தெப்பக்குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு

தெப்பக்குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் இறந்தான். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தெப்பக்குளத்தில் மூழ்கி  பள்ளி மாணவன் சாவு
Published on

திருமங்கலம்

திருமங்கலத்தை அடுத்துள்ள அலப்பலச்சேரி கிராமத்தை சேர்ந்த ராஜகோபால்-காளீஸ்வரி தம்பதியினர். இவர்கள் மானாமதுரை அருகில் உள்ள நாராயணதேவன் பட்டியில் குடியிருந்து கட்டிட வேலை செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அஜய் என்ற காளி (11) அலப்பலச்சேரி கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி நாகையாபுரம் நடுநிலை பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

அஜய் தனது நண்பர்களுடன் அலப்பலச்சேரி கிராமத்தில் உள்ள வாழவந்தஅம்மன் கோவில் தெப்பக்குளத்தில் குளித்தான்.அவனுக்கு நீச்சல் தெரியாததால் எதிர்பாராத விதமாக தெப்பக்குளத்தில் மூழ்கினான். இதனைக் கண்ட கிராம மக்கள் அஜய்யை மீட்டனர். அவன் தெப்பக்குளத்தில் மூழ்கியதில் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பலியானான்.

நாகையாபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com