search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காந்தி நினைவு மண்டபம்"

    • ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.
    • காந்தி அஸ்தி கட்டத்தின் மீது இந்த அபூர்வ சூரிய ஒளி விழுவதை பார்க்கலாம்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மகாத்மா காந்தி நினைவு மண்ட பத்தில்உள்ள காந்திஅஸ்தி கட்டத்தின் (நினைவிடம்) மீதுஆண்டு தோறும் காந்தி ஜெயந்தியான அக்டோபர் மாதம் 2-ந்தேதிஅன்று பகல் 12 மணிக்கு அபூர்வ சூரிய ஒளி விழும்.

    காந்தி நினைவு மண்டபத்தில் சூரிய ஒளி விழும் இந்த அபூர்வ நிகழ்வைக் காண அன்றைய தினம் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.

    அதேபோல இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி யானவருகிற அக்டோபர்மாதம்2-ந்தேதி பகல் 12 மணிக்கு கன்னியா குமரி காந்தி நினைவு மண்டபத்தில் உள்ள காந்தி அஸ்தி கட்டத்தின் மீது இந்த அபூர்வ சூரிய ஒளி விழுவதை பார்க்கலாம்.

    • கடந்த 3 ஆண்டு களாக காந்தி நினைவு மண்டபம் பராம ரிப்பின்றி பூட்டப்பட்டு உள்ளது.
    • நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த காந்தி நினைவு மண்டபம் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    சேலம் மாவட்ட கலெக்டர் கடந்த 1956-ம் ஆண்டு காவேரிப்பட்டிணம் பகுதியில் காந்தி நினைவு மண்டபம் அமைக்க அரசு புறம்போக்கு நிலத்தில் 3.8 சென்ட் நிலம் வழங்கினார்.

    அந்த நிலத்தில் சட்ட மன்ற உறுப்பினர் நாகராஜ் மணியகார் காந்தி நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு காந்தி ஜெயந்தி, காந்தி நினைவு நாள், காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகள், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், பிறந்தநாள்கள், நினைவு நாட்கள், போன்றவை நடத்தப்பட்டு வந்தன.

    பள்ளி, கல்லூரி மாணவிகள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். அவருக்கு பிறகு சட்டமன்ற உறுப்பினர் பட்டாபி நாயுடு, அவருக்கு பின்னர் 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவராக இருந்த காசிலிங்கம் தலைமையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 9 பேர் கொண்ட அறக் கட்டளை குழு காந்தி நினைவு மண்டபத்தை பராமரித்து வந்தது.

    அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே பிரச்சனை எழுந்ததால் கடந்த 3 ஆண்டுகளாக காந்தி நினைவு மண்டபம் பராமரிப்பின்றி பூட்டப்பட்டு உள்ளது.

    காந்தி நினைவு மண்டபத் திற்குள் உள்ள கலையரங்கங்கள் சேதமடைந்தும், கதவுகள் உடைந்தும், செடிகள் முளைத்து முட்புதர்களாகவும் பரா மரிப்பின்றி காணப்படுகிறது.

    நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த காந்தி நினைவு மண்டபம் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

    அதேபோல் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக அதில் இந்திய காங்கிரஸ் கமிட்டி சொத்து பாதுகாப்பு குழு சேர்மன் விஜய் இந்தர் சிங்லா, குழு உறுப்பினர்கள் நிதின் கும்பகர், வாசு ஆகியோர் காந்தி மண்டபம் மற்றும் அதன் சொத்துக்களை கடந்த ஜூலை மாதம் நேரில் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மாநில காங்கிரஸ் கட்சியும், தேசிய காங்கிரஸ் கட்சியும் காந்தி நினைவு மண்டபத்தை புனரமைத்து சுதந்திர போராட்ட வரலாற்றை படைப் பாற்றும் விதமாக கண்காட்சிகள் அமைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • குமரி கடலில் காந்தியின் அஸ்தி கரைத்த 75-வது ஆண்டு நினைவுநாளையொட்டி நடந்தது
    • காந்தியின் அஸ்தி கரைத்த நினைவு நாளை "சர்வோதய மேளா" என கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி:

    தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் 1948-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந்தேதி டெல்லியில் பிரார்த்தனை கூட்டத்துக்கு செல்லும் போது கோட்சே என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது. பின்னர் அவரது அஸ்தி பல கலசங்களில் சேகரிக்கப்பட்டது. அதில் ஒரு அஸ்தி கலசம் 1948-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி கன்னியாகுமரிக்கு எடுத்து வரப்பட்டது.

