search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி மாணவன்"

    • ஒடிசா மாநிலம் போலங்கீரில் உள்ள ஆகல்பூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விளையாட்டு போட்டி நடந்து கொண்டு இருந்தது.
    • படுகாயமடைந்த சிறுவனை அங்கு இருந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் போலங்கீரில் உள்ள ஆகல்பூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விளையாட்டு போட்டி நடந்து கொண்டு இருந்தது. ஈட்டி எறிதலின்போது 9-ம் வகுப்பு மாணவனின் கழுத்தில் ஈட்டி எதிர்பாராதவிதமாக பாய்ந்தது. படுகாயமடைந்த அவனை அங்கு இருந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தகவல் அறிந்த அந்த மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் மாணவனின் நலம் விசாரித்தார். சிகிக்சைக்கான செலவை முதல்-மந்திரி நிவாரண நிதி மூலம் ஏற்கப்படும் என அறிவித்தார்.

    • தெப்பக்குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் இறந்தான்.
    • மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம்

    திருமங்கலத்தை அடுத்துள்ள அலப்பலச்சேரி கிராமத்தை சேர்ந்த ராஜகோபால்-காளீஸ்வரி தம்பதியினர். இவர்கள் மானாமதுரை அருகில் உள்ள நாராயணதேவன் பட்டியில் குடியிருந்து கட்டிட வேலை செய்து வருகின்றனர்.

    இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அஜய் என்ற காளி (11) அலப்பலச்சேரி கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி நாகையாபுரம் நடுநிலை பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

    அஜய் தனது நண்பர்களுடன் அலப்பலச்சேரி கிராமத்தில் உள்ள வாழவந்தஅம்மன் கோவில் தெப்பக்குளத்தில் குளித்தான்.அவனுக்கு நீச்சல் தெரியாததால் எதிர்பாராத விதமாக தெப்பக்குளத்தில் மூழ்கினான். இதனைக் கண்ட கிராம மக்கள் அஜய்யை மீட்டனர். அவன் தெப்பக்குளத்தில் மூழ்கியதில் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பலியானான்.

    நாகையாபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • பள்ளி வகுப்பறையில் இருக்கையில் இடம் பிடிப்பதில் சக மாணவர்களுடன் போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
    • பள்ளி முடிந்து மாலையில் வீட்டுக்கு சென்றதும் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் பெருமாநல்லூர் நியூகாளிபாளையம் ஜி.என்.கார்டன் பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் பனியன் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவரது மகன் சுதர்சன் (வயது 14). பெருமாநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் பள்ளி வகுப்பறையில் இருக்கையில் இடம் பிடிப்பதில் சக மாணவர்களுடன் போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் சுதர்சனின் கண் கண்ணாடி உடைந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பெற்றோருக்கு தெரிந்தால் சத்தம் போடுவார்கள் என்று பயந்த சுதர்சன், பள்ளி முடிந்து மாலையில் வீட்டுக்கு சென்றதும் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
    • பள்ளி மாணவனின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தன.

    களியக்காவிளை: 

    கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகும்மல் நுள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் சுனில். இவரது மகன் அஸ்வின் (11) அதங்கோடு பகுதியிலிலுள்ள தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் 24ஆம் தேதி பள்ளிக்கு சென்று தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த அஸ்வினுக்கு அதே பள்ளி சீருடையில் வந்த மாணவன் ஒருவன், குளிர்பானம் ஒன்றை குடிக்க கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த குளிர்பானத்தில் ஆசிட் கலந்து இருந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் 25ஆம் தேதி முதல் மாணவன் அஸ்வினுக்கு காய்ச்சல் அடித்துள்ளது. அவரது தாயார் ஷோபியா களியக்காவிளை பகுதியை சேர்ந்த தனியார் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றுள்ளனர். தொடர்ந்து அஸ்வினுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, கேரளா மாநிலம் நெய்யாற்றிங்கரை பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஆசிட் திரவம் உட்கொண்டதால் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

    இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த தகவலின் அடிப்படையில் களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நெய்யாற்றிங்கரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி  மாணவன் அஸ்வின் இன்று உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் களியக்காவிளை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • இளவரசன் சங்கராபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • போலீசார் மூரார்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருேக கெட்டுவன்னஞ்சூரை சேர்ந்தவர் துரை. அவரது மகன் இளவரசன் (வயது17). இவர் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் சங்கராபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், திடீரென கத்தியை காட்டி மிரட்டி இளவரசனிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசி ம்மஜோதி தலைமையிலான போலீசார் மூரார்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் மறித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கள்ளக்குறிச்சி தாலுகா, புக்கிரவாரியை சேர்ந்த அய்யப்பன் (23) மற்றும் 16 வயது சிறுவன் என்பதும், இளவரசனிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அய்யப்பன் மற்றும் சிறுவனை கைது செய்த போலீசார், செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவனை செஞ்சி சீர்திருத்த பள்ளியில் சேர்க்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    • கமல்நாத் பண்ருட்டி முத்தையர் மேல்நிலைப்பள்ளியில் 7-ம்வகுப்பு படித்து வருகிறான்.
    • ஓடிஏறுவதற்காக முயற்சித்தபோது தவறிவிழுந்தான். பஸ் சக்கரம் அவரது வலது தொடையில் ஏறியது.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே சின்னசேமக் கோட்டையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் என்பவர் மகன் கமல்நாத் (12). இவர் பண்ருட்டி முத்தையர் மேல்நிலைப்பள்ளியில் 7-ம்வகுப்பு படித்து வருகிறான். இவன் நேற்று மாலை பள்ளி முடித்து வீட்டிற்கு செல்வதற்காக பண்ருட்டி நகராட்சி பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தான். அப்போது அரசுபேருந்து வழித்தடம் எண் 8 பி பஸ் வந்தது. அந்த பஸ், பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது.

    அதில்ஓடிஏறுவதற்காக முயற்சித்தபோது தவறிவிழுந்தான். பஸ் சக்கரம் அவரது வலது தொடையில்ஏறியது.இதனால்படுக்காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவனை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டார். அங்குஅவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், ரங்கநாதன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சந்தோஷ் கடைக்கு செல்வதற்காக சைக்கிளில் சென்று கொண்டிருந்தான்.
    • குமராபுரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஒரு தனியார் ஆம்புலன்ஸ் வேன் எதிர்பாராத விதமாக சைக்கிள் மீது மோதியது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி செர்லின். இவர்களுக்கு சுபாஷ் (15), கவிதன் (13), சந்தோஷ் (12) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

    செர்லினுக்கும் அவரது கணவர் சுரேசுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதையடுத்து செர்லின் தனியாக வசித்து வருகிறார்.

    இவர்களின் மூத்த மகன் சுபாஷ் மற்றும் கடைசி மகன் சந்தோஷ் இருவரும் செர்லினுடன் வசித்து வருகின்றனர். சந்தோஷ் சென்னிமலையில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்த நிலையில் செர்லின். ஓட்டல் கடை வைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். இதனால் சந்தோஷ் பள்ளிக்கு செல்லாமல் அவருக்கு உதவியாக இருந்தார்.

    இதையடுத்து சந்தோஷ் கடைக்கு செல்வதற்காக சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். அப்போது சென்னிமலை-வெள்ளோடு ரோட்டில் குமராபுரி பகுதியில் சந்தோஷ் சென்று கொண்டிருந்த போது ஒரு தனியார் ஆம்புலன்ஸ் வேன் எதிர்பாராத விதமாக சந்தோஷ் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சந்தோஷ் படுகாயம் அடை ந்தார். உடனடியாக அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஆம்பு லன்ஸ் மூலம் பெருந்துறை ஐ.ஆர்.டி.டி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சந்தோஷ் பரிதாபமாக இறந்தான்.

    • பள்ளியில் உணவு இடைவெளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் சாப்பாடு கொண்டு செல்லும் போது 9-ம் வகுப்பு மாணவன் மீது எதிர்பாராமல் பட்டுவிட்டது.
    • மறுநாள் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் 11 ஆம் வகுப்பு மாணவனை தாக்கியதாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் அருகே ஆடுர்குப்பம் சேர்ந்தவர் 15 வயது மாணவன். இவர் கடலூர் அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளியில் உணவு இடைவெளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் சாப்பாடு கொண்டு செல்லும் போது 9-ம் வகுப்பு மாணவன் மீது எதிர்பாராமல் பட்டுவிட்டது. இதனால் இரு மாணவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவனை அடித்ததாக கூறப்படுகிறது.

    அதனை தொடர்ந்து மறுநாள் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் 11 ஆம் வகுப்பு மாணவனை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த முன் விரோத காரணமாக கடலூரில் இருந்து குறிஞ்சிப்பாடிக்கு அரசு பஸ்சில் 9-ம் வகுப்பு மாணவன் செல்லும்போது அடையாளம் தெரியாத 8 நபர்கள் அரசு பஸ்ருசில் இருந்து இறக்கி சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த 9-ம் வகுப்பு மாணவன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து 8 நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • தாயார் இந்திரா தனது மகன் கிஷோரிடம் கடன் வாங்கி படிக்க வைத்தோம் என கண்டித்துள்ளார்.
    • சைக்கிள் நிறுத்தும் இடத்தில் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்று விட்டார்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே சென்னப்ப நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (40). இவரது மனைவி இந்திரா (35). இவர்களது மகன் கிஷோர் (16).

