என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "belgium"

    • முனைவர் பட்டத்துக்காக போஸ் போலாரன்ஸ் இன் சூப்பர்புளூயிட்ஸ் மற்றும் சூப்பர் சாலிட்ஸ் என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரையை லாரன்ட் சிமன்ஸ் சமர்ப்பித்தார்.
    • மிகக் குளிர்ந்த சூழலில், எலக்ட்ரான் மற்றும் அணுக்களின் நடத்தை எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய ஆழமான ஆய்வு அது.

    பிரஸ்சல்ஸ்:

    பெல்ஜியம் நாட்டை சேர்ந்த சிறுவன் லாரன்ட் சிமன்ஸ் (வயது 15). குட்டி ஐன்ஸ்டீன் என்று அழைக்கப்படும் லாரன்ட் தனது 11 வயதிலேயே இளங்கலை இயற்பியல் பட்டத்தை முடித்தார். அடுத்த ஆண்டே அதில் முதுகலை பட்டத்தையும் பயின்றார். இந்தநிலையில் முனைவர் பட்டத்துக்காக போஸ் போலாரன்ஸ் இன் சூப்பர்புளூயிட்ஸ் மற்றும் சூப்பர் சாலிட்ஸ் என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரையை அவர் சமர்ப்பித்தார். அதாவது, மிகக் குளிர்ந்த சூழலில், எலக்ட்ரான் மற்றும் அணுக்களின் நடத்தை எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய ஆழமான ஆய்வு அது. இதன்மூலம் உலகிலேயே மிக இளம் வயதில் முனைவர் பட்டம் பெற்ற சாதனைக்கு சொந்தக்காரராக மாறி உள்ளார்.

    இதற்கிடையே அமெரிக்கா, சீனாவில் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்வேறு சலுகை வழங்கி அவருக்கு வேலை அளிக்க முன் வந்தன. ஆனால் அதனை மறுத்த அவர் சூப்பர் மனிதர்களை உருவாக்குவது, மனிதனின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதே தனது கனவு என தெரிவித்துள்ளார்.

    • வெளிநாட்டு மாணவர்களை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்தது.
    • ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டில் இருந்து பலர் படித்து வருகின்றனர்.

    அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் அதிபர் டிரம்புக்கு எதிராக செயல்படுவதால் தொடர்ந்து இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறது. 389 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பல்கலைக்கழகம் உலக அளவில் பிரபலமான ஒன்றாக உள்ளது.

    வளாகத்தில் நடக்கும் மாணவர் போராட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று டிரம்ப் பல்கலைக்கழகங்களைக் கோரியிருந்தார். ஆனால் ஹார்வர்டு பல்கலைக்கழகம் அதை ஏற்க மறுத்தது. எனவே அதற்கு சேர வேண்டிய 2.2 பில்லியன் டாலர் மானியங்களையும் 60 மில்லியன் டாலர் ஒப்பந்தங்களையும் டிரம்ப் தடாலடியாக நிறுத்தினார்.

    இந்த சூழலில், வெளிநாட்டு மாணவர்களை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்தது. ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டில் இருந்து ஆண்டுக்கு சுமார் 800 பேர் சேர்ந்து பயின்று வரும் நிலையில், டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கை பல்கலைக்கழகத்திற்கு நெருக்கடியாக அமைந்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து ஹார்வர்டு பல்கலைக்கழகம் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் டிரம்பின் உத்தரவை தாற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இந்த உத்தரவு ஹார்வர்டில் படிக்கும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களுக்குத் தற்காலிக ஆறுதலை அளித்துள்ளது.

    இந்நிலையில், பெல்ஜியம் நாட்டின் இளவரசியும், வருங்கால ராணியுமான எலிசபெத் (வயது 23) ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவர் முதலாம் ஆண்டு படிப்பை முடித்துள்ளார். தற்போது டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவால் இளவரசி எலிசபெத் தனது படிப்பை தொடருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பெல்ஜிய அரச அரண்மனையின் செய்தித் தொடர்பாளர் லோர் வாண்டூர்ன் கூறும்போது, "இளவரசி எலிசபெத் தனது முதலாம் ஆண்டு படிப்பை முடித்துள்ளார். டிரம்ப் நிர்வாகத்தின் முடிவின் தாக்கம் வரும் நாட்களில் தெளிவாகும். தற்போது நிலைமையை ஆராய்ந்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.

    • முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.
    • இதே மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    லண்டன்:

    9 அணிகள் இடையிலான 4-வது புரோ ஹாக்கி லீக் போட்டி தொடர் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஐரோப்பிய சுற்று ஆட்டம் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று தொடங்கியது.

