search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மைக்ரோசாஃப்ட்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமெரிக்காவில் 2022 இறுதியில் இருந்தே ஆட்குறைப்பு தொடங்கியது
    • 50 சதவீத ஊதிய குறைப்புக்கு முன்வந்தாலும் பணி கிடைப்பது கடினமாக உள்ளது

    கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அமெரிக்காவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

    2022 இறுதியில் தொடங்கி, டெஸ்லா, எக்ஸ், மெட்டா, கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் உட்பட பல நிறுவனங்கள் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கின.

    உலகெங்கும் இருந்து அந்நிறுவனங்களில் பணியாற்ற சென்ற ஊழியர்களுக்கு வேறு வேலை கிடைக்காததால் விசா காலம் நிறைவடைந்து அமெரிக்காவில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

    இந்தியாவிலிருந்தும் அவ்வாறு பணியாற்ற சென்று ஆட்குறைப்பு நடவடிக்கையில் பணியிழந்தவர்களில் பலர் மீண்டும் தாயகம் திரும்பினர்.

    ஆனால், அவர்களுக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    2023ல் இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கி விட்டன.

    இங்கு பணியிழக்கும் ஊழியர்கள் ஊதியம் குறைந்தாலும், வேறு வேலை கிடைத்தால் போதும் எனும் முடிவில் கிடைக்கும் நிறுவனங்களில் உடனடியாக பணியில் சேர்கின்றனர்.

    அமெரிக்காவிலிருந்து வரும் இந்திய ஊழியர்கள் பெற்ற ஊதியத்துடன் ஒப்பிட்டால் இங்கு பணியில் இருப்பவர்களுக்கும், வேலையிழப்பினால் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு வருபவர்களுக்கும் நிறுவனங்கள் வழங்க வேண்டிய ஊதியம் மிகக் குறைவு.

    எனவே, அங்கிருந்து வருபவர்களுக்கு தகுதி இருந்தும் வேலை கிடைப்பது கடினமாக உள்ளது.

    அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் தகவல் தொழில்நுட்ப துறையில் காலியிடங்கள் மிக குறைவாக உள்ளதாகவும், ஒரே பணிக்கு 100க்கும் மேற்பட்ட திறமை வாய்ந்த ஊழியர்கள் விண்ணப்பிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் மனிதவள நிபுணர்கள் தெரிவித்தனர்.

    சுமார் 50 சதவீதம் வரை ஊதியத்தை குறைத்து கொள்ள அவர்கள் முன்வந்தாலும், மீண்டும் பணி கிடைப்பதே கடினமாகி வருகிறது.

    அங்கும் வேலை இழந்து, இங்கும் வேலை கிடைக்காமல், பல வருட சேமிப்புகளும் நாளுக்கு நாள் கரைந்து அவர்களின் நிலை நலிவடைந்து வருகிறது.

    2024-ஆம் வருடத்திலும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை நீடித்தால், மேலும் பல சாஃப்ட்வேர் துறை ஊழியர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    • மேக் சாதனங்களில் விண்டோஸ் ஒஎஸ் பயன்படுத்த விரும்புவோருக்கு இது சிறந்த வாய்ப்பாக இருக்கிறது.
    • சாதனம் சீராக இயங்க விண்டோஸ் 11 ARM டிரைவர்கள் அவசியம் தேவைப்படும்.

    மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ARM-சார்ந்த மேக் மாடல்களில் விண்டோஸ் 11 ஒஎஸ் பயன்படுத்த புதிய வழிமுறையை அறிவித்து இருக்கிறது. இதுபற்றிய விவரங்கள் மைக்ரோசாஃப்ட் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பேரலல்ஸ் டெஸ்க்டாப் 18 கொண்டு விண்டோஸ் 11 ப்ரோ மற்றும் எண்டர்பிரைஸ் ஒஎஸ்-களின் ARM வெர்ஷனை M1 மற்றும் M2 சார்ந்த மேக் சாதனங்களில் பயன்படுத்த அனுமதிக்கிறது.

    பணி சூழல் காரணமாக மேக் சாதனங்களில் விண்டோஸ் ஒஎஸ் பயன்படுத்த விரும்புவோருக்கு இது சிறந்த வாய்ப்பாக இருக்கிறது. எனினும், இதில் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அனைத்து விதமான ARM விண்டோஸ் பில்டுகளிலும் 32-பிட் மென்பொருள்களின் பயன்பாட்டை மைக்ரோசாஃப்ட் நிறுத்தி வருகிறது. இதனால் 32-பிட் ARM செயலிகளை பயன்படுத்த முடியாது.

     

    மேலும் சாதனம் சீராக இயங்க விண்டோஸ் 11 ARM டிரைவர்கள் அவசியம் தேவைப்படும். இத்துடன் ஆண்ட்ராய்டு செயலிகள், லினக்ஸ் சப்-சிஸ்டம் மற்றும் விண்டோஸ் சாண்ட்பாக்ஸ் என மற்றொரு லேயர் விர்ச்சுவலைசேஷன் தேவைப்படும் எதையும் பயன்படுத்த முடியாது. இறுதியில் DirectX 12 அல்லது OpenGL 3.3 கேட்கும் கேம்கள் எதும் வேலை செய்யாது.

