகங்கள் இல்லாத தமிழ்நாடு தற்போது சீனாவை போல ஒரு கட்சி ஆட்சி வைத்து நடத்துவதற்காக தான் பா.ஜ.க. திட்டமிடுகிறது. அதை தடுத்து நிறுத்தக் கூடிய மிகுந்த மிக உயர்ந்த பண்பாடுள்ள, உண்மை யுள்ள அரசியல்வாதியாக ராகுல் காந்தி மட்டும் தான் இருக்கிறார்.

    பயம் காட்ட முடியாது

    மம்தா பானர்ஜி, மாயாவதி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, இவர் களையெல்லாம் பா.ஜ.க. பயம் காட்டலாம். ஆனால் ராகுல் காந்தியை பயம் காட்ட இனிமேல் ஒருவன் பிறந்துதான் வரவேண்டும். ஆகவே அந்த தைரியத்தோடு இருக்கின்ற அவரை முடக்க பார்க்கிறார்கள்.

    ராகுலே கூறியிருக்கிறார் 57 மணி நேரம் என்னை விசாரித்து இருக்கிறீர்கள். 5 வருடம் வைத்து விசாரித்தாலும் நான் பயப்பட மாட்டேன் என்று கூறியுள்ளார்.

    ராகுல் காந்தி தொடங்கிய பாத யாத்திரையை எண்ணி பா.ஜ.க.வினர் ஆடிப்போய் இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது காங்கிரஸ் நிர்வாகிகள் வாழப்பாடி ராமசுகந்தன், நெடுஞ்செழியன், ஆலங்குளம் செல்வராஜ், செங்கோட்டை முன்னாள் யூனியன் சேர்மன் சட்ட நாதன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • சிறிது நேரம் ஓய்வெடுத்த ராகுல் காந்தி அங்கிருந்து விவேகானந்தர் நினைவு மண்டபம் திருவள்ளுவர் சிலை தனி படகில் சென்று பார்வையிட்டார்
    • கன்னியாகுமரியில் இருந்து 3 ½ கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரிக்கு சென்று முதல் நாள் தனது பயணத்தை நிறைவு செய்தார்

    நாகர்கோவில்:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோ மீட்டர் தூரம் 150 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

    இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி கன்னியாகுமரியில் நடந்தது.தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி நேற்று மதியம் 1.45 மணிக்கு கன்னியாகுமரி சுற்றுலா மாளிகையில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். அவரை காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்த ராகுல் காந்தி அங்கிருந்து விவேகானந்தர் நினைவு மண்டபம் திருவள்ளுவர் சிலை தனி படகில் சென்று பார்வையிட்டார்.

    காமராஜர் மண்டபத்தையும் ராகுல் காந்தி பார்வையிட்டார். காந்தி மண்டபத்திற்கு ராகுல் காந்தி வந்தார். அப்போது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காந்தி மண்டபம் வந்து சேர்ந்தார். இருவரும் ஒன்றாக காந்தி மண்டபம் உள்ளே சென்றனர்.இருவரும் அங்கு நடந்த பிரார்த்தனையில் பங்கேற்றனர். மு.க. ஸ்டாலின், ராகுல் காந்தி இருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர். சுமார் 20 நிமிடம் காந்தி மண்டபத்தில் அவர்கள் இருந்தனர்.

    பின்னர் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், ராகுல் காந்தி இருவரும் காந்தி மண்டபத்தை விட்டு வெளியே வந்தனர். காந்தி மண்டபம் முன்பு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், ராகுல் காந்தியிடம் தேசியக் கொடியை வழங்கி பாதயாத்திரை தொடங்கி வைத்தார். சுமார் ஐந்து நிமிடம் காந்தி மண்டபம் முன்பு முதல்-அமைச்சரும், ராகுல் காந்தியும் பேசிக் கொண்டிருந்தனர்.

    ராகுல் காந்திக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டார். ராகுல் காந்தி பாதயாத்திரையாக அங்குள்ள பொதுக்கூட்ட மேடைக்கு மாலை 5.10 மணிக்கு வந்தார். தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு ராகுல் காந்தி மேடைக்கு வந்து சேர்ந்தார்.

