search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிட் கலந்த குளிர் பானம் குடித்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
    X

    மாணவன் அஸ்வின் (கோப்பு படம்)

    ஆசிட் கலந்த குளிர் பானம் குடித்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

    • தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
    • பள்ளி மாணவனின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தன.

    களியக்காவிளை:

    கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகும்மல் நுள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் சுனில். இவரது மகன் அஸ்வின் (11) அதங்கோடு பகுதியிலிலுள்ள தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் 24ஆம் தேதி பள்ளிக்கு சென்று தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த அஸ்வினுக்கு அதே பள்ளி சீருடையில் வந்த மாணவன் ஒருவன், குளிர்பானம் ஒன்றை குடிக்க கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த குளிர்பானத்தில் ஆசிட் கலந்து இருந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் 25ஆம் தேதி முதல் மாணவன் அஸ்வினுக்கு காய்ச்சல் அடித்துள்ளது. அவரது தாயார் ஷோபியா களியக்காவிளை பகுதியை சேர்ந்த தனியார் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றுள்ளனர். தொடர்ந்து அஸ்வினுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, கேரளா மாநிலம் நெய்யாற்றிங்கரை பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஆசிட் திரவம் உட்கொண்டதால் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

    இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த தகவலின் அடிப்படையில் களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நெய்யாற்றிங்கரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி மாணவன் அஸ்வின் இன்று உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் களியக்காவிளை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×