என் மலர்
நீங்கள் தேடியது "விமான போக்குவரத்து"
- சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னை, ஐதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு பயணிகள் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
- ஏற்கனவே உள்ள நேரத்தின்படி ஐதராபாத் மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு வழக்கம் போல விமானங்கள் இயக்கப்படும்.
சேலம்:
சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னை, ஐதராபாத் , பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு பயணிகள் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. வருகிற 26-ந்தேதி முதல் குளிர்கால அட்டவணைபடி விமானங்களை இயக்க உள்ளனர்.
அதில் ஏற்கனவே உள்ள நேரத்தின்படி ஐதராபாத் மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு வழக்கம் போல விமானங்கள் இயக்கப்படும். சேலம்-சென்னை விமான நேரம் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 26-ந் தேதி முதல் மதியம் 2.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு 3.20 மணிக்கு சேலம் வந்தடையும். மீண்டும் 3.40 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு 4.55 மணிக்கு சென்னை சென்றடையும். இந்த தகவலை இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது வரை சேலத்தில் இருந்து மாலை 5 மணிக்கு விமானம் புறப்பட்டு சென்னைக்கு செல்கிறது.
- DGCA இன் இயக்குநர் ஜெனரல் தலைமையிலான இரண்டு சிறப்புக் குழுக்கள் ஆய்வு செய்தன
- விமானத்தில் உள்ள குறைபாடுகள் சரிசெய்யப்படாமல் தொடர்கின்றன.
அகமதாபாத், ஏர் இந்தியா விமான விபத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் விமானப் பாதுகாப்பில் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) கவனம் செலுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் பல முக்கிய விமான நிலையங்களில் விமான அமைப்புகளில் பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
விமானங்கள் மற்றும் ஓடுபாதைகள் உட்பட பல முக்கிய பகுதிகளில் பிரச்சினைகள் இருப்பதாக DGCA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
DGCA இன் இயக்குநர் ஜெனரல் தலைமையிலான இரண்டு சிறப்புக் குழுக்கள் சமீபத்தில் டெல்லி மற்றும் மும்பை போன்ற நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டன.
இந்த ஆய்வுகளின் ஒரு பகுதியாக, விமான செயல்பாடுகள், சாய்வுதளப் பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்புகள், தகவல் தொடர்பு, உபகரணங்கள் மற்றும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு பணியாளர்களுக்கான மருத்துவ சோதனைகள் போன்ற பல முக்கிய அம்சங்களை அவர்கள் உன்னிப்பாக ஆய்வு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆய்வுகள் பல கவலைக்குரிய விஷயங்களை வெளிப்படுத்தியுள்ளன. ஒரு விமான நிலையத்தில், தேய்ந்துபோன டயர்கள் காரணமாக தரையிறக்கப்பட்ட உள்நாட்டு விமானத்தை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். மேலும் மங்கலான ஓடுபாதையால் ஏற்படும் சிரமங்களையும் கண்டறிந்தனர்.
சில சந்தர்ப்பங்களில், விமானத்தில் உள்ள குறைபாடுகள் சரிசெய்யப்படாமல் தொடர்கின்றன என்று DGCA தெரிவித்துள்ளது.
கூடுதலாக, ஒரு இடத்தில் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் சிமுலேட்டர் உண்மையான விமான இயக்கத்துடன் ஒத்துப்போகவில்லை என்றும், தொடர்புடைய மென்பொருள் சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பிக்கப்படவில்லை என்றும் தெரியவந்தது.
இதுபோன்ற குறைபாடுகள் கடுமையான மேற்பார்வை இல்லாததையும், பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அக்கறையின்மையையும் வெளிப்படுத்துவதாக DGCA குறிப்பிட்டுள்ளது.
குறைபாடுகள் கண்டறியப்பட்ட விமான நிறுவனங்கள் அல்லது பிற துறைகளின் பெயர்களை DGCA இன்னும் வெளியிடவில்லை.
இருப்பினும், அடையாளம் காணப்பட்ட அனைத்து குறைபாடுகளும் தொடர்புடைய நிறுவனங்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டு, உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக DGCA தெரிவித்துள்ளது.
விமானப் பயணத்தில் பாதுகாப்புக்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், இந்த விஷயத்தில் சமரசத்திற்கு இடமில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஏர் இந்தியா தானாக முன்வந்து ஒப்புக்கொண்டதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (DGCA) தெரிவித்துள்ளது.
