search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிறுத்தம்"

    • கோவை- ராமேஸ்வரம் வாராந்திர ெரயில், சிவகங்கையிலும் நின்று செல்லும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
    • சித்தூர், திருப்பதி ரெயில் நிலையங்களுக்கு ரெயில் செல்லாது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


    திருப்பூர்:

    கோவை- ராமேஸ்வரம் வாராந்திர ரெயில், சிவகங்கையிலும் நின்று செல்லும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இது குறித்து சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:-

    கோவை- ராமேஸ்வரம் (16618) வாராந்திர ரெயில், கோவை ரெயில் நிலையத்தில் வாரந்தோறும் செவ்வாய் இரவு 7:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:45க்கு ராமேஸ்வரம் சென்றடையும்.

    மறுமார்கத்தில் ராமேஸ்வரம்- கோவை (16617) ரெயில், புதன்தோறும் ராமேஸ்வரம் ரெயில் நிலையத்தில் இரவு 8:13மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:30க்கு கோவை வந்தடையும். இந்த 2 ரெயில்களும் நாளை 18-ந் தேதி முதல் சிவகங்கை ரெயில் நிலையத்தில் சோதனை முயற்சியாக கூடுதலாக 2 நிமிடங்கள் நின்று செல்லும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    திருப்பதி பிளாட்பார்மில் பராமரிப்பு, மேம்பாட்டு பணி நடப்பதால் ஸ்வர்ண ஜெயந்தி, மில்லினியம் சூப்பர்பாஸ்ட் ரெயில் 4 நாட்களுக்கு சித்தூர் திருப்பதி செல்லாது.

    ஆந்திர மாநிலம், திருப்பதி ரெயில் நிலைய பிளாட்பார்மில் (2 மற்றும் 3), மேம்பாட்டு பணியை தென் மத்திய ரெயில்வே ஒரு மாதம் மேற்கொள்கிறது.இதனால், 7 ரெயில்கள் முழுமையாகவும், 12 ரெயில் பாதியளவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரத்தில் இருந்து நிஜாமுதீன் செல்லும் ஸ்வர்ண ஜெயந்தி சூப்பர்பாஸ்ட் ரெயில் (எண்:12643) வருகிற 18, 25, ஆகஸ்டு 1, 8-ந் தேதி ஆகிய 4 நாட்கள், மேல்பாக்கம் வழியாக திருப்பி விடப்படும்.

    இதனால் சித்தூர், திருப்பதி நிலையங்களுக்கு ரெயில் செல்லாது. காட்பாடி - ரேணிகுண்டா வழித்தடத்தில் பயணிக்கும்.இதேபோல் எர்ணாகுளம் - நிஜாமுதீன் மில்லினியம் சூப்பர்பாஸ்ட் (எண்:12645) வருகிற 22, 29, ஆகஸ்டு 5ம் தேதி ஆகிய நாட்கள், மேல்பாக்கம் வழியாக திருப்பி விடப்படும். இதனால் சித்தூர், திருப்பதி ரெயில் நிலையங்களுக்கு  ரெயில் செல்லாது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் பாலக்காடு- திருச்சி ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

    பாலக்காடு - திருச்சி (16844) ரெயில் தினமும் காலை 6:30 மணிக்கு பாலக்காடு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, திருச்சிரெயில் நிலையத்திற்கு மதியம் 1:32க்கும் சென்றடையும். மறுமார்க்கத்தில் திருச்சி - பாலக்காடு (16843) ரெயிலானது தினமும் மதியம் 2மணிக்கு திருச்சியில் புறப்பட்டு, இரவு 8:55க்கு பாலக்காடு வந்தடையும்.

    திருச்சி ரெயில் நிலையம் - திருச்சி கோட்டை ரெயில் நிலையம் இடையே தண்டவாள பணிகள் நடப்பதால் வருகிற 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை பாலக்காடு- திருச்சி (16844) ரெயில் திருச்சி கோட்டை வரை இயக்கப்படும். திருச்சி ரெயில்வே நிலையம் செல்லாது.

    மறுமார்க்கத்தில் திருச்சி - பாலக்காடு (16843) ரெயிலானது திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கொரோனா காலத்தில் தடைபட்ட 5 ரெயில்கள் இருவழி மார்க்கமாக சீர்காழியில் நின்று செல்லும்.
    • தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக போராட்ட குழுவினர் அறிவித்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி ரயில் நிலையத்தில் மீண்டும் இரு வழி மார்க்கமாக நின்று சென்ற அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி ரெயில் நிறுத்த போராட்டக் குழுவினர் தண்டவாளத்தில் தலை வைக்கும் போராட்டத்தை வருகின்ற 17ஆம் தேதி அறிவித்திருந்தனர்.

    இந்நிலையில் ரெயில்வே நிர்வாக கோட்ட மேலாளர் ஹரிக்குமார், கொரோனா காலத்தில் தடைபட்ட 5 ரெயில்கள் இரு வழி மார்க்கமாக சீர்காழியில் நின்று செல்லும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    இதனை அடுத்து அறிவி த்திருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்க ப்படுவதாக போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ஜெக.சண்முகம் தெரிவித்தார்.

    • நாளை மற்றும் நாளை மறுநாள் குடிநீர் வினியோகம் இருக்காது.
    • பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான கணபதிநகர் பம்பிங் ஸ்டேஷன் மற்றும் எலிசா நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் பிரதான குழாய் புதிதாக மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

    எனவே வார்டு எண் 42 முதல் 51 வரையிலான வார்டுகளுக்கு நாளை (புதன்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது.

    எனவே பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொண்டு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குழாய் பழுதடைந்து விட்டதால் பழுது சரிபார்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
    • பொதுமக்கள் விநியோகிக்கப்பட்ட குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்க கொள்ள வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    ஈரோடு மாநகராட்சி சென்னிமலை சாலை மற்றும் ஈ.வி.என்.சாலை சந்திப்பில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிதாக சிறுபாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணியின் போது பிரதான குடிநீர் விநியோக குழாய் பழுதடைந்து விட்டதால் பழுது சரிபார்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகள் காரணமாக ஈரோடு மாநகராட்சி 3-ம் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 51-ல் உள்ள இ.எம்.எம். மெயின் வீதி, இ.எம்.எம். வீதி, மணல்மேடு வீதி, சென்னிமலை சாலை,

    4-ம் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 52-ல் உள்ள ஈஸ்வரன் வீதி, கள்ளியங்காடு பகுதி, பட்டக்காரர் வீதி, தங்கபெருமாள் வீதி, ஜீவானந்தம் சாலை, புதுமை காலனி ஆகிய பகுதிகளில் இன்று (12-ந் தேதி), நாளை (13-ந் தேதி) 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    எனவே பொதுமக்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்ட குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்க கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • நாளை கரந்தை மற்றும் பூக்குளம் மின்பாதைகளில் மின்கம்பிகள் மாற்றும் பணி நடைபெற உள்ளது.
    • கல்லரைமேட்டுத்தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை கரந்தை துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) கரந்தை மற்றும் பூக்குளம் மின்பாதைகளில் மனி்கம்பிகள் மாற்றும் பணி நடைபெற உள்ளது.

    எனவே ஏ.எஸ்.அன்பழகன் நகர், எஸ்.ஏ.ஆனந்தம் நகர், மேட்டுத்தெரு, சுங்கான்திடல், சின்னத்தெரு, பெரியத்தெரு, ஜெகநாதன் நகர், வடுகத்தெரு, ராஜராஜசோழன் நகர், திருவள்ளுவர் காலனி, பள்ளியக்ரஹாரம் கடைத்தெரு, பைபாஸ் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    மேலும் கரந்தை மின் வழித்தடத்தில் உள்ள கங்காநகர், புண்ணியமூர்த்தி தோட்டம், அழகப்பா ரைஸ்மில், சிரேஷ்சந்திரம் ரோடு, வடக்கு வாசல், சத்தியா நகர், எம்.ஜி.ஆர்.நகர், கல்லுக்கட்டித்தெரு, கல்லரைமேட்டுத்தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற 9-ந் தேதி நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை உதவி செயற்பொறியாளர் ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

    எனவே அன்றைய தினம் அருளானந்தநகர், பிலோமினாநகர், காத்தூண்நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர் நகர், பாத்திமாநகர், அன்புநகர், திருச்சி ரோடு, வ.உ.சி. நகர், பூக்காரத்தெரு, இருபது கண்பாலம், கோரிக்குளம், கணபதிநகர், ராஜப்பாநகர், மகேஸ்வரிநகர், திருப்பதிநகர், செல்வம் நகர், அண்ணாமலைநகர், ஜெ.ஜெ.நகர், டி.பி. எஸ்.நகர், சுந்தரம்நகர், பாண்டியன்நகர், எஸ்.பி.அலுவலகம், கலெக்டர் பங்களாரோடு, டேனியல் தாமஸ்நகர், ராஜராஜேஸ்வரிநகர், காவேரிநகர், நிர்மலாநகர், என்.எஸ்.போஸ்நகர், தென்றல்நகர், துளசியாபுரம், தேவன்நகர், பெரியார்நகர், இந்திராநகர், கூட்டுறவு காலனி, புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, நட்சத்திராநகர், ஆர்.ஆர்.நகர், சேரன்நகர், யாகப்பாநகர், அருளானந்தம்மாள்நகர், குழந்தைஏசு கோவில் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காமாட்சி நகர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
    • கடந்த 2 மாதங்களாக காவிரி குடிநீர் வழங்கப்படவில்லை என்பதால் அந்த பகுதி மக்கள் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அருகே ஓலப்பாளையம் ஊராட்சி காமாட்சி நகர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்திற்கு ஊராட்சி மூலம் காவிரி குடிநீர் மற்றும் ஆழ்துளை கிணற்றுநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக காவிரி குடிநீர் வழங்கப்படவில்லை என்பதால் அந்த பகுதி மக்கள் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 2 மாதங்களாக காவிரி குடிநீர் சரிவர விநியோகிக்கப்படவில்லை. ஆழ்துளை கிணறு தண்ணீரும் சரியாக வருவதில்லை. அதனால் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.

    இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. எனவே குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நாகர்.கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் உறவினர்கள் வாக்குவாதம்
    • சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் இரவு வரை அலுவலகத்திலேயே வைத்திருந்தனர்.

    நாகர்கோவில் :

    தூத்துக்குடி மாவட்டத் தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பூதப்பாண்டி அருகே தெள்ளந்தி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    இது பற்றி சமூக துறைக்கு புகார்கள் வந்தது. சமூகநல அதிகாரிகள் தூத்துக்குடிக்கு சென்று அந்த சிறுமியை மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமியை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். சம்பந்தப்பட்ட வாலிபரையும் விசாரணைக்கு அழைத்தனர்.

    அப்போது வாலிபரிடம் விசாரணை நடத்திவிட்டு அவரை அனுப்பி விட்டதாக தெரிகிறது. சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் இரவு வரை அலுவலகத்திலேயே வைத்திருந்தனர்.

    அப்போது சிறுமியுடன் இருந்த தாயார் தனது மகளை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கூறினார். அப்போது அதிகாரிகளுக்கும் சிறுமியின் தாயார் மற்றும் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் சிறுமியின் தாயார் அலுவலக வாசலில் அழுது புரண்டார். இதை யடுத்து நேசமணி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சிறுமியை இன்று விசாரணைக்கு அழைத்து வர வேண்டும். வயது சான்றிதழை கொண்டு வர வேண்டும்.

    திருமணத்தை நடத்தக்கூடாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் சிறுமியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இதனால் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது.

    • கடந்த 23-ம் தேதியுடன் தண்ணீர் நிறுத்தப்பட்டது.
    • சுற்றுலா பயணிகள் சிறிதளவு ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரில் இறங்கி குளித்து மகிழ்கின்றனர்.

    பூதலூர்:

    காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் வழக்கமான ஜூன் 12 தேதிக்கு முன்னதாக மே மாதம் 24 ஆம் தேதி திறக்கப்பட்டது.

    இதனால் காவேரி டெல்டா மாவட்டங்களில் இலக்கை விஞ்சி குருவை மற்றும் சம்பா சாகுபடி நடைபெற்றது பருவம் தப்பிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கியது.

    248 நாள் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வழக்கமான நடைமுறைப்படி ஜனவரி மாதம் 28ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

    கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாயில் விவசாயிகளின் தேவைக ளுக்கு ஏற்ப குறைந்த அளவில் தண்ணீர் அவ்வப்போது மாறி மாறி விடப்பட்டது.

    மேட்டூர் அணை மூடப்பட்ட பின்னர் பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி வரை கல்லணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், காவிரி வெண்ணாறு ஆகிய ஆறுகளில் முழுவதுமாக தண்ணீர் விடுவது பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி மாலையுடன் நிறுத்தப்பட்டது.

    தற்போது கல்லணை முழுவதுமாக வறண்டு போய் மணல் வெளியாக காட்சியளிக்கிறது.

    சிறிய அளவில் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. சிறிய அளவில் வரும் தண்ணீர் கொள்ளிடம் மணல் போக்கி பகுதியில் திறந்து வெளியேறி கொண்டு உள்ளது.

    காவேரி வெண்ணாறு ஆகிய பாலங்களின் கீழ் பகுதியில் முழுவதுமாக தண்ணீர் இன்றி காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.

    கல்லணையை காண வரும் சுற்றுலா பயணிகள் கொள்ளிடம் ஆற்றில் சிறிதளவு ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரில் இறங்கி குளித்து மகிழ்கின்றனர்.

    கல்லணை பாலங்களின் மேல் நடந்து கல்லணையை ரசித்து வருகின்றனர்.

    சிறுவர் பூங்காவில் உள்ள விளையாட்டு அரங்குகளில் சிறுவர்கள் விளையாடி மகிழ்கின்றனர்.

    காவிரி ஆற்றின் பாலங்களின் கீழ் இறங்கி மதகுகளை பார்த்து வியந்து சுற்றுலா பயணிகள்வருகின்றனர்.

    • கொளத்தூர் அருகே கோவிந்தபாடி பகுதியை சேர்ந்த மீனவர் காரவடையான் என்கிற ராஜா கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • இதனால் கர்நாடக மாநிலத்தில் இருந்து மேட்டூர், சேலம், ஈரோடு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த கர்நாடக அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே கோவிந்தபாடி பகுதியை சேர்ந்த மீனவர் காரவடையான் என்கிற ராஜா கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கர்நாடக மாநிலத்தில் இருந்து மேட்டூர், சேலம், ஈரோடு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த கர்நாடக அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. தற்போது இயல்பு நிலை திரும்பினாலும் 5-வது நாளாக கர்நாடக பஸ்கள் கொளத்தூர் அருகே உள்ள தமிழக- கர்நாடக மாநில எல்லையில் உள்ள பாலாறு சோதனைச்சாவடி வழியாக இயக்கப்படவில்லை.

    • பாரதிய ஜனதா கூட்டத்தில் கண்டனம்
    • மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது பாகத்தை 2000 இடங்களில் ஒளிபரப்பு செய்து மக்களிடம் கொண்டு செல்ல தீர்மானம்

    கன்னியாகுமரி:

    பாரதிய ஜனதா குமரி மாவட்ட செயற்குழு கூட்டம் மேலசங்கரன்குழியில் மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி தலைவி சத்திய ஸ்ரீ ரவி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். மேலசங்கரன்குழி ஊராட்சி மன்ற தலைவர் முத்து சரவணன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் பால் கனகராஜ் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர்.

    கூட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் முத்து கிருஷ்ணன் தீர்மானங்களை முன் மொழிந்தார். மாநில செயற்குழு உறுப்பி னர் ஸ்ரீகலா, ராமநாதன், பொதுச் செயலாளர் ஜெக நாதன், மாவட்ட துணை பொதுச்செயலாளர் வினோத், செயலாளர் சுடர்க்கின மனோகரகுமார், பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணகுமார், கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் சிவக்குமார், விளையாட்டு மேம்பாட்டு மாநில தலைவர் அமர் பிரசாத்ரெட்டி, ஒன்றிய பொருளாளர் சுகுமார், ஒன்றிய பொதுச் செயலாளர் செந்தில் அதிபன் உட்பட மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    குமரி மாவட்டத்தில் பல மகளிர் பஸ்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே போக்குவரத்து துறை யின் இந்த நடவடிக்கைக்கு செயற்குழு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பாரதிய ஜனதா தேசிய தலைவராக பொறுப்பேற்ற ஜே.பி. நட்டா பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

    குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து 7-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்த குஜராத் மாநில பாரதிய ஜனதா அரசுக்கும், கட்சிக்கும் அயராது உழைத்த பொறுப்பாளர்களுக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப் பட்டது. மாவட்டத்தில் அச்சமின்றி தேர்வு எழுதும் வழியில் பரிக்ஷா பெ சர்ச்சா நிகழ்ச்சிகளை கன்னியாகுமரி மாவட்டத் தில் சிறப்பாக நடத்திய கல்வியாளர் பிரிவு பொறுப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட் டது. மாவட்டத்தில் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது பாகத்தை 2000 இடங் களில் ஒளிபரப்பு செய்து மக்களிடம் கொண்டு செல்ல இச்செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் இரட்டை ரயில் பாதை, 4 வழி சாலை திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டதுடன் தேவையான மணல் ஜல்லி கட்டுமான பொருட்கள் வழங்காமல் கிடப்பில் போடப்பட்டது.தொடர்ந்து மத்திய அரசு டன் தொடர்பு கொண்டு இத்திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றி முடிக்க அயராது பாடுபட்டு வரும் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ண னுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் ஒன்றிய தலைவர் பொன். சுரேஷ் நன்றி கூறினார்.

    • அம்மாபேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
    • அம்மாபேட்டை பகுதியில் நாளை மின் விநியோகம் இருக்காது என கோபி மின்பகிர்மான வட்ட பவானி கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    அம்மாப்பேட்டை:

    கோபி மின்பகிர்மான வட்டம் பவானி கோட்டம் கோனேரிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.

    இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அம்மாப்பேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, சிங்கம்பேட்டை,சித்தார்,சின்னப்பள்ள ம்,ஆனந்தம்பாளையம் குட்டமுனியப்பன்கோயில்,கேசரிமகலம்,காடப்பநல்லூர், கல்பாவி,பூதப்பாடி,எஸ்.பி.கவுண்டனூர்,குறிச்சி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என கோபி மின்பகிர்மான வட்ட பவானி கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    ×