search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PhD"

    • பாரதி அனந்தபூரில் உள்ள கிருஷ்ணா தேவராஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வேதியியலில் முதுகலை படித்தார்.
    • விவசாய கூலியாக இருந்து வேதியியலில் பி.எச்.டி. பட்டம் பெற்ற பாரதி மாநிலம் முழுவதும் போற்றப்படும் நபராக திகழ்ந்து வருகிறார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், நாகுல கூடேம் கிராமத்தை சேர்ந்தவர் பாரதி. இவருக்கு 3 சகோதரிகள் உள்ளனர். வீட்டிற்கு மூத்த மகள் பாரதி. இவர் பிளஸ் 2 வரை அங்குள்ள அரசு பள்ளியில் படித்தார்.

    பின்னர் ஏழ்மை காரணமாக மேற்படிப்பு படிக்க முடியவில்லை. இதையடுத்து அவரை பெற்றோர் அவரது தாய் மாமாவான சிவப்பிரசாத்திற்கு திருமணம் செய்து வைத்தனர். அவருக்கும் நிலம் இல்லாததால் விவசாய கூலி வேலை செய்து வந்தார்.

    ஆனாலும் பாரதிக்கு எப்படியாவது மேற்படிப்பு படித்து கல்லூரி பேராசிரியராக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. தனது விருப்பத்தை கணவரிடம் தெரிவித்தார்.

    அவரும் பாரதியை மேற்படிப்பு படிக்க வைக்க ஊக்கப்படுத்தினார். தன்னுடைய மனைவி வாழ்க்கையில் எப்போதும் வெற்றி பெற வேண்டும் என விரும்பினார்.

    இதனால் அனந்தபூரில் உள்ள கல்லூரியில் பாரதியை சேர்த்து படிக்க வைத்தார். கணவரின் நிதி சுமையை குறைக்க வேண்டும் என்று எண்ணிய பாரதியும் விடுமுறை நாட்களில் விவசாய கூலி வேலைக்குச் சென்றார்.

    பின்னர் கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்றார். இதனை தொடர்ந்து பாரதி அனந்தபூரில் உள்ள கிருஷ்ணா தேவராஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வேதியியலில் முதுகலை படித்தார். கல்லூரி பேராசிரியர்களும் பாரதியை நன்றாக படிக்க ஊக்கப்படுத்தினர்.

    இதனால் வேதியியலில் முதுகலை பட்டம் பெற்ற பாரதி அதே பாடப்பிரிவில் பி.எச்.டி. (டாக்டர்) பட்டம் பெற்றார். இதன்மூலம் தன்னுடைய கணவருக்கும், கல்லூரிக்கும் பெருமை தேடி தந்துள்ளார்.

    விவசாய கூலியாக இருந்து வேதியியலில் பி.எச்.டி. பட்டம் பெற்ற பாரதி மாநிலம் முழுவதும் போற்றப்படும் நபராக திகழ்ந்து வருகிறார்.

    கல்லூரி பேராசிரியராக வரவேண்டும் என்பதே தனது லட்சியம் என அவர் கூறினார்.

    • சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 22 அரசு கல்லூரிகள், 4 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 91 சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 117 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன.
    • 2021 -ம் ஆண்டு ‌ஜூலை -2023 ஜூலை வரை உதவி பேராசிரியர் நியமனத்திற்கு பிஎச்.டி. கட்டாயமில்லை என யு.ஜி.சி. அறிவித்தது.

    சேலம்:

    தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கீழ் ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் தமிழகம் முழுவதும் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன.

    சேலம், நாமக்கல்

    இதில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 22 அரசு கல்லூரிகள், 4 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 91 சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 117 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன.

    இைதத்தவிர அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், சட்டக்கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள், ஆசிரியர் கல்வியில் கல்லூரிகள், மருந்தியல் கல்லூரிகள் உள்ளன. மேலும் சேலத்தில் தனியார் நிகர் நிலைப் பல்கலைக்கழகமும் ெசயல்பட்டு வருகிறது.

    பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியில் சேர பிஎச்.டி. படிப்பு கட்டாயம் என கடந்த 2018-ல் மத்திய அரசின் பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.) அறிவித்தது. இதையடுத்து 2021-2022 கல்வி ஆண்டு முதல் இந்த நடைமுறையை பயன்படுத்தி உதவி பேராசிரியர்களை நியமனம் செய்யும்படி அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு யு.ஜி.சி. உத்தரவிட்டது.

    ஆனால், கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், மாணவர்களால் பிஎச்.டி படிப்பை தொடர முடியவில்லை. இதனால் 2021 -ம் ஆண்டு ஜூலை -2023 ஜூலை வரை உதவி பேராசிரியர் நியமனத்திற்கு பிஎச்.டி. கட்டாயமில்லை என யு.ஜி.சி. அறிவித்தது.

    புதிய அறிவிப்பு

    இந்த நிலையில் உயர் கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியராக பணியில் சேர பிஎச்.டி. படிப்பு கட்டாயமில்லை. நெட், செட், ஸ்லெட் ஆகிய தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என யு.ஜி.சி. நேற்று அறிவித்துள்ளது.

