search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "omicron virus"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மனிதர்களை பாதிக்கும் தொற்று நோய்கள் விலங்கிலிருந்து பரவ வாய்ப்பு உள்ளது என்பதை ஒட்டுமொத்த ஆராய்ச்சி காட்டுகிறது.
    • 'பாலுாட்டி விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு, பாதிப்பு ஏற்படும்' என அறிக்கைகள் கூறுகின்றன.

    கொரோனா உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எவ்வாறு பரவியது என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு தைவான் நாட்டில் ஒரு ஆய்வு மையத்தில் தனிமையில் இருந்த இளம் பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

    அவர் ஆய்வகத்தை விட்டு வேறு எங்கும் செல்லவில்லை. இதனால் அவருக்கு எப்படி கொரோனா பரவியது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாதிப்பு ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக அவரை எலி கடித்தது தெரியவந்தது.

    எலி மூலம் கொரோனா பரவியதா என அப்போது பெரும் கேள்வி எழுந்தது.

    இதனைத் தொடர்ந்து ஆப்பிரிக்கா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் எலிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் எலிகளுக்கு டெல்டா ஒமைக்ரான் வகையான உருமாறிய கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி மற்றும் பிற இந்திய நிறுவனங்களின் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    அவர்கள் எலிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதில் எலிகளிடமிருந்து உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தோன்றியிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

    மனிதர்களை பாதிக்கும் தொற்று நோய்கள் விலங்கிலிருந்து பரவ வாய்ப்பு உள்ளது என்பதை ஒட்டுமொத்த ஆராய்ச்சி காட்டுகிறது.

    விலங்குகள் மற்றும் பிற உயிரினங்களில் தொற்று நோய்கள் அவைகளுக்குள் வேகமாக பரவி பின்னர் மனிதனுக்கு பரவுகிறது.

    பின்லாந்து நாட்டில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் கொரோனா வைரஸ் நோயால் எலிகள் எளிதில் பாதிக்கப்படுவதாக கண்டறிந்துள்ளனர்.

    நெதர்லாந்து நாட்டில் வெள்ளெலிகளுக்குள் ஒமைக்ரான் வைரஸ் ஒன்றுக்கொன்று பரவி பின்னர் அவற்றிலிருந்து மனிதர்களுக்கு பரவியது தெரியவந்துள்ளது.

    எலிகளிடமிருந்து மனிதர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவினாலும் எலிகளுக்கு இந்த நோய் எப்படி ஏற்படுகிறது என்று கேள்வி எழுந்துள்ளது.

    எலிகள் நெருக்கமாக வசிக்கும் போது அவை எளிதில் நோய் பாதிப்புக்கு ஆளாகின்றன.

    அதன் மூலம் மனிதனுக்கு காற்றில் ஒமைக்ரான் வைரஸ் பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் கொரோனா பாதிப்பு தொடர்பான ஆய்வின் முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது.

    இதில், நியூயார்க்கில் சாலைகளில் சுற்றித்திரியும் எலிகள் 3 வகையான உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளது தெரியவந்தது.

    இங்கு 79 எலிகளை சோதனை செய்ததில், 16 எலிகளுக்கு, கொரோனா தொற்றின் உருமாறிய வகைகளான ஆல்பா, டெல்டா, ஒமைக்ரான் வகை தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    'பாலுாட்டி விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு, பாதிப்பு ஏற்படும்' என அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் இது அரிதானது.

    எனவே, இது குறித்து குழப்பமடைய வேண்டாம் என தெரிவித்துள்ளது.

    • எக்ஸ்.பி.பி.1.5 வைரஸ் மாறுபாடு 38 நாடுகளில் பரவி உள்ளது. இங்கிலாந்து, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளிலும் பரவி இருக்கிறது.
    • ஐரோப்பாவில் ஒமைக்ரான் மாறுபாடு விரைவில் அதிகளவு பரவி பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பாரீஸ்:

    கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு வைரஸ் கட்டுக்குள் வந்தாலும் பல நாடுகளில் பாதிப்பு தொடர்ந்தபடியே உள்ளது.

    அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் இருந்து வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் மாறுபாடான எக்ஸ்.பி.பி.1.5 வைரஸ் பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 27 சதவீதம் பேர் ஒமைக்ரான் மாறுபாட்டுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    இந்த எக்ஸ்.பி.பி.1.5 வைரஸ் மாறுபாடு 38 நாடுகளில் பரவி உள்ளது. இங்கிலாந்து, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளிலும் பரவி இருக்கிறது.

    இந்த நிலையில் ஐரோப்பாவில் ஒமைக்ரான் மாறுபாடு விரைவில் அதிகளவு பரவி பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் கூறியதாவது:-

    அமெரிக்காவில் கொரோனா பாதிப்பில் எக்ஸ்.பி.பி.1.5 வைரஸ் தொற்று பாதிப்பு 25 சதவீதத்துக்கு மேல் உள்ளது. இந்த வைரஸ் இன்று வரை மிகவும் வேகமாக பரவக்கூடியதாக உள்ளது.

    இந்த ஒமைக்ரான் மாறுபாடு ஐரோப்பாவில் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு உள்ளது.

    இந்த மாறுபாட்டுடன் தொடர்புடைய ஆபத்து குறைவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் முதியவர்கள், தடுப்பூசி போடாத, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுள்ளவர்கள் போன்று பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு ஆபத்து மிதமானது முதல் அதிகமானது வரை இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

    • பிஏ.2.38 வகை தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 73 சதவீதம் பேருக்கு காய்ச்சல் ஏற்படுவது தெரியவந்துள்ளது.
    • மேலும் 23 சதவீதம் பேருக்கு சளி, 17 சதவீதம் பேருக்கு உடல்வலி, 15 சதவீதம் பேருக்கு தொண்டை வலி, 13 சதவீதம் பேருக்கு தலைவலி ஏற்படுவது தெரியவந்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பதற்கு ஒமைக்ரானின் புதிய வகை திரிபான பிஏ.2 வகை தொற்று பரவுவதே காரணம் என சுகாதாரத்துறையினர் கூறுகின்றனர்.

    அதிலும் பிஏ.2 வகையில் துணை திரிபான பிஏ.2.38 வகை தொற்றுகள் மெல்ல, மெல்ல தனது ஆதிக்கத்தை செலுத்தி வருவதாக மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த வகை பிரிவுகள் வேகமாக பரவும் வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளனர். அதே நேரம் இந்த வகை தொற்றால் தீவிர பாதிப்பு ஏற்படுவது இல்லை என்பது சற்று ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது.

    இந்த வகை தொற்று பாதிப்புக்குள்ளானவர்களுக்கு காய்ச்சல், சளி, உடல் வலி, தொண்டை வலி, தலைவலி ஏற்படும் எனவும் கூறுகின்றனர்.

    பிஏ.2.38 வகை தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 73 சதவீதம் பேருக்கு காய்ச்சல் ஏற்படுவது தெரியவந்துள்ளது. மேலும் 23 சதவீதம் பேருக்கு சளி, 17 சதவீதம் பேருக்கு உடல்வலி, 15 சதவீதம் பேருக்கு தொண்டை வலி, 13 சதவீதம் பேருக்கு தலைவலி ஏற்படுவது தெரியவந்துள்ளது.

    தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமல்லாது குஜராத், டெல்லி, கர்நாடகா, அரியானா, உத்தரபிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா உள்பட நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் தொற்று பாதிப்பு உயர்வதற்கு இந்த வகை தொற்றுகளே காரணமாக அமைந்துள்ளது எனவும் சுகாதரத்துறையினர் கூறுகின்றனர்.

    புதிய தொற்றால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்றாலும் எந்த அளவிற்கு வேகமாக பரவுகிறது என்பதை அரிய மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

    • ஒமைக்ரான் பாதிப்புக்கு பிறகு நீண்ட கால அறிகுறிகளின் ஆபத்து டெல்டாவை விட குறைவாக இருக்கிறது.
    • என்றாலும் அது தடுப்பூசியை முழுமையாக செலுத்தியவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

    லண்டன்:

    கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி தற்போது வரை பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

    கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்று பெயரிடப்பட்டது.

