search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணிநீக்கம்"

    • நிர்வாகம் மற்றும் சப்போர்ட் குழுக்களை சேர்ந்தவர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.
    • பிப்ரவரி மாதத்தில் லின்க்டுஇன் நிறுவனம் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டது.

    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் லின்க்டுஇன் தளம் மக்கள் வேலை தேட உதவி வருகிறது. மற்றவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுக்க உதவும் லின்க்டுஇன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 700 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.

    இந்த முறை விற்பனை, நிர்வாகம் மற்றும் சப்போர்ட் குழுக்களை சேர்ந்தவர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். முன்னதாக பிப்ரவரி மாதத்தில் லின்க்டுஇன் நிறுவனம் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் பணியமர்த்தும் குழுவை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.

     

    லின்க்டுஇன் நிறுவனத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த இரண்டு காலாண்டுகளாக வருவாய் அதிகரித்து வரும் நிலையிலும், லின்க்டுஇன் நிறுவனம் பணிநீக்க நடவடிக்கையில் மும்முரம் காட்டி வருகிறது.

    பணிநீக்க நடவடிக்கை மூலம் நிறுவனத்தின் நிர்வாக சீர்திருத்தம் செய்து, ஊழியர்கள் படிநிலையை குறைத்து அதிவேகமாக முடிவுகளை எடுக்க உதவும் என்று லின்க்டுஇன் தலைமை செயல் அதிகாரி ரியான் ரோஸ்லன்ஸ்கி தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்து இருக்கிறார், என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    லின்க்டுஇன் நிறுவனத்தில் புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், பணிநீக்க நடவடிக்கை மூலம் பாதிக்கப்படுவோர் விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அமெரிக்க நிறுவனங்கள் ஐரோப்பாவில் பணியாற்றும் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளன.
    • 2023 ஆண்டில் மட்டும் 1,68,918 ஊழியர்களுக்கு பணிநீக்க ஆணையை டெக் நிறுவனங்கள் வழங்கி உள்ளன.

    உலகளவில் பிரபலமாக அறியப்படும் முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்லாயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஆண்டு முதலே பணிநீக்க நடவடிக்கைகளால் ஊழியர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கூகுள், மெட்டா, அமேசான் உள்பட உலகளவில் 570 தொழில்நுட்ப நிறுவனங்கள் 2023 ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 68 ஆயிரத்து 918 ஊழியர்களுக்கு பணிநீக்க ஆணையை வழங்கி உள்ளன.

    இதுதவிர, மேலும் பலரை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் இந்த நிறுவனங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இந்த வரிசையில் அமெரிக்க நிறுவனங்கள் தற்போது ஐரோப்பாவில் பணியாற்றும் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளன. எனினும், இந்த பகுதிகளில் உள்ள கடுமையான விதிகள் காரணமாக நிறுவனங்கள் தரப்பில் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர் நல அமைப்புகளிடம் முன்கூட்டியே அறிவிக்காமல் பணிநீக்கம் செய்ய முடியாது என்ற சூழல் நிலவுகிறது.

     

    பணிநீக்க நடவடிக்கைகளுக்கு முன்பு ஊழியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆணையங்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற சட்டம் அமலில் உள்ளது. இதன் காரணமாக கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களிடம் பணியினை ராஜினாமா செய்ய வலியுறுத்தி வருகின்றன. பிரான்ஸ் நாட்டில் உள்ள ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் ஆல்ஃபாபெட் நிறுவனம், ஊழியர்கள் பணியை ராஜினாமா செய்து, பெரும் தொகையை பணி நீக்க ஊதியமாக பெற்றுக் கொள்ள வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இது போன்ற தகவல்களால், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இயங்கி வரும் கூகுள் அலுவலக ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்படும் சூழலுக்கு ஆளாகியுள்ளனர். கூகுள் போன்றே அமேசான் நிறுவனமும் தனது மூத்த மேலாளர்களிடம், பணியை ராஜினாமா செய்து அதிகபட்சம் ஒரு வருடத்திற்கான சம்பளத்தை பணி நீக்க ஊதியமாக பெற்றுக் கொள்ள வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • சுவிட்சர்லாந்தை தொடர்ந்து இங்கிலாந்தில் உள்ள கூகுள் நிறுவன ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தொழிற்சங்க உறுப்பினர்கள், கூகுள் நிறுவனம் பிரச்சினைகளை தவிர்க்கும் செயலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினர்.