    இந்த சுற்றில் முதலாவது ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அணியான பெல்ஜியம், தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இந்தியாவை எதிர்கொண்டது. இரு அணிகளும் தொடக்கம் முதலே தாக்குதல் பாணியை தொடுத்தன. 17-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி அந்த அணி வீரர் திபாயு ஸ்டாக்புரோக்ஸ் பந்தை கோல் வலைக்குள் திணித்தார்.

    21-வது நிமிடத்தில் இந்திய அணி பதிலடி கொடுத்தது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி மன்தீப் சிங் கோல் திருப்பினார். இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.

    இதைத்தொடர்ந்து பெல்ஜியம் அணியினர் அடிக்கடி இந்திய அணியின் கோல் எல்லையை நோக்கி படையெடுத்து கடும் குடைச்சல் கொடுத்தனர். இதன் பலனாக அந்த அணிக்கு பல பெனால்டி கார்னர் வாய்ப்பு கிட்டியது. இதனை கோலாக்க அவர்கள் எடுத்த முயற்சியை இந்திய அணியின் பின்கள வீரர்கள் மற்றும் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆகியோர் அபாரமாக தடுத்து முறியடித்தனர்.

    கடைசி 2 நிமிடம் இருக்கையில் பெல்ஜியம் அணியின் எல்லா வீரர்களும் இந்திய அணியின் கோல் எல்லைப்பகுதியை சுற்றி வளைத்து நெருக்கினர். அந்த சமயத்தில் பெல்ஜியம் வீரர் அடித்த பந்தை இந்திய வீரர் ஜர்மன்பிரீத் சிங் மட்டையின் பின்பகுதியை வைத்து தடுத்ததாக நடுவரிடம் அப்பீல் செய்தனர். இதனை ஆய்வு செய்த நடுவர் பெல்ஜியம் அணிக்கு பெனால்டி கார்னர் (59-வது நிமிடம்) வாய்ப்பை வழங்கினார். இதனை கச்சிதமாக பயன்படுத்தி அந்த அணியின் நெல்சன் ஒனானா கோலடித்தார். அதுவே வெற்றியை தீர்மானிக்கும் கோலாக அமைந்தது.

    முடிவில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் வீழ்ந்தது. 9-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். 5-வது ஆட்டத்தில் ஆடிய பெல்ஜியம் அணிக்கு இது 3-வது வெற்றியாகும். இதே மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • துவக்கம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தது.
    • பெல்ஜியம் அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது.

    யூரோ 2024 கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்று போட்டிகளில் பெல்ஜியம் மற்றும் ரோமானியா அணிகள் மோதின. இந்த தொடரின் முதல் போட்டியில் ஸ்லோவேகியா அணியிடம் தோல்வியை தழுவி இருந்த பெல்ஜியம் அணி இந்த போட்டியில் துவக்கம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தது.

    இந்த போட்டியில் பெல்ஜியம் வீரர் 73 நொடியில் அடித்த கோல் அந்த அணி வெற்றி பெற காரணமாக அமைந்தது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பெல்ஜியம் அணி துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது.

    மறுமுனையில், பெல்ஜியம் அடித்த கோலுக்கு பதில் கோல் அடிக்க ரோமானிய வீரர்கள் முனைப்பு காட்டினர். எனினும், இவர்களின் முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து பெல்ஜியம் அணி அதிரடியாக ஆடியது.

    போட்டி முடிய பத்து நிமிடங்கள் இருந்த சூழலில் பெல்ஜியம் அணியின் டெ ப்ரூன் மற்றொரு கோல் அடித்தார். இதன் மூலம் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலையை தொடர்ந்தது. போட்டி முடிவில் ரோமானியா அணி கோல் எதுவும் அடிக்கவில்லை. இதன் காரணமாக பெல்ஜியம் அணி 2-0 என வெற்றி பெற்றது.

    • நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.
    • நாக் அவுட்டான 2-வது சுற்று 29-ந் தேதி தொடங்குகிறது.

    ஹம்பர்க்:

    17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. குரூப் எப் பிரிவில் கடைசி லீக் ஆட்டங்கள் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது.

    ஒரு ஆட்டத்தில் போர்ச்சுக்கல் 0-2 என்ற கோல் கணக்கில் ஜார்ஜியாவிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது. அந்த அணிக்காக குவரட்ஸ் கெலியா (2-வது நிமிடம்), மிகுடாட்ஸ் (57-வது நிமிடம், பெனால்டி) கோல் அடித்தார். இந்த வெற்றி மூலம் ஜார்ஜியா 4 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது. போர்ச்சுக்கல் ஏற்கனவே தகுதி சுற்று இருந்தது. அந்த அணி 6 புள்ளியுடன் எப் பிரிவில் முதல் இடத்தை பிடித்தது.