    இதற்கிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதிய உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது.

    மற்ற உருமாறிய கொரோனா வைரஸ்களை விட ஒமைக்ரான் வேகமாக பரவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஒமைக்ரான் வைரசால் பல நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்தது.

    இந்த நிலையில் மற்ற உருமாறிய கொரோனா வைரஸ்களை விட ஒமைக்ரான் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக இங்கிலாந்தைச் சேர்ந்த லண்டன் கிங்ஸ் கல்லூரியில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கூறியிருப்பதாவது:-

    இங்கிலாந்தில் டெல்டா வைரசுடன் ஒப்பிடும்போது ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொற்றுக்கு பிறகு நீண்ட கால கொரோனா பாதிப்பு உருவாவதற்கான வாய்ப்பு 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைவாக இருக்கிறது.

    இது நோயாளியின் வயது மற்றும் கடைசி தடுப்பூசி செலுத்திய நேரத்தை பொறுத்து மாறுபடும்.

    ஒமைக்ரான் பாதிப்புக்கு பிறகு நீண்ட கால அறிகுறிகளின் ஆபத்து டெல்டாவை விட குறைவாக இருக்கிறது. என்றாலும் அது தடுப்பூசியை முழுமையாக செலுத்தியவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

    2021-ம் ஆண்டு டிசம்பர் முதல் 2022-ம் ஆண்டு மார்ச் வரை ஒமைக்ரான் பாதிப்பு உச்சத்தில் இருந்த போது நோய் பாதிப்புக்கு உள்ளான 56,003 பேரில் 4.5 சதவீதம் பேர் நீண்ட கால பாதிப்பை பதிவு செய்து உள்ளனர்.

    டெல்டா வைரஸ் அலையின்போது (2021 ஜூன் முதல் நவம்பர் வரை) 41,361 பேரில் 10.8 சதவீதம் பேர் நீண்ட கால கொரோனா அறிகுறிகளுடன் இருந்து உள்ளனர்.

    இதுகுறித்து ஆராய்ச்சியாளர் டாக்டர் கிளாரி ஸ்டீவ்ஸ் கூறும்போது, ஒமைக்ரான் வைரசால் நீண்ட கால பாதிப்பு இருக்கும் வாய்ப்பு குறைவு என்றாலும் அதற்கான சிகிச்சைகளை நீக்கி விட கூடாது என்றார்.

    • கடந்த 4 மாதங்களாக ஒருவருக்கு கூட தொற்று கண்டறியப்படாத நிலையில் அப்சர்வேட்டரியை சேர்ந்த 55 வயது ஆணுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது.
    • வானியல் ஆய்வு மையத்தை சேர்ந்த இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடைக்கானலில் நடந்த விஞ்ஞானிகள் மாநாட்டில் பங்கேற்றார்.

    கொடைக்கானல்:

    சுற்றுலா நகரான கொடைக்கானலில் திண்டுக்கல் மாவட்டத்திலேயே முதன் முறையாக 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய நகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இங்கு 2000-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டனர்.

    கடந்த 4 மாதங்களாக ஒருவருக்கு கூட தொற்று கண்டறியப்படாத நிலையில் அப்சர்வேட்டரியை சேர்ந்த 55 வயது ஆணுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது. வானியல் ஆய்வு மையத்தை சேர்ந்த இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடைக்கானலில் நடந்த விஞ்ஞானிகள் மாநாட்டில் பங்கேற்றார். இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    இதன் காரணமாக இவருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சுகாதாரத்துறையினர் சந்தேகமடைந்துள்ளனர். அவரை தனிமைப்படுத்தி உள்ள மருத்துவத்துறையினர் அவருடன் தொடர்பில் இருந்த 8 பேர்களுக்கும் பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு சோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கொடைக்கானலில் கோடை சீசன் நிறைவடைந்துள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க நாடுகளுக்கு உதவி செய்ய இந்தியா தயாராக உள்ளது என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    ஒமிக்ரான் கொரோனா வைரஸ் குறித்து உலகமே அச்சத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்காவில்  முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ள இந்த வகை கொரோனா ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக கால் பதித்து வருகிறது.  ஒமிக்ரான் பரவலால் தென் ஆப்பிரிக்காவில் வேகமாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில், ஒமிக்ரான் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க நாடுகளுக்கு உதவி செய்ய  இந்தியா தயாராக உள்ளது என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. 

    இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், 

    ஒமிக்ரான் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட  ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவி செய்ய இந்திய அரசு தயாராக உள்ளது. அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், சோதனைக் கருவிகள், கையுறைகள், பிபிஇ கருவிகள் மற்றும் வென்டிலேட்டர்கள் போன்ற மருத்துவ உபகரணங்களைத் தேவைப்படும்போது வழங்கவும் இந்தியா தயாராக உள்ளது. 

    மேலும் மரபணு கண்காணிப்பு மற்றும் வைரஸ் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளில் ஆப்பிரிக்க விஞ்ஞானிகளுடன் இந்திய நிறுவனங்கள் பணியாற்றுவது குறித்தும் பரிசீலிக்கப்படும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஜப்பான் நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் வராமல் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
    டோக்கியோ:

    உலகம் முழுவதும் ஒமிக்ரான் உருமாறிய வைரஸ் பொது மக்களை மிரட்டி வருகிறது. இதையடுத்து பல உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கி உள்ளன. இதே போல் ஜப்பான் நாட்டிலும் ஒமிக்ரான் வைரஸ் வராமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தென்ஆப்பிரிக்கா உள்பட 8 நாடுகளில் இருந்து ஜப்பானுக்கு வரும் பயணிகள் 10 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் நாளை முதல் ஜப்பானுக்குள் நுழைய வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வரும் என பிரதமர் புமியே கிஷிடா தெரிவித்துள்ளார்.
    கொரோனா தற்போது கட்டுக்குள் வந்து விட்டதாக பலரும் அலட்சியமாக முக கவசம் அணியாமல் செல்வதை பார்க்க முடிகிறது. இது மிகப்பெரிய தவறாகும் என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.
    சென்னை:

    தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரசான ‘ஒமிக்ரான்’ மிக வேகமாக வெளிநாடுகளில் பரவி வருகிறது.

    இந்த புதிய வைரஸ் இந்தியாவுக்குள் பரவி விடாமல் தடுக்க மத்திய அரசு அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

    இதுகுறித்து தமிழக அரசுக்கும், மத்திய அரசு கடிதம் எழுதி உஷார்படுத்தி உள்ளது.

    இந்த கடிதத்தை அடிப்படையாக வைத்து ‘ஒமிக்ரான்’ வகை கொரோனாவை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், விமான நிலைய இயக்குனர்கள் சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

    முக கவசம்

    இதுபற்றி ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    கொரோனா தற்போது கட்டுக்குள் வந்து விட்டதாக பலரும் அலட்சியமாக முக கவசம் அணியாமல் செல்வதை பார்க்க முடிகிறது. இது மிகப்பெரிய தவறாகும். எந்த ஒரு வைரசும் நம்மை தாக்காமல் இருக்க வேண்டுமானால் முக கவசம்தான் பாதுகாக்கும். எனவே கண்டிப்பாக அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்.

    தற்போது தென் ஆப்பிரிக்காவில் புதியதாக உருமாறி வந்துள்ள ஒமிக்ரான் வைரஸ் பல நாடுகளில் வேகமாக பரவி விட்டது. இன்னும் இந்தியாவிற்குள் நுழையவில்லை.

    ஆனாலும் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஏனென்றால் அது போன்ற வீரியமிக்க வைரஸ் பரவினால் அதன் எதிர்விளைவுகள் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும். அதிக உயிரிழப்பு கூட உருவாக்கி விடும்.

    இதை கருத்தில் கொண்டு கொரோனா காலத்தில் நாம் மேற்கொண்ட அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதும் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும்.

    இப்போதுள்ள சூழலில் கொரோனாவுக்குதான் தடுப்பூசி உள்ளது. இதில் 2 தவணை தடுப்பூசி போடாதவர்கள் இன்னும் பலர் உள்ளனர். அவர்களையும் கண்டறிந்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒரு தவணை தடுப்பூசி போடாதவர்களும் விரைந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

    முன் எச்சரிக்கையாக வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை நடத்தப்படுகிறது.