    இங்கிலாந்தில் உள்ள கூகுள் அலுவலக ஊழியர்கள், அந்நிறுவனத்தின் பணிநீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆண்டு உலகம் முழுக்க சுமார் 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக கூகுள் அறிவித்து இருந்தது. இதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூகுள் நிறுவனத்தில் சுமார் 15 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களும் பணிநீக்க நடவடிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியாவில் உள்ள கூகுள் ஊழியர்களும் பணிநீக்க நடவடிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர். நிறுவனத்தின் பணிநீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இங்கிலாந்து கூகுள் அலுவலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிநீக்கம் தொடர்பான பிரச்சினைகளை கூகுள் நிறுவனம் தவிர்த்து விட்டதாக ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இங்கிலாந்தின் பாங்ராஸ் சதுரங்க அலுவலகத்தின் வெளியில் போராட்டம் நடத்தப்பட்டது.

     

    சர்வேதச பணிகளில் ஈடுபட்டு வரும் சுமார் 10 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்படுவர் என கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிவித்து இருந்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அலுவலகத்தில் பணியாற்றி வருவோரில் நூற்றுக்கும் அதிகமானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டது. விவகாரம் தொடர்பாக கூகுள் நிறுவனம் ஊழியர்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.

    எனினும், இது போன்ற பேச்சுவார்த்தைகளில் தொழிற்சங்க நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ளாமல் இருப்பதை கூகுள் உறுதிப்படுத்தி வருகிறது. ஊழியர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை கூகுள் நிறுவனம் கேட்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. முன்னதாக சுவிட்சர்லாந்தில் உள்ள கூகுள் அலுவலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • மெட்டா நிறுவனத்தில் பணியாற்றி வரும் சுமார் 11 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர்.
    • சமீபத்தில் தான் மெட்டா நிறுவனத்தில் இருந்து சுமார் 12 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

    கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த ஆண்டு துவக்கம் முதலே ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள துவங்கிவிட்டன. இதன் காரணமாக உலகளவில் பெரும்பாலானோர் தங்களது வேலையை இழந்தனர். சந்தை நிலையை கருத்தில் கொண்டு மேலும் சில நிறுவனங்கள் இரண்டாவது கட்டமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்வது பற்றி பரிசீலனை செய்து வருகின்றன.

    இந்த வரிசையில் மார்க் ஜூக்கர்பர்க் மெட்டா பிரிவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் முறை எத்தனை பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனரோ, அதே எண்ணிக்கையில் மீண்டும் பணிநீக்கம் செய்ய மெட்டா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக விரைவில் சுமார் 11 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

    புதிய பணி நீக்க நடவடிக்கைகள் விரைவில் துவங்கும் என்றும் மார்க் ஜூக்கர்பர்க் தனது மூன்றாவது குழந்தை பிறக்க இருப்பதை அடுத்து மகப்பேறு விடுப்புக்கு செல்லும் முன் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட பின் மார்க் ஜூக்கர்பர்க் 2023 ஆண்டு நிறுவனத்திற்கு சிறப்பானதாக இருக்கும் என தெரிவித்து இருந்தார்.

    ஏற்கனவே ஒட்டுமொத்த ஊழியர்களில் சுமார் 13 சதவீதம், கிட்டத்தட்ட 11 ஆயிரம் ஊழியர்களை கடந்த ஆண்டு மெட்டா நிறுவனம் பணிநீக்கம் செய்து இருந்தது. இவர்கள் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் பணியாற்றி வந்தனர். நிதி நெருக்கடி மற்றும் வருவாய் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

    • சாதி பெயரைச் சொல்லி தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது.
    • 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரூர், 

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி செம்பூவராயன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் காரல்மார்க்ஸ் (வயது37). இவரது மனைவி கே.தேவி (38). இவர், கீரைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். இந்த தம்பதி 2011-ல் கலப்பு திருமணம் செய்துள்ளனர்.

    இந்த நிலையில், கணவன், மனைவி இடையே வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்தது தொடர்பாக அண்மையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

    அப்போது, ஆசிரியை தேவி உள்ளிட்ட 4 பேர் கணவர் கார்ல் மார்க்ஸ் மீது தாக்குதல் நடத்தி கொலை முயற்சியும், சாதி பெயரைச் சொல்லி தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கார்ல் மார்க்ஸ் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், கொலை முயற்சி மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆசிரியை கே.தேவி, அரூர் கோவிந்தசாமி நகரைச் சேர்ந்த ஸ்டாலின், அவரது மனைவி கலையரசி, தாஜ் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியை கே.தேவியை தற்காலிக பணிநீக்கம் செய்து தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.குணசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

    • மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களில் ஐந்து சதவீதம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
    • பணி நீக்கம் செய்த போதிலும், மைக்ரோசாப்ட் தொடர்ந்து புது ஊழியர்களை பணியில் அமர்த்தி, மற்ற துறைகளில் முதலீடு செய்ய இருக்கிறது.

    மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்து இருக்கிறார். பணி நீக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இன்று முதல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. பொருளாதார சூழல் காரணமாக கடின முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக சத்ய நாதெல்லா குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது ஊழியர்களில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவானோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை சுமார் 2 லட்சத்து 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் சுமார் 99 ஆயிரம் பேர் அமெரிக்கா தவிர்த்த நாடுகளில் வசிப்போர் ஆவர். மைக்ரோசாப்ட் மட்டுமின்றி டுவிட்டர், அமேசான் மற்றும் மெட்டா போன்ற நிறுவனங்களும் பல ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

    உலகின் பெரும்பாலான நாடுகளில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு இருப்பது, நுகர்வோர் செலவு செய்வதை குறைந்து இருப்பது போன்ற காரணங்களால் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சத்ய நாதெல்லா நிறுவன ரீதியில் அனுப்பிய அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார். செலவீனங்களை மறு கட்டமைப்பு செய்து, வருவாயை முறைப்படுத்த பணி நீக்கம் அத்தியாவசியமான ஒன்று ஆகும்.

    பணி நீக்கம் செய்யப்பட்ட போதிலும் புதிதாக ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவர் என்றும், தொடர்ந்து புது முதலீடுகள் செய்யப்படும் என்றும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. பணி நீக்கம் செய்யப்படுவோருக்கு தகவல் தெரிவிக்கும் பணி துவங்கிவிட்ட போதிலும், இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் தான் இந்த நடவடிக்கைகள் முழுமை பெறும்.

    • தங்களை பணிநீக்கம் செய்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ராஜசேகர் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.
    • வழக்குகளுக்கு ஆவின் நிர்வாகம் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஆவின் தலைமையகங்களில் பல்வேறு பணிகளுக்கு பெருந்தொகை லஞ்சம் பெற்றுக்கொண்டு தேர்வு நடத்தாமல் பணி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக திருப்பூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, தஞ்சாவூர், நாமக்கல், விருதுநகர், திருச்சி, தேனி மற்றும் சென்னை ஆகிய பால் உற்பத்தியாளர் சங்கங்களில் ஆவின் லஞ்ச ஒழிப்பு பிரிவின் பால்வள துணைப்பதிவாளர் மூலம் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த விசாரணையின் அடிப்படையில், ஆவினில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 236 ஊழியர்களை பணிநீக்கம் செய்து ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக செயல்பட்டதாக 26 அதிகாரிகள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், தங்களை பணிநீக்கம் செய்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ராஜசேகர் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

    அதில், அனைத்து தேர்வு நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு, முறையான நியமனத்தின் அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆவினில் பணியாற்றிவரும் நிலையில், எங்களுக்கு எவ்வித நோட்டீசும் அளிக்காமல் திடீரென பணிநீக்கம் செய்தது சட்டவிரோதமானது என்று கூறியிருந்தனர். இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தன.

    மனுதாரர்கள் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மனுதாரர்களான ஆவின் ஊழியர்களை பணிநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்குகளுக்கு ஆவின் நிர்வாகம் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வருகிற மார்ச் 17-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    • 28 பேர் பணிநீக்கம் செய்ததை கண்டித்து அனைத்து ஊழியர்களும் கடந்த 50 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
    • மற்றவர்கள் வேலையில் நேற்று இரவு பணியில் சேர்ந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி ஊழியர்கள் 28 பேர் பணிநீக்கம் செய்ததை கண்டித்து அனைத்து ஊழியர்களும் கடந்த 50 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்தும் எந்த விதமான முடிவும் எட்டப்படவில்லை. ஆகையால் 28 பேரை தவிர மற்ற ஊழியர்கள் குடும்ப சூழ்நிலை கருத்தில் கொண்டு மற்றவர்கள் வேலையில் நேற்று இரவு பணியில் சேர்ந்தனர். மற்றவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • பி.எட். படித்து வந்த கொழுந்தியாளியிடம், மதுரையில் உள்ள கோவிலுக்கு செல்லலாம் என்று கூறி அழைத்தார்.
    • கடத்தல் வழக்கு சம்பந்தமாக வெங்கடாசலத்தை பணி நீக்கம் செய்து கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

    கோவை:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 35). இவரது மனைவி சத்யா (24). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இவர் கடந்த 2018-ம் ஆண்டு கோபிசெட்டிப்பாளையம் மதுவிலக்கு பிரிவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் அவருக்கு மனைவியின் தங்கையை திருமணம் முடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. எப்படியாவது இந்த ஆசையை நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு வகையில் திட்டமிட்டார்.

    பி.எட். படித்து வந்த கொழுந்தியாளியிடம், மதுரையில் உள்ள கோவிலுக்கு செல்லலாம் என்று கூறி அழைத்தார். தொடர்ந்து வெங்கடாசலம் மனைவி சத்யா மற்றும் கொழுந்தியாளுடன் காரில் மதுரைக்கு சென்றார்.

    மதுரைக்கு முன்புள்ள போலீஸ் சோதனைச்சாவடியில், சத்யாவை கீழே இறக்கி விட்டார். பின்னர் வெங்கடாசலம் கொழுந்தியாளை மட்டும் கடத்திக் கொண்டு மதுரைக்கு சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சத்யா, இதுகுறித்து சோதனைச்சாவடியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் வெங்கடாசலத்தை மதுரைக்கு செல்லும் வழியில் மடக்கி பிடித்தனர். இதைத்தொடர்ந்து கடத்தல் உள்பட 2 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து வெங்கடாசலத்தை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இதைதொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த வெங்கடாசலம் மீண்டும் பணியில் சேர்ந்தார். பின்னர் அவர் நீலகிரி மாவட்டம் கூடலூர் போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

    அங்கு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் கடத்தல் வழக்கு சம்பந்தமாக வெங்கடாசலத்தை பணி நீக்கம் செய்து கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி உத்தரவு பிறப்பித்து உள்ளார். காவல் அதிகாரியாக இருந்து கொண்டு ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

    • முறைகேடு செய்த ரேசன்கடை விற்பனையாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டது.
    • முறைகேடு செய்த கொண்டையம்பட்டி நியாயவிலைக்கடை விற்பனையாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    மதுரை

    மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக்கடைகளை ஜூன் மாதத்தில் மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தலைமையிலான பறக்கும்படையினர் திடீர் ஆய்வு செய்தனர்.

    அப்போது வேலை நேரத்தில் கடை திறக்காமல், ரேசன் பொருட்களை முறையாக விநியோகம் செய்யாமலும், இருப்புக் குறைவு மற்றும் இருப்பு கூடுதல் இருந்தது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது. இவற்றில் கடுமையான முறைகேடு செய்த அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி நியாயவிலைக்கடை விற்பனையாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் மீது குடிமைப்பொருள் குற்றப்புல னாய்வுத்துறையில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இது போன்று நியாயவிலைக் கடையை குறித்த நேரத்தில் திறக்காமல் இருப்பது, ரேசன் பொருட்கள் முறையாக விநியோகம் செய்யாமல் இருப்பது போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் நியாயவிலைக்கடையின் விற்பனையாளர்கள் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×