    இதைத் தொடர்ந்து தேசியக் கொடிக்கு ராகுல் காந்தி மரியாதை செய்தார். முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடல் அருகே பொது கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் ஒரு மணி நேரமாக தலைவர்கள் எழுச்சி உரை ஆற்றினார்கள்.மேடையில் ராகுல் காந்தி அமர்ந்திருந்தார். மாலை 6.10 மணிக்கு தனது பேச்சை தொடங்கிய ராகுல் காந்தி 25 நிமிடமாக பேசினார். 6.35 மணிக்கு தனது பேச்சை நிறைவு செய்தார். அவர் தனது பேச்சில் தேசிய கொடியின் பாதுகாப்பது நமது கடமை என்பதையும், நாட்டை பாதுகாப்பது நமது உரிமை என்பதை பற்றியும் எடுத்துரைத்தார்.

    நாட்டை காக்கவே பாதயாத்திரை மேற்கொள்வதாகவும் பேசினார்.மேலும் ஆர். எஸ். எஸ்., பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்து பேசினார். இந்திய ஒற்றுமை பயணத்தின் நோக்கம் குறித்தும் ராகுல் காந்தி எடுத்துரைத்தார். தனது பேச்சை நிறைவு செய்த ராகுல் காந்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    கன்னியாகுமரியில் இருந்து 3 ½ கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரிக்கு சென்று முதல் நாள் தனது பயணத்தை நிறைவு செய்தார்.முதல் நாள் கன்னியாகுமரியில் 5 மணி நேரம் ராகுல் காந்தி தனது நிகழ்ச்சியை மேற்கொண்டு உள்ளார்.ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதன் மூலமாக காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ராகுல் காந்தி தனது பாதயாத்திரை மேற்கொள்ளும் போது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய எழுச்சி கிடைக்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், ராகுல் காந்தி சந்திப்பு 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    ராகுல்காந்தியின் இந்த பாதயாத்திரை நாடு முழுவதும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிக்கு ஊன்றுகோளாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • பாதயாத்திரையின் 2-வது நாளான இன்று அகஸ்தீஸ்வரத்தில் இருந்து நடை பயணத்தை தொடங்கினார்.
    • 11-ந் தேதியில் இருந்து ராகுல்காந்தி கேரள மாநிலத்தில் பாதயாத்திரையை மேற்கொள்கிறார்.

    இந்திய ஒற்றுமைப் பயணம் வெற்றி பெற பாரத அன்னை நம்மை வாழ்த்த வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை, ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பாதயாத்திரை செல்கிறார்.

    அவர் நேற்று முதல் தினமும் ராகுல்காந்தி 25 கி.மீ. தூரம் நடக்கிறார். காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் பாதயாத்திரை இரண்டு 'ஷிப்டு'களாக நடைபெறுகிறது. 11-ந் தேதியில் இருந்து ராகுல்காந்தி கேரள மாநிலத்தில் பாதயாத்திரையை மேற்கொள்கிறார். இந்நிலையில் பாதயாத்திரையின் 2-வது நாளான இன்று அகஸ்தீஸ்வரத்தில் இருந்து நடை பயணத்தை தொடங்கினார்.

    முன்னதாக அகஸ்தீஸ்வரத்தில் இருந்து நடை பயணத்தை தொடங்கும் முன் ராகுல்காந்தி தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிலையில் இந்திய ஒற்றுமைப் பயணம் வெற்றி பெற பாரத அன்னை நம்மை வாழ்த்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், ""ஒற்றுமையில் உய்யவே நாடெல்லாம் ஒரு பெருஞ்செயல் செய்வாய் வா, வா, வா" இன்று தொடங்கும் இந்திய ஒற்றுமைப் பயணம் வெற்றி பெற பாரத அன்னை நம்மை வாழ்த்த வேண்டும் என்று வேண்டுவோம்" என்று அதில் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

    • ராகுல் காந்தி கன்னியாகுமரியில் நாளை பாதயாத்திரையை தொடங்குகிறார்.
    • நாளை ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

    சென்னை :

    காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் நாளை(புதன்கிழமை) பாதயாத்திரையை தொடங்குகிறார். இதற்காக இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை 5.15 மணிக்கு டெல்லியில் இருந்து பயணிகள் விமானத்தில் புறப்பட்டு இரவு 8 மணியளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேருகிறார்.

    சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. சென்னையில் இரவு தங்கும் ராகுல் காந்தி, நாளை காலையில் சென்னையில் இருந்து காரில் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்துகிறார்.

    பின்னர் அங்கிருந்து மீண்டும் காரில் சென்னைக்கு திரும்பி வருகிறார். காலை 11.40 மணிக்கு சென்னையில் இருந்து பயணிகள் விமானத்தில் ராகுல்காந்தி திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார்.

    • தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி அவரது நடை பயணத்தை தொடங்கி வைக்கிறார்.
    • காந்தி மண்டபத்தின் முன் பகுதியில் சாரம் அமைத்து பல வர்ணங்கள் தீட்டும் பணி நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. வருகிற 7-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு தேசிய ஒற்றுமை பயணம் என்ற பாத யாத்திரை மேற்கொள்கிறார்.

    7-ந்தேதி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் இருந்து பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கு கிறார். தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி அவரது நடை பயணத்தை தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபம் சீரமைக்கும் பணி நேற்று முதல் தொடங்கி இரவு, பகலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    காந்தி மண்டபத்தின் முன் பகுதியில் சாரம் அமைத்து பல வர்ணங்கள் தீட்டும் பணி நடந்து வருகிறது. காந்தி நினைவு மண்டபத்தில் ஆங்காங்கே உடைந்து உள்ள பகுதியை சிமெண்ட் பூசி சீரமைக்கும்பணியும் நடந்துவருகிறது.

    • எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை
    • பிரம்மாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3750 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

    12 மாநிலங்கள் வழியாக 150 நாள் பயணமாக இந்த பாதயாத்திரையை அவர் மேற்கொள்கிறார். இதன் தொடக்க விழா நிகழ்ச்சி வருகிற 7-ந் தேதி மாலை 3மணிக்கு கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நடக்கிறது .

    இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு ராகுல் காந்தியிடம் தேசிய கொடியை வழங்கி பாத யாத்திரையை தொடங்கி வைக்கிறார்.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடத்த வும் ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது.

    பின்னர் ராகுல் காந்தி அன்று கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரை தொடங்குகிறார்.குமரி மாவட்டத்தில் 7,8,9,10-ந் தேதிகளில் அவர் பாதயா த்திரை மேற்கொள்கிறார்.

    11-ந் தேதி காலை திருவனந்தபுரம் வழியாக கேரளா செல்கிறார். குமரி மாவட்டத்தில் ராகுல் காந்தி 4 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்வதையடுத்து அதற்கான முன்னேற்பாடு பணிகளை தமிழக காங்கிரசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஏற்கனவே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குமரி மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு இருந்தார்.

    இதைத்தொடர்ந்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பலரும் இங்கே முகாமிட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு வந்தனர்.

    இந்த நிலையில் இன்று மீண்டும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ்.அழகிரி குமரி மாவட்டம் வந்தார்.நாகர்கோவிலுக்கு வந்த அவர் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்று வரும் பணி களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அங்கு 2-வது நாள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு ராகுல் காந்தி அந்த மைதானத்தில் கேரவன் வேனில் தங்கு கிறார்.

    ராகுல் காந்தியுடன் பாதயாத்திரை வரும் நிர்வாகிகள் தங்குவதற்கும் அங்கு பிரம்மாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.அந்த பணிகளை கே.எஸ்.அழகிரி இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொள்ள உள்ள இடங்க ளை பார்வையிட்ட அவர் இதுவரை செய்யப்பட்டுள்ள பணிகள் விவரங்களையும் கேட்டறிந்தார்.

    இதைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. கூட்டத்தில் காங்கிரஸ் மேலிட பார்வை யாளர் குண்டு ராவ், எம்.பி.க்கள் விஜய் வசந்த், ஜோதிமணி, செல்லக்குமார், ஜெயக்குமார், எம்.எல். ஏ.க்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், மாவட்டத் தலை வர்கள் நவீன் குமார், கே.டி. உதயம், பினுலால்சிங் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரையின் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை அவர் மேற்கொள்ள உள்ள பாதயாத்திரை நிகழ்ச்சி களில் சாலையின் இருபுற மும் கட்சியினர் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் இதற்காக நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அழகிரி கேட்டுக்கொண்டார்.