    தென்ஆப்பிரிக்கா, ஐரோப்பா, பிரேசில், வங்காளதேசம், போட்ஸ் வானா, மொரிசீயஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூர், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு வைரஸ் தொற்று இல்லாவிட்டாலும் சொல்லும் அறிவுரை என்னவென்றால், அரசு சொல்லும் வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுங்கள். கண்டிப்பாக முககவசம் அணிந்து சொல்லுங்கள், தனி நபர் இடைவெளி, தனி நபர் சுகாதாரம் ஆகியவற்றை மிகச்சரியாக கடைபிடியுங்கள். இதுதான் முக்கியம்.

    தற்போது மழை காலமாக இருப்பதால் காய்ச்சிய தண்ணீரை அனைவரும் குடிக்க வேண்டும். வயிற்றுபோக்கு போன்ற உடல் உபாதைகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி என 4 நகரங்களில் 12 அரசு ஆய்வகங்களில் ஒமிக்ரான் வைரஸ் சோதனை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    சென்னை:

    உலகளவில் கொரோனா தொற்று பல்வேறு உருமாற்றங்களை அடைந்து கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஒமிக்ரான் என்ற உருமாற்றமடைந்த கொரோனா தொற்று தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. தற்போது ஒன்றிரண்டு நாடுகளுக்கு பரவ தொடங்கி உள்ளது.

    இதன் வீரியம் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஒமிக்ரான் வைரசை கண்டறியும் சோதனை வசதி தமிழகத்தில் உள்ள 12 அரசு ஆய்வகங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை, கோவை, மதுரை, திருச்சி என 4 நகரங்களில் 12 அரசு ஆய்வகங்களில் இந்த சோதனை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் ஆகிய அரசு ஆய்வகங்களில் தொற்று கண்டறியும் சோதனை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், இந்த ஆய்வகங்களில் டேக்பாத் என்ற கிட் மூலம் பரிசோதனை செய்து முடிவுகள் அறிவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    முதல்கட்ட பரிசோதனையில் மரபணு மாற்றம் இருப்பது தெரிந்த பிறகு,  மரபணு பகுப்பாய்வு செய்யப்படுகிறது. இதன் முடிவுகள் தெரிய 7 நாட்கள் வரை ஆகும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    இதையும் படியுங்கள்.. வேலூரில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவு
    கேரள எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரமாக நடந்து வருவதாகவும், மாநிலத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
    பெங்களூரு :

    தென்ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அது இங்கிலாந்து, இஸ்ரேல் உள்பட பிற நாடுகளுக்கும் பரவியுள்ளது. இது அதிகவேகமாக பரவக்கூடிய தன்மையை கொண்டதால், உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கேரளாவில் இருந்து கர்நாடகத்திற்கு வருபவர்களால் இங்கு கொரோனா பரவல் அதிகரிப்பது மேல்நோட்டமாக தெரியவந்துள்ளது. கேரளாவில் இருந்து வரும் துணை மருத்துவ பணியாளர்களால் தொற்று பரவுகிறது. அதனால் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தட்சிண கன்னடா, சாம்ராஜ்நகர், மைசூரு எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதனால் கேரளாவில் இருந்து வருபவர்கள் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா இல்லை என்ற நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கர்நாடகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். அத்துடன் அவர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். மாநிலத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    தென்ஆப்பிரிக்கா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் பரவுகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புதிய வகை கொரோனா பரவுவதை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தில் இதுவரை அந்த புதிய வகை கொரோனா பரவவில்லை.