- அபராதங்கள், உரிம ரத்து அல்லது இயக்க அனுமதி ரத்து உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்த்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த மருத்துவ மாணவர் விடுதி மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 274 பேர் வரை உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே பல்வேறு ஏர்இந்தியா விமானங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விமானப் பணியாளர்களின் உரிமம், ஓய்வு நேரம் மற்றும் சமீபத்திய தகுதித் தேவைகளில் பலமுறை விதிமீறல்கள் நடந்ததாக ஏர் இந்தியா தானாக முன்வந்து ஒப்புக்கொண்டதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (DGCA) தெரிவித்துள்ளது.
மே 16 மற்றும் 17 தேதிகளில் பெங்களூரு-லண்டன் இடையே இயக்கப்பட்ட இரண்டு விமானங்களில், அனுமதிக்கப்பட்ட 10 மணி நேரத்திற்கு மேல் விமானிகள் விமானத்தை இயக்க வைக்கப்பட்டனர், இது விமான கடமை நேர வரம்பு (FDTL) விதிமுறைகளின் மீறல் என்றும் DGCA ஏர் இந்தியாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் விதிமீறல்களில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட மூன்று மூத்த அதிகாரிகளை, பணியாளர் திட்டமிடல் மற்றும் அட்டவணைப்படுத்துதல் தொடர்பான அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குமாறு ஏர் இந்தியாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அதிகாரிகள் மீது தாமதமின்றி உள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதன் முடிவுகளை 10 நாட்களுக்குள் டிஜிசிஏவுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் பணியாளர் திட்டமிடல் விதிமுறைகள், உரிமம் அல்லது விமான நேர வரம்புகளில் ஏதேனும் மீறல்கள் கண்டறியப்பட்டால், அபராதங்கள், உரிம ரத்து அல்லது இயக்க அனுமதி ரத்து உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிஜிசிஏ எச்சரித்துள்ளது. இதற்கு ஏழு நாட்களுக்குள் பதிலளிக்குமாறு ஏர் இந்தியாவுக்கு டிஜிசிஏ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
- 2020 முதல் உள்நாட்டு விமானங்களில் 2,461 தொழில்நுட்பக் குறைபாடுகள் பதிவாகியுள்ளன.
- குறிப்பாக, மூலதனச் செலவு 91% குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பயணிகளின் பாதுகாப்பிற்கான ஒழுங்குமுறை அமைப்புகள் நிதிப் பற்றாக்குறை மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து, இந்த நீண்டகாலப் புறக்கணிப்பின் ஆபத்தை வெளிப்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் (MoCA) பட்ஜெட் கடந்த இரண்டு ஆண்டுகளில் 23% குறைந்துள்ளது. குறிப்பாக, மூலதனச் செலவு 91% குறைக்கப்பட்டுள்ளது. இது வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலைப் பாதிக்கும் என நாடாளுமன்ற நிலைக்குழு எச்சரித்துள்ளது.
விமானப் பாதுகாப்பை ஒழுங்குபடுத்தும் DGCA-வில் 48% (814 பணியிடங்கள்) காலியாக உள்ளன. இதனால், விமான நிறுவனங்களின் பாதுகாப்பு விதிகளை ஆய்வு செய்யும் பணிகள் பாதிக்கப்படுகின்றன.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு (ATC) மற்றும் பிற முக்கிய சேவைகளை வழங்கும் AAI-ல் 36% (9,502 பணியிடங்கள்) காலியாக உள்ளன.
நாட்டில் 5,537 ATCO (விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள்)தேவைப்படும் நிலையில், 3,924 பேர் மட்டுமே உள்ளனர். இது ஏறக்குறைய 30% பற்றாக்குறையாகும். இதனால், கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு விபத்து அபாயம் அதிகரிக்கிறது.
அடுத்த பத்தாண்டுகளில் 30,000 விமானிகள் தேவைப்படும் நிலையில், இந்தியாவில் வெறும் 300 விமானிகளை மட்டுமே உருவாக்க முடிகிறது.
2020 முதல் உள்நாட்டு விமானங்களில் 2,461 தொழில்நுட்பக் குறைபாடுகள் பதிவாகியுள்ளன. இதில் ஏர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனங்களில் 389 குறைபாடுகள் இருந்துள்ளன. கடந்த ஆண்டு மட்டும் 23 முறை விமானப் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.
விமானப் போக்குவரத்து பாதுகாப்பு நிபுணர்கள், இந்த நிதி மற்றும் ஆள் பற்றாக்குறை பயணிகளின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்றும், எதிர்காலத்தில் மேலும் விமான விபத்துகள் ஏற்பட வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கின்றனர்.