    முன்னதாக 2021 வாக்கில் ARM மேக் மாடல்களில் விண்டோஸ் 11 பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டு இருந்தது. எனினும், இதற்கு பயனர்கள் ஒஎஸ்-இன் இன்சைடர் பிரீவியூவை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்து வந்தது. தற்போதைய அறிவிப்பின் மூலம் பயனர்கள் விண்டோஸ் 11-ஐ பேரலல்ஸ் டெஸ்க்டாப் 18 மூலம் டவுன்லோட் மற்றும் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

    புதிய மாற்றங்கள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு எவ்வாறு பாதிப்பாக இருக்கும் என்பது தெளிவற்ற நிலையிலேயே உள்ளது. ஆப்பிள் பூட் கேம்ப் மூலம் இண்டெல் சார்ந்த மேக் மாடல்களில் இருந்ததை போன்ற விண்டோஸ் சப்போர்ட் எதிர்பார்ப்போருக்கு புதிய நடவடிக்கை பயனற்றதாகவே இருக்கும்.

    • மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களில் ஐந்து சதவீதம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
    • பணி நீக்கம் செய்த போதிலும், மைக்ரோசாப்ட் தொடர்ந்து புது ஊழியர்களை பணியில் அமர்த்தி, மற்ற துறைகளில் முதலீடு செய்ய இருக்கிறது.

    மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்து இருக்கிறார். பணி நீக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இன்று முதல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. பொருளாதார சூழல் காரணமாக கடின முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக சத்ய நாதெல்லா குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது ஊழியர்களில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவானோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை சுமார் 2 லட்சத்து 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் சுமார் 99 ஆயிரம் பேர் அமெரிக்கா தவிர்த்த நாடுகளில் வசிப்போர் ஆவர். மைக்ரோசாப்ட் மட்டுமின்றி டுவிட்டர், அமேசான் மற்றும் மெட்டா போன்ற நிறுவனங்களும் பல ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

    உலகின் பெரும்பாலான நாடுகளில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு இருப்பது, நுகர்வோர் செலவு செய்வதை குறைந்து இருப்பது போன்ற காரணங்களால் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சத்ய நாதெல்லா நிறுவன ரீதியில் அனுப்பிய அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார். செலவீனங்களை மறு கட்டமைப்பு செய்து, வருவாயை முறைப்படுத்த பணி நீக்கம் அத்தியாவசியமான ஒன்று ஆகும்.

    பணி நீக்கம் செய்யப்பட்ட போதிலும் புதிதாக ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவர் என்றும், தொடர்ந்து புது முதலீடுகள் செய்யப்படும் என்றும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. பணி நீக்கம் செய்யப்படுவோருக்கு தகவல் தெரிவிக்கும் பணி துவங்கிவிட்ட போதிலும், இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் தான் இந்த நடவடிக்கைகள் முழுமை பெறும்.

    • ராக்ஸ்டார் நிறுவனம் உருவாக்கி வரும் GTA 6 உலகம் முழுக்க அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் கேம் ஆகும்.
    • புதிய GTA 6 வெளியீடு பற்றிய தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    உலக கேமிங் சந்தையில் எப்போதும் பிரபல கேமாக இருப்பது GTA (கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ) எனலாம். இதன் கடைசி வெர்ஷனான GTA 5 2013 வாக்கில் வெளியிடப்பட்டது. எனினும், இந்த கேம் தற்போதும் அமோக விற்பனையை பதிவு செய்து வருகிறது. எனினும், ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்தின் புதிய GTA 6 வெளியீட்டை ஆவலோடு எதிர்பார்க்கும் கேமர்கள் கூட்டமும் காத்துக் கொண்டே தான் இருக்கிறது.

    இந்த நிலையில், GTA 6 வெளியீட்டு விவரத்தை மைக்ரோசாஃப்ட் அம்பலப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆக்டிவிஷன்-பிலிசார்டு நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் கைப்பற்றும் விவகாரத்தை ஐக்கிய ராஜ்ஜியத்தின் CMA அமைப்பு கண்காணித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பார அந்த அமைப்பு விசாரணையை துவங்கி, பில்லியன் டாலர் ஒப்பந்தம் பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

    விசாரணையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மிக விரைவாக தனது பதில்களை பதிவிட்டு வருகிறது. அந்த வகையில், மைக்ரோசாஃப்ட் பதிவிட்ட ஆவணம் ஒன்றில் GTA 6 வெளியீடு பற்றிய தகவல் இடம்பெற்று இருக்கிறது. ஆவணத்தின் 24-வது பக்கத்தில், "அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6 கேம் 2024 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    மைக்ரோசாஃப்ட் மற்றும் ராக்ஸ்டார் இடையே நிலவும் ஒருமித்த கருத்து காரணமாக இந்த தகவல் உண்மையாக இருக்கும் என்றே எடுத்துக் கொள்ளலாம். எனினும், இந்த நிறுவனம் CMA விசாரணையில் உள்ளது. அந்த வகையில் இரு நிறுவனங்கள் இடையேயான பில்லின் டாலர் ஒப்பந்தமும் கேள்விக்குறியாகவே உள்ளது.

    ×