    இதே பிரிவில் ஹம்பர்க்கில் நடந்த மற்றொரு போட்டியில் துருக்கி 2-1 என்ற கோல் கணக்கில் செக் குடியரசுவை வீழ்த்தியது. துருக்கி அணிக்காக சல்ஹா னோக்லு (51-வது நிமிடம்) டாசுன் (94-வது நிமிடம்) ஆகியோரும், செக் குடியரசு அணியில் தாமஸ் சவுசக்கும் (66-வது நிமிடம்) கோல் அடித்தனர். இந்த வெற்றி மூலம் துருக்கி 6 புள்ளிகளு டன் 2-வது இடத்தை பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. செக் குடியரசு 1 புள்ளியுடன் வெளியேறியது.

    முன்னதாக இ பிரிவில் ருமேனியா- சுலோவாக்கியா அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. பெல்ஜியம்- உக்ரைன் அணிகள் மோதிய போட்டியும் கோல் எதுவுமின்றி டிரா ஆனது.

    'இ' பிரிவில் 4 அணிகளும் 1 வெற்றி, 1 டிரா, 1 தோல்வியுடன் தலா 4 புள்ளிகள் பெற்றன. கோல்கள் அடிப்படையில் ருமேனியா, பெல்ஜியம், சுலோவாக்கியா முறையே முதல் 3 இடங்களை பிடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறின. உக்ரைன் வெளியேற்றப்பட்டது.

    நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. நாக் அவுட்டான 2-வது சுற்று 29-ந் தேதி தொடங்குகிறது.

    உலககோப்பை ஹாக்கியில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெனால்டி ஷுட் முறையில் நெதர்லாந்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெல்ஜியம் அணி. #HockeyWorldCup2018 #Netherlands #Belgium
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக், காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் முடிந்துள்ளன.

    இன்று நடைபெற்ற மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதின. இதில் 8 - 1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதுடன் வெண்கலம் வென்றது. 
    இந்நிலையில், உலககோப்பையை வெல்லப் போகும் அணிக்கான போட்டியில் நெதர்லாந்தும், பெல்ஜியமும் மோதின.



    இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதின. இதனால் முதல் பாதி மட்டுமின்றி ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    இதையடுத்து, இந்த தொடரில் இரண்டாவது முறையாக பெனால்டி ஷுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் பெல்ஜியம் அணி என்ற 3 - 2 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி உலககோப்பையை வென்றது.

    உலககோப்பை இறுதிப்போட்டியை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்குடன் சேர்ந்து அமர்ந்து கண்டுகளித்தார். #HockeyWorldCup2018 #Netherlands #Belgium
    ஒடிசாவில் நடைபெற்று வரும் உலககோப்பை ஹாக்கி போட்டிக்கான ஏற்பாடுகளை திறம்பட செய்த முதல் மந்திரி நவீன் பட்நாயக்குக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். #HockeyWorldCup2018 #SachinTendulkar
    புதுடெல்லி:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் மற்றும் காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கின.

    இதில் முதலில் நடந்த அரையிறுதியில் இங்கிலாந்தை 6- 0 என்ற கோல் கணக்கில் வென்ற பெல்ஜியம் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.



    இந்நிலையில், உலககோப்பை ஹாக்கி போட்டிக்கான ஏற்பாடுகளை திறம்பட செய்த ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்குக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உலக அளவில் தரமாக செய்துள்ளதற்கு பாராட்டுக்கள். கலிங்கா மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியை நேரில் காண பார்வையாளனாக வரவுள்ளேன். எனது ஆதரவு என்றும் உண்டு என பதிவிட்டுள்ளார். #HockeyWorldCup2018 #SachinTendulkar
    உலககோப்பை ஹாக்கியில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை 6-0 என்ற கணக்கில் தோற்கடித்த பெல்ஜியம் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #HockeyWorldCup2018 #Belgium #England
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் மற்றும் காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கின.

    இன்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பெல்ஜியம் வீரர் டாம் பூன் 8-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து 19வது நிமிடத்திலும் பெல்ஜியம் வீரர் சைமன் கோக்னார்டு ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் பெல்ஜியம் அணி 2 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.



    ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் பெல்ஜியம் வீரர்கள் அதிரடியாக ஆடினர். 37வது நிமிடத்தில் செட்ரிக் சார்ப்லியர் ஒரு கோல் அடித்தார். அவரை தொடர்ந்து, ஆட்டத்தின் 45 மற்றும் 50வது நிமிடத்தில் அலெக்சாண்டர் ஹென்ரிக்ஸ் தலா ஒரு கோல் அடித்தார். 53வது நிமிடத்தில் செபாஸ்டியன் டாகியர் ஒரு கோல் அடித்தார்.