    ராகுல் காந்தி வரவேற்பு ஏற்பாடுகளை கண்காணிக்க 18 எம்.பி. எம்.எல். ஏ.க்கள் தலைமையில் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.

    • ராகுல்காந்தி எம்.பி. தலைமையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம்.
    • 150 நாட்கள் பாரத் ஜூடோ யாத்ரா என்ற பெயரில் நடைபயணம் நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி எம்.பி. தலைமையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை வரும் 7-ந்தேதி தொடங்கி 150 நாட்கள் பாரத் ஜூடோ யாத்ரா என்ற பெயரில் நடைபயணம் நடைபெறுகிறது. இதில் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள ஐ.என்.டி.யு.சி. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபி தலைமை தாங்கினார். நடைபயணத்தில் தமிழகத்தில் வரும் 7-ந்தேதி முதல் 3 நாட்களுக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட காஙகிரஸ் கட்சி சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தின் முடிவில் வடக்கு மாவட்ட செயலாளர் கோபி நிருபர்களிடம் கூறும்போது " பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு நாட்டை பிளவுப்படுத்தி வருகிறது. பால், அரிசி, பள்ளி குழந்தைகள் பயன்படுத்த கூடிய பென்சில், ரப்பர் உள்ளிட்ட பொருட்களுக்கெல்லாம் ஜி.எஸ்.டி. வரியை விதித்து மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது மத்திய அரசு. இந்தியாவில், ஆட்சி மாற்றம் ஏற்படவும் இந்த நடைபயணம் திருப்புமுனையாக அமையும் என்றார். இந்த கூட்டத்தில் மாநில செயலாளர்கள் டி.டி.கே.சித்திக், செல்வகுமார், வெங்கடாச்சலம் மற்றும் வட்டார தலைவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பல்லடம் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் அப்பாஸ் நன்றி கூறினார்.

    • காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பதவி வகித்து வருகிறார்.
    • செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர்வரை பாத யாத்திரை தொடங்குகிறது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவி வகித்து வருகிறார். புதிய தலைவரை தேர்வு செய்ய செப்டம்பர் 20-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, செப்டம்பர் 7-ம் தேதி, பாரத் பாதயாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர்வரை பாத யாத்திரை தொடங்குகிறது.

    இந்நிலையில், பாதயாத்திரை பணிகளில் கவனம் செலுத்த வேண்டி இருப்பதாலும், சில மாநிலங்கள் தலைவர் தேர்தலுக்கான நடைமுறைகளை முடிக்காததாலும் தலைவர் தேர்தல் ஒரு மாதம் தள்ளி போகும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    அதன்படி, அக்டோபர் மாதம் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடக்கிறது. வரும் 28-ம் தேதி காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி, தேர்தல் தேதியை முடிவு செய்கிறது.

    • ராகுல் காந்தி, 8, 9-ந் தேதிகளிலும் குமரி மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.
    • மதம், சாதி, இன ரீதியாகவும் பிரித்தாளு கின்ற ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதாவிற்கு எதிராக இந்த பாதயாத்திரை நடக்கிறது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி 3750 கிலோ மீட்டர் தூரம் பாரத் பாதயாத்திரை மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் வருகிற 7-ந் தேதி பாதயாத்தி ரையை தொடங்குகிறார்.பாதயாத்திரை தொடங்கும் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்‌.

    இதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. நாகர் கோவில் கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கும் ராகுல் காந்தி, 8, 9-ந் தேதிகளிலும் குமரி மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொள்கிறார். அவர் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ள பாதைகள் குறித்து காங்கிரஸ் மேலிட நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்‌.ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு உள்ளார். இந்த நிலையில் எம்.பி.க்கள் குழுவினர் குமரி மாவட்டத்தில் முகாமிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ராகுல் காந்தி பயணம் மேற்கொள்ள உள்ள இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இன்று 3-வது நாளாக ஆய்வு பணி நடந்தது.எம்.பி.க்கள் ஜோதிமணி, விஜய் வசந்த், மாநிலச் செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத் மாவட்ட தலைவர்கள் கே.டி.உதயம், பினு லால் சிங் ஆகியோர் கன்னியாகுமரியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    கன்னியாகுமரியில் ராகுல் காந்தி வருகையின் போது செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அங்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி யில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நேரில் பார்வையிட்டார். ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொள்ள உள்ள இடங்களையும் ஆய்வு செய்தார்.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி, விஜய் வசந்த் ஆகியோர் கலெக்டர் அரவிந்தை சந்தித்தும் ராகுல் காந்தி வருகை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர்.

