search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Job Cut"

    • முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது 136 சதவீதம் அதிகம்.
    • போட்டியை எதிர்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

    அமெரிக்க கார்ப்பரேட்களில் முதன்மை நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் Nike, 2024 ஆண்டை ஆட்குறைப்பு நடவடிக்கை மூலம் துவங்கியுள்ளது.

    கடந்த மாதத்தில் மட்டும் 82 ஆயிரத்து 307 பேரை பணிநீ்கம் செய்வதாக அறிவித்து இருந்தது. இது அதற்கும் முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது 136 சதவீதம் அதிகம் ஆகும். இதோடு 2009 நிதி நெருக்கடி துவங்கியதில் இருந்து ஜனவரி மாத வாக்கில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய பணிநீக்க நடவடிக்கையாக அமைந்தது.

    பெருந்தொற்று காலக்கட்டத்தில் அதிகளவில் ஆட்களை பணியமர்த்தியது மற்றும் வேறு பிரிவுகளில் முதலீடு செய்வது உள்ளிட்டவைகளை பணிநீக்கத்திற்கு காரணமாக Nike நிறுவனம் தெரிவித்துள்ளது.

    உலகளவில் Nike Inc. நிறுவனம் 2 சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்ய இருக்கிறது. பணிநீக்கத்தால் செலவீனங்களை குறைப்பதன் மூலம் சரிந்து வரும் விற்பனை மற்றும் போட்டியை எதிர்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

    இந்த முறை ஆட்குறைப்பு நடவடிக்கையில் எத்தனை ஊழியர்கள் பாதிக்கப்படுவர் என்பது குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    • மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களில் ஐந்து சதவீதம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
    • பணி நீக்கம் செய்த போதிலும், மைக்ரோசாப்ட் தொடர்ந்து புது ஊழியர்களை பணியில் அமர்த்தி, மற்ற துறைகளில் முதலீடு செய்ய இருக்கிறது.

    மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்து இருக்கிறார். பணி நீக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இன்று முதல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. பொருளாதார சூழல் காரணமாக கடின முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக சத்ய நாதெல்லா குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது ஊழியர்களில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவானோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை சுமார் 2 லட்சத்து 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் சுமார் 99 ஆயிரம் பேர் அமெரிக்கா தவிர்த்த நாடுகளில் வசிப்போர் ஆவர். மைக்ரோசாப்ட் மட்டுமின்றி டுவிட்டர், அமேசான் மற்றும் மெட்டா போன்ற நிறுவனங்களும் பல ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

    உலகின் பெரும்பாலான நாடுகளில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு இருப்பது, நுகர்வோர் செலவு செய்வதை குறைந்து இருப்பது போன்ற காரணங்களால் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சத்ய நாதெல்லா நிறுவன ரீதியில் அனுப்பிய அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார். செலவீனங்களை மறு கட்டமைப்பு செய்து, வருவாயை முறைப்படுத்த பணி நீக்கம் அத்தியாவசியமான ஒன்று ஆகும்.

    பணி நீக்கம் செய்யப்பட்ட போதிலும் புதிதாக ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவர் என்றும், தொடர்ந்து புது முதலீடுகள் செய்யப்படும் என்றும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. பணி நீக்கம் செய்யப்படுவோருக்கு தகவல் தெரிவிக்கும் பணி துவங்கிவிட்ட போதிலும், இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் தான் இந்த நடவடிக்கைகள் முழுமை பெறும்.

    ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் பயணியாற்றி வரும் ஊழியர்களில் சுமார் 4600 பேரை பணியில் இருந்து நீக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
    லண்டன்:

    ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன சீரமைப்பு காரணமாக அந்நிறுவன ஊழியர்களில் 4600 பேரை பணி நீக்கம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேளாலர்கள், உதவியாளர் பதவியில் இருப்பவர்கள் இதில் பாதிக்கப்பட இருக்கின்றனர். 

    இந்நிறுவனம் பொது வான்வெளி, பாதுகாப்பு மற்றும் மின்சக்கதி துறைகளில் மீண்டும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. மூன்றில் ஒரு பங்கு பணி நீக்கம் இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் என ரோல்ஸ் ராய்ஸ் தெரிவித்துள்ளது. இது 2019-ம் ஆண்டில் தொடர்ந்து 2020-ம் ஆண்டு மத்தியில் நிறைவுறுகிறது.

    இதற்கான செலவீனம் 50 கோடி யூரோ என கணக்கிடப்பட்டு இருக்கும் நிலையில், 2020-ம் ஆண்டு வாக்கில் நிறுவனத்துக்கு 40 கோடி யூரோக்களை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டென்ட் 1000 இன்ஜின் மூலம் பிரச்சனைகளை சரி செய்து கொள்ள ரோல்ஸ் ராய்ஸ் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    இன்ஜின் பாகங்கள் எதிர்பார்த்தளவு இயங்காத காரணத்தால் சில விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அனைத்து இன்ஜின்களையும் சரி செய்ய சில ஆண்டுகள் ஆகும் என ரோல்ஸ் ராய்ஸ் தெரிவித்துள்ளது.
    ×