    பெல்ஜியம் வீரர்களின் அதிரடி ஆட்டத்துக்கு இங்கிலாந்து வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. இங்கிலாந்து அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

    இறுதியில், பெல்ஜியம் அணி இங்கிலாந்தை 6 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வென்றதன் மூலம் பெல்ஜியம் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.  #HockeyWorldCup2018 #Belgium #England
    ஒடிசாவில் நடந்துவரும் உலககோப்பை ஹாக்கி போட்டியில் இன்று அரையிறுதியில் மோதும் அணிகள் வெற்றி பெற சுதர்சன் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்தியுள்ளார். #HockeyWorldCup2018 #Belgium #England #Australia #Netherlands #SandArtistSudarsan
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் மற்றும் காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கின.

    இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகளும், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளும் மோதுகின்றன.

    இந்நிலையில், ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசா கடற்கரையில் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மணல் சிற்பம் வரைந்துள்ளார்.

    அந்த சிற்பத்தில் உலக கோப்பை போட்டிகளில் மோதவுள்ள அணிகளுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்த அவர் 4 நாடுகளின் கொடிகளை வரைந்து வாழ்த்தியுள்ளார்.  #HockeyWorldCup2018 #Belgium #England #Australia #Netherlands #SandArtistSudarsan
    ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் பெல்ஜியம் அணியிடம் 5 - 0 என்ற கோல் கணக்கில் தோற்று போட்டியில் இருந்து வெளியேறியது பாகிஸ்தான். #HockeyWorldCup2018 #Pakistan #Belgium
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பெல்ஜியம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பெக்ஜியம் வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் அலெக்சாண்டர் ஹென்ரிக்ஸ் முதல் கோல் அடித்தார். அவரை தொடர்ந்து, தாமஸ் பிரெய்ல்ஸ் 13வது நிமிடத்திலும், செட்ரிக் சார்லியர் 27வது நிமிடத்திலும், செபாஸ்டியன் டாக்கியர் 35வது நிமிடத்திலும், டாம் பூன் 53வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.

    பெல்ஜியம் வீரர்களின் ஆட்டத்துக்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர்களால் போராட முடியவில்லை.

    இறுதியில், பெல்ஜியம் அணி பாகிஸ்தானை 5 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பெல்ஜியம் அணி காலிறுதிக்குள் நுழைந்தது. பெல்ஜியம் வீரர் சைமன் குக்னார்டு ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #HockeyWorldCup2018 #Pakistan #Belgium
    ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான போட்டி 2 - 2 என சமனில் முடிந்தது. #HockeyWorldCup2018 #India #Belgium
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, பெல்ஜியம் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் 8-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் அலெக்சாண்டர் ஹென்ரிக்ஸ் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடியும் வரை இரு அணிகளும் கோல் போடாததால் பெல்ஜியம் 1-0 என முன்னிலை பெற்றது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இந்தியாவின் ஹர்மன்பிரித் சிங் 39வது நிமிடத்திலும், சிம்ரன் ஜித் சிங் 47வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்தனர். இதனால் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.

    ஆனால், 58-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் சைமன் குக்னார்ட் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சமனானது.

    இறுதியில், இந்தியா மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2 - 2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. #HockeyWorldCup2018 #India #Belgium
    உலக கோப்பை ஹாக்கிப் போட்டியில் நாளை நடக்கவுள்ள ஆட்டத்தில் பெல்ஜியத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது. #WorldCupHockey2018 #India #Belgium
    புவனேஷ்வர்:

    உலக கோப்பை ஹாக்கிப் போட்டி ஒடிசா தலைநகர் புவனேஷ்வரத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் போட்டியில் விளையாடும் மன்பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பெல்ஜியம், கனடா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அந்த பிரிவில் உள்ளன.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை நாளை (2-ந்தேதி) எதிர்கொள்கிறது.

    இந்திய அணி பெல்ஜியத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியதால் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது. பெல்ஜியம் அணி தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி இருந்தது. இந்திய அணி மோதும் ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. மற்றொரு ஆட்டத்தில் இதே பிரிவில் உள்ள தென்ஆப்பிரிக்கா- கனடா அணிகள் மோதுகின்றன.

    நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை (‘பி’ பிரிவு) வீழ்த்தியது. இங்கிலாந்து- சீனா அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.

    இன்று நடைபெறும் ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் உள்ள நெதர்லாந்து-மலேசியா (மாலை 5 மணி), ஜெர்மனி- பாகிஸ்தான் (இரவு 7 மணி) அணிகள் மோதுகின்றன. #WorldCupHockey2018 #India #Belgium
    ×