    ஜோதிமணி எம்.பி. நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி ராகுல்காந்தி வருகிற 7-ந் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து பாதயாத்திரை‌ மேற்கொள்கிறார். இந்தியா முழுவதும் பாதயாத்திரை நடக்கிறது. மதம், சாதி, இன ரீதியாகவும் பிரித்தாளு கின்ற ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதாவிற்கு எதிராக இந்த பாதயாத்திரை நடக்கிறது. வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்சினை தற்பொழுது அதிகரித்து உள்ளது‌. இந்த பாதயாத்திரையில் காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி பாரதிய ஜனதாவிற்கு எதிரான வர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 28-ந் தேதி கொடி ஏற்றத்திற்காக கடலூர் வழியாக வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.
    • மக்களுக்கு குடிநீர், தங்கும் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.

    கடலூர்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த ஆலயம் கீழை நாடுகளின் லூர்து நகர் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது. இந்த ஆலயத்தின் எதிரே வங்கக்கடல் அமைந்திருப்பது மேலும் சிறப்பாகும். வேளாங்கண்ணியில் 3 அற்புதங்களை நடத்திய அன்னை மரியாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந் தேதி ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆண்டுபெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க பெருவிழா கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மதத்தினர் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து நடைபயணமாக வருகை புரிந்து மாதாவை வழிபட்டு செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா வருகிற 28-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்வதற்காக ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயபக்தியுடன் பாதயாத்திரை சென்று வருவதும், பலர் அன்னை மரியாவின் புகைப்படங்கள் அடங்கிய சிறிய தேரை இழுத்து செல்வதையும் பலர் வாகனங்களில் செல்வதையும் காண முடிந்தது. மேலும் கடலூர் ஜி.ஆர்.கே. குழுமம் சார்பில் நிர்வாக இயக்குனர் ஜி.ஆர் துரைராஜ் அறிவுறுத்தலின் பேரில் பாதயாத்திரைக்கு செல்லக்கூடிய மக்களுக்கு குடிநீர், தங்கும் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். தற்போது நாளுக்கு நாள் பாதயாத்திரை செல்லக்கூடிய மக்கள் அதிகரித்து வருவதால் போலீசார் பாதுகாப்பாக செல்வதற்கு கூடுதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    • சுதந்திரதினபவள விழாவையொட்டி வாடிப்பட்டியில் காங்கிரசார் பாதயாத்திரை நடத்தினர்.
    • வாடிப்பட்டி, சல்லக்குளம், கருப்பட்டி, இரும்பாடி வழியாக சென்று சோழவந்தான் காமராஜர்சிலையை அடைந்தது.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பஸ்நிலையம் முன்பு காங்கிரஸ் சார்பில் 75-வது சுதந்திரதினபவள விழாவையொட்டி பாதயாத்திரை நடந்தது.

    மாவட்டத்தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகரதலைவர் முருகானந்தம், மாவட்டத்துணைத்தலைவர் செல்வக் குமார், துரைப்பாண்டி, வட்டாரத்தலைவர் பழனிவேல், ராயல், காந்தி சவுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தனர். ஊடகபிரிவு தொகுதிதலைவர் வையாபுரி வரவேற்றார். மாவட்ட பொருளாளர் நூர்முகமது தொடங்கி வைத்தார்.

    வாடிப்பட்டி, சல்லக்குளம், கருப்பட்டி, இரும்பாடி வழியாக சென்று சோழவந்தான் காமராஜர்சிலையை அடைந்தது. இதில் மனிதஉரிமை மாவட்டத்தலைவர் ஜெயமணி, ஒ.பி.சி.அணி மாவட்டத் தலைவர் முருகன், முன்னாள் சேர்மன் திலகராஜ், அமைப்புசாரா தொழிலாளர் அணிமாநிலதலைவர் மகேஸ்வரன், சோனைமுத்து, வரிசைமுகமது உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இளைஞர் காங்கிரஸ் தொகுதி துணைத்தலைவர் நவீன்குமார் நன்றி கூறினார்.

    ×