    தார்வார், மைசூரு, பெங்களூரு ஆகிய நகரங்களில் உள்ள மாணவர் விடுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அந்த விடுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்கு தங்கியிருக்கும் அனைத்து மாணவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தார்வார் எஸ்.டி.எம். மருத்துவ கல்லூரியில் டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    அந்த மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மைசூருவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்து அதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். புதிய வகை கொரோனா பரவியுள்ள தென்ஆப்பிரிக்கா உள்பட 3 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

    சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு ‘பூஸ்டர்' டோஸ் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்குமாறு கேட்டு இருக்கிறோம். வணிக வளாகம், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள் மற்றும் அரசு-தனியார் அலுவலகங்களில் 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும். அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் அரசு சார்பில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

    கடந்த 16 நாட்களில் கேரளாவில் இருந்து கர்நாடகம் வந்த மாணவர்களை மீண்டும் ஒரு முறை கொேரானா பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும், மீண்டும் ஒரு முறை அவர்களுக்கு பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முறை புத்தாண்டு கொண்டாட்டத்தை அனுமதிப்பது குறித்து வரும் நாட்களில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    மேல்-சபை தேர்தல் பிரசாரத்தில் கொரோனா தடுப்பு வழிகாட்டுதலை பின்பற்றும்படி அறிவுறுத்தி உள்ளேன்.

    மாநிலத்தில் தற்போது 80 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. மாநிலத்தில் இதுவரை 91 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளோம். டிசம்பர் மாத இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
    முககவசம் அணியாமல் செல்வது உள்ளிட்ட அரசின் தடுப்பு விதிகளை மீறும் தனி நபருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு எச்சரித்து இருந்தது.
    மும்பை :

    கொரோனா வைரஸ் தொற்று தோன்றி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்னமும் அந்த கொடிய வைரஸ் உலக நாடுகள் மீதான தனது கோரப்பிடியை தளர்த்தவில்லை. ஆழிப்பேரலை போல அடுத்தடுத்து அலை அலையாக தாக்கி வருகிறது. எனினும் தடுப்பூசி எனும் பெரும் ஆயுதம் உலகம் முழுவதும் வைரஸ் தொற்றை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி வருகிறது.

    இந்தநிலையில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

    ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ள அந்த வைரஸ் தனது எல்லையை வேகமாக விரித்து வருகிறது. தென்ஆப்பிரிக்காவை தவிர்த்து, இன்னும் பிற நாடுகளிலும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவை தவிர்த்து ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் கால் பதித்துள்ளது.

    இந்தநிலையில் மராட்டியத்தில் புதிய வகை வைரசால் பாதிப்பு ஏற்படுவதை மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் கொரோனா பரவலை தடுக்க புதிய அறிவிப்புகள் மற்றும் உத்தரவுகள் வெளியிடப்பட்டது.

    முககவசம் அணியாமல் செல்வது உள்ளிட்ட அரசின் தடுப்பு விதிகளை மீறும் தனி நபருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு எச்சரித்து இருந்தது.

    இந்தநிலையில் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மண்டல கமிஷனர்கள், மாவட்ட கலெக்டர்களுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் தற்போது மாநிலத்தில் உள்ள கொரோனா நிலவரம், மற்றும் ஒமிக்ரானை மராட்டியத்திற்குள் வரவிடாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

    அப்போது அவர், "புதிய வகை ஆட்கொல்லி வைரஸ் வராமல் தடுக்க என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். மத்திய அரசின் உத்தரவுக்காக காத்திருக்காமல் வேலையை உடனே தொடங்குகள்" என்றார். மேலும் அவர், "மாநிலத்தில் மீண்டும் ஒரு லாக்டவுன் வராமல் இருக்க பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்." என்றார்.

    இதேபோல விமான நிலையங்களை தீவிரமாக கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டார்.
    தென்ஆப்பிரிக்காவில் இருந்து மராட்டியம் திரும்பிய நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
    மும்பை:

    தென்ஆப்பிரிக்காவில் இருந்து மராட்டியத்தின் தோம்பிவிலி நகருக்கு திரும்பிய நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனை கல்யாண் தோம்பிவிலி மாநகராடசி உறுதி செய்து உள்ளது.

    அவரிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.  அதில் அந்த நபருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும். அவருடைய குடும்பத்தினரின் பிற நபர்களிடம் இன்று (திங்கட்கிழமை) பரிசோதனைகள் சேகரிக்கப்பட உள்ளன.

    ×