என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FrancevsBelgium"

    • முனைவர் பட்டத்துக்காக போஸ் போலாரன்ஸ் இன் சூப்பர்புளூயிட்ஸ் மற்றும் சூப்பர் சாலிட்ஸ் என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரையை லாரன்ட் சிமன்ஸ் சமர்ப்பித்தார்.
    • மிகக் குளிர்ந்த சூழலில், எலக்ட்ரான் மற்றும் அணுக்களின் நடத்தை எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய ஆழமான ஆய்வு அது.

    பிரஸ்சல்ஸ்:

    பெல்ஜியம் நாட்டை சேர்ந்த சிறுவன் லாரன்ட் சிமன்ஸ் (வயது 15). குட்டி ஐன்ஸ்டீன் என்று அழைக்கப்படும் லாரன்ட் தனது 11 வயதிலேயே இளங்கலை இயற்பியல் பட்டத்தை முடித்தார். அடுத்த ஆண்டே அதில் முதுகலை பட்டத்தையும் பயின்றார். இந்தநிலையில் முனைவர் பட்டத்துக்காக போஸ் போலாரன்ஸ் இன் சூப்பர்புளூயிட்ஸ் மற்றும் சூப்பர் சாலிட்ஸ் என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரையை அவர் சமர்ப்பித்தார். அதாவது, மிகக் குளிர்ந்த சூழலில், எலக்ட்ரான் மற்றும் அணுக்களின் நடத்தை எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய ஆழமான ஆய்வு அது. இதன்மூலம் உலகிலேயே மிக இளம் வயதில் முனைவர் பட்டம் பெற்ற சாதனைக்கு சொந்தக்காரராக மாறி உள்ளார்.

    இதற்கிடையே அமெரிக்கா, சீனாவில் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்வேறு சலுகை வழங்கி அவருக்கு வேலை அளிக்க முன் வந்தன. ஆனால் அதனை மறுத்த அவர் சூப்பர் மனிதர்களை உருவாக்குவது, மனிதனின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதே தனது கனவு என தெரிவித்துள்ளார்.

    • துவக்கம் முதலே கோல் அடிக்க இரு அணி வீரர்களும் முனைப்பு காட்டினர்.
    • பிரான்ஸ் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

    ஜெர்மனி நாட்டில் யூரோ கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. தொடக்க சுற்றுகள் முடிவடைந்த நிலையில் தற்போது காலிறுதிக்கு முந்தைய நாக்அவுட் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    அந்த வகையில், விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள யூரோ 2024 கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின. இந்த போட்டியில் துவக்கம் முதலே கோல் அடிக்க இரு அணி வீரர்களும் முனைப்பு காட்டினர்.

    எனினும், ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் போட்டியின் இரண்டாவது பாதியில் எந்த அணி கோல் அடித்து வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு எகிறியது. இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் போராட்டத்தில் தீவிரம் காட்டினர்.

    போட்டி முடிய ஐந்து நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில், பெல்ஜியம் வீரர்களின் ஓன் கோல் காரணமாக பிரான்ஸ் அணி போட்டியில் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்க முடியாததால், போட்டி முடிவில் பிரான்ஸ் அணி 1-0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் பிரான்ஸ் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஜூலை 5 ஆம் தேதி நடைபெறும் காலிறுதி போட்டியில் பிரான்ஸ் அணி போர்ச்சுகல் அணியை எதிர்கொள்கிறது. 

    ×