    • 2 ஆயிரத்து 999 விண்ணப்பங்கள் தகுதியானவையாக கண்டறியப்பட்டு உள்ளது.
    • கோவை, ஊட்டி, ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய 5 இடங்களில் நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    பாரதியார் பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஆராய்ச்சி பட்டம் (பி.எச்.டி.) மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் எம்.பில்) சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வு -2023 நாளை 11-ம்தேதி நடக்கிறது. 51 பாடங்களில் நடைபெறவுள்ள இந்த நுழைவுத்தேர்விற்கு 4 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 2 ஆயிரத்து 999 விண்ணப்பங்கள் தகுதியானவையாக கண்டறியப்பட்டு உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தேர்விற்கான நுழைவு ச்சீட்டினை பாரதியார் பல்கலைக்கழக இணையப்பக்கத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    கோவை, ஊட்டி, ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய 5 இடங்களில் நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் பிஷப் அப்பாசாமி கல்லூரி, ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளிலும், நீலகிரி மாவட்டத்தில் அரசு கலைக்கல்லூரி, ஈரோடு மாவட்டத்தில் வேளாளர் மகளிர் கலை கல்லூரி, திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி மற்றும் பொள்ளாச்சியில் என்.ஜி.எம்.கல்லூரி ஆகிய 7 கல்லூரிகளில் தேர்வு நடக்கிறது.

    தேர்வு காலை 11மணிக்கு துவங்கி மதியம் 12.30மணிக்கு நிறை வடையும். தேர்வாளர்கள் கடைபிடிக்க ேவண்டிய நெறிமுறைகள் தேர்வு நுழைவுச்சீட்டில் கொடுக்கப்பட்டு உள்ளது. நுழைவுதேர்விற்கான பணிகளை பொது நுழைவுத்தேர்வு ஒருங்கிணைப்பாளரும், தாவரவியல் துறைத்தலை வருமான பரிமேலழகன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர். 

    • ரக்ஷிதா என்கிற சரத்குமார். திருநங்கையான இவர் அண்ணாமலை பல்கலைகழத்தில் முனைவர் பட்டம் பயில் விண்ணப்பித்திருந்தார்
    • திருநங்கை ரக்க்ஷிதா தனது முனைவர் பட்ட படிப்பை வியாழக்கிழமையன்று தொடங்கினார்.

    கடலூர்:

    கடலூர் வட்டம், கோண்டூர் தாலுகா, மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் நாகப்பன் மகனான ரக்ஷிதா என்கிற சரத்குமார். திருநங்கையான இவர் அண்ணாமலை பல்கலைகழத்தில் முனைவர் பட்டம் பயில் விண்ணப்பித்திருந்தார்.

    திருநங்கை என்ற ஒரே காரணத்தால் இடம் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலகுழு உறுப்பினர் ரமேஷ்பாபு, முத்துக்குமரன் ஆகியோர் திருநங்கை ரக்ஷிதாவை அழைத்துக்கொண்டு பலகலைக் கழக துணை வேந்தரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவில், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளான, நீதியரசர்கள் ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் கடந்த 2014-ம் ஆண்டு திருநங்கை சமூகம் குறித்த வழக்கில் கொடுத்த தீர்ப்பின் படி முனைவர் பயில அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

    இதனை தொடர்ந்து பல்கலைக் கழக நிர்வாகம் திருநங்கை ரக்ஷிதாவுக்கு வேதியல்துறையில் முனைவர் பட்டம் பயில்வதற்கு அனுமதி அளித்துள்ளது.  இதனையடுத்து திருநங்கை ரக்க்ஷிதா தனது முனைவர் பட்ட படிப்பை வியாழக்கிழமையன்று தொடங்கினார். அவரது படிப்பிற்கு உதவி புரிந்த துறை தலைவர் ஜெயபாரதி, மார்க்சிஸ்ட் கட்சி மாநிலகுழு உறுப்பினர் ரமேஷ்பாபு, நகர செயலாளர் ராஜா ஆகியோருக்கு திருநங்கை ரக்க்ஷிதா கண்கலங்க நன்றி தெரிவித்தார். இந்த சம்பவம் பல்கலைக் கழக வளாகத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியான தனிஷ்க் என்ற 15 வயது சிறுவன் தனது இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு தற்போது பி.எச்.டி படிப்பை தொடங்க உள்ள நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. #US #India #TanishqAbraham
    நியூயார்க்:

    அமெரிக்காவில் வாழும் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் தனிஷ்க் ஆப்ரகாம். இவர் தனது 15 வயதில் உயிரிமருத்துவம் சார்ந்த இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு தற்போது பி.எச்.டி படிப்பை துவக்கியுள்ளார். இந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தனிஷ்க், மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



    மேலும், 15 வயது சிறுவன் தனிஷ்க், தீவிபத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அவர்களை தொடாமல், அவர்களின் இதயத்துடிப்பை கண்டறியும் சாதனத்தையும் கண்டறிந்துள்ளார். மேலும், பல புதிய கண்டுபிடிப்புகளின் மீது ஆர்வம் கொண்ட தனிஷ்க், புற்றுநோய்க்கான புதிய சிகிச்சை முறை குறித்தும், நோயை சரிசெய்வதற்கான வழிமுறை குறித்தும் ஆராய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே கலிபோர்னியா பல்கலைகழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனிஷ்க், அடுத்த 5 வருடங்களுக்குள் தனது எம்.டி படிப்பை துவங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். #US #India #TanishqAbraham
    ×