search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முறைகேடு செய்த ரேசன்கடை விற்பனையாளர் சஸ்பெண்டு
    X

    முறைகேடு செய்த ரேசன்கடை விற்பனையாளர் சஸ்பெண்டு

    • முறைகேடு செய்த ரேசன்கடை விற்பனையாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டது.
    • முறைகேடு செய்த கொண்டையம்பட்டி நியாயவிலைக்கடை விற்பனையாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    மதுரை

    மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக்கடைகளை ஜூன் மாதத்தில் மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தலைமையிலான பறக்கும்படையினர் திடீர் ஆய்வு செய்தனர்.

    அப்போது வேலை நேரத்தில் கடை திறக்காமல், ரேசன் பொருட்களை முறையாக விநியோகம் செய்யாமலும், இருப்புக் குறைவு மற்றும் இருப்பு கூடுதல் இருந்தது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது. இவற்றில் கடுமையான முறைகேடு செய்த அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி நியாயவிலைக்கடை விற்பனையாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் மீது குடிமைப்பொருள் குற்றப்புல னாய்வுத்துறையில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இது போன்று நியாயவிலைக் கடையை குறித்த நேரத்தில் திறக்காமல் இருப்பது, ரேசன் பொருட்கள் முறையாக விநியோகம் செய்யாமல் இருப்பது போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் நியாயவிலைக்கடையின் விற்பனையாளர்கள் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×