    இவர் கடந்த ஆண்டு ஈரோடு ெரயில்வே காலனி மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது நடந்த தேர்வில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் சிறப்பு வகுப்பில் கலந்து கொண்டு படித்து வருகிறார்.

    இதை தொடர்ந்து அவர் மீண்டும் தேர்வு எழுதினார். இதில் அவர் சமூக அறிவியல் பாடத்தில் மீண்டும் தோல்வி அடைந்தாராம். இதனால் கிஷோரின் தாயார் இந்திரா தனது மகன் கிஷோரிடம் கடன் வாங்கி படிக்க வைத்தோம். தேர்ச்சி பெறாததை குறித்து கண்டித்து உள்ளார்.

    இதனால் கிஷோர் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். இதையடுத்து அவர் சைக்கிளை எடுத்து கொண்டு நஞ்சை ஊத்துக்குளி சென்றார். அங்கு சைக்கிள் நிறுத்தும் இடத்தில் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்று விட்டார்.

    ஆனால் அவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. அவரை அக்கம் பக்கம் தேடி பார்த்தும் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவனை தேடி வருகின்றனர்.

    • ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்
    • தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்தான்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே ஆலம்பாடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார். கொத்தனார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ரிகாஸ்(வயது 9) என்ற மகனும், தேவிகாஸ்ரீ(5) என்ற மகளும் உண்டு. இதில் ரிகாஸ் பெரம்பலூரில் உள்ள ரோவர் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்த நிலையில் நேற்று காலை ரிகாஸ், தனது மாமாவுடன் அருகே உள்ள ஊராட்சிக்கு சொந்தமான ஏரிக்கு சென்றான். அப்போது அப்பகுதியில் ரிகாஸ் ஒருபுறமும், அவனது மாமா மற்றொரு புறமும் இயற்கை உபாதை கழிக்க சென்றிருந்தனர். பின்னர் அவனது மாமா வந்து பார்த்தபோது ரிகாசை காணவில்லை. இதனால் அவன் வீட்டிற்கு சென்றிருப்பான் என்று நினைத்து, அவர் வீட்டிற்கு வந்தார்.

    ஆனால் ரிகாஸ் வீட்டிற்கு வராததை அறிந்து, அவனை பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் அவனை காணாததால், ஏரிக்கு சென்று பார்த்தனர். அங்கும் அவன் இல்லாததால் திரும்பி வந்து கிராமத்தில் தேடினர். இதையடுத்து மீண்டும் அவர்கள் ஏரிக்கு சென்று, அங்கு மண் எடுக்கப்பட்ட குழியில் நிரம்பிய தண்ணீரில் இறங்கி தேடினர்.

    அப்போது தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்த ரிகாசை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், ரிகாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கி வாலிபர், பள்ளி மாணவன் பலியானார்கள்.
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வாய்க்கால் தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சிதம்பரநாதன் (42) விவசாயி.

    சிதம்பரநாதன் பழைய ரேடியோ உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை பழுது பார்க்கும் வேலை களை வீட்டிலேயே செய்து வந்தார்.

    இந்நிலையில் சிதம்பர நாதன் வீட்டில் இருந்த பழைய ரேடியோ வயர் இணைப்பு துண்டிக்கப்பட்டதை சரி செய்து கொண்டு இருந்தார். அப்போது சிதம்பரநாதன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    இதில் சிதம்பரநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிதம்பரநாதன் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    இது குறித்து பங்களா ப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர் தவிட்டுப் பாளையம் பகுதியை சேர்ந்த–வர் பாபு. இவரது மனைவி ஆனந்தி. இவர்களுக்கு சபரிஸ்ரீ (13) என்ற மகன் உள்ளார். இவர் தவிட்டுபாளையம் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். ஆனந்தி கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். மாணவன் சபரிஸ்ரீ விடுமுறை நாட்களில் அருகே உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் சபரிஸ்ரீ வழக்கம் போல் வேலைக்கு சென்றார். அப்போது மின்சார பிளக்கில் வயரை இணைக்க முயன்றார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை மீட்டு அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    மேல் சிகி ச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×