- உலகளாவிய விமான போக்குவரத்து பாதுகாப்பு தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.
- உலகளாவிய விமான போக்குவரத்து பாதுகாப்பு தரவரிசை பட்டியலில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது.
புதுடெல்லி:
உலகளாவிய விமான போக்குவரத்து பாதுகாப்பு தரவரிசை பட்டியலை சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, விமான பாதுகாப்பு தரவரிசையில் இந்தியா 48-வது இடத்தில் உள்ளது. முன்னதாக, இந்த தரவரிசை பட்டியலில் இந்தியா 102-வது இடத்தில் இருந்தது.
உலகளாவிய விமான போக்குவரத்து பாதுகாப்பு தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் 2-வது இடத்திலும், தென் கொரியா 3-வது இடத்திலும் உள்ளது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக 49-வது இடத்தில் சீனா உள்ளது.
இதுதொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் அதிகாரி கூறுகையில், நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்கின்றோம். தற்போது பெற்றிருக்கும் இந்த புதிய நிலையை தக்கவைத்துக்கொள்வதில் சவால் உள்ளது. விமான போக்குவரத்து இயக்குனரகம் திறமையான அதிகாரிகளைக் கொண்டுள்ளது. எங்களுக்கு சரியான ஆதரவை வழங்கினால், நாங்கள் மேலும் மேம்படுத்துவோம் என்று நாங்கள் நம்புகிறோம். தரவரிசை பட்டியலில் 102-வது இடத்தில் இருந்து 48-வது இடத்திற்கு முன்னேறியிருப்பது மிகப்பெரிய சாதனையாகும் என தெரிவித்தார்.
- விமானங்களை அறிவிக்கப்பட்ட நேரத்தில் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது.
- அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
டெல்லி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று காலையில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. வாகன போக்குவரத்து வழக்கத்தைவிட மெதுவாகவே இருந்தது. விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக, விமானங்களை அறிவிக்கப்பட்ட நேரத்தில் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது.
பயணிகள் முன்பதிவு செய்துள்ள விமானங்களுக்கான பயண நேரம் குறித்து அந்தந்த விமான நிறுவனங்களிடம் கேட்டு அறிந்துகொள்ளும்படி விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
டெல்லியில் அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 30ம் தேதிவரை வெப்ப அலை இருக்காது என கணித்துள்ளது.
- விமானம் டெல்லியை அடைந்ததும், அந்த பயணியை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர்.
- இந்த சம்பவம் குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சமீபகாலமாக விமானங்களில் ஊழியர்களிடம் பயணிகள் அத்துமீறி நடந்துகொள்வதும், கைகலப்பில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கோவாவில் இருந்து நேற்று டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் ஊழியரை தாக்கி உள்ளார். விமானம் டெல்லியை அடைந்ததும், அந்த பயணியை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:-
விமானத்தில் பயணித்த ஒரு பயணி, ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ஒரு ஊழியரை தாக்கி உள்ளார். டெல்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோதும், அந்த பயணி ஆக்ரோஷமாக நடந்துகொண்டார். எனவே, அவர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் புகார் அளித்துள்ளோம். பயணிகளின் பாதுகாப்புடன் உங்கள் பணியாளர்களின் பாதுகாப்பும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது,
இவ்வாறு அவர் கூறினார்.
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரக விதிகளின் படி, அத்துமீறி நடக்கும் விமானப் பயணிக்கு, அவர் செய்த குற்றத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட காலத்திற்கு விமானத்தில் பறக்க தடை விதிக்கலாம்.
- திருப்பதி ஏழுமலையான் கோவில் கோபுரம் மேல் பகுதியில் 2 ஹெலிகாப்டர்கள் வட்டமடித்தன.
- சட்டப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
திருப்பதி:
திருப்பதி மலை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுவதால் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா குட்டி விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளன.
தடையை மீறி அடிக்கடி விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஏழுமலையான் கோவில் மீது பறந்து செல்கின்றன. இது குறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மத்திய விமான போக்குவரத்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவில் கோபுரம் மேல் பகுதியில் 2 ஹெலிகாப்டர்கள் வட்டமடித்தன.
இதனைக் கண்ட அர்ச்சகர்கள், பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
ஹெலிகாப்டர்கள் எங்கிருந்து எங்கு சென்றது என எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் சட்டப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் திணறி வருகின்றனர்.