    பின்னர் அந்த அஸ்தி கன்னியாகுமரியில் முக்கட லும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் கரைக்கப்பட்டது. காந்தியின் அஸ்தி கன்னியாகுமரி கடலில் கரைக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 12-ந்தேதி கன்னி யாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தில் காந்தியின் அஸ்தி கரைத்த நினைவு நாளை "சர்வோதய மேளா" என்ற பெயரில் குமரிமாவட்ட சர்வோதய சங்கம் கடைபிடித்து வருகிறது.

    அதேபோல இந்த ஆண்டு காந்தியின் அஸ்தி கரைத்த 75-வது ஆண்டு நினைவு நாளான நேற்று குமரி மாவட்ட சர்வோதய சங்கம் சார்பில் 75-வது சர்வோதய மேளா கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் நடந்தது.இத்துடன் காந்தி நினைவு நாளான கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி முதல் கடந்த 12 நாட்களாக கன்னியாகுமரி காந்தி நினைவுமண்டபத்தில் குமரி மாவட்ட சர்வோதய சங்க பெண்கள் நடத்தி வந்த ராட்டையில் நூல்நூற்கும் தொடர் நூற்பு வேள்வியின் நிறைவு நாள் நிகழ்ச்சியும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சர்வமத கூட்டு பிரார்த்தனையும் பஜனையும் நடந்தது.

    இறுதியாக தேசபக்தி பாடல்கள் பாடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தில்உள்ள சர்வோதய சங்கத்தில் பணியாற்றும் பெண் பணியாளர்கள், நூற்போர், நெய்வோர் மற்றும் தியாகி கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • மகாத்மா காந்தியின் 76-வது நினைவு நாளையொட்டி மரியாதை
    • பெண்கள் ராட்டையில் நூல் நூற்கும் நூற்பு வேள்வி நடத்தினர்

    கன்னியாகுமரி:

    மகாத்மா காந்தியின் 76-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

    இதையொட்டி கன்னியா குமரி காந்தி நினைவு மண்டபத்தில் உள்ள காந்தியின் அஸ்தி கட்டத்தின் (நினைவிடம்) முன்பு காந்தி யின் உருவப் படம் பொதுமக்கள் அஞ்சலிக்காக மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.அவரதுஉருவப்படத்துக்கு குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் நாகர் கோவில் ஆர்.டி.ஓ. சேது ராமலிங்கம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜான் ஜெகத்பிரைட், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் செயல் அலுவலர் ஜீவ நாதன், பேரூராட்சி துணைத் தலைவர் ஜெனஸ்மைக்கேல், சுகாதார அதிகாரி முருகன், சுகாதார மேற்பார்வை யாளர் பிரதீஷ், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள்ஆனி ரோஸ்தாமஸ், சகாய ஜூடு அல்பினோ ஆனந்த், முன்னாள் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தாமஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    காந்தி நினைவுநாளை யொட்டி சர்வோதய சங்கத் தைச் சேர்ந்த பெண்கள் ராட்டையில் நூல் நூற்கும் நூற்பு வேள்வி நடத்தி னார்கள். இந்த நூற்பு வேள்வி கன்னியாகுமரி கடலில் காந்தியின்அஸ்தி கரைத்த நினைவுநாளான பிப்ரவரி மாதம் 12-ந் தேதி வரை 14 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    • தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி அவரது நடை பயணத்தை தொடங்கி வைக்கிறார்.
    • காந்தி மண்டபத்தின் முன் பகுதியில் சாரம் அமைத்து பல வர்ணங்கள் தீட்டும் பணி நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. வருகிற 7-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு தேசிய ஒற்றுமை பயணம் என்ற பாத யாத்திரை மேற்கொள்கிறார்.

    7-ந்தேதி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் இருந்து பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கு கிறார். தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி அவரது நடை பயணத்தை தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபம் சீரமைக்கும் பணி நேற்று முதல் தொடங்கி இரவு, பகலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    காந்தி மண்டபத்தின் முன் பகுதியில் சாரம் அமைத்து பல வர்ணங்கள் தீட்டும் பணி நடந்து வருகிறது. காந்தி நினைவு மண்டபத்தில் ஆங்காங்கே உடைந்து உள்ள பகுதியை சிமெண்ட் பூசி சீரமைக்கும்பணியும் நடந்துவருகிறது.

    ×