search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 Days"

    • குடியிருப்புகளில் வீடுகளில் 2 சாரைப்பாம்புகளை பிடித்தார்.
    • பாம்புகளையும் வனத்துறையினர் மூலம் அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு விட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி உட்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் கடந்த சில நாட்களாக பாம்புகள் படையெடுப்பது தொடர் கதையாகி வருகிறது.

    இன்று காலை ஈரோடு ரங்கம் பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே பழைய பொருட்கள் வைக்க ப்பட்டிருந்த பகுதியில் சுமார் 8 அடி நீளம் உள்ள சார பாம்பு இருந்ததை பாம்பு பிடி வீரர் யுவராஜ் பிடித்தார்.

    இதேபோல் ஈரோடு ெரயில்வே காலனி பகுதி யில் உள்ள குடியிருப்புகளில் 2 வீடுகளில் 8 முதல் 10 அடி உயரம் உள்ள 2 சாரைப்பாம்புகளை அவர் பிடித்தார்.

    ஈரோடு இந்தியன் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாம்பு புகுந்ததாக அவருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் யுவராஜ் சென்று பாம்பை தேடி தேடினார்.

    அப்போது அங்கு டி.வி.யில் சாரை ப்பாம்பு ஒளிந்து கொண்டிருப்பதை கண்டு பிடித்தார். இவ்வாறாக ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் கடந்த 2 நாட்களில் 10-க்கும் மே ற்பட்ட பாம்புகளை அவர் பிடித்துள்ளார்.

    பின்னர் அனைத்து பாம்புகளையும் வனத்துறையினர் மூலம் அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு விட்டார்.

    தற்போது வெ யிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குளிர்ச்சியான இடங்களை நோக்கி பாம்புகள் வருவதால் வீடுகளை நோக்கி வருகிறது என்றும், பொதுமக்கள் ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், காலனி வைக்கும் இடம், பழைய பொருட்கள் வைக்கும் இடத்தை கவனமாக கையாள வேண்டும் என்றும் அவர் கூறினார். 

    • குழாய் பழுதடைந்து விட்டதால் பழுது சரிபார்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
    • பொதுமக்கள் விநியோகிக்கப்பட்ட குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்க கொள்ள வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    ஈரோடு மாநகராட்சி சென்னிமலை சாலை மற்றும் ஈ.வி.என்.சாலை சந்திப்பில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிதாக சிறுபாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணியின் போது பிரதான குடிநீர் விநியோக குழாய் பழுதடைந்து விட்டதால் பழுது சரிபார்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகள் காரணமாக ஈரோடு மாநகராட்சி 3-ம் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 51-ல் உள்ள இ.எம்.எம். மெயின் வீதி, இ.எம்.எம். வீதி, மணல்மேடு வீதி, சென்னிமலை சாலை,

    4-ம் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 52-ல் உள்ள ஈஸ்வரன் வீதி, கள்ளியங்காடு பகுதி, பட்டக்காரர் வீதி, தங்கபெருமாள் வீதி, ஜீவானந்தம் சாலை, புதுமை காலனி ஆகிய பகுதிகளில் இன்று (12-ந் தேதி), நாளை (13-ந் தேதி) 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    எனவே பொதுமக்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்ட குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்க கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மருத்துவமனையில் 2 நாள் செஸ் போட்டி நடந்தது
    • கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்தது

    கரூர்:

    கரூர அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் 2 நாள் செஸ் போட்டி தொடங்கியது. மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டியையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் 2 நாள் சதுரங்க போட்டி நேற்று தொடங்கியது. இதில் 14 மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் 70 பேர், செவிலியர்கள், பணியாளர்கள்- 16 என 100 பேர் பங்கேற்ற போட்டி மூன்று கட்டங்களாக நேற்று நடைபெற்றது. அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை முதல்வர் ரா.முத்துசெல்வன் தெரிவித்ததாவது, மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள், பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன, இரு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் வெற்றிபெற்றவர்கள் 2வது நாளாக நடைபெறும் போட்டியில் பங்கேற்கின்றனர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை சார்பில் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றார்.

    • முதியோர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கான செஸ் போட்டிகள் 2நாட்கள் நடக்கிறது.
    • மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் பங்குபெற்று திறமைகளை வெளிப்படுத்தலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சதுரங்க ஒலிம்பியாட் என்பது மனிதகுலத்தின் புத்தி கூர்மை வாய்ந்த சிறந்த படைப்புத் திறனை உடைய சிந்தனைகளின் சங்கமிக்கும் போட்டியாகும். மேலும் சதுரங்க வீரர்களும், சதுரங்க விளையாட்டின் மீது ஆர்வமுடையவர்களும் முக்கியமாக எதிர்பார்க்கும் நிகழ்வுகளில் ஒன்றாகும்.

    சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்த முதல் அதிகாரப்பூர்வ சதுரங்க ஒலிம்பியாட் போட்டி 1927-ம் ஆண்டு லண்டனில் நடந்தது. சதுரங்க ஒலிம்பியாட்ஸ் போட்டிகள் ஆண்டுதோறும் அவ்வப்போது நடைபெற்று வந்தது.

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், இதற்கு முன்னதாக 2018-ம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பியாட்டில் அதிகளவு பங்கேற்பான 176 நாடுகளின் பங்கேற்பை மிஞ்சும் வகையில் தற்போது 187 நாடுகளின் சாதனைப் பங்கேற்பை எதிர் நோக்கியுள்ளது. இந்த சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள், இந்திய சதுரங்க போட்டிகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தனித்தன்மை உடையதாக நடைபெற உள்ளது.

    இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முக்கியத்துவம் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்துத்துறைகள் ஒருங்கிணைந்து பல்வேறு போட்டிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில், அனைத்துத் தரப்பு சதுரங்க விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன.மேலும், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, ஊரக வளர்ச்சி முகமை புதிய அலுவலக கூட்டரங்கில் நாளை (21-ந் தேதி) 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், நாளை மறுநாள் (22-ந்தேதி) மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் செஸ் போட்டிகள் நடைபெற உள்ளது.

    இந்த சதுரங்கப்போட்டியில் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் பங்குபெற்று திறமைகளை வெளிப்